Bhakti Gita Chapter Thirteen

பதிமூன்றாம் அதிகாரம்

பரம புருடன்

(முனிவர் கூறினார்:)

1. முதலாம் மனிதன் உலகில் வந்தான்

ஜீவ ஆத்துமா என்ற நிலையில்

2. முக்தேசன் தான் உலகில் வந்தான்

பரமனின் ஆத்துமா என்ற உயர்வில்.

3. மாமிச தேகம் தோன்றிய பின்னே

ஜீவன் உடலில் வந்தது தானே

4. மாமிச உடலில் வந்ததால் மனிதன்

மண்ணு உடலாகவே வாழ்ந்தே இருந்தான்.

5. முக்தி அளிக்க வந்த நம் ஈசன்

பரமனின் தன்மையில் வாழ்ந்தே இருந்தான்.

6. உலகின் தன்மையில் வாழ்ந்திடும் நாமும்

முதலாம் மனிதனைப் போலவே ஆனோம்.

7. பமரனின் தன்மையில் வந்த நம் ஐயன்

இறைவன் வழியினில் வாழ்ந்தே இருந்தான்.

8. முதல்மனு மூலம் பாவம் வந்தது

பாவம் மூலம் மரணம் வந்தது.

9. அனைவரும் பாவம் செய்ததினாலே

மரணம் நமக்குப் பொதுவாய் வந்தது.

10. ஆயினும் அனைவரை மீட்கவும் வந்த

ஐயன் முன்மாதிரி ஆனான் மனுவும்.

11. ஒருவனின் மீறுதல் மரணத்தை அளிக்க

ஐயனின் மரணம் வாழ்வை அளித்தது

12. நித்தியவாழ்வுக்கு நம்மையும் அழைத்துப்

பேரின்ப நிலைக்குக் கொண்டு சென்றது.

13. ஆண்டவனுள்ளே நிலைப்பதன் மூலம்

அவனின் தன்மையை நாமும் அடைந்தே

14. காட்டத்தி மரத்தின் தன்மை நீங்கி

நாட்டத்தி போல நாமும் ஆனோம்.

15. இறைவனின் திருமேனி அங்கங்களாகி

இணைந்துஒன்றாய் ஓருதேகமே ஆனோம்.

16. இறுதி வரையில் இந்த நிலையில்

என்றும் அனைவரும் வாழ்ந்தே இருப்போம்.

(முக்தேசன் கூறினான்:)

17. என்னில் நீயும், உன்னில் நானும்

இணைந்து ஒன்றாய் இசைவுடன் இருந்தால்

18. என்றும் வாழும் நித்திய வாழ்வு

என்றும் உனதே ஆகும் உணரு.

(பத்தர்கள் கூறினார்கள்:)

19. மீறுதல் மூலம் மரித்தோர்க் கிங்கு

மீண்டும் அளித்தான் மாறாக் கருணை!

20. உயிர்ப்பிச்சை அளித்தே உன்னத வாழ்வை

உவந்தே நமக்குப் பகிர்ந்தும் அளித்தான்.

21. ஆகையால் இனிமேல் பாவத்திற் கிறந்து

இறைவனுக் கென்றே இனிதே வாழ்வோம்.

22. மரணம் மூலம் மண்ணுடல் மரித்தும்

மரிக்கா நமது ஆன்மா என்றும்.

23. நிலைத்து நம்மில் ஐயன் இருக்க

நித்தியம் அவனுடன் நாமும் வாழ்வோம்.

24. அனுதினம்  நாமும் அவனுடன் மரிக்க

உயிர்த்தே எழுந்தோம் அவனுக்காய் வாழ.

25. என்னில் வாழ்வது ஆண்டவனன்றி

எவரும் இல்லை, இல்லை, இல்லை.

26. நெருக்கம் சூழ்ந்த உலகின் வாழ்வில்

பலமுறை நாமும் நொறுக்கப்பட்டாலும்

27. நிதமும் அவனுள் வாழ்வதனாலே

நிச்சயம் அவனுக்காய் நிலைத்தே வாழ்வோம்.

28. ஐயனின் பக்தராய் ஆனதினாலே

அவனுள் நித்தியம் வாழ்ந்தே இருப்போம்.

29. நன்மை அனைத்தையும் செய்யும் படியாய்

நம்மையும் அவனே படைத்துக் காத்தான்.

30. நாளும் அவனுள் வாழும் படியாய்

நம்மையும் அவனே அன்புடன் அழைத்தான்.

31. ஞானம், நீதி, புண்ணியம், மீட்பு,

எல்லாம் அவனே நமக்கும் ஆனான்.

32. எந்த நிலையிலும் நாமும் வாழ்வில்

வாழ்ந்தே உலகில் சோர்ந்த்தே இருக்க

33. நாடி வந்து தேடிய அருளால்

நாயேன் தன்னை அவனும் மீட்டான்.

34. தெய்வத்தின் தன்மை பூரணமாக

தேகம் தன்னில் அவனிடம் விளங்க

35. பூரண வாழ்வும் அவனின் அருளால்

நாடியே என்னிடம் நன்மையாய் வந்தது.

(ஆண்டவன் கூறினான்:)

36. பரம தந்தையே! நீயும், நானும்

பரிபூரணமாய் ஒன்றே ஆனோம்.

37. பாங்காய் நமது உன்னத மகிமையைப்

பரிவாய்த் தந்தோம் பக்தருக்கென்றும்.

38. நித்தியம் ஒன்றாய் நாம் இருப்பதுபோல்

பக்தரும் வாழ அருளைப் பொழிவோம்.

(முனிவர் கூறினார்:)

39. மகிமையின் நாதன் முக்தேசன்

நமக்குள் நிச்சய மாய்வந்தான்.

40. மாறா அந்த மகிமை என்றும்

பெருமை அடைய வாழ்ந்திடுவோம்.

பரம புருடன் என்ற பதிமூன்றாம் அதிகாரம்

இத்துடன் நிறைவடைந்தது].

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *