Bhkti Songs by Salem Gopal

Bhkti Songs by Salem Gopal

When I visited my friend Kannan in Erode, after a few days he shared with me a few handwritten pages of Psalms composed by the late Sri Salem Gopal. He had written many songs expressing his bhakti at Muktinath. I had the privilege of meeting him in person two or three times, and we spent wonderful hours discussing various Tamil poems and literary traditions. He was a gifted poet, deeply well-versed in Tamil prosody and poetic grammar.

We are already singing one of his compositions in the Sandam genre—“Yettahayorum Narkadi Adaya.”

https://dayanandbharati.in/wp-admin/post.php?post=447&action=edit

Since these works existed only as handwritten copies, I created this electronic version in order to preserve them and pass them on to the next generation, and I am sharing them here on my blog. He has written many more songs, which I hope his children have preserved, though I am unable to contact them.

Gopal, however, is not an exception. There are countless such unknown Hindu bhaktas who have documented their devotion in many forms, including poetry. Sadly, much of this work remains unavailable or unused by other bhaktas. Yet a bhakta records her personal relationship with the Lord in her own way, often without concern for whether others will ever use these expressions, for they are written primarily to give voice to lived experience.

With the hope that one day, somewhere, someone may find them meaningful in their own journey with the Lord, I share here some of the Psalms written by Gopal, along with his New Year songs. I have provided an English translation only for the New Year song. His Mukti Sandam is already available on my blog for those who wish to use it.

I also thank Kannan for preserving these handwritten copies as well.

Erode January 19, 2026

Gopal Salem

1-ம் சங்கீதம்

1 துன் மார்க்கர் நெஞ்சத்தின் நோக்கத்தை

தெரியாதும் கற்றுத்தான் கொள்ளாது

தின் மையோர் செல்கின்ற பாதையில்

தவறாயும் சற்றேனும் செல்லாது

புன் மையோர் உட்காகும் கூட்டத்தில்

புரியாதும் பக்கத்தில் அமராது

2 முன் னோனின் வேதத்தை நேசித்து,

முடிவின்றி நானெல்லாம் வாசித்து

நன் மையாய் உள்ளத்தில் யோசிக்கும்

நல்லோனே வையத்தில் செல்வந்தன்.

3 குன் றாத நீரோரம். நடப்பட்டு

காலத்தில் கனியைத்தான் தருகின்ற

என் றென்றும் இலைவீழா மரம் போல

எப்போதும் இருப்பானே அவனிங்கு

கன் மங்கள் எதுவொன்றும் செய்யத்தான்

கைகூடிப் பலனாகும் அவனுக்கு

4 வன் கண்ணர் அவரைப்போல் இல்லாது

வஞ்சத்தை நெஞ்சத்தில் கொண்டதால்

அன் றாடம் நில்யற்று காற்றிலே.

அலைகின்ற பதரைப்போல் ஆவாரே

5 இன் றித்தான் போவாரே துன்மார்க்கர்

இனிவரும் நியாயத்தின் தீர்ப்பிலே

சன் மத்தில் அமராரே பாவிகள்

சற்றேனும் சுத்தர்கள் சபையிலே

6 நின் றென்றும் காக்கின்றார் தெய்வமே

நீதியுள்ள உத்தமரை வழியிலே

பின் பென்றும் இல்லாது துன்மார்க்கர்

பொன்றித்தான் விடுகின்றார் குழியிலே

தின்மையோர் = தீயவர் ; புன்மையேரர் = ஈனர்கள் . முன்னோன் = கடவுள்.

செல்வந்தன் = பாக்கிய வான்;  குன்றாத = குரையாத; கன்மங்கள் = செய்தொழில் வன் கண்ணர்: கொடியவர்;

இன்றித்தான்= இல்லாமல்; சன்மத்தில் = இப்பிறவியில்; அமராரே = உட்காருவதில்லை; பொன்றித்தான்= செத்துத்தான்; குழியிலே = நரகத்தில்; ஆக்கியோன்

சேலம்  கோபால்

சங்கீதம் 19

1 சாட் சியிட விண்விரிவு சர்வேசன் ஆற்றலை

               சொல்லுவதே வானங்கள் சொர்க்கீசன் வளமையை

2 நீட் சியுற்று வார்த்தைகள் நித்தியனின் அறிவோடு

               நாள் தோறும் போகுதே நீள்வானம் மீதேறி

3 காட் சியின் பொருளாக கடிவான உளதன்றி

               கூறுமாறு வாய்ப்பில்லை குணக்குன்றின் வார்த்தையை

4மாட் சியோடு புறப்பட்டு மன்னவன் வார்த்தைகள்

               மின்னல் போல் செல்லுதே மன்பதை மீதெங்கும்

5 ஓட் டங்கள் ஓடியே ஒளியெங்கும் வீசமாறு

               ஒரு சொல்லில் உருவான ஒருவட்ட்டப் பகலவன்

மோட் சித்து ஓடுதே மாறாது தன்வழியில்

               மணவறையை விட்டுவந்த மணவாளன் போலத்தான்

6 பாட் டையாக்கி வானத்தை பகலவன் சுற்றிவர

               பகலோனின் காந்திக்கு மறைவான பொருளேது

7 ஈட் டிபோல் பாய்ந்திட்டு இதயத்தை உயிர்ப்பிக்கும்

               இறையோனின் வேதமே இவ்வுண்மை சாட்சியாய்

ஆட் கொண்டு பேதையை அவனியில் மேதையாக்கி

               அலங்கரிக்கச் செய்யுதே அழியாத அன்பினால்

8 ஊட் டமூட்டி இறை  நீதி உள்ளத்தை மகிழ்வித்து

               உண்மையோடு தூய்மை கண்களில் ஏற்றுதே

9 காட் டுகின்ற பயபக்தி கடவுளின் பேரிலே

               கொண்டுவரும் நிலைவாழ்வை நீதியோடு உண்மையையும்

10 வாட் டமற்ற இறைவேதம் விலைமிக்க பொன்னிலும்

               விலையேறப் பெற்றதாய் விரும்ப்பத் தக்கதாய்

கூட் டோரம் வழிந்தோடும் தேனிலும் மதுரமாய்

               கூடித்தான் காணுமென்று கூறத்தான் வேண்டுமோ

11 வேட் டலாய் கண்டிக்கும் தேவத்தை நாள்தோறும்

               வாசித்துக் கைக்கொள்ள் வந்தெட்டும் பாக்கியம்

12 நாட் டிவிட்ட பாவத்தை  நன்கறிவார் யாராமோ

               நீக்குவீர் நான்செய்த நாள்பட்ட பாவத்தை

13 மூடி த்தன் நெஞ்சேற்றியெ மூர்க்கமான பவத்தை

               மனதார எனக்குத்தான் மன்னித்து தெய்வமே

ஓட் டித்தான் அவையென்னை ஒண்டாது நீர்செய்ய

               ஒதுங்கித்தான் தீமைக்கு உத்தமான் வாழ்வேனோ

14 மீட் பரும் கன்மைலையாம் மாசற்ற கடவுளே

               மேவித்தான் என் நெஞ்சில் மலர்கின்ற தியானமும்

கூ ட் டாக நான் கூறும் என் வாயின் வார்த்தையும்

               கேட்டுத்தான் உம் முள்ளம் கொள்ளட்டும் பேர்வகை

பதவுரை:

சர்வேசன் =கடவுள்; நீட்சியுற்று = விரிவுற்று; மன்படை = மக்கள் பரப்பு

பாட்டையாக்கி =வழியாக்கி; மேதை =அறிவாளி; வேட்டலாய் =ஆவலாய்; மேவித்தான் = அன்பு மேலிட்டு; சொர்க்கீசன் = கடவுள்; குணக்குன்று =கட்வுள்; பகலவன் =சூரியன்; காந்தி =வெளிச்சம்; அவனியில் = உலகத்தில்; நாட்டிவிட்ட = நடத்திவிட்ட; கூட்டாக = சேர்ந்துதான்; வளமை =பெருமை; மாட்சியுடன் =மேன்மையுடன்; மோட்சித்து =விருப்பமாய்; பேதை =அறிவிலார்; வாட்டற்ற = குறைவற்ற; மூட்டித்தான் = பொருத்தித்தான்; பேருவகை =பெரு மகிழ்ச்சி.

சேலம்  கோபால்

23-ம் சங்கீதம்

1 இறை யெந்தன். மேய்ப்பனாய் உள்ளதால்

இல்யொன்றும் தாழ்ச்சியே எனக்குத்தான்

2 வரை யற்று விளந்துள்ள புல்வெளியில்

வயிறாற என்னத்தான் உண்பித்து.

விரை வாகக் கொண்டுபோய் விடுகிறார்

வற்றாது ஆடாத நீரண்டை

3 உறை க்கின்ற துன்பங்கள் நீக்கித்தான்

உள்ளத்தை பரிவாகத் தேற்றியே

மறை யோனின் நாமத்தின் மேன்மைக்காய்.

மனதார அற்புதமாய் என்னத்தான்

கறை யின்றி நித்தமும் நீதியாய்

கைபிடித்து நடத்துகிறார் பாதையில்

4 சிறை வைத்து என்னத்தான் காக்கவே

சிநேகத்தின் கோல்தடியைக் கொண்டுதான்

மறை வாக என்னோடு தெய்வமே

முன்வந்து துண்யாக நிற்பதால்

மிறை யூட்டும் இருளுக்குள் நடந்தாலும்

முற்றிலும் அஞ்சேனே தீமைக்கு

5 விறை த்துத்தான் போருமாறு சத்துருக்கள்

விருந்தொன்றை எனக்கென்று வைத்திட்டு

தரை யெல்லாம் நன்யுமாறு எந்தனின்

தலையைத்தான் எண்ணெயால் குளிப்பித்து

நிறை யத்தான் செய்கிறார் கடவுளே

நித்தியத்து நன்மையால் என்நெஞ்சை

6 குறை வற்ற நன்மையும் கிருபையும்

காலங்கள் என்னத்தான் தொடர வே

நரை யற்ற இளமையின் நாட்களாய்

நான் வாழ் வேன் தெய்வத்தின் வீட்டிலே.

பதவுரை:

வரையற்று = அளவற்று ; உறைக்கின்ற = தாக்குகின்ற

மிறையூட்டும் = பயமூட்டும்; விறைத்துத்தான் = பிரமித்து

ஆக்கியோன்- சேலம்  கோபால்

-சங்கீதம்- 27

1 என் பாவக் குற்றங்கள் நீக்கியே

என்வாழ்வில் மங்காத சோதியாய்.

அன் றாடம் எனக்குத்தான் பெலனாக

ஆண்டவனே துண்யாக நிற்பதால்.

ஒன் றுக்கும் அஞ்சேனே கிஞ்சித்தும்

ஒரு போதும் யாடுக்கும் பாடுக்குள்

2 சென் மத்தும் எதிர்க்கின்ற சத்துருக்கள்

சுற்றித்தான் வந்தென்ன பட்சிக்க

அன் மையாய் உள்ளத்தில் யோசித்த.

அவரொக்க வீழ்ந்தாரே மல்லாக்க

3 குன் றுபோல் சத்துருக்கள் வந்தாலும்

குன்றித்தான் போகாது என்நெஞ்சம்

வென் றியில் நம்பிக்கை வைப்பேனே

வந்தாலும் யுத்தங்கள் என்மேலே

4 ஒன் றைநான் வேண்டித்தான் இறையிடம்.

ஓருவின்றிப் பெறுவேனே அவரிடம்

முன் னோனின் மகிமையைக் மயைக் காணத்தான்.

முழுவாழ்வுக் காலத்தை செலவிட்டு

மன் றத்தின் உட்சென்று ஆராயும்

மனதோடு நிற்பேனே பாதத்தில்

5 தின் மைகள் என்மேலே வருகையில்

தம்வீட்டுக் கூடத்தில் ஒளித்தென்ன

கன் மல்யின் மேலேற்றி உயர்த்திட்டு

கண்மணிபோல் காப்பாரே என்தெய்வம்

6 முன் நிற்கச் செய்தென்ன் பகைவர்க்கு

முன்பாக என்தல்யை உயர்த்தத்தான்.

துன் பிலியின் அடிபற்றிப் பாடித்தான்.

தொடுவேனே ஆனந்தப் பலியிட்டு

7 இன் கண்ணாய் என்சத்தம் நீர் கேட்டு

ஈந்தருளும் பரனேயும் பதில்த்தான்

8 சொன் னீடும் முகத்தைத்தான் தேடுமென

               சொன்னதால் உம்மிடம் சொல்லிற்று

உன் னிப்பாய் தேடுவேன் உம்பரா

உம்முகத்தைத் தானென்று என்நெஞ்சம்

9 நின் முகத்தை மறைத்துத்தான் தெய்வமே.

நீக்காதீர் அடியேனை கோபத்தால்  

நன் மையால் இரட்சிக்கும் ராசனே

நெகிழ்ந்தென்னை தள்ளாது இருப்பீரே

10 பின் தள்ளி விட்டாலும் என் பெற்றோர்.

பற்றித்தான் எனையேற்பார் என்தெய்வம்.

11 மென் மையாய் நின்வழியைக் கற்பித்து

மேவாநின் முன்பாக என்னயே

தென் மையாய் நடத்தித்தான் காத்தருளும்

தேமதுரத் தேவேநின் நாமத்தால்

12 இன் னாரும் பொய்யரும் அல்லாது.

இஷ்டமாய் கொல்லத்தான் பார்க்கின்ற

துன் னாரின் கைகளில் என்னத்தான்.

தந்திடாது காத்தருளும் தெய்வமே

13 நன் மக்கள் வாழ்கின்ற தேசத்தில்

நேசரின் நன்மையைக் காணுவேன்.

என் றென்னில் நம்பிக்கை இல்ல்யேல்

எடுபட்டுப் போயிருப்பேன் (நான்தானே) எப்போதோ

14 இன் புற்றுக் காத்திடு இறைபாதம்

இடறாது காப்பாருன் இதயத்தை

வன் மித்துக் காத்திரு  இறைபாதம்

விக்கினங்கள் எதுவந்த போதிலும்.

பதவுரை

சென்மத்தும்: வாழ்வெல்லாம் அன்மையாய்= தீமையாய்; வென்றி- வெற்றிது;ஒருவின்றி =தவறாது; .

முன்னோன்- கடவுள்; மன்றம் = சபை ;தின்மைகள் = தீமைகள்; துன்பிலி= கடவுள்

இன்கண்ணாய்= பிரியமாய்; உன்னிப்பாய் = கவனமாய்; மேவார் = பகைவர்; தென்மையாய் = செம்மையாய்;

இன்னார் = தீயவர்; துன்னர் =சத்துருக்கள்; வன்மித்து = திடமனதாய்; விக்கினங்கள் – தீமைகள்

ஆச்சியேன்- சேலம்  கோபால்

91-ம் சங்கீதம்

விண்தந்தை கிருபையில் வாழ்ந்திருக்கும் ஒருவனே

சர்வதெய்வ காவல் சூழ்த்திருக்கப் பெறுவனே

வான் பரன் போற்றியே வாய்திறந்து சொல்லுவேன்

கடவுளெந்தன் கோட்டையாம் நம்பியடையும் துருக மாம்

வேடன் விரித்த  வலையிலே வீழ்ந்திடாது உன்னையே

கேடுபாடு  நோயினின்றும் காக்குமிந்த தெய்வமே

சிறகெடுத்து மூடியே, செட்டையில் அடைத்துனை

சத்தியத்தி னாலுனக்கு சட்டையொன்று டுத்தியே

நித்தியத்தி றைவனே நித்தமும் இரங்குவான்

தீவிதிக்கும் தீமையோடு பொறிபறக்கும் அம்புமாய்

ஏகமான நோய்களும். யாவுமாக இராப்பகல்

வெட்டியுன்ன வீழ்த்துகின்ற வேல்யா யிருப்பினும்.

அச்சமொன்று மில்லியே அற்புதன் இருப்பதால்

கடுகத்தன் சேதமின்றி கடவுளுன்ன காக்கையில்

இடது வலது பக்கமாய் ஈனரான மாக்களே

ஆயிரம்அ நேகரேஅ காலமாய்ம ரிப்பதை

இமைத்திடாது கண்களால்இ டையறாது காணுவாய்

^

தீமையொன்றும் அண்டிடாது தீயநோயும் வந்திடாது

தாபரிக்கும் வீடுயென்று தூயன் நீ யேற்றதால்

கால் நடக்கும் வழிகளில் கற்களொன்றும் இடறாது

ஏவல் ஒன்றை பெற்றதால் ஏந்தியுன்னை கைகளில்

கடவுளின் தூதரே காவல்செய்யக் கானுவாய்.

நீங்கிடாத நேசமோடு நாதனை நீ சேர்வதால்

ஓய்ந்திடாது கடவுளும் ஒன்றியுன்ன காக்கவே

பாம்பினோடு பாலசிங்கம் பாதைவந்து தேரினும்

நீமிதித்து மேல் நடந்து தீவிரித்துப் போகுவாய்.

கடவுளைந்தன் நாமே கண்டறிந்த மனிதனை

தோற்றிடாது என்றுமாய் தூக்கி உயர வைப்பேனே

உற்றழைக்கும் பக்தனுக்கு உத்தரத்தை நானளித்து

பற்றியவன் இக்கட்டில் பத்திரமாய் தப்புவித்து

வெற்றிதந்து வானுயர்த்தும் வேதநீதன் கானன்றோ

மரித்த ளித்த மீட்பி னைமு  டிந்தி டாத நாட்க ளாய்

அளித்த ளித்து ணர்த்தி யேஅ வன்ம னம்நி ரப்பு வேன்

ஆக்கியோன் – சேலம் கோபால்

சங்கீதம் 103

1 போற் றுவாய் என் நெஞ்சே புகழ்பாடி இறையோனை

               போற்றுவாய் என் நெஞ்சே பராபரன் நாமத்தை

2 போற் றுவாய் என் நெஞ்சே புகழ்பாடி இறையோனை

               பரிவோடு அவரீந்த பொழிவொன்றும் மறவாது

3 ஆற் றித்தான் உன் நோயை அணுவளவும் இல்லாது

               அகற்றினார் உன்பாவம் அத்தனையும் மன்னித்து

4 மாற் றித்தான் உன்னுயிரை மரணத்தின் பிடிவிட்டு

               முடிசூட்டி விட்டாரே மட்டற்ற கிருபையால்

5 தீற் றித்து நன்மையால் திருப்தியாய் உன்வாயை

               திருப்பினார் உன்வயதை திரும்பவும் இளமையாய்

6 தேற் றித்தான் தீயோரால் துபுற்றுத் தாழ்ந்தோரை

               தூக்கியே விடுகின்றார் தர்மங்கள் செய்திட்டு

7 தோற் றுவித்து முன்னோர்க்கு திகைபூட்டும் வழிகளை

               தெரிவித்தார் வியப்புகள் தம்முடைய மக்கட்கு

8 உற் றவாறு இறையிடம் உள்ளடங்கி உள்ளதே

               உறு சாந்தம் கிருபைகள் உருக்கமான இரக்கங்கள்

9ஏற் றிரார் கோபத்தை என்றுமிறை என்பதால்

               எப்போதும் தண்டியார் எரிபந்த மனதோடு

10 நோற் றித்து நினையாது நம்பாவ அழுக்காறை

               நேர்கட்டிச் சரியாக்கார் நமக்குத்தான் தெய்வமே

11இற் றைக்கும் எற்றைக்கும் இறையச்சம் கொண்டோர்மேல்

               இத்தரைக்கு வானுயரம் இருக்கின்றது மாகிருபை

12 மாற் றினார் பாவத்தை மனதார நமக்குத்தான்

               மேற்குக்கும் கிழக்குக்கும் இடைப்பட்ட தூரமாய்

13 பெற் றோரெ இரங்கித்தான் பிள்ளைகளுக் கீவதுபோல்

               பயந்தவர்க் கிறையோனே பொழிகின்றார் இரக்கத்தை

14 ஏற் பத்தான் அறிவாரே எம்பிரானே நம்மைத்தான்

               எடுத்தமைத்த நம்ணென்றும் எதுவாம் நம் உருவென்றும்

15 புற் செடியின் நாளைபோல் புன்மையான வாழ்விலே

               பட்டென்று பூக்கின்றான் பூவைப்போல் மனிதனே

16அற் பமாய் காற்றுவீச அற்றுவீழ்ந்த பூவைப்போல்

               அறுப்புண்டு போகிறான் அடிச்சுவடும் காணாது

17 ஆற் றுவிக்கும் கிருபையோ அஞ்சுகின்ற மனிதமேல்

               ஆண்டவனின் நீதியோ அவ்வண்ண மனிதரே

பெற் றெடுத்த மக்களின் பிள்ளைகள் மேலுமாய்

               பொருந்தித்தான் உள்ளதே படைப்புகும் ஆதியாய்

18 நேற் றியாய் இறையீந்த நியமத்தை செயலாக்க

               நினைப்பவர் மேலேயும் நிற்குதே அக்கிருபை 

19 வீறு றுத்தான் இறையோனே வானத்தின் இருக்கையில்

               வெற்றியாய் ஆள்கிறார் வீறுடன் யாவையும்

20 ஏற் றித்தான் துதியுங்கள் ஏகமாய் இறையோனை

               எம்பிரானின் வசனத்தை எடுதாளும் தூதரே

21 நோற் பைப்போல் பரனுக்கு நற்பணியைச் செய்வோரே

               நேர்த்தியாய் துதியுங்கள் நற்பாதம் பணிந்திட்டு

22 போற் றியே துதியுங்கள் பரமாளும் இடமெல்லாம்

               பிழைக்கின்ற சிருஷ்டிகளே புகழ்பாடி இறையோனை

சாற் றியே என் நெஞ்சே ஸ்தோதிரம் பரனுக்கு

               சூட்டுவாய் புகழ்மாலை சுந்தரமாய் அவனுக்கு

பதவுரை:

பொழிவு: நன்மைகள்; தீற்றித்து = உண்பித்து; தர்மங்கள் =நியாயங்கள்; தோற்றுவித்து =உண்டாக்கி; உற்றவாரு = உரியவாறு; எரிபந்த = கோபமான; நோற்றித்து = மன்னித்து; அழுக்காறு = அசுத்தங்கள்; புன்மையான =அற்பமான; ஆற்றுவிக்கும் =தைரியப்படுத்தும்; நேற்றியாய் =உண்மையாய்;  வீறு =பெருமை; ஏற்றி = உயர்த்தி; எடுத்தாளும் = கைக்கொள்ளும்; நோற்பைப்போல் =தவத்தைப்போல்; சாற்றியே =சொல்லியே;

ஆகியோன்: சேலம் கோபால்

புத்தாண்டு கவிதை

இறை வாக்கு

மண் மீது உம்பாவம் முழுவதும் நீக்கித்தான்

விண் நாடு ஏற்றியே வீவின்றி வாழத்தான்

எண் ணாது கொஞ்சமும் என்னையே இறையென்று

பெண் ணுக்கு மகனாகி பரிகாரம் காணத்தான்

பண் ணாத தவறுக்கு பழிபாவம் தான்ஏற்று

அண் ணாக்கு வற்றியே அடங்கத்தான் அங்கங்கள்

தண் ணீரைப் போலவே தரைவார்த்து இரத்தத்தை

கண் மூடி மரித்தேன் கொற்றமாய் சிலுவையில்

மிஞ் சுமும் பாரங்கள் மொத்தமும் நானேற்க

கொஞ் சமும் பயமின்றி கடவுளென் வார்த்தையை

நெஞ் சினில் நீர்வைத்து நாளெல்லாம் அவையாற்ற

பஞ் சமின்றி வந்தெட்டும் பரலோகச் சந்தோஷம்

சபை வாக்கு

காசி னியை உண்டாக்கி கண்கவர் பொருள்செய்து

கடுகத்தனை அவைமீது காதலை வைக்காது

நேச ங்கள் வைத்தெம்மை நின்போலச் செய்திட்டும்

நெரியற்ற செயலைத்தான் நித்தமும் யாம்செய்து

நீச ராய் போயினும் நீக்கித்தான் தள்ளாது

நரனாகி எம்மைத்தான் நன்மையாய் இரட்சித்தீர்

ஆசை கள் எமைபற்றி ஆயிரம் உண்டுமக்கு

அவையெம்மில் நிறைவேற அவசியம் நீரெமக்கு

வெட் டியொட்டி உம்மிலே வைத்ததால் நாங்களே

ஒட் டியொட்டி வேதத்தை ஒழுகவே எம்மிலே

திட் டவட்ட மாகவே தித்திக்கும் கனிதோன்றி

தொட் டெடுத்து நீரதை தின்னத்தான் மாட்டீரோ

ஆராய்ச்சி அர்ப்பணிப்பு ஆராதனை

தந் திட்ட ஆண்டிலே தலைநிமிர்ந்து வாழ்ந்தோமா

தப்பிதங்கள் நடப்பித்து தலைகுத்தி வீழ்ந்தோமா

சொந் தச்ச கோதரர்க்கு சிறப்புகள் செய்தோமா

செய்கிறேன் நானென்று சொதப்பித்தான் விட்டோமா

வந் தவர்க்கு சுவிசேஷ வார்த்தையை சொன்னோமா

வேண்டாமே வம்பென்று வாய்மூடிக் கொண்டோமா

நிந் திக்கும் மக்களின் நன்மைக்காய் செபித்தோமா

நொறுக்கட்டும் அவரென்று நமட்டைத்தான் கடித்தோமா

சந் திக்க வந்தவர்க்கு சாப்பாடு போட்டோமா

சும்மாவே பேசிவிட்டு சுண்டவயிறு வைத்தோமா

பந் தமாய் எளியோரை பொருளாலே கொண்டோமா

பலபேரை ஏமாற்றி பகல்வேஷம் போட்டோமா

சிந் தித்து குறையாவும், சரிசெய்தே இப்போது

சந்திப்போம் புத்தாண்டை சாதிக்கும் முடிவோடு

வந் தித்தால் தெய்வத்தை வாயாரப் புகழ்பாடி

வந்தடையும் நன்மைகள் வாழ்க்கையில் பலகோடி

செந் தமிழ் சொல்லாலே சந்தக்கவி பாடியே

சர்வாதி காரியை சபையாகத் தொழுவோமே

பொங்கட்டும் மங்களம் புத்தாண்டு முழுவதும்.

ஆக்கியோன் – சேலம் கோபல்

New Year Poem

The Divine Voice

To wipe away all sin upon this dust of earth,
To raise them to the realm of heaven, deathless,
Not claiming even once that I am God,
I came as woman’s son, to make atonement.
For faults not mine, I bore the blame and curse;
My limbs grew weak, submission draining life.
Like water poured upon the barren ground,
My blood was spilled—
Eyes closed, I died in triumph on the cross.

All crushing burdens—I alone embraced;
Without a trace of fear, God’s word I spoke.
If held like water deep within the heart
And practiced through the course of every day,
Unfailing then shall come, without all lack,
The joy of heaven, drawing near to you.

The Voice of the Assembly

You formed this earth, its beauty catching eyes,
Yet set not your love on fleeting worldly things.
You shaped us in Your likeness, bound by love,
Yet daily we performed misguided deeds.
Though fallen low and steeped in baseness still,
You did not cast us off or drive us out;
You came as man and saved us, turning good.
You hold a thousand hopes concerning us—
For their fulfillment, Lord, we need You still.

Because our trust is fastened firm on You,
Let Scripture cling to us and shape our way.
When ripened fruit of sweetness fully forms,
Will You not pluck it, taste it, claim it Yours?

Inquiry, Offering, and Worship

In the year now past, did we stand tall in truth,
Or stumble, trip, and fall headlong in error?
Did we uplift our kin with gracious deeds,
Or spoil all good by crying, “I alone”?
To those who came, did we proclaim good news,
Or seal our lips to avoid needless strife?
For those who scorned us, did we pray their good,
Or grind our teeth and wish them shattered bones?
Did we feed those who came seeking a meal,
Or send them off with words and empty bellies?
Did we uphold the poor as cherished kin,
Or cheat the many, wearing borrowed masks?

Reflect on faults, correct them even now;
Let us meet the New Year with resolve to act.
If we bow to God with voices full of praise,
The blessings that arrive will be uncounted.
In chaste Tamil words, with metered song we sing,
And worship together the Sovereign Lord.

May auspicious grace overflow
Throughout the New Year.

— Salem Gopal

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *