Secular Songs 326 to 330

Secular Song 326 பதிலற்ற கேள்விகள்

எண்ணிலாக் கேள்விகள்

என்னிடம் இருக்கு

இதற்கெல்லாம் விடை கூட

எவரிடம் இருக்கு

கூறிடும் பதிலெலாம்

குழப்பமாய் இருக்கு

கேள்விகள் கூட

தெளிவற்று இருக்கு

படிக்காத பாடத்தில்

கேள்விகள் கேட்பதால்

பதில் தர எவருக்கும்

இயலாமல் போகும்

படித்த பாடத்தில்

தெளிவற்று கேட்டாலோ

பதில் தெரிந்தாலும்

பயனற்றுப் போகும்

நான் கேட்கும் கேள்வியோ

இரண்டுமே இலை

நான் தேடும் பதிலோ

எங்குமே இல்லை

இல்லாத பதிலுக்கு

கேள்விகள் கேட்பதே

எப்போதும் எனக்கு

வழக்கமாய் இருக்கு

எனவே என் கேள்விக்கு

பதில் கூற முடியாதோர்

எண்ணிக்கை கூட

அதிகமா இருக்கு

ஆயினும் கேள்விகள்

கேட்பதும் ஓயல

அவற்றுக்குப் பதில் தர

எவருமே இருக்கல

இல்லாத பேரிடம்

கேள்விகள் கேட்பதால்

எப்போதும் என் கேள்விக்கு

பதிலே கிடைக்கல

மத்திகிரி, 24-6-2017, இரவு 10.45

I have become a bit tired as I have done too much work today. So, unable to read or to meditate I retired to bed early by 10.30.  But I cannot sleep. So I began to think about various philosophical/theological questions that I confront in life.  As I began to reflect on them, I realized that I am asking questions which are either not clear or there is no answer.  And I ask the question to the people who are not actually listening. As inspiration came, I got up from bed and wrote this song and went to bed with the satisfaction that at least I need not search for the answer which actually does not exist.  But asking questions will never come to an end.

Secular Song 327 We should think

We should never forgot

What others went through for us?

We should often remember

All the sacrifices that they have done for us

None is there without having selfishness

There is no life without selfishness

Yet we should often remember

The cost that others paid for us

However small it might be

The help others rendered for us

We should remember the level of its measure

That we received that time@

There is a story about a small rat

Helped a lion to escape from the net by cutting it

Similarly, several small helps that others rendered

Saved us many times

Where is the justification

To throw away others once their purpose is served

When we face similar situation

Then we will understand that

“There is escape from sin even for virtue-killers

But not for the gratitude-killers” (Kural 110)*

Remembering this words of Valluvar

We should live with gratitude

* Tr. By M. Rajaram, Delhi, Rupa & Co. 2009

@ A timely helps though small in worth

Is greater than the earth. [Tr. By M. Rajaram, ibid.]

Mathigiri, 25-6-17, 8.50 am.

When others ask what makes me serve my mother with this much patience (????), my one response is that my parents never threw me away when I was a baby or child because of their hardship in life. Swimming against all kinds of odds, they poured their whole life to bring us this much.  Now what I do is not even a fraction of what they have done for me.  I cannot forget what they have done for me and what I am doing is not to repay them.  Not even gratitude.  Not even a dharma (duty), but consider it an opportunity to serve.  I feel more blessed by it than my mother receiving any comfort. Of course challenges are there, but they are nothing compared to what they faced to bring all their children. This song only reflects this thought.

This song is dedicated to the children who have parents

Secular Song 327 எண்ணிப் பார்க்க வேண்டும்

நமக்காக பிறர் பட்ட துயரங்களை

நாமும் மறவாதிருக்க வேண்டும்

நமக்காக அவர் செய்த தியாகங்களை

நாமும் எண்ணிப் பார்க்க வேண்டும்

சுயநலம் இல்லாத மனிதன் இல்லை

சுயநலமற்ற வாழ்வும் இல்லை

ஆயினும் நமக்காப் பிறர் தந்த விலையை

அடிக்கடி நாம் சற்று நினைக்க வேண்டும்

ஏற்ற காலத்தில் செய்திட்ட உதவி

எத்தனை சிறிதாக இருந்தாலும் கூட

அந்நேரம் நமக்கு அதன் மூலம் கிடைத்த

நன்மையின் தன்மையை எண்ணிடவேண்டும்@

சிறிதான எளிவந்து வலையைத் துண்டித்து

சிங்கத்தை மீட்ட கதை கூட உண்டு

பலநேரம் சிலர் செய்த சின்ன உதவி

நம்மையும் கூட  காத்தது உண்டு

காரியம் பிறரால் ஆன பின்னே

தூக்கி எறிவது நியாயம் என்ன

நமக்கு அக்கதி வந்த பின்னே

உண்மை புரியும் நானும் சொன்னேன்

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு (11௦), என்று

வள்ளுவன் சொன்ன வாக்கினை எண்ணி

வாழனும் நாமும் நன்றி சொல்லி

மத்திகிரி, 25-6-17, காலை 8.50

@காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது.—குறள் 102

Secular Song 328 தனிப்பிறவியா

அதிகமாய் எதையும் யோசிக்காதே

ஆழமாய் ஆராய்ந்து பார்க்காதே

வருவதை மட்டும் ஏற்றுக் கொள்ளு

வந்தபடி நீ வாழ்ந்து கொள்ளு

உனக்கென என்றும் உலகினிலே

ஒன்றும் தனியாய் நடப்பதில்லை

உன்னை மட்டும் தனிவிதமாய்

இறைவனும் இங்கே படைக்கவில்லை

உனக்கென ஒரு உலகத்தினை

தனியாய் அவனும் படைக்கவில்லை

உன்னை மட்டும் தன்னந்தனியாக

அதனுள் அவனும் வைக்கவில்லை

எந்தவிதத்தில் நீ தனித்திருக்காய்

என்பதை மட்டும் எனக்குச் சொல்லு

எதுக்கெடுத்தாலும் வாதம் செய்யும்

பழக்கத்தை மட்டும் நிறுத்திக்கொள்ளு

எல்லோரும் இயல்பாக வாழ்ந்திருக்க

உனக்கென்ன தனியாய் ஆராய்ச்சி

எவருக்கும் பயனில்லா கேள்விகளை

கேட்பதில் உனக்கென்ன தனி மகிழ்ச்சி

உனக்கு முன்வந்து பதில் தரவோ

ஒருவரும் இங்கு வரவில்லை

உனது கேள்விக்கு பதில் கூற

எவரும் சற்றும் விரும்பவில்லை

மனதையும் வாயையும் மூடிக்கொண்டு

மெளனமாய் நீயும் வாழ்ந்து விடு

மாட்டேன் என்று நீ நின்றால்

வம்புக்கு வர வில்லை ஆளை விடு

மத்திகிரி, 26-6-17, மாலை, 6.15

Secular Song 328 Are you a strange creature?

Don’t think deeply about anything

Don’t do much research

Just accept the things as they come

You learn to live as you came

Nothing is happening in this world

Separately for you

God too has never created

Anything especially for you

He never creates a

Separate world for you

He never put you

All alone in it

Just tell me

In what way you are different from others

Stop merely arguing

For everything in life

When others are living normally

What is the need for your special analysis?

What kind of joy you find

By asking questions which are not useful to anyone?

There is none to come forward

To give answer to your questions

Nobody is interested

To respond to your inquiries

Keeping both your mind and mouth shut

Try to live silently

If you refuse to listen to me

Leave me alone, I don’t have time for you

Mathigiri, 26-6-17, 6.15 pm.

As I went for my walk, as usual so many questions came in my mind about various things in life.  As I began to ponder them to find an answer, then I said in Tamil don’t think too much about so many things.  Nobody is going to listen to you or answer your questions. Keep your mouth shut and live life just as it comes.  Then as inspiration came, I recorded this song on my mobile while walking.

Secular Song 329 எனக்கே உபதேசம்

பழக்கத்த மாத்திக்க முடியவில்லை

பாழான மனசும் கேட்கவில்லை

பழகிய தோஷம் மறக்கவில்லை

பாவப் பட்டும் பயனில்லை

என்னவோ செய்து கொள் எனச் சொல்லி

ஏனோ கைவிட மனமில்லை

இதற்கு மேலே செய்திடவோ

எனக்கும் மனதில் தெம்பில்லை

சொன்னால் கேட்கமாட்டேன் என்றால்

சொல்வதில் எவ்விதப் பயனுமில்லை

சிலருக்கு சொந்த மதியிருந்தும்

சுயமாய் சிந்திக்க தெரியவில்லை

யாருக்கு இந்த உபதேசம்

என்று என்னை கேட்காதீர்

ஊருக்குச் சொல்ல வரவில்லை

எனக்கே வழி இன்னும் பிறக்கவில்லை

நானே எனக்குச் சொல்லுகிறேன்

நாளும் திருத்திட முயலுகிறேன்

ஆயினும் பேச்சைக் கேட்பதற்கு

புத்தியும் மனதும் விரும்பவில்லை

புத்திக்கும் மனதுக்கும் போராட்டம்

ஆடுது நாளும் சதிராட்டம்

இவற்றின் தொல்லையும் தாங்கவில்லை

இவற்றுடன் வாழவும் முடியவில்லை

ஆயினும் இந்தப் போராட்டம்

அனுதின வாழ்வின் பகுதியாச்சு

அதையும் சொல்லி புலம்புவது

எனக்கும் கூட வழக்கமாச்சு

வழக்கமே பழக்கமாய் போனபின்னே

பாவப்பட்டு பயனில்லை

அன்றாடம் போராடப் பழகியதால்

அதிகம் அலட்டிக்கத் தேவையில்லை

மத்திகிரி, 28-6-2017, இரவு 11.10

Secular Song 329 An advice to me

I cannot change my habit

The spoiled heart is not listening

I cannot forget the habit

There is no use taking pity on me

At the same time

I cannot wash my hands towards me

But I don’t have any more strength

To do more than this

There is no point in teaching

As no one refuses to listen

Though some have their own brain

They don’t know how to think independently

Don’t ask me

To whom I give this advice

I never proclaim this to the world

When I don’t have means to escape

I tell this only to me

I try to mend my way each day

But both my buddhi and heart are

Not ready to listen to me

There is a tug up war between buddhi and heart

They do it each day

I cannot bear with them anymore

I am unable to live with them each day

But this struggle has now

Become part of everyday life

Lamenting about it

Also become my habit

Once habit become the routine

There is no point of taking pity on me

As I learnt to struggle each day

I need not worry too much about it

Mathigiri, 28-6-2017, 11.10 pm.

The constant struggle between mind (buddhi) and heart is a great challenge for me.  I cannot give up one at the cost of the other. They both are part of me.  Yet the way they approach several issues in life is completely different. While my buddhi analyzes and tries to approach with reason, my heart goes as per the feeling and emotion. At the same time, I understand that there is no buddhi and heart separately and both are nothing but the function of the brain—several times simultaneously. Yet I cannot escape from the dvand (repulsion and attraction,–reason and emotion).  As I thought about it, I wrote this song giving advice to my—buddhi or heart?  I don’t know.  Anyhow, who is the ‘I’ which addresses this buddhi and heart?

Secular Song 330 தயங்காதே

எல்லோரும் இங்கே போன பின்னாலே

எனக்கென வாழ்க்கை இனிமேல் என்ன

என்றுமே சொல்பவர் நிலையும் என்ன

என்பதை நீயும் சென்று பார்த்தாயா

ஏதேனும் ஒன்றை குறைத்து விட்டாரா

இனிமேலே வேண்டாம் என்று சொன்னாரா

வழக்கம் போல வாழ்க்கை ஓடுது அவர்க்கு

வாழ்ந்துதான் ஆகணும் வழியில்லை பிறர்க்கு

கூடவே வந்தவர் கூடவே இருந்தால்

கொஞ்சம் கொஞ்சமாகப் பாரமும் பெருகும்

ஏற்ற காலத்தில் அவரவர் விலக

இறுதியில் பாரம் எளிதாகப் போகும்

வரும்போது வேண்டாம் என்று ஒதுக்காதே

தரும்போது உதவியை பெறவும் மறுக்காதே

உன் பங்கை நீயும் செய்ய மறக்காதே

விலகிடும் போது வீணிலே தடுக்காதே

எல்லோரும் போன வழி நீயுமே போவாய்

இருப்பவர் தொடர்ந்து பின்னாலே வருவார்

இடையிலே ஒரு சிலர் கூடவே சேர்வார்

இறுதியில் எவருமே கூடவே வாரார்

இந்த உண்மையை உணர்ந்து கொண்டு

கூட வருவோரை சேர்த்துக் கொண்டு

போவோர்க்கு தயங்காமல் விடையும் கொடுத்து

பூமியில் வாழும் வரை நீயுமே வாழு

மத்திரிகி, 2-7-2017, இரவு 10.30

Secular Song 330 Don’t hesitate

“Once all those who were with me have gone

What kind of life is there for me anymore”?

Did you notice the life of those

Who laments like this?

Did they give up even one thing in their life?

Did they say that they don’t want it anymore?

The life goes as usual for them

There is no option but to live like this.

If all those who came with us continue to be with us

The burden will increase slowly

Once they leave in time

Finally the burden will become light

When they come, don’t reject them

When they offer some help don’t refuse to accept it

Don’t forget to do your part also

When they leave, don’t stop them

You too will go in the same way as others have gone

Those who left behind will follow you

In the middle some will join you

But till the end no will come with you

Understanding this truth

Taking those who come with you

Not hesitating to bid good-bye to those who leave

You to live as long as you live on this earth

Mathigiri, 2-7-2017, 10.30 pm.

Another reality about life.  This is true not only about ‘death’ as the final good-bye for those who lived with us, but even in relationship and friendship.  Though we will miss them for some time, life will go as usual for all.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *