BT Song 646
What I say about the Lord is not mere poetic imagination or wishful thinking. This is a reality in a bhaktas life. She can pour down or vent out her anger with the Lord. For me prayer is not just to know the will of God. It is a fellowship where I can share all my thoughts, struggle, views, opinions etc. with Him. As I often do it, I reflected that reality of prayer in this song.
BT Song 646 பாரம் நீங்கும்
கொஞ்ச நேரம் வந்து குமுறுகிறேன்
என் குறைகளை உன்னிடம் சொல்கிறேன்
அஞ்சி அஞ்சி நின்று பயனுமில்லை
ஆறுதல் சொல்பவர் யாருமில்லை
உள்ளே வைத்தால் பாரமாகும்
வெளியே சொன்னால் வம்பாய்ப்போகும்
உன்னிடம் வந்து சொல்லிவிட்டால்
என்பாரம் தன்னாலே நீங்கிப் போகும்
எத்தனை பொறுமை உனக்கிருக்கு
என் மீது உனக்கு அன்பிருக்கு
அழுதாலும் கொதித்தாலும் கேட்டுக்கொள்வாய்
அதன்முலம் ஆறுதல் நீ தருவாய்
என்னத்தை உன்னிடம் சொல்வது
என்று தயங்கி நான் நிற்கும்போது
பேச்சுக் கொடுத்து நீ கிளறிடுவாய்
பின்பேச பொறுமையாய்க் கேட்டிடுவாய்
நேரம்-காலம் நான் பார்க்க வேண்டாம்
உன் நேரத்தில் சற்றேனும் கேட்க வேண்டாம்
எப்போது நினைத்தாலும் வந்திடலாம்
என் எண்ணத்தை உன்னிடம் சொல்லிடலாம்
ஒருபோதும் நீ சலித்துக் கொள்வதில்லை
நான் வரும்போது ஓடி மறைவதில்லை
எனக்காக எதிர்பார்த்துக் காத்திருப்பாய்
நான் குமுறினால் கேட்க மனம் திறப்பாய்
அதனால் மீண்டும் இப்போ வந்தேன்
ஐயனே உன்னிடம் சொல்ல வந்தேன்
வழக்கம் போல் பொறுமையாய்க் கேட்டு கொள்ளு
என் பாரத்தை நீயும் ஏற்றுக் கொள்ளு
மத்திகிரி, 4-5-2017, இரவு 11.10
BT Song 646 Burden will go
I am groaning for sometime
And share my shortcoming to you
There is no use in standing afar from you due to fear
There is none who can console me
If I keep within me then it will become a burden
If I share with others, then it will become a rumour
If I come and share with you
My burden will automatically go
How much patience you have
And how much you love me
If I cry or become upset, you listen to me
Through that you give me comfort
When I hesitate thinking that
What shall I share with you?
You will make me to share by initiating the conversation
Then when I began to share you will listen silently
I need not see time and your convenience
I need not get an appoint with you
Whenever I think I can come unto you
Can share my thoughts with you
You never get frustrated by my pestering
You never run and hide when I come to you
In fact, you wait eagerly expecting my arrival
And when I began to groan you will open your heart to listen
Therefore, again I come unto to you
O my Lord, I want to share with you
As usual listen with much patience
And you carry my burden
Mathigiri, 4-5-2017, 11.10 pm.
BT Song 647
After reading the following accounts given by Richard Fox Young about Nilakanth/Nehemiah Goreh (1825-85) I sat for a movement reflecting his struggle and empthasized with him. Because I too go through such crises often in my journey in my bhakti with the Lord. But after completing this chapter (Richard Fox Young ‘Some Hindu Perspectives on Christian Missionaries in the Indic World of the Mid Nineteenth Century’, in Judith M. Brown and Robert Eric Frykenberg (eds.) Christians, Cultural Interactions, and India’s Religious Traditions, London, Routledge Curzon, 2002, pp. 37-60, pp. 55-56) I began to reflect on what I read in this chapter. Then I wrote this song as my response to such crises in my life:
…As he was an introspective individual, the historian has little access to Nilakanth’s inner agon. His correspondence, however, informs us that his conversion left him with a nagging sense of incompleteness – of being, in his own words, a kaccha (immature), not pakkha (mature), Christian – and that he tried to overcome this disappointment by perpetually seeking that elusive “knock-out” reason for not being a Hindu. That he was relatively unconcerned with demonstrating why he became a Christian seems to me significant. The missionary appeal to reason effected in him was not a capacity for more efficient reasoning but rather for stepping back from Hinduism to a vantage point where its philosophical coherence could be assessed objectively. Why it eventual came about that he saw the darshanas {six schools of thought/philosophy} as fataly flawed on (p.55) rational grounds is beside the point, despite the intrinsic interest of his arguments. What matters is that in becoming aware that it is possible to change one’s mind about life’s fundamentals, there was too much denial of Hinduism and too little affirmation of Christianity, a change in philosophical orientation that left the dispositions of the heart very much the same. To make the point in Christian idiom, Nilakanth’s experience seems to have fallen short of a metanoia that transformed the heart as well as the mind, giving constancy to belief and making it become conviction.—pp. 55-56
BT Song 647 அறிவின் எல்லை
இதுவரை எனக்குத் தெரியவில்லை
இன்னும் எனக்குப் புரியவே இல்லை
எண்ணிலாக் கேள்விகள் ஆயிரமிருக்க
இதுவரை விடை எதற்கும்கிடைக்கலை
பலவித கருத்துக்கள் உலகத்தில் இருக்கு
பலவிதப் பாதைகள் என் முன் இருக்கு
எல்லாம் சரி என ஏற்க முடியல
ஏதும் பயனிலை எனக் கூறமுடியலை
அழைத்தாய் உனக்கென உடன் நான் வந்தேன்
அதன்பின் நடந்ததை எண்ணியே பார்த்தேன்
இதுநாள் வரையில் உனக்கென வாழ்வது
என்னால் இல்லை என்பதை உணர்ந்தேன்
அதிக நூல்கள் படித்தும் பார்த்தேன்
ஆழமாய் அவற்றை ஆராய்ந்து பார்த்தேன்
இறுதியில் நானொரு முடிவுக்கு வந்தேன்
இவையெல்லாம் மனித எத்தனம் என்று
ஆயிரம் கேள்விகள் அறிவும் கேட்குது
அவற்றுக்கு விடைகாண மனது துடிக்குது
எத்தனை விடைகள் எவர் தந்தாலும்
இறுதியில் புத்தியோ ஏற்க மறுக்குது
இதன்பின் நானொரு விடையைக் கண்டேன்
என்னறிவுக்கு எல்லை உண்டு என்று
அதை நானும் ஏற்றுக் கொண்டேன்
அதன்பின் என்னுள் அமைதி கண்டேன்
மத்திகிரி, 5-5-2017, இரவு 11.15
BT Song 647 The Limitation of Intellect
Till this day I never understood
still it is not very clear to me
As I have thousands of questions within me
Till this day I didn’t get answer to all of them
Many kinds of views are in this world
many paths are before me
I cannot accept all of them as correct one
at the same time I cannot reject that none is useful
As you called me for you, I came immediately
then I contemplated what happened to me
The life that I live till this day is for you
is not because of me, this I realized.
I read many books
I analysed them deeply
Finally I came to a conclusion that
all of them are mere human endeavors
Intellect asks thousands of questions
The heart is longing to find answer to them all
whoever give how much answer
finally the mind refuses to accept them
Finally I found an answer (to this)
that there is a limitation for my intellect
and I accepted it
then I found peace within me
Mathigiri, 5-5-2017, 11.15 pm.
BT Song 648
After reading Matthew 12:45 ff. I began to meditate upon it thinking about my own life related in various areas where my later condition became worse than the former. As I began to reflect on past several incidents in my life, I wrote this song. Initial enthusiasm and too much proclamation without having inner conviction will easily erode one’s mere intellectual understanding about anything in spirituality. This is one area in which reason cannot have the final say. Simple bhakti and having a child like faith alone save one.
BT Song 648 பின் நிலை
பின் நிலை மோசமாய்ப் போய்விடுமே
போன பிசாசு வந்திடுமே
மேம்போக்காய் மாறியே பயனுமில்லை
உண்மையாய்த் திருந்தாமல் வாழ்வுமில்லை
ஆரம்ப காலத்தின் ஆர்வத்தால்
அதிகப்படியான வேகத்திலே
ஏதேதோ தீர்மானம் செய்துவிட்டு
இறுதியில் விழுந்தாலே பயனுமில்லை
பிறர் மெச்ச பல பேச்சுப் பேசிடலாம்
பிறர்காண நன்றாக நடித்திடலாம்
உள்ளான மாறுதல் இல்லாமலே
ஒன்றுக்கும் உதவாமல் போயிடலாம்
குப்பை கூளங்கள் நீக்கினாலும்
கூடத்தில் விளக்கு ஏற்றினாலும்
வாசலில் கோலங்கள் போட்டு வைத்தும்
வழக்கம்போல் வாழ்வதால் பயனுமில்லை
இறைவனின் சித்தத்தை புரிந்துகொண்டு
எளிதான பக்தியைத் தெரிந்து கொண்டு
சீரான பாதையில் சென்றிடணும்
சித்ததில் தெளிவு கொண்டிடணும்
வீழ்ந்தாலும் தோல்வியை ஏற்காமலே
வீணான பாதையில் போகாமலே
மன்னிப்புக் கேட்டு வந்திடணும்
மனதார தவறுக்கு வருந்திடணும்
குழந்தைபோல் மனதிலே எளிமை கொண்டு
கொண்ட கொள்கையில் உறுதி கொண்டு
இறுதி வரையில் நிலைத்து நின்று
இறைவனை அடையணும் பக்திகொண்டு
மத்திகிரி, 10-05-2017, இரவு 9.00 மத்தேயு, 12:45-46
648 Later conditions
The later condition will become worst
The devil which left will come back
There is no point in having a superficial change
There is not life without having inner change
Due to initial enthusiasm
And due to over zeal
Taking so many quick decisions
There is no use falling at the end
We can say for others to applaud us
We can pretend before others
Not having real inner change
We will end up becoming good for nothing
Though we clean and remove all the dirt
And light a beautiful oil lamp at the centre of the house
Doing many decorations at the doorstep
There is no use living as before
Knowing the will of God
And having a simple bhakti
We should walk in straight and (narrow way)
And we should have clarity in our mind
Though fell, not accepting the defeat
Not wandering in unnecessary paths
We should repent seeking forgiveness
Should feel sorry with a true spirit
Having simplicity like a child
Remaining firm in the conviction
Standing till the end
We should attain God having bhakti within us
Mathigiri, 10-05-2017, 9.00 p.m. Matthew,12:45-46
BT Song 649
Cross is not only a mystery but also a riddle. Though we try to give all kinds of explanations to it, a simple rationality won’t accept it. When the inner burden of sin and failures push, I realize its full meaning and purpose. But when I try to reason it out to understand intellectually, the cross completely fails. Yes, Cross fails to reveal all about it, because of my rational approach to it. My intellect may brag about it, but till the end I need to live with this struggle. Others may say that it is the failure of the intellect and not that of the cross. But I think the cross of the Lord won’t mind accepting such failures before human intellect as its mystery is beyond it. For me Cross is both a symbol of failure and victory, as God used a worse criminal symbol to demonstrate His Grace.
Though I never clearly understood this yet it is worth quoting Max Warren’s response to Roger Hooker about failure of Muktinath:
Warren: Address III p. 2 par 4. The failure of Jesus. This is a tremendous thought to bring to the Cross.
If we really take the Incarnation seriously then surely we must see that while Jesus was ready for failure he didn’t invite it. It gave him no joy to be rejected by his own people. He appealed to them most dramatically in the ‘symbols’ of his life and action and speech. He wasn’t play-acting his way to crucifixion.
I’m all the way with you in what you are saying. But I’ve not before seen it put so clearly, which is why I want to do a lot of thinking of ‘Jesus and his failure’. We with hindsight claim the victory was on the Cross. But we sometimes do it, at least I do, far too easily. A defeated Jesus has something very great to say to me, a so often defeated man! (Letter 389 2 March 1973).— Graham Kings, Christianity Connected: Hindus, Muslims and the World in the Letters of Max Warren and Roger Hooker, New Delhi, 2002, Indian Edition, ISPCK, 2017. pp. 313
BT Song 649 கிருபையின் விளக்கம்
அறியாத சிறுபிள்ளை
திருப்பாதம் வந்தேன்
தெரியாது செய்த பிழை
பொறுத்தருள் என்றேன்
இரங்காமல் இருக்கின்ற
இயல்புனக் கில்லை
இதைக் கூறி வருவதில்
தவறேதும் இல்லை
புரியாத புதிராக
நீ இருப்பாயோ?
புரிந்திட மறுப்போர்க்கு
புலப்படு வாயோ
எளிமையாய் உன்னிடம்
வருகின்ற போது
ஏற்று அருளிட
நீமறுப் பாயோ
அறிவின் மிகுதியால்
அலட்சியம் செய்தால்
அறிவை அறிவால்
அழித்திடு வாயே
ஆணவம் தலைக்கு
ஏறிடும் போது
ஞானத்தின் உண்மையை
மறைத்திடு வாயே
உன்னை அறிவது
எமக்கெளி தில்லை
உனது அருளுக்கு
விளக்கமும் இல்லை
கருணையின் மூலம்
காட்டிட வந்தாய்
தருவினில் தொங்கியே
விளக்கமும் தந்தாய்
ஏனிதைச் செய்தாய்
என்பதை எண்ணிட
எண்ணிலாக் கேள்விகள்
சிந்தையில் தோன்றுது
எத்தனை விளக்கம்
தந்திட்ட போதும்
இது ஒன்று மட்டும்
புதிராய் இருக்குது.
குருகுலம், 18-05-2017, காலை, 3.30
BT Song 649 Explanation of Grace
I am an innocent boy
Came to your feet
And I begged you to
Bear with my mistakes
You don’t have the nature
Of not having compassion
Nothing wrong in
Proclaiming this (to the world)
Will you remain?
As a riddle?
Will you reveal yourself?
To those who refused to understand
When one comes
With simplicity
Will you deny it?
Not receiving by your grace
When one despises you
Because of too much intellect
You will destroy that intellect
Only through the same
When the pride
Goes up to the head
You will hide
The knowledge of Truth
It is not easy
For us to know you
There is no definition
For your grace
You came to show it
Only through your compassion
And you gave an explanation to it
By hanging on the cross
When we think that
Why you have done it
Many questions are
Coming in our mind
How many explanations
We might give
This one till remains
As a riddle
Gurukulam, 18-05-2017, 3.30 am.
BT Song 650
Though we claim that Time has its own inherent power etc., a bhakta of the Lord could never believe in it. For her there is no protection outside the will of God. Similarly though God can only work in our lives through human agencies, yet that is also not permanent one. With whom we work, live and move will be gone within a few seconds away from our life. Though several times the future remains very bleak, yet for a bhakta the only hope is that, in spite of the reality of time factor and human agencies, her future is safe in God’s hand.
BT Song 650 நம்பிக்கை இழக்கவில்லை
உன் நோக்கம் எது என்று
சரியாகத் தெரியவில்லை
உன் சித்தம் எது என்று
எனக்கு புரியவில்லை
காலம் போடும் கணக்கென்று
ஏற்கவும் இல்லை
காரணங்கள் தேடினாலும்
இதுவரை கிடைக்கவில்லை
சூழ்நிலை சரியாக
அமைந்தாலும் கூட
சுற்றி நின்று பலரிங்கு
தாங்கினாலும் கூட
நொடியினில் அனைத்தும்
தடுமாறிப் போகும்
நினைத்த காரியம்
திசைமாறிப் போகும்
நேராக நீ வந்து
நடத்துவது இல்லை
நினைத்தபடி எல்லாம்
நடப்பதும் இல்லை
தன் போல காரியங்கள்
நடக்கவும் இல்லை
உன் சித்தம் புறம்பாக
என் வாழ்வு இல்லை
ஆயினும் அதை மட்டும்
அடிமை அறியவில்லை
அதைக்கூட புரிந்துகொள்ள
ஞானமும் இல்லை
மனிதர் மூலம் செய்வதன்றி
மாற்றம் உனக்கில்லை
யார் மூலம் என்பதுதான்
எனக்கும் தெரியவில்லை
நீர் மீது போகின்ற
துரும்பாகி போனேன்
நிலையான வாழ்வொன்று
இதுவரை காணேன்
ஆயினும் நீயன்றி
வழியேதும் காணேன்
அதனால் நம்பிக்கை
இழக்காமல் உள்ளேன்
குருகுலம், 22-5-2017, இரவு, 11.00
BT Song 650 Didn’t lose hope
I don’t know clearly
What is your will for me?
I cannot understand
Your will properly
I cannot accept that
This is the Lela (play) of Time
Though I search for reasons
Still, I couldn’t find them
Though the situation
Is very perfect
Many indeed are there
To stand support me
Within in few seconds
All will collapse
And what I have planned
Will be gone without direction
You never come
Directly to guide us
Everything never
Go as we wish
At the same time
Things are not going on their own
And my life is not
Outside your will
Still this slave
Never understood it clearly
I don’t have the
Wisdom to know that
there is no alternative
For you to act other than human agencies
But through whom is
Not yet clear to me
I become like a bubble
On the floating water
I have never witnessed
A stable life for me
At the same time, I cannot find
Any other way than that you already set for me
Therefore, I never lost
My hope in you.
Gurukulam 22-5-2017, 11.00 p.m.
Leave a Reply