BT Song 1541 கிள்ளியது யார்
எத்தனையோ உண்டு
உன்னிடம் சொல்ல
எதைச் சொல்ல எதை விட
என்பது தெரியல
சொல்லாமல் நீயும்
புரிந்திடும் போதும்
சொல்லத் தேவை
எனக்கு தான் உண்டு
மனப்பாரம் இறக்க
சொல்ல வரவில்லை
மற்ற எவ்வித
காரணம் இல்லை
தனிமையை போக்க
பேசிட வில்லை
அதற்கான அவசியம்
இருவர்க்கும் இல்லை
இத்தனை எண்ணம்
எப்படி வருது
அதற்குக் காரணம்
யாரெனச் சொல்லு
மூளையா மனமா
இரண்டிலே யாது
அல்லது ஆன்மாவின்
குரலா சொல்லு
எண்ணத்தை என்னுள்
வைத்த நீதான்
இதற்கான பதிலை
தந்திட வேண்டும்
உன்சாயல் தன்னில்
உருவாக்கி வைத்த
உனக்கின்றி வேறு
யாருக்குத் தெரியும்
முழுமுதற் காரணம்
நீ என்பதாலே
நியன்றி இதற்கு
வேறாரு பொறுப்பு
பிள்ளையை கிள்ளி
தொட்டிலை ஆட்டும்
செவிலியாய் ஆனாயோ
அதையேனும் சொல்லு
தாய்வந்து தாலாட்ட
அழுதிடும் குழந்தை
மீண்டும் கூட
தூங்கப் போகும்
செவிலி தாலாட்டு
பாடிய போதும்
தூங்காத குழவியாய்
ஆனேன் பாவம்
ஒருவேளை இதுகூட
செய்வது நீயோ
செவிலியாய் மாறி
கிள்ளு கிறாயோ
இதுபோல பலவுண்டு
அவற்றில் இதுஒன்று
இதற்கு பதில்தந்தால்
மற்றதை சொல்கிறேன்
குருகுலம், 19-12-23, 4.45 pm.
Though I enjoy the silence around me, still I am much disturbed my thoughts. They never allow me to immerse myself in the silence around me. If I cannot tune with the silence around me, then there is no use in it. I want to live not only alone surrounded by nature, but also experiencing that silence within me. I know several people have claimed to have attained that stage [of Nirvikalpa Samadhi] and returned back. I am neither agreeing with it nor denying it as it is their experience. But who is the one who brings so many thoughts without any break. As I was thinking about it, I wrote this song asking that question to God.
BT Song 1541 Who is pinching?
There are many things
To share with you
I don’t know which one to share
And which one to leave
Though you understand
Without sharing me
Still, I alone have the need
To share with you
I am not sharing this
To unload any burden
And there are no other
Reasons for this
I am not even sharing this
To remove my loneliness
As there is no need
For it to both of us
From where this much
Thoughts are coming?
Who is responsible for this
You better tell that to me
Is it my brain or my mind
Which one among the two
Or is it the voice
Of my atman?
As you alone have
Put thoughts within me
You alone should give
Answer also
As you have created me
In your Image
Other than you
Who knows the reason?
As you are the final
Cause of everything
Who is responsible
Other than you
Did you become the
Babysitter who pinches
And then rock the cradle#
At least tell that to me
If the mother comes
And sing lullaby again
The baby might
Again sleep
But I become
Like that baby
Who refuses to sleep
Even if the babysitter sing lullaby
Are you the one
Who is doing this even?
Did you do this
By becoming a babysitter?
There are similar
Other questions
If you give answer to this
I will share rest of them
# A Tamil proverb.
Gurukulam, 19-12-23, 4.45 pm.
Leave a Reply