BT Song 1569
Both God and mother have several similarities. God remains invisible and Mother remains visible showing what God would do physically if He ever lived with His physical presence amidst us. There is no other relationship like a MOTHER on this earth. Similarly for a bhakta her chosen deity [ishta devata] is all sufficient for her. As mother cannot be compared with any other human relationship so be with the Ishta devata. Therefore whatever they both do to their child is the best way to enjoy this life on this earth.
BT Song 1569 இது போதும் எனக்கு
அளந்து கொடுத்தாலும்
அது போதும் எனக்கு
அளவின்றி கொடுப்பதில்
மகிழ்ச்சிதான் உனக்கு
அளந்து கொடுத்தாலும்
அதிகமாய் கொடுத்தாலும்
பக்தனின் மகிழ்ச்சி
ஒன்றே உன் இலக்கு
தன் சேய் மகிழ்ந்தால்
தாயும் மகிழ்வாள்
சேயும் அழுதால்
தாயும் துடிப்பாள்
அவளைப் போலவே
அன்பைக் காட்டும்
உன்போல் தெய்வம்
எவருமே இருக்கார்
கேட்பதை எல்லாம்
தாய்தர மாட்டாள்
கேட்க மறுத்தால்
வலியவே தருவாள்
சேயின் நலனில்
கவனம் வைக்கும்
தாய் போல் உலகில்
எவர்தான் இருப்பார்
அதுபோல் நீயும்
என் நலம் காக்க
அத்துடன் எனது
குணத்தையும் பேண
எப்படி எவ்விதம்
எதனை கொடுப்பது
என்பதில் அதிகம்
கவனம் வைப்பாய்
ஆகவே உலகில்
தெய்வம் தாய்போல்
பக்தன், சேயின்
நலத்தை எண்ணி
இருவரும் செய்வதை
எவரும் அறியார்
பக்தன் குழந்தை
நிச்சயம் புரியார்
புரியா போதும்
அவரை விட்டால்
வேறார் அவரை
உலகில் காப்பார்
எனவே நானும்
எதை நீ தரினும்
அது போதும் என்று
அனுதினம் வாழ்வேன்
குருகுலம், 2-2-24, மாலை, 6.00
BT Song 1569 This is enough
Whether you bestow measuring
That is enough for me
But you rejoice only in
Bestowing abundantly
Whether you give in measuring
Or give in abundance
The joy of your bhakta
Is the only target for you
If her child rejoice
The mother also rejoices
If the child cries
The mother will be panicked
As you also show love
Like that of a mother
No other will be
There for a bhakta
Moher won’t give
Everything that a child demands
If the child refuse to ask anything
She will voluntarily give [knowing its need]
Who else will be
Like a mother
Who always keep
The interest of the child’s welfare
Similarly, you also
In order to keep my welfare
And to cultivate
My character
Will remain diligent
In deciding which
And how and when
To bestow to me
Therefore, on this earth
Both God and mother
Keeping the welfare of the
Child and bhakta
What they both do
Nobody understands
Definitely not
Both a bhakta and child
Even if they cannot
Understand them
Who else will take care of them
On this earth other than they
Therefore, I also
Will live each day in you
With contentment in
Whichever you might bestow
Gurukulam, 2-2-24, 6.00 pm.
Leave a Reply