Secular Song 526
After my regular reading, when I sat for meditation, my mind asked me to write a song. At the same time my heart said, ‘no’. Of course, for me both mind and heart are one and the same. Finally, as usual the mind won and the result is this song. Of course, it also refuses to accept this as the final answer and may force me to write more songs. Indeed, the heart feels the pain and has to struggle always to live with this mind.
Secular Song 526 தேவையே இல்லை
ஒருபுறம் எழுதிட
என் மனம் சொல்லுது
மறுபுறம் வேண்டாம்
என்று மறுக்குது
இருதலைக் கொள்ளி
எறும்பாக ஆனது
என் நிலை தானும்
உண்மையில் இப்போது
மனமென்று ஒன்று
இல்லாமல் இருந்தால்
எத்தனை நலமென
மனமே சொல்லுது
அது படும் வேதனை
அதற்கு புரியுது
ஆயினும் விடுதலை
இன்றியே தவிக்குது
மனத்தைச் சொல்லி
பயனே இல்லை
மனிதனாய்ப் பிறந்தது
மட்டும் குற்றம்
அத்துடன் மேலும்
அவன் செய்த பாவம்
பேசிட எழுதிட
கற்றதும் குற்றம்
சும்மா இருந்த
சங்கை எடுத்து
ஊதிக் கெடுத்த
ஆண்டியை போல
பிழைக்கும் வழியைப்
பார்த்திட மறந்து
சிந்திக்கச் சொன்னது
எவர் செய்த குற்றம்
இறைவனைச் சொல்லி
தவறு இல்லை
இதற்கு காரணம்
அவனும் இல்லை
படைத்து முடித்து
பூமியில் வைத்தபின்
அத்துடன் முடிந்தது
அவனது வேலை
ஏனெனைப் படைத்தான்
எவனெனைப் படைத்தான்
எதற்காகப் படைத்தான்
என்பதில் தொடங்கி
கேள்விகள் கேட்க
தொடங்கிய முதல்
ஆரம்பம் ஆனது
மனிதனின் தொல்லை
ஆகவே கேள்விகள்
கேட்பதை விட்டால்
பதில் தேடி சிந்திக்கத்
தேவையும் இல்லை
இந்த விடையை
இறுதியாய் ஏற்றால்
இனிமேல் எழுதிட
தேவையும் இல்லை
மத்திகிரி, 22-11-2019, இரவு, 11.30
Secular Song 526 No need any more
On the one side
My mind says to write
On the other side
My heart says: NO
My situation
Became like the ant
That is caught
In between two side fires
The heart/mind says that
How better it will be
If there is
No heart/mind at all
It realizes the
Struggles that it undergoes
It also struggles
Without any deliverance
There is no point
In blaming the heart/mind
The only mistake is
To take birth as human
Added to that
He also committed sin
By learning to
Read and write
Like the beggar
That spoiled the sleep
By blowing the
Conch Shell
Not minding the
Business of survival
whose mistake
Is ask to think
There is no point
In blaming god
He is not
Responsible for it
Once created us
And put us on this earth
His business
Came to an end
Beginning from the questions:
Why he created
Who created it?
And how he created
As all these kinds of
Questions were asked
The trouble began from there
To the humans
Therefore, if we
Stopped asking questions
There is no need
To search for answers to these questions
Once if we accept
This as the final answer
Then there is no need
To write further (like this)
Mathigiri, 22-11-2019, 11.30 p.m.
Secular Song 528
My nephew’s wife Preeti recorded an old Tamil song (which I give at the end) by her son Chittu who completed his second year and sent it to me to show it to my mother. After listening to it I wrote this song as I was pestering my nephew to plan a sister for Chittu and sent this to Preeti. The good news is that Chittu will get his sister within seven or eight months. So we are not going to inform Modi to take action against Preeti and her husband to freeze their adhar card. But the tragedy is that it was another boy and poor Chittu often receives beating from his brother now as he always fights with him to possess the same thing that Chittu has. The regular sibling rivalry.
Secular Song 527 தங்கை வேண்டும்
அம்மா இங்கே வா வா
தங்கை பாப்பா தாதா
தனித்து இருந்து அலுத்துப் போச்சு
தங்கை வர நேரம் ஆச்சு
அப்பாவிடம் சொல்லிவிட்டேன்
அவரும் சம்மதம் தந்து விட்டார்
அடுத்த வருடம் இந்த நேரம்
தங்கை பாப்பா இங்கே இருக்கணும்
சாக்குப் போக்கு சொல்ல வேண்டாம்
சண்டை போடும் தம்பி வேண்டாம்
செல்லக் குட்டி தங்கை வேண்டும்
சொன்னால் நீயும் கேட்க வேண்டும்
இல்லா விட்டால் பாட்டியிடம்
இதுபற்றி சொல்லிடு வேன்
வீண் சண்டை வீட்டில் வரும்
மாமியார் உன்னை திட்ட நேரும்
அதுக்கு மேலே சிட்டு கூட
அடம்பிடித்து அழ நேரும்
ஆகவே நான் சொன்னால் கேளு
அன்பாய் கேட்டால் தந்து விடு
இல்லாவிட்டால் இன்று முதல்
உண்ணா விரதம் தொடங்க நேரும்
அதுக்கு மேல மோடி தாத்தா
அவரிடமும் சொல்ல நேரும்
ஆதார் மற்றும் குடும்ப அட்டை
அனைத்தையும் முடக்க நேரும்
மத்திகிரி, 21-11-2019, இரவு, 11.00
Secular Song 527 I need a sister
Oh my mother, come here
And give me my sister
It is highly boring
To remain alone (as a single child)
It is right time for my sister to come
I also told this to my father
And he also gave his consent
Next year this time
My sister should be here
No more excuses
I don’t need a brother who will fight with me
I need a loving sister alone
And you too should agree what I say
Otherwise, I will complain about this
To my grandmother
And there will come, unnecessary quarrel in the home
And your mother-in-law might scold you
More than this
Chittu also will pester you and will cry
Therefore, listen to what I say
When I ask with much love better give
Otherwise from today onwards
I will start my hunger strike
More than that I might even
Complain this to Modi the grand father
Then it will lead to freezing
Your Smart and aadhar cards
Mathigiri, 21-11-2019, 11.00 p.m.
அம்மா இங்கே வாவா
ஆசை முத்தம் தாதா
இலையில் சோறு போட்டு
ஈயை தூர ஓட்டு
உன்னை போல நல்லார்
ஊரில் யாரே உள்ளார்
என்னால் உனக்கு தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயம் இன்றி சொல்லுவேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் தொழிலே நலமாம்
ஒளவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்
Secular Song 528
After watching a Documentary “Undercover with the Clerics-Iraq’s Secret Sex Trade” (in B.B.C, 24-11-2019) by Mut’ah’s this night (https://youtu.be/Ejlq53lPj54)) I was much disturbed as young girl even below 12 years old are sexually exploited by many. The greatest tragedy in this is that a ‘marriage for pleasure’ for a few hours was conducted by the Islamic clergy to give religious sanction. When the person who was documenting it challenged it by saying that this is mere prostitution, the clergy said ‘no’ as god himself has sanctioned such ‘pleasure marriages’. According to the document such marriages are illegal in Iraq but no government officials are taking action against such brutal atrocities against young girls. One girl who spoke in the interview told that if her family members found that she lost her virginity they would kill her as one of her cousins was killed by her family members who lost her virginity because of such ‘pleasure marriage’. When I was about to go to bed, then I told ‘what kind of life is this for such people who live in such countries which are ravaged by terrorism and other activities which deprived the normal life for so many people’. Then I wrote this song reflecting such life on this earth and went to bed with much depression and a heavy heart.
Of course in most of the religions clergies, priests and the so called spiritual heads always involve in such sexual violence against women, particularly against minor girls. But no religion will allow it in the name of god. I think the way the Shia clergy claims that even god allows it is not correct and Islam or Sharia too won’t allow such practices. Next day when I asked about this, one person, who is involved in social activities said that these kinds of documents were fake, created by Western media propaganda to defame Islamic countries to take vengeance against them. What to believe about the document which was made or the statement by such social activities?
Secular song 528 எத்தனை வேதனை
மனிதனைப் படைத்து
வேதனை கொடுத்து
வாழ்வும் சொன்னால்
என்னதான் செய்வான்
எத்தனை வேதனை
எத்தனை சோதனை
எதை சொல்வது
எதை விடுவது
கருவினில் தொடங்கி
கல்லறை வரையில்
படுகின்ற துன்பங்கள்
கொஞ்சமா சொல்ல
இடையில் துய்க்கும்
இன்பங்கள் யாவும்
கானல் நீராய்
மறைந்தே போகும்
ஆயினும் கானலை
துரத்திய மானாய்
ஆகுது அவனது
அனுதின வாழ்வும்
என்றோ ஒருநாள்
நீரை அடைவோம்
என்று ஓடி
மடிந்த மான்போல்
அனுதினம் ஓடி
அனுதினம் மடிந்து
மறுபடி எழுந்து
ஒடுறான் தொடர்ந்து
யார் சொன்னாலும்
அவனும் கேட்கல
சொன்னவர் எவரும்
ஓட்டத்தை நிறுத்தல
கானல் நீரும்
உள்ள வரையில்
ஓட்டத்தை நிறுத்த
வழியும் இல்லை
மத்திகிரி, 24-11-2019, இரவு, 11.45
Secular Song 528 How many troubles
Creating humans and
Giving all kind of troubles
If he is asked to live
What can he do?
How many troubles
How many trials
Which one to say and
Which one to leave
Beginning from the womb
And till he reaches the grave
All the troubles he encounters
Are there few to count them?
All the pleasures
Which he enjoys (in between womb and grave)
Will disappear
Like the mirage
But his everyday life
Becomes like
The deer which
Chases the mirage
Like the deer
That fell and died
Thinking that
One day it will reach the mirage
Running each day
And dying each day
Again, getting up
He runs continuously
He does not listen
To anyone who advised him
And all those who advised him
Never stopped their race also
As long as
The mirage is there
There is no hope
To stop the running also
Mathigiri, 24-11-2019, 11.45 p.m.
Secular Song 529
For me life is caught in the whirlpool and there is no way to escape from toil till the end of my life. We were born to toil. Therefore, without murmuring or imagining some utopian life with rest and relaxation, we need to toil till we escape the life in death. As I become tired physically, contemplating this kind of life, I wrote this song. When I reflect on my life, rarely do I get any opportunity to take complete rest to relax. There is always both physical and mental activity. Like a small log which is caught in the whirlpool, we cannot escape on our own. When the whirlpool disappears, there might come another opportunity to reach the shore. Otherwise, it will be carried on in the water current continuously.
Secular Song 529 வாழ்ந்து தீரு
ஓய்வை எதிர்பார்த்து
உடலும் ஏங்குது
உள்ளமும் அதற்கு
சம்மதம் தருது
ஆயினும் வாழ்வோ
அதைத் தர மறுக்குது
ஆகவே நம் நிலை
பரிதாப மாகுது
உள்ளமும் அதைக்கேட்டு
வாழ்வினை அதட்டுது
என் வாழ்வு எனது
என்று சொல்லுது
அதைக்கேட்ட உடலும்
மகிழ்ச்சியில் துள்ளுது
அதைப் பார்த்து வாழ்வு
வாய்விட்டு சிரிக்குது
வாழ வரும் முன்னே
எங்கே இருந்தாய்
வந்தபின் உன் வாழ்வை
நீயுமா வாழ்ந்தாய்
என் வாழ்வு எனது
என நீ சொல்லிணும்
அதையும் உன் கையில்
வைத்துமா இருந்தாய்
என் கையில் எவ்வித
அதிகாரம் இல்லை
ஆயினும் எனை மீறி
உன் வாழ்வும் இல்லை
எனக்கென தனியொரு
அடையாளம் இல்லை
ஆயினும் நானின்றி
அடையாளம் உனக்கில்லை
உடலே உன் நிலை
அதைவிட மோசம்
மனமின்றி நீயொரு
மாமிச பிண்டம்
அது போடும் தாளத்திற்கு
ஆடணும் நீயும்
ஆகவே உனக்கில்லை
சுதந்திரம் என்றும்
நீரின் சுழலில்
சிக்கிய துரும்பாய்
நீரின் ஓட்டத்தில்
நீயும் சுற்றுவாய்
நீரின் வேகம்
குறையும் போது
சுழலும் மறைய
நீரில் நீ போவாய்
அடுத்த சுழலில்
சிக்கிட்டும் முன்னே
அதிர்ஷ்டம் இருந்தால்
கரையும் ஒதுங்குவாய்
அது வரை சுழலில்
சிக்குவ தன்றி
தப்பிக்க வழியில்லை
நீயிதை உணர்வாய்
கரையில் ஒதுங்கும்
காலம் வரையில்
ஓய்வு என்ற
பேச்சுமே இல்லை
அதுவரை வாய்மூடி
வேலையைப் பாரு
வந்ததால் வாழ்வை
வாழ்ந்தே தீரு
மத்திகிரி, 16-12-2019, இரவு, 10.30
Secular song 529 You have to live your life
The body is longing
Expecting retirement
And my heart also
Gave consent to it
But the life
Refuses to sanction it
Therefore, our condition
Becomes wretched one
Seeing that
The heart rebukes the life
It says that
‘My life is my own’
Listening that
The body also rejoiced
Seeing that
The life was laughing loudly
‘Before you come to live
Where were you?
Once you came
Did you actually live your life?
Though you claim that
“My life is my own”
Did you ever
Hold it in your hand?
I don’t have any
Right on my own hand
But you cannot live
Overcoming me
I don’t have
Separate identity of my own
But without me
You also don’t have your identity
Oh body
Your condition is more wretched one
Without the heart
You are nothing but mere bundle of flesh and bone
You have to dance
According to the tune of your heart
Therefore, you never have
Real freedom in life
Like a small stick
That gets trapped in whirlpool
You too will go round and round
In the water
When the current in the water
Becomes less
As the whirlpool disappears
You will go along with the water
Before you get trapped
In the next whirlpool
If you are lucky
You will reach the shore
Until that time
Other than get trapped in the whirlpool
You don’t have means to escape
Better you remember this
Until you reach
The shore
There is no point of
Talking about retirement
Therefore, shutting your mouth
Mind your own business
As you came on this earth
Live the life for which you came
Mathigiri, 16-12-2019, 10.30 p.m.
Secular Song 530
Another fight between me and my mind. If it stops thinking how it will do good for all, at least to me?
Secular Song 530 எல்லோருக்கும் நல்லது
எண்ணாமல் இருப்பது
உனக்கு நல்லது
எழுதாமல் இருப்பது
எனக்கு நல்லது
ஆயினும் நாமும்
எவர் வந்து சொல்லிணும்
கேளாமல் இருப்பது
ஆபத்தாய் போனது
ஆயினும் என்னிலை
உன்னிலும் மோசம்
உனக்குள்ள சுதந்திரம்
எனக்கில்லை புரியணும்
உன் எண்ணம் போல
எதையும் நீ எண்ணலாம்
எவரும் கேட்காமல்
நீ மட்டும் பேசலாம்
எத்தனை முரண்பாடு
நீ கொண்ட போதிலும்
எவ்வித விளக்கமும்
தராமல் இருக்கலாம்
எவ்விதத் தொடர்பின்றி
எதையும் எண்ணலாம்
இடையிலே விருப்பம்போல்
அவற்றையும் மாற்றலாம்
ஏனென்று உனை கேட்போர்
எவரும் இங்கில்லை
கேட்கிணும் பதில் சொல்லும்
அவசியம் உனக்கில்லை
நீதரும் நெருக்கத்தால்
எழுதவே தொடங்கிணும்
எத்தனை வரையறை
எனக்கு உள்ளது
சொல்வதை தெளிவாக
நானுமே சொல்லணும்
தொடர்பின்றி உளறினால்
விளக்கங்கள் தரணும்
அத்துடன் தலைப்புக்கு
தெளிவாக நிற்கணும்
அதனுடன் கவிதையின்
இலக்கணம் இருக்கணும்
இத்தனை நெருக்கத்தில்
எதற்காக எழுதணும்
அதற்கான உதவியும்
நீயுமே செய்யணும்
எண்ணிடும் எண்ணத்தை
நீயுமே நிறுத்தினால்
எழுதிடும் அவசியம்
எனக்கில்லை புரியணும்
இதுவே நமக்கு
நல்லது செய்யும்
ஊருக்கும் ஆபத்து
இல்லாது போய்விடும்
இத்தனை நன்மைகள்
பலருக்கும் இருக்கையில்
எதற்காக இன்னும் நீ
தொடர்ந்து எண்ணனும்
மத்திகிரி, 19-12-2019, இரவு, 11.00
Secular Song 530 Good for all
It is good for you
If you don’t think (too much)
It is good for me
If I don’t write much
But it become
More dangerous
As we both
Refuse to listen to anyone
But my condition
Is worse than yours
I don’t have the freedom
That you have, better you understand this
You can think
Whatever you want
You can talk
Without anyone listening you
You need not give
Any explanation
How much contradiction
Might be there in your talk
You can think
Anything without having any connection
You can also change it
As you like at any time
There is none
To question you
Even if you are questioned
There no need for you to answer
But when I began to write
Because of your pressure
How many limitations
That I have
Whatever I want to say
I should share with clarity
If I babble without any connection
Then I should give explanation
Added to that
I should be within the topic
More than that
I should follow the grammar of poetry
Why should I write?
With so many restrictions
You alone should
Help me in this
If you stop your
Thinking process
There is no need for me
Also to write, this you should understand
This alone will do
Good for both of us
This also can stop
Problem to others
As so many blessings
Are there for everyone
Why should you
Continue to think?
Mathigiri, 19-12-2019, 11.00 p.m.
Leave a Reply