BT Song 306. அமைதி காண வேண்டும்
எனக்குள்ளே உன் அமைதி வேண்டும்
என்னுள்ளே நீ நிறைய வேண்டும்
எந்த நிலையில் நான் இருந்தாலும்
என்றும் உன்னிலே வாழ்ந்திட வேண்டும்
புறம்பே ஆயிரம் நிகழ்ந்த போதும்
புலன்கள் ஓய்வின்றி அலைந்த போதும்
சஞ்சலம் கொண்டு மனம் தவித்த போதும்
சன்னிதி வந்து நின்றிட வேண்டும்
உள்ளம் கலங்கி தவித்த போதும்
உணர்ச்சி பொங்கி அலைகழித்தபோதும்
சித்தம் குழம்பி மயங்கிய போதும்
சற்றும் தயங்காது உன்னிடம் வரவேண்டும்
ஓசைகள் பல கேட்ட போதும்
ஓய்வின்றி செயல்கள் செய்த போதும்
ஓடியாடி நான் களைத்த போதும்
உன்னடியில் அமைதி காண வேண்டும்
18-6-15, மத்திகிரி, 2.50
BT Song 306. I have to seek peace.
I need your peace within me
You should fill me within
In whatever condition I may live
I should always live with you.
Though thousands of things happen around me
And the senses wander without any rest
Though the heart is also disturbed with lots of frustration
I should come to your presence.
Though the heart is troubled
And the emotions tossed me everywhere
Though I faint with lots of confusion in mind
I should come unto you without any hesitation.
Though I hear lots of noises
And do many things without having any rest
Though I become tired by running pillar to post
I should find peace at your feet.
18-6-15 Mathigiri, 2.50
After writing the above song (305), then I began to pray. But I was struck in my mind and I began to murmur the first line of this song as a prayer in Tamil (I only pray in Tamil). Then within a few minutes I wrote this song too and closed my prayer time. St. Augustine well said that ‘my soul finds rest only in you’.
BT Song 307. பிரிவை ஏற்போம்
எவர் வந்தாலும் எவர் போனாலும்
என்றும் இருப்பது இறைவன் மட்டுமே
எவர் வந்து தாங்கினும் எவர் விட்டுப் போயினும்
நம்முடன் இருப்பது அவன் கரம் மட்டும்
நிற்பது அனைத்தும் வீழும் ஒரு நாள்
சேர்ப்பது அனைத்தும் சிதறும் ஒரு நாள்
பிறப்பவர் அனைவரும் போவார் ஒரு நாள்
இப்புவி வாழ்வு முடியும் ஒரு நாள்
மாற்றம் ஒன்றே மாறாத ஒன்று
மற்றவை மாறுவது அனைவருக்கும் நன்று
பழையன போனால்தான் புதியதும் வந்திடும்
பலருக்கும் அதனால் பயனும் சேர்ந்திடும்
போட்ட விதையும் செடிப் பயிராகி
பூத்துக் காய்த்துப் பயன் தருவது போல்
புவியில் மனித வாழ்வும் கூடப்
புதுப்புது வடிவமாய் பொலிந்து பலன் தரும்
இந்த உண்மையை ஏற்றுக் கொண்டு
“எங்கு சென்றாலும் வாழ்க நன்று”
என்று கூறிப் பிரிவை ஏற்போம்
இறைவன் துணை கொண்டு வாழ்ந்து முடிப்போம்
7-7-15, மத்திகிரி, மதியம் 2.45
BT Song 307 Accept Parting
Whoever comes and whoever might go
God is the one who remains permanently with us
Whoever upholds and whoever went away from us
His hands alone are with us always.
Those which stand will fall one day
Those which are collected will be shattered one day
Those who born will die one day
Life on this earth too will come to an end one day. @
‘Changing’ is the one thing that remains unchanging
It is good for all that things are changing
New will come only if the old is gone
And it will bring benefits to many.
The seed which is sown becoming plant
As becomes useful by giving flowers and fruits
The human life on this earth too
Will take new form and will bring forth fruits
Accepting this reality
‘Wherever you go live abundantly’
By blessing like this let us accept parting
And complete our life by living with God’s help.
7-7-15, Mathigiri, 2.45 pm.
As we advance in age, several realities in life, though true, become hard to accept. One such reality in old age is parting with people who have to move as the demands of the life forces such parting on both sides. However old people keep a brave face outwardly, the separation often affects them deeply. But family people are fortunate as they have others to compensate for such separation. But the life of single people is very difficult, as they have to accept the reality of a ‘single’ life—which they choose or imposed upon them.
When I was thinking about the moving of people away from each other I reflected on all those who came in life and went away—some physically, others permanently (not by death I mean).
But the joy in it is that as the next generation moves away, they move for the good of all. As we expect the seed to become a plant and give flowers and fruits, we too want the next generation to grow and move ahead in life and become a channel of blessing to so many people. And when I thought about it, I wrote this song.
Notes
@सर्वेक्षयान्तानिचया: पतनान्ता: समुच्छूया:।संयोगाविप्रयोगान्तामरणान्तचजीवितम्—शान्ति27.31,330.20,—P. V. Kane, History of Dharmasastra, Vol. I. Part I. Ch. 32. The Two Epics. Fn. 404. P. 372. [All that stands will fall; those that come together will get separated; which are collected will be scattered and whoever lives will die. A rough translation by me—db.].
BT Song 308. நிறைவுடன் வாழ்வோம்
வருவதை ஏற்போம்
வாழ்ந்து முடிப்போம்
எதிர்காலம் எண்ணி
ஏங்கித் தவிக்காமல்
நிகழ்காலம் தன்னில்
நிறைவுடன் வாழ்வோம்
மரத்தை வைத்தவன்
தண்ணீர் ஊற்றுவான்
மனிதனைப் படைத்தவன்
அளந்து கொடுப்பான்
உருவாக்கித் தந்தவன்
உறுதியாகக் காப்பான்
கல்லினுள் தேரைக்கும்
கருப்பையின் உயிர்க்கும்
ஆழ்கடல் மீனுக்கும்
ஆகாயத்துப் பறவைக்கும்
அளப்பவன் எவனோ
அவனே காப்பான்
இதை உணர்ந்தோரே
நிம்மதி பெறுவர்
ஏங்கித் தவிப்போர்
சஞ்சலம் கொள்வர்
என்பதே உண்மை
இதனை அறிவோம்
12-7-15, மத்திகிரி, மதியம் 2.45
BT Song 308 Let us live with contentment
Let us accept whatever comes
And accomplish our life
Not longing with anxiety
Thinking about the future
Let us live fully with contentment
At present
The one who plants a tree
Will water it
The one who created human will provide accordingly
The one who created will
Definitely take care.
The one who provides
To the frog inside a rock
And to the embryo (foetus?) in the womb
To the fish in deep sea
And to the birds in the sky
Will take care of us.
The one who realized this
Alone will get peace
Those who have anxiety
Will become frustrated
This is the truth
And let us understand this.
12-7-15, Mathigiri, 2.45 pm.
Anxiety about the future never solves the problem which may not come but it will deprive the peace of mind which we have now. At the same time no human can live without some anxiety. The fact that we cannot avoid birds flying above our heads. But we should guard not to allow them to nest on our head. When I was meditating about this, I wrote this song.
BT Song 309 ஒரு வேண்டுதல்
உன்னிடம் அமர்ந்து உரையாட வேண்டும்
உன்னடி அமர்ந்து கேட்டிட வேண்டும்
உன் வார்த்தை அறிந்து ஒழுகிட வேண்டும்
உன்னடியானாக வாழ்ந்திட வேண்டும்
சிந்தையில் உன்னை நிறைத்திட வேண்டும்
சித்தத்தை உன்னிலே வைத்திட வேண்டும்
பக்தியால் புத்தியைப் புடமிட வேண்டும்
பக்தனாய்ப் பணிவுடன் வாழ்ந்திட வேண்டும்
தன்னையே ஒறுத்து தாழ்த்திட வேண்டும்
தனிமையில் உன்னினிமையை உணர்ந்திட வேண்டும்
தமியனிடம் நீயும் தங்கிட வேண்டும்
தத்தளிக்கும் மனதை ஆட்கொள்ள வேண்டும்
உள்ளமும் உன்னிலே கரைந்திட வேண்டும்
உணர்வுடன் உன்னுடன் ஒன்றிட வேண்டும்
உணர்ச்சியும் பொங்கி அலைக்கழிக்காமல்
ஊக்கமாய் உன்னையே நோக்கிட வேண்டும்
13-7-15, மத்திகிரி, 2.45 மதியம்
BT Song 309 A supplication
I should sit with you and talk
I should listen by sitting at your feet
I should live knowing your words
I should live as your bhakta.
I should fill my mind only you
I should keep my will only in you
I should refine me through bhakti
I should live humbly as a bhakta.
I should submit by humbling myself
I should enjoy your sweet presence by living alone
You also should stay with this lonely one
And you should control this wavering mind
My heart should melt in you
I should mingle with full sense
Not allowing my emotions to toss me
I should look unto you with much enthusiasm.
13-7-15, Mathigiri, 2.45 PM.
I never have any particular form of prayer life. I often keep short accounts with God. When I think about a person, I will pray for him/her. When I think about an issue, I will pray for that. When I think about the blessing that I received from God, immediately I thank Him. Even when I am reading, some other thoughts come (about a person, issue etc.) I will stop reading and pray for that.
So as usual when I began to pray, then nothing came to mind. Then I uttered the very first line as my prayer. Then I stopped my prayer and wrote this song as my prayer today.
அருளானந்தரின் அருளுரைகள் (யோவானின் நற்செய்தி)
BT Song 310. உண்மை ஒளி
தோற்றம் முதலே இருந்த வார்த்தை
தொன்மையில் தெய்வமாய் நின்ற வார்த்தை
தெய்வம் தன்னுடன் இளங்கிய வார்த்தை
தெய்வமுடன் இணைந்து நின்ற வார்த்தை
தோன்றிய அனைத்தும் அவன் மூலம் வந்தது
அவனின்றி ஒன்றும் தோன்றாமல் நின்றது
அவனுள்ளே ஜீவன் நிறைவாக இருந்தது
அதுவே மனிதர்க்கு ஒளியாக நின்றது
இருளில் ஒளிரும் அவ்வொளி தன்னை
இருளும் பற்றாது இருந்தது உண்மை
அவ்வொளி தன்னை அனைவரும் நம்ப
அதற்குச் சாட்சியாய் வந்தான் (ஒரு)தூதன்
இறைவனே அனுப்பி வைத்தான் அவனை
“அவதூதன்”* என்ற நாமம் கொண்டோனை
உலகத்தில் தோன்றிய மனிதன் எவனையும்
ஒளிர்ப்பிக்கும் மெய்யான ஒளி தன்னையும்
அவ்வொளி தானே இல்லாமல் அவனும்
அதற்குச் சாட்சியாய் வந்தானே தானும்
“அவதூதர்கள்” என்பவர்கள் ஓரிடத்தில் இல்லாமல், சமுதாய (உடை, உணவு போன்ற பல) நியமங்களைக் கை கொள்ளாமல் வாழ்ந்த துறவிகள்.
அதிகாரம் 1: 1-9 , 15-7-15, மத்திகிரி, மதியம் 2.30
BT Song 310 True Light
It is the word which was there from the beginning
The one which remain as God in the beginning
It also was with God
It also remain mingled with God
Everything came only through that Word
Apart from Him nothing came on earth
The Life was complete in Him
And that showed the light to human
The darkness can never
Over came that light and this is true
And to believe in that Light
One avadut@ came as its witness
And God alone sent him
But he came only as a witness to that light
He never become that light
Which alone will enlighten
Everyone who born on this earth
I rendered the verses from John 1: 1-9 in poetic form for my prayer. I have written few such poems based on the verses of Muktiveda. I prefer the poetic version which will be easier to remember than reading in prose. I still can quote so many poems from Hindu Scriptures which I read in the past. Just one time reading is enough to remember some poems, as the words and meaning immediately entered in both heart and mind. I heard that the gospel has already come in poetic form in Hindi and I wish someone could do the same in Tamil and other regional languages in India. In India most of the scriptures are only in poetic form and very few are in prose forms.
@ Avaduts are wandering sannyasis who never followed any social norms and even behaved in a strange way.
Leave a Reply