When the actor Sivaji Ganesan in one weekly Tamil magazine (Kumkum) wrote that poet Vairamuthu even overcame Kannadasan, several Kannadasan fans like me became upset and recorded our objection to his remark. In order to register my opposition to Ganesan’s comment I wrote this song.
It is very difficult to translate this song in Tamil as I used the word ‘Varira Muthu’ as a pun. ‘Vairam’ is diamond and ‘muthu’ is pearl in Tamil. And separating his name in two parts as ‘Vairam’ and ‘Muthu’, I twisted them to register my response to Sivaji. Personally I am not against Vairamuthu, however he remained a controversial person in his life as many women in film industry openly blamed him for abusing them, through ‘Me Too’ movement. No one should compare one poet with another.
குங்குமம் என்ற வாரப் பத்திரிக்கையில் நடிகர் சிவாஜி கணேசன்,‘கண்ணதாசனையும் மிஞ்சி விட்டார் வைரமுத்து’ என்று கூறிய வார்த்தைகளை தொலைகாட்சியில் கேட்டவுடன் என் போன்ற பல கண்ணதாசனின் இரசிகர்கள் வெகுண்டெழுந்தனர். எனவே என் எதிர்ப்பையும் பதிவு செய்ய இப்பாடலை நான் எழுதினேன்
94 Sparrow won’t become the eagle
Though a sparrow tries to fly up and up
It can never become an Eagle
Though thousands of poets might come
Can one become a Kannadasan?
Though Vairamuthualso write poems
If one scrutiny them properly
They all are nothing but artificial diamond nickels
Would millions of poems by others
Ever become equal to one poem of Kannadasan
Who used colour full words
To give expression to his thought
Though his poems
O thankless Sivaji Ganesa
How much you have given some best performances
Though your acting carrier in films
One day the world will forget you
But Kannadasan will rule forever
The heart of the (Tamil) people
Erode, 19-6- 1998, 9.45 a.m.
Song 94
94 ஊர்க்குருவி பருந்தாகுமா
உயர உயர பறந்தாலும்
ஊர்க்குருவி பருந்தாகுமா
ஓராயிரம் கவி வந்துபோனாலும்
ஒரு கண்ணதாசனுக்கு ஈடாக்குமா?
வைரம் ‘முத்தாக’ வாறி இறைத்தாலும்
வகைப்படுத்தினால் அவைகளையே
செயற்கை ‘முத்தான’ சொற்களினால்
செய்த போலி ‘வைர’ மாலையே
சொல்லின் நாயத்தால்
வண்ணம் காட்டியே
சிந்தை நிறைந்த கவி வேந்தனின்
கால் தூசி ஆகுமோ பிறர்பாடலுமே!
[அவற்றின் மதிப்பை ஆராய்ந்து பார்த்தால்
அனைத்தும் சொத்தை முத்துக்களே]
செய் நன்றி மறந்த சிவாஜி கணேசனே!
உன் நடிப்பு சற்றே உயர்வானாலும்
உலகம் மறந்திடும் ஒரு நாளிலே
காலம் காலமாய் மக்கள் மனதிலே
கோலோச்சுவான் கவியரசு கண்ணதாசனே
ஈரோடு, 19-6- 1998, காலை 9.45
Leave a Reply