Secular song 396
The affection between two people, with true and deep love for each other will never disappear easily, however they get estranged with each other due to some quarrel. But they will miss each other and even might silently weep for each other. The way they get hurt will be healed by the tears that come out of deep love. As the tear heals, the same wound will become a scar of that love, which will again unite them with the same affection for each other.
Secular Song 396 அன்பின் வடு
அந்த நாட்களை எண்ணிடும் போது
அருவியென கண்களில் நீரும் பாயுது
அளவளாவிக் குலவி வாழ்ந்து இருந்தோம்
அன்பெனும் வெள்ளத்தில் நீந்தியும் இருந்தோம்
ஊடலில் ஒரு நாள் எல்லை மீறினோம்
ஒருவரை ஒருவர் தாக்கியே பேசினோம்
இறுதியில் இருவரும் காயம் அடைந்தோம்
இனி வேண்டாம் என உறவினை இழந்தோம்
ஆயினும் அடிமன ஆழத்தில் இருந்த
அன்பெனும் ஊற்றை மூட மறுத்தோம்
ஒருவருக்காக ஒருவர் ஏங்கியே
சோக வெள்ளத்தில் மூழ்கியே கிடந்தோம்
தூது அனுப்ப ஒருவரும் இல்லை
தேறுதல் தந்திட ஆட்களும் இல்லை
இந்த நிலையில் இருவரும் மருக
இறுதியில் இதய ஏக்கதை உணர்ந்தோம்
ஏங்கிய இதயம் நம்மையும் நெருக்க
ஒருவருக்கொருவர் காத்துக் கிடந்தோம்
இருவரும் அழுதோம் பிறருக்காக
அழுத பின் இருவரின் அன்பையும் புரிந்தோம்
அழுதபின் இருவரின் அன்பு புரிந்தது
அழுகையே புண்ணுக்கு மருந்து ஆனது
ஆறிய புண்ணும் அன்பின் வடுவாகி
அதன்பின் நம்மை மீண்டும் சேர்த்தது
குருகுலம், 22-10-2017, காலை, 10.30
Secular Song 396 The scar of love
When we thinking those old days
Tears will flow like water fall
We lived together with much love and affection
And we were swimming in the flood of love
Because of indignant sulkin we went overboard
By attacking each other with words
Then both are hurt
And get separated thinking that we don’t want each other anymore
But we refused to close the spring of love
Which is still deep in our heart?
Longing for each other
We drowned in the flood of sorrow
There is none to send someone as emissary in between us
There is none to give comfort to us
As both of us suffered in this condition
Finally, we both understood the longing of our hearts
As the longing heart put pressure on us
We waited for each other to meet again
Then we cried for each other
Then realized the deep love for each other
Once we cried, we understood our love for each other
Then that cry become the boon for that wound
As the wound get healed becoming a scar
Again, united us in deep love.
Gurukulam, 22-10-2017, 10.30 a.m.
Secular Song 397
Recently we had an interesting discussion about developing relationships and friendship. At that time, I said that between Relatives and Friends, relatives are more important as we are born and die with them. Though friendship is important, I know several people who lived and are still living without having many close friends with them. But none can live without relatives and relationships with them. Several times we lose our friends due to many reasons. Though we might miss them, yet we won’t find the loss that much great like that when we miss our (close) relatives. And particularly the value of relatives we realize when we miss them we regain them. As I was reflecting on this subject, I wrote this song.
Secular Song 397 எத்தனை இன்பம்
இழந்ததை பெறுவது
எத்தனை இன்பம்
இழந்து பின் பெற்றாலே
இதுவும் புரியும்
பசித்த பின் புசித்தால்
சுவையும் புரியும்
பசிக்காத பேருக்கு
இது எங்கே புரியும்
இழந்தது எதுவென
எப்படிச் சொல்ல
இழக்காமல் வாழ்வது
நடைமுறை யல்ல
பொருளின் இழப்பும்
புதிதான தல்ல
புவி வாழ்வில் நிலைப்பது
பொன் பொருள் அல்ல
காலமும் நேரமும்
கண்மூடி ஓடும்
பிறந்தபின் வயதுமே
நிலைக்காது ஓடும்
தேகமும் தளர்ந்து
முதுமை அடையும்
தேடிய சுகங்கள்
ஓடி மறையும்
இவையெல்லாம் இழப்பது
இயல்பான ஒன்று
இழக்காமல் வாழ்வது
கிடைக்காத ஒன்று
ஆயினும் உறவென
வந்திடும் போது
அதனை இழப்பது
முடியாத ஒன்று
வெறுத்தாலும் மறுத்தாலும்
போகாது உறவு
நாமாக வேண்டாமல்
கிடைத்திட்ட ஒன்று
பிறப்பிலே கிடைத்தது
மறைவிலும் தொடரும்
விரும்பாது போனாலும்
நம்மோடு வளரும்
அதனை இழப்பது
மாபெரும் துயரம்
ஆயினும் பலமுறை
இழப்புமே நிகழும்
இழக்கும் போதுதான்
அதன் வலி புரியும்
மீண்டும் கிடைக்க
அதனின்பம் புரியும்
மத்திகிரி, 4-1-2018, மதியம் 1.50
Secular song 397 What a joy
What a joy is there
When we get it back which we have lost
Only when we get back after losing it
Then alone we can realize this.
We can understand the taste (of the food)
Only after if we eat after feeling hungry
Those who never feel hungry
How can they understand this?
How can we tell that?
What actually we have lost?
It is impossible to live
Without losing something in life
It is not new thing
To get last of materials
And wealth and materials
Never remain permanent in life.
Time will also flee in life
And will be gone blindly
Similarly, the age will go
Once we are born on earth.
The body will be worn out
And we will become old
And all the pleasures that we sought
Will disappear soon.
Losing all these
Are part of life
And we can never get a life
In which we never lost something.
But when it comes
To relationship
That is not easy to
Get lost.
Whether we like or hate
It won’t disappear easily
We also got it
Never sought by us.
The one which we
Received in birth
Will also continue
Even after death.
And losing such relationship
Is very hard indeed
But this kind of loss
Will often happen in life.
When we lost it
Then alone we can understand its pain
And when we get it back
We can understand its joy.
Mathigiri, 4-1-2018, 1.50 pm.
Secular song 398
This month is known as ‘Margazhi’ in Tamil and people in Tamilnadu will clean the house by removing unwanted things before whitewashing for ‘Pongal’. As we are doing that, the helper said that he will throw away a few things which according to him are not wanted. But as usual, I wanted to preserve some of them, as they may be needed in future. So after arguing for some time finally, he gave up and I preserved them.
As I was reflecting about it tonight, I saw so many things around me, which accumulated gradually. I know most of them are not needed for day to day life. But I (we) preserve most of them with ‘What if’ questions. And the only solution for this problem is to give-up even the mind which tries to cling to things in life. As inspiration came, I wrote this song reflecting this reality in life.
Secular song 398 விடத்தான் வேண்டும்
விடத்தான் வேண்டும்
உலகையும் ஒரு நாள்
விடத்தான் பழகணும்
வாழ்விலும் அதனால்
வெறுமையாய் வந்து
வெறுமையாய் போவதை
அடிக்கடி நினைக்கணும்
அனுதினம் அதனால்
தேவைகள் பெருகினால்
பாரமும் பெருகுது
தேவையில்லா சுமையாய்
அதுவுமே ஆகுது
எத்தனை பெற்றாலும்
போதாது என்குது
இன்னும் பல தேடி
ஏங்குது மனது
சேர்த்தவை பலவும்
பயனற்றுப் போயின்னும்
தூக்கி எறிந்திட
மனது தயங்கும்
அவற்றுள் பலவும்
குப்பையாய் மாறினும்
அவற்றை நீக்கினால்
மனதும் கலங்கும்
மூளைக்குப் புரிந்ததை
மனதுமே எதிர்க்குது
“முட்டாள்தனம் என்று”
திரும்பியே தாக்குது
இறுதியில் பாரமும்
பெருகியே அழுத்த
மாயை இவையென
தத்துவம் பேசுது
ஒருவிதத் தெளிவு
வந்த பின்னாலும்
தீர்வு கண்முன்
தெளிவாகத் தெரிந்தும்
விட்டிடும் நேரம்
வந்திட்ட போதும்
விட மறுக்கும் மனதை
விட்டிட வேண்டும்
மத்திகிரி, 7-1-18, இரவு 10.30
Secular Song 398 Need to give up
One day we need to
Give up this world
Therefore, we should
Train to give up in life too.
Therefore, we should often
Remind ourselves that
We come with empty hands
And will go with empty hands.
Once the needs are increased
The burden also get increased
Finally, they all become
Unnecessary burden in life.
How much we get
Heart says that it is not enough
And it longs
More to get.
Though many things
That is collected become not useful
Still our heart will hesitate
To throw them away.
Though many of them
Become mere garbage
Our heart will get troubled
Once we threw them away.
Our heart opposes
Which our mind understands clearly
And fights back by saying
‘That is mere foolishness’.
Finally, when the burden
Becomes too much to bear
It will say that
All these are ‘maya’.
When finally
Some clarity has come
And the choice is very
Clear before us
When the time has come
To give up
We should get rid of the very heart
Which refuses to give up?
Mathigiri, 7-1-18, 10.30
Secular Song 399
Accepting defeat is the worst scenario in life. Of course, often we will fail, but we should never accept defeat. We might have several lost battles but ultimately, we have to win the war. Those who created history lived never accepting defeat in their life. There is no point in thinking about the past—whether failures or success, but need to press forward to achieve in life. History can teach us, but it will not repeat exactly the same way as it happened.
Secular Song 399 தோல்வியை ஏற்காதே
போனதை மனமே நினைக்காதே
புலம்பியே வீணில் தவிக்காதே
வருவதை எண்ணிக் கலங்காதே
வந்தால் எதிர்கொள் திகையாதே
கவலையில்லாத வாழவில்லை
கலக்கம் இல்லாத மனதில்லை
தோல்வி என்பது நிலையில்லை
வெற்றியும் தன்போல் வருவதில்லை
திகைத்து நின்றால் தோற்றிடுவாய்
துணிந்து நின்றால் வென்றிடுவாய்
ஓடி ஒளிந்தால் ஒழிந்திடுவாய்
ஒன்றுக்கும் பயனின்றி மறைந்திடுவாய்
சரித்திரம் படைப்போர் சிலபேர்தான்
சாதித்து முடித்தது அவரேதான்
அவரை நோக்கிப் பார்த்து விடு
அவர் போல் வாழ முயன்று விடு
துணிந்துவிட்டால் பின் துன்பமில்லை
தோல்விக்கு உன்னிடம் வேலையில்லை
எதிர்நீச்சல் நீ போட்டுவிடு
இதுதான் வாழ்க்கை உணர்ந்துவிடு
பழம் கணக்கை நீ பார்த்திருந்தால்
பசியும் தன்போல் போகாது
புதிதாக எதிர்த்துப் போராடு
புதுமை வாழ்வில் படைத்துவிட்டு
மத்திகிரி, 9-1-18, இரவு 10.30
Secular Song 399 Don’t accept defeat
Oh my heart! Never think about the past
And don’t lament about it
Don’t be disturbed think about the future
Face it, whichever might come in life.
There is no life without worries
There is no heart without get troubled
Defeat is not permanent one
And success never comes automatically!
If you stand still bewildered you will be defeated
If you with stand courageously you will win
If you run and hide you will get perished
And you will disappear without any use.
Very few has created history
And they alone accomplished
Look unto them
And try to live like them.
Once you stand firm, then there is no suffering
And defeat has no place in your life
Try to swim against the current
And remember this is real life.
If you think only about the past
The hunger won’t go automatically
Therefore, fight again in a new way
And try to create new things in life.
Mathigiri, 9-1-18, 10.30 pm.
Secular Song 400
This is my theory: If we try to narrow down most of the human problem, then it could be “interpersonal relationship”. And the only simple solution for this would be “just adjust”. This is not an unknown secret and everybody knows this. But the problem remains unresolved as we both beat the drum at the same time expecting the other to dance according to our tala (beats). We often forget that others have the same right and expectation from us, what we have from them. When we take the drum to beat expecting the other to dance, we should remind ourselves that we should also allow them to take their drum to beat for us to dance. The best way to live amicably is to beat and dance alternatively—not simultaneously, both beating expecting the other to dance.
Secular Song 400 பிறர் எதிர்பார்ப்பு
பிறருக்கு எதிர்பார்ப்பு
நம்மிடம் இருக்கு
அவர் பார்வை நம் மீது
பலவிதம் இருக்கு
அதனால் நமக்கு
பொறுப்பு இருக்கு
அவற்றால் பாரமும்
பெருகி இருக்கு
அவர் போல நாமும்
எதிர்பார்ப்ப தாலே
இருவரின் நிலையும்
ஒரு போல இருக்கு
இதற்கான தீர்வு
நம் கையில் இருக்கு
ஒருவரை ஒருவர்
புரிவதில் இருக்கு
அதைவிட்டு இருவரும்
பிறர் மீது குறை கூற
இருவரின் பாடும்
திண்டாட்டம் ஆகும்
இருவரும் ஒருசேர
மத்தளம் போட்டு
பிறராட எதிர்பார்க்க
காதுதான் கிழியும்
ஒருவர் தாளம்
போடும் போது
பிறரும் அதற்கேற்ப
ஆட வேண்டும்
இதுபோல இருவரும்
பாடி ஆடினால்
ஒருவாரு அமைதி
அங்கே இருக்கும்
இது ஒன்றும் புரியாத
ரகசியம் இல்லை
இருவரும் இதையும்
புரியாமல் இல்லை
எவர் பாட எவராட
என்பது தொடங்க
வழக்கம்போல் போராட்டம்
ஓயாமல் தொடரும்
மத்திகிரி, 12-1-18, மதியம் 1.00 pm.
Secular Song 400 Other’s expectation
Others have
Expectations from us
They have
Many views about us
Therefore, we too
Have responsibility
And because of it
The burden has increased
.
As we too
Have our expectation (from them)
We both are
Sailing on the same boat
And the solution for this
Is only in our hands
And it is in
Understanding each other properly
Forgetting this
If we began to find fault
Then both our condition
Becomes very bad one
If we both expect
To dance according
To the tune of each other
Only noise alone increases
When one beats
The drum
The other should
Dance according to it
Like this if
Both sing and dance (in turn)
Somehow peace
Will prevail there
This is not
An unknown secret
And both of us
Never live not understanding this
As long as when the question comes:
Who should sing first?
And who should dance for that
This strife will go on forever.
Mathigiri, 12-1-18, 1.30 pm.
Leave a Reply