Secular Song 451
See ‘Hurdle of homogenizing’ in the blog for the comments to this song.
Secular Song 451 எவரும் அறியார்
திறனாக எழுதி
தெளிவாக விளக்க
தெளிவற்ற யாவும்
தெளிவாகப் புரியும்
தெளிவாக விளங்கினும்
சில கேள்வி எழும்ப
பதிலற்ற போது
குழப்பமே மிஞ்சும்
தனிப்பட்ட திறனால்
தெளிவாகக் கூறி
திறனாக சிலர்
விளக்கிய போதும்
தான் சார்ந்த கொள்கை
தன் முன் வைத்து
அவரும் கூறுவார்
அதையும் அறியணும்
இறுதியில் எதுதான்
சரியான ஒன்று
என்கிற கேள்வி
எழுந்து நிற்க
இதற்கான விடையை
எவரும் அறியார்
என்பது மட்டும்
சரியாக இருக்கும்
ஆகவே நாமும்
எதைப் படித்தாலும்
ஆழமாய் ஆய்வதை
விட்டிட வேணும்
பொதுவாக எதைச்
சொல்கிறார் என்று
புரிந்து கொள்ளவே
முயன்றிட வேண்டும்
மத்திகிரி, 8-6-2018, இரவு, 11.20
Secular Song 451 Nobody knows
Written with talent
And when explained properly
Several things which remain unclear
Will become very clear
Though we understood clearly
When few questions arise
When there was no answer
Only confusion will remain
Though some managed
To explain
Because of the
Personal talent
They will explain
Always keeping
Their own ideology
This also we should know
Which one is
Correct in the end?
When this question
Comes before us
Nobody knows
The answer for this
And which one would be
Correct for ever
Therefore, when we
Read anything
We should give up
Analyzing deeply about it
We should try
To understand
The overall
Theme of the book.
Mathigiri, 8-6-2018, 11.20 p.m.
Secular Song 452
Getting inspiration from other’s talents and challenged by their achievement alone help us to achieve like them. Mere imitation of what they have done won’t be useful in our life.
Secular Song 452 வான்கோழி ஆகாதே
அடுத்தவர் செய்வதை நாமேன் செய்யணும்
அதன்பின் வீணாய் அவதியும் படணும்
நமக்கென மூளை நமக்கு இல்லையா
நானுமே சொல்வதை நீயுமே கேளையா
புலியைப் பார்த்து சூடு போட்டால்
பூனையும் புலியாய் மாற கூடுமா?
சின்னஞ் சிறியதன் சிறகை விரித்தால்
வான்கோழி மயிலாய் மாறவும் கூடுமா
பார்ப்பானைப் பார்த்து பரதேசம் போன
கழுதையைப் போல ஆனது நம் நிலையும்
பட்டதால் நானுமே பரிவுடன் சொல்கிறேன்
புத்தியாய் கேட்டு நீ பிழைத்திட வேணும்
நமக்கென திறமைகள் நக்கும் உண்டு
நாமதை உணர்வது மிகமிக நன்று
அதை நாமும் கையாளும் போது
அவசியம் வெல்லுவோம் திறமையைக் கொண்டு
அடுத்தவர் செய்வதை அறிவதினாலே
ஆர்வமும் நமக்கு வந்திடக் கூடும்
ஆனால் அதையே செய்திட முயன்றால்
தோல்வி மட்டுமே மிஞ்சிட கூடும்
அடுத்தவர் திறமையை அறிந்திட வேண்டும்
அதனால் உந்துதல் அடைந்திட வேண்டும்
அதன்பின் நமது திறமையைக் கொண்டு
அவர்போல் வென்று சாதிக்க வேண்டும்
மத்திகிரி, 9-6-2018, மதியம் 2.50௦
Secular Song 452 Don’t become a Turkey
Why should we do what others are doing?
Then we will get trapped in trouble
Don’t we have our own mind?
Listen to what I say to you
If a cat marks on the body like a tiger
Will it ever become a tiger?
If a Turkey spreads its tiny wings
Will it ever become a peacock?
Our life also become like the donkey
Which went to pilgrimage like a Brahmin? @
As I experienced this I say with much compassion
Better you survive listening to me
We have our own talents
It is better for us to understand it
When we use them
Surely we will win by our them
When we learn what others have achieved
We might get inspiration
But when we attempt to imitate it
We will only face defeat
We should know about others’ talents
And should be motivated by them
Then using our own talents
We also should achieve like them
@ A Tamil proverb.
Mathigiri, 9-6-2018, 2.50
Secular Song 453
There is a point in weeping over the spoiled milk. Loss is inevitable in life. But those who make the loss as the investment then they can gain double fold.
Secular Song 453 இழப்பு
விழலுக்கு இறைத்த நீராகிப் போனோம்
வீணருக் குழைத்து ஓய்ந்து சோர்ந்தோம்
பருவம் தப்பி விதைத்த தினாலே
பதரை அறுத்து உலையிலே போட்டோம்
ஆயினும் இதிலோர் நன்மையும் உண்டு
அதையும் உணர்வது அனைவருக்கும் நன்று
அடுத்தவர் சொன்னதை உணராத போது
அனுபவம் மூலம் பாடம் கற்றோம்
முறிந்த பாலை முன்பாக வைத்து
முக்காடு போட்டு அழுதென்ன செய்ய
திரிந்த பாலை பன்னீராய் மாற்ற
தகுந்த உணவாய் அதுவும் மாறும்
இழந்ததை எண்ணி இனிப் புலம்பாதே
இதற்காகப் பிறர்மேல் எரிச்சல் படாதே
நம் மூலம் அவரும் இழந்தது உண்டு
நாமதை உணர்வது நமக்குமே நன்று
இழப்பின்றி வாழ்வு எவருக்கும் இல்லை
இழப்பினால் துவண்டவர் வென்றதும் இல்லை
இழப்பையே மீண்டும் உழைப்பாய் மாற்ற
இரட்டிப்பாய் நன்மை கிடைப்பது உண்மை
மத்திகிரி, 20-6-2018, மதியம், 2.00
Secular Song 453 Losses
We become like the water which was irrigated to weed
We become tired by serving the vain people
As we sowed out of season
We harvested husk and tried to cook it
But there is some benefit in this
It is better for all to understand this
When we don’t listen to others when they advised us
We will learn only through our experience
What is the use of weeping?
Over the spoiled milk
If we make pannier (Indian cheese) out of it
It will become a good food
Don’t blame thinking about the loss
Don’t get irritated on others for this
They too have lost so much because of us
It is better for us to understand this
There is no life without loss for anyone
Those who discouraged by loss never won
When we make the loss as the stepping stones
Surely we too will reap double fold
Mathigiri, 20-6-2018, 2.00 p.m.
Secular Song 454
There is a Hindi proverb: kabi gam; kabi kushi = sorrow sometimes; sometimes happiness. But we understand life more properly through sorrow than when we learn through happiness. Once we understand so many benefits which sorrow brings in our life, then we won’t consider it as a burden when it comes.
Secular Song 454 சுகமான சோகம்
சோகமும் கூட
சுகமான ஒன்று
சோகத்தை சரியாக
உணர்ந்திடும் போது
சுகமென்று ஒன்று
இருந்திட வேண்டின்
சோகமின்றி வேறு
மாற்றெது உண்டு
சோகத்தைப் போல
சொல்லித் தந்திட
சிறந்த ஆசான்
வேறெவர் உண்டு
ஆழமாய் மனதில்
பதியவைக்க
அதற்கு மட்டுமே
வலிமையையும் உண்டு
மூடனைக் கூட
ஞானியாய் மாற்றும்
முழுமையாய் வாழ்வை
புரியவைக்கும்
நிழலெது நிஜமெது
என்பதைக் காட்டும்
நிழலாய் நின்று
சொல்லி கொடுக்கும்
அது தரும் தனிமை
அவசியம் ஒன்று
அங்குதான் அறிவோம்
உண்மையை நன்று
சட்டென மறையும்
சுகம்போலவன்றி
நீடித்து நின்று
நன்மைகள் செய்யும்
அங்குதான் பொறுமை
ஆரம்பம் ஆகும்
அத்துடன் மனதில்
வலிமையைச் சேர்க்கும்
உற்ற நண்பனாய்
கூடவே வந்து
சுற்றி உள்ளோரை
புரியவும் வைக்கும்
சோகத்தில் உள்ள
இத்தனை சுகத்தை
சுகித்த பின் சோகம்
பாரமே இல்லை
மத்திகிரி, 22-6-2018, இரவு, 11.40
Secular Song 454 Pleasant sorrows
Sorrow is also
Pleasant one
When we understand
It properly
If we need
Happiness
Without sorrow
What else is there to give?
Where one can
Find a good teacher
Other than sorrow
To teach us properly
It alone has
The strength
To imprint deeply
In our mind
It will change
Even a fool as a wise man
It will help us to
Understand life completely
It will point out
Which one is true and which one is false
And standing as our shadow
It will teach us
The loneliness
That it provides is important one
There alone we will
Understand the truth properly
Unlike the pleasure
Which disappears suddenly?
Remaining for long time
It will do many good things
There alone
Patience will begin
It will also add
Strength in our heart
Accompanying like a
True friend
It will help us to understand
Those who are around us
Once we enjoyed
All these benefits in sorrow
There is no more
Burden in it
Mathigiri, 22-6-2018, 11.40 p.m.
Secular Song 455
There is an old joke: when a person opens the car to his wife, there are two reasons for it: either the car is new or the wife is new. When both become old he will park the car and walk away—sometime not evening closing his side door properly. All the initial enthusiasm in every new project will die in the long run. One married person told another married person when they were talking about life: ‘to keep the romance alive we need to work hard and imagine so many new methods.’ As I was sitting in the same car with them I responded by joking, “thank god you said about ‘new method’ not ‘new life partner’. Then they both laughed. When I was thinking about such early enthusiasm which dies down slowly in life I wrote this song.
Secular Song 455 தள்ளி நிற்கணும்
தள்ளித்தான் நின்றிடச் சொல்லுது
என்னை தனியே நின்றிடச் செய்யுது
துள்ளித் திரிந்து துடிப்புடன் இருந்தும்
சுற்றிலும் உள்ள சூழ்நிலை கண்டு—தள்ளித்தான்….
ஆரவாரமாய் பலரும் வந்தார்
ஆர்வமாய் பலவும் செய்தார்
நாளாக நாளாக நாட்டமும் குறைய
நடையைக் கட்டி அவர் சென்றார்—தள்ளித்தான்….
ஆரம்ப காலத்தின் ஆரவாரமெல்லாம்
அடங்கியே போயிடும் நாட்களும் ஓட
ஆரவாரம் செய்தவர் எல்லாம்
காணாமல் போவார் காலமும் ஓட—தள்ளித்தான்….
புதிதாய் செய்யும் செயல்கள் எல்லாம்
புளித்துப் போகும் போகப்போக
புதுமை இதில் ஏதும் இல்லை
புரிய வேண்டும் நாமும் கூட—தள்ளித்தான்….
பட்டோர் பலரும் சொல்லிய போதும்
நம் புத்திக்கு மட்டும் எட்டலை அதுவும்
பட்டபின் எத்தனை நாமுமே சொன்னாலும்
புரியாது போகும் பிறர்க்கு அதுவும்—தள்ளித்தான்….
பட்டது ரொம்ப சுட்ட பின்னாலே
சட்டென சற்று தள்ளியே நிற்கணும்
சூடுபட்டவன் சொன்னதைக் கேட்டு
நமக்கு சற்றேனும் புத்தியும் வரணும்—தள்ளித்தான்….
மத்திகிரி, 15-7-2018, இரவு 11.00
Secular Song 455 Should stand bye
I am forced to stand bit away
It makes me to stand alone
Though I was very busy and active
When I see the current situation—I am forced….
Many came with much enthusiasm
They involved with much uproar
As the days went and as their interest is gone
They walked away—I am forced….
The early enthusiasm
Will go away as the day moves
Those who made uproar
Will disappear as the time goes
All the new things which are started
Will become a bore in the long time
Nothing new in this
We alone should understand this—I am forced….
Though many who experienced told about it to us
It was not reaching only to our mind
How many times we share
Others too won’t understand it—I am forced….
When the heat is too much when we touch
We should keep away from it
Those who were injured when say this
We too should learn a bit—I am forced….
Mathigiri, 15-7-2018, 11.00 p.m.
Leave a Reply