Secular Songs 16 to 20

Song 16

This is one of my favourite topics: try to live in the present. Though I never implement it in a perfect way as I too have anxiety about future and regret about the past, still I will try to overcome them by trying to live in the present.

என்ன பொறுத்தவரை வாழ்வில, ஒவ்வொரு நாளையும் நேரத்தையும் மையமாக வச்சுவாழறபோதான் நம் வாழ்வசரியாக வாழ முடியும். பலர போல நானும் கடந்த காலத்த குறிச்சு வருத்தமும் எதிர்காலத்த குறித்த பல கேள்விகளோடு வாழ்ந்தாலும் அன்றாட வாழ்வ மையமாக வச்சு வாழறதுதான் சிறந்தது என்ற கொள்கையமுடிஞ்சவர கடைபிடிச்சு வாழறேன்.

16 வராத பிரச்சனை

வராத பிரச்சனையை

வீணே கற்பனித்து

வருந்தி வருந்தியே

நிகழ்கால நேரத்தை

வீணாக செலவழிக்கும்

பேதையான மந்தரே

வரும்போது பார்க்கலாம்

நிகழ்கால நேரத்தில்

பொன்னான நேரத்தை

புத்தியாய் செலவழித்து

பெறுவீர் ஞானமதை

பயனுண்டு அதனாலே.

16The problem which never might come

Oh ignorant people

Who wastes the present

In a foolish way

By Imagining about

The future problems that might not come!

Let us face when they will come.

Using the golden opportunity

That is at present

If you gain wisdom

By proper means

There is some use in it.

Song 17

Both sex and hunger are the most beautiful gifts by God.  Even animals never transgress the law of nature in this.  But only in human life do they become fire destroying us. But those who have self-control become a model for others to follow.  But in many others life is like a wildfire, they merely destroy them completely.

பசியும் காமமும் இறைவன் நமக்கு கொடுத்த அழகான ரெண்டு வரம். மத்த உயிரினம் இந்த இயற்க நியதி கட பிடிச்சு சிறப்பா வாழுறப்போ மனிதன் மட்டுமே அவற்ற தவறா கையாண்டு இந்த அழகிய வரங்கல சாபமா மாத்தறோம். ஆனால் மனித வாழ்விலே மட்டுமே இந்த ரெண்டும் நெருப்பா அவன எரிக்கிது. சிலர்வாழ்வில புலனடக்கத்தால அந்த நெருப்பு தீபமாக சுடர்விடுது. பலர்வாழ்வில அவை காட்டுத்தீயா மாறி அனைத்தையும் அழிக்கிது. 

17 நெருப்பிரண்டு

வைத்தானே நெருப்பிரண்டை

வாழ்வென்னும் வண்டியிலே

அடிவயிற்றிலே ஒன்று

அதன் கீழே மற்றொன்று

ஏன்தான் இதை வைத்தான்

என்ன அவன் எதிர்பார்ப்போ

பிள்ளைத் தலை மீது

பெரும்பாரம் சுமந்தார்ப்போல்

தவிக்கின்றார் மாந்தருமே

பாரமவைத் தாங்காமல்

நெருப்பை அணைக்க எண்ணி

நெய்வார்க்கும் மூடன்போல்

முயல்கின்றார் மாந்தரும்

முழுமூச்சாய் தீயணைக்க

உண்மைநிலை உணராமல்

ஊமை கண்ட கனவு போல

உள்வைத்தே வாடுகிறார்

உய்யும் வழி அறியாமல்

பசியும் பாலுணர்வும்

பரனளித்த உணர்வுகளே

பக்குவமாய் கையாண்டால்

பலனுண்டு அவையாலே

இயற்கையின் விதிக்கிசைந்து

இவ்விரு உணர்வுகளை

மிருகங்கள் கூட தம்மில்

முறைமை அனுசரிக்கும்

மிஞ்சிய மோகத்தால்

காமம் எனும் தீயினிலே

கருக்கினால் உடல்தனை

நட்டம் நமதேயாகும்

இல்லற வழிதனிலே

இணைந்தே வழி நடந்தால்

எரிகின்ற தீபமாய்

என்றுமது விளங்கும்

உயிர் வாழ வேண்டியே

உடலின் நலம் பேண

அளவாய் உண்டாலே

ஆயுளும் நீடிக்கும்

ஒருவேளை உண்டால் யோகி

இருவேளை உண்டால் போகி

மூவேளை உண்டால் துரோகி

அதற்குமேல் உண்டால் மனிதனல்ல

வாழ்வதற்கே உணவு வேண்டும்

உண்பதற்கு வாழ்வு அல்ல

பெரும்தீனிக் காரன்

பாரமே உலகினிற்கு

வாழ்வென்னும் வண்டியது

வளமுடன் சென்றிடவே

புலனடக்கம் என்ற அச்சில்

பொருத்திய சக்கரமாய்

இவ்விரு உணர்வுகளும்

இசைவாக உருண்டிட்டால்

உன் வாழ்வு வளமாகும்

உலகிற்கு நீ சுடராவாய்

22 & 24-5- 1993.

17 Two fires

God kept two kinds of fire

In our life!

One is hungry

Another is sex

Why he kept them

And what is his expectation?

Like loading too much burden

On the head of a child

Human beings too are struggling

Unable to bear that burden

Like a fool who pours

Ghee on the fire to quench it

People do the same

To quench these two fires

Unable to understand the reality

Like a dumb who saw a dream

They too suffer keeping it within them

Without knowing to communicate!

Both hunger and sex are

Two gifts from God

If they are handled properly

They become very useful

Keeping the law of nature

Even animals too

Handle both of them

In proper way among them

But overcome by lust

If we burn our body

Finally the

Loss will be ours only

If we walk in the

Path of family joining together

It will shine like a

Lamp all the time

In order to keep the life in the body

If we eat properly

Keeping the health before us

Our life too will prolong

If we eat one time, we will become Yogi

If we eat two times, we are enjoying the life

If we eat three times then we will become enemy to our body

And if we eat more than that then we are not even human beings

We should eat in order to live

And we should not live only to eat

A glutton Indeed is a burden to the world

If one wishes to take the cart of life

In proper way

Keeping both these needs

In between the axis of self-control

And if the both the wheels role

Properly coordinating with each other

You will prosper in your life

And you will become light to the world

22 & 24-5-1993.

Song 18

Changing one’s principle often will bring instability both in life and mind.  Those who try to justify it will become self-righteous. They will even try to convince others by their skillful talk. As I was reflecting on this nature, I wrote this song.

கொண்ட கொள்கையில் நாம உறுதியாய் இருக்கணும். அதேசமயம் தேவைப்படும்போது விட்டுக் கொடுக்கவும் தயங்க கூடாது. இதைப்பற்றி மற்றவர்களுடன் சேர்ந்து நமது மனமே நம்மை குறை கூறலாம். அது சரியாகவும் இருக்கலாம். ஆனால் வளைந்து கொடுக்காமல் வாழ்க்கை இல்லை;

18 கொள்கை மாற்றம்

எடுத்தத் தீர்மானங்கள் எத்தனையோ

எண்ணினால் கணக்கில் அடங்காது

எதையும் நிறைவேற்ற என்னாலே

இயலாது என்பது முடிவானது

ஏன் இந்த தடுமாற்றம் என்னிலே

எத்தனை கேள்விகள் என் வாழ்விலே

இப்படியே வாழ்க்கையும் கழிந்துபோனால்

எஞ்சுவதும் ஏதுதான் என் வாழ்விலே

உள்ளான மனதின் தினப் போராட்டம்

ஓயாத கடலலை பேயாட்டம்

கெஞ்சினால் மிஞ்சும் மிஞ்சினால் கெஞ்சும்

இதுவே என்மனத் தடுமாற்றம்

உறுதி வேண்டும் ஒரு கொள்கையிலே

உரைக்கின்றேன் உபதேசம் ஊருக்குமே

எத்தனை விரைவாக என் வாழ்விலே

மாற்றினேன் கொள்கையை மனம்போலே

பச்சோந்தி கூட நிறம் மாறும் பல முறை

பாதுகாப்பை மட்டும் என்றும் நாடி

பலமுறை மாற்றினேன் என்ற கொள்கையைப்

பிறர் குறை கூறவே உண்மையில்

என்னை நீதிமானாய் நானெண்ணியே

இதுவரை வாழ்ந்ததால் இந்நிலையே

சுயநீதி உடையோர்க்கு தன் கொள்கையும்

சூதாட்டம் ஆகுமே தினம் தோறும்

தன்சித்தம் ஒன்றையே நிறைவேற்ற

தயங்கிடார் தந்திரம் பல கையாள

தத்துவம் பேசுவார் தாராளமாய்

குடிகாரன் போலவே சுய நீதியில்

15-6-1993, கோண்டா காலை, 5.30,உத்திர பிரதேசம்

18 Change in principle

The decisions that I took

Are many to count

But I cannot accomplish anyone

And this became the reality at the end

Why this kind of disturbances in my life

How many questions are there in my life?

If life goes like this

At the end what will be there to live?

Each day there is struggle in mind

Like unending waves

If I bow, it will overcome me and if I threaten it will bow

This is the reality about my mind

I proclaim to the world that

One should have a strong conviction

But how many times I have changed

My principles as I wished

Even Chameleon will change its colour

Only to survive

But I changed my principles many times

Giving space for others to blame me

The reason for this condition is that

I lived thinking me as a righteous person

Those who have self-righteousness as their principle

Then it will become a gamble for them each day

In order to accomplish only their will

They won’t hesitate to go any extend

They will speak lots of philosophy

Like a drunk, standing on their own self-righteousness

15-6-1993, Gonda, U.P. 5.30

Song 19

As I was travelling in a bus from Sunowli after my visit to Keshave’s village (kekaraha) as I was observing the life of people who are busy with so many works to meet the needs of life, I thought that seeking so many needs and pleasure people become worn out by toiling much. But once they understand the secret of content in life, then they too know how to relax. Of course, it was easy to view life as a sannyasi and single person like this. But poems reflect the mood of that time and not giving final thought about life.

ஒரு சமயம் காலையில பேருந்தில போறப்போ காலையிலேயே பலரும் பரபரப்பா பல வேலைகல செய்யறத கவனிச்சப்போ எழுதிய பாடல். [இப்பாடலின் முதல் நான்கு வரிகள் 20-4-1993 அன்று நானும் கேஷவும் சுனொளலியிலிருந்து சாக்காட்டுக்கு (மத்தியப் பிரதேசம்) வரும்போது பஸ்ஸில் எழுதியது. மீதமுள்ளவை 23-6-1993 கோண்டாவில் (உத்திரப் பிரதேசம்)எழுதியது]

19. போராட்டம்

என்னதான் மனதின் நினைவுகளோ

எழுந்ததும் காலையில் மனிதனுக்கு

எப்படித்தான் செல்லும் இந்த நாளுமே

என்பதே மனதின் தினப் போராட்டம்!

ஓடாய்த் தேய்கிறான் உழைத்துழைத்தே

ஒரு சுகம் இதில் அவன் காணாமலே

உண்ண உடுக்க உடல்சுகம்தேட

ஓடித் திரிகிறான் ஓய்வேதும் இல்லாமல்

ஒன்றினைப் பெற்றபின் மற்றதின் சிந்தனை

ஒன்றிலும் காணாமல் மனதில் நிறைவினை

கானல்நீர் தேடிய மான் போல் வாழ்வெலாம்

கதறியே தொடர்கிறான் உலகினில் மாயையை

எவ்வளவு உரைத்தாலும் ஏற்காது அவன் மனம்

ஏதோ ஒன்று உள்ளது அதன் பின் ரகசியம்

’போதும்’ என்ற பொன்செயும் மருந்து

பெறவில்லை அவன் நோய்க்கு இவ்வரும் மருந்து

19. Struggle

Once he got up in the morning

What would be the thought that comes to mind?

‘How this day will go’

Is the constant thought and struggle in the mind?

He became worn out

By toiling a lot without seeing any joy in it

In order to have food, shelter and pleasure

He toils a lot without having any rest

When he got one thing

The thought of another thing comes to him

And he does not find contentment even in one thing properly

Like a deer which chases the mirage

He also cries chasing the maya of this world

Whatever advice we give, he won’t accept

And there is a secret behind this

As he never received the medicine ‘contentment’

For this disease in life.

20-4-1993. Sunowli, M.P.

Song 20

As I was reflecting on the struggles in life and the way we continue to face it, not accepting the defeat I wrote this song.

எத்தன போராட்டம் வாழ்க்கையில இருந்தாலும் தோல்வியை அப்படியே ஏற்காம மீண்டும் மீண்டும் போராடுற நம் மோட இயல்பு பத்தி எண்ணறப்ப எழுதிய பாடல். [இப்பாடலின் முதல் எட்டு வரிகள் 9-8-1993மாலை 7.00-மணிக்கு எழுதியவை. மத்தத 16-8-1993 காலையில எழுதி முடிச்சேன்.]

20 வாழ்க்கை

என்னதான் வாழ்விதுவோ

எப்படித்தான் வாழ்ந்தாலும்

எஞ்சுவதோ என்றுமிதில்

ஏமாற்றம் ஒன்று மட்டும்

தனக்கெனவே வாழ்ந்திட

தலைப்படும் மனிதனுமே

நிறைவேதும் காணாமல்

தேடுகிறான் ஏதோ ஒன்றை

கிட்டியது எட்டவில்லை

என்றாலும் போராட்டம்

எப்போதும் ஓய்வதில்லை

கைநிறைய சோறள்ளி

வாயருகில் சென்றாலும்

பல் தட்டிய காரணத்தால்

சிதறியது அத்தனையும்

ஆனாலும் தோல்விதனை

அப்படியே ஏற்காமல்

பொறுக்கி எடுக்கின்றான்

புழுதியது ஒட்டாமல்

நாளும் தொடரும்

நானிலத்தில் உள்ளமட்டும்

வேண்டா இப்போராட்டம்

வேறென்ன செய்திடுவான்

20 Life

Whichever kind of life we lead

[at the end the question will come]:

What kind of life is this?

At the end

Only disappointment is there.

Man tries to live

But unable to find satisfaction in it

As he always searches for something new!

Though he cannot get it

Still the struggles never came to an end!

As he takes food to his mouth

As the fingers get stumbled by teeth

It fell on the ground.

Yet not accepting the defeat

He began to collect it again

Not spoiled by dust!

As long as he lives on this earth

This unnecessary struggle will continue each day

What else can he do?

9, 16-8-1993, Gonda, U. P.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *