Arati Song

ஆரத்தி

உலகின் நாயகனே–ஸ்வாமி

உலகின் நாயகனே

பக்தர்களின் குறைதீர

விரைந்தே வந்திடுவாய்—ஓம் உலகின்… (1)

உன்னருள்நாடி உனதடி தேடி

உவப்புடன் வந்தவர்க்கு—ஸ்வாமி உவப்புடன்…

வாழ்வின் குறைகளை நீக்கி

உய்வும் அளித்திடுவாய்—ஸ்வாமி உலகின்…. (2)

அன்னையும் தந்தையும் ஆனவன் நீயே

ஆதியும் அந்தமும் நீ—ஸ்வாமி ஆதியும் அந்தமும் நீ

ஆரத்திபாடும் அடியவர் மனதில்

ஜோதியும் ஆவாய் நீ—ஸ்வாமி உலகின்… (3)

காக்கும் கடவுள் கலியுக தெய்வம்

கருணைக் கடலன்றோ—ஸ்வாமி கருணைக்….

குறையுடன் வாழும் மனிதர்கள் வாழ்வில்

நிறைவும் நீயன்றோ—ஓம் உலகின் நாயகனே(4)

ஒன்றாம் இறைவன் உலகின் தெய்வமே

உண்மை வழியன்றோ—ஸ்வாமி உண்மை வழி….

உன்னையல்லால் வேறொன்றை நாடேன்

விரைந்தே அருள்புரிவாய்—ஓம் உலகின்… (5)

உடல் பொருள் ஆவி, உள்ளமும் உனக்கே

உவந்தே அளிக்கின்றேன்—ஸ்வாமி உவந்தே…

உனதை உனக்கே அளிப்பதன் மூலம்

உன்னையே வணங்கு கின்றேன்—ஓம் உலகின்… (6)

Open save panel

  • Post

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *