BT Song 406 முக்தி வழி
வீதியில் போதகம் பண்ணினானே
விருந்துக்கும் கூட அழைத்தானே
ஆயினும் உம்மை அறியேனே
என்று கூறினால் என்னவாகும்?
முந்தினோர் புறம்பே காத்து நிற்க
பிந்தினோர் பந்தியில் புசிப்பாரே
நான்கு திக்கினும் வந்திருப்பார்
நாதனுடன் உண்டு வாழ்ந்திருப்பார்
இடுக்கனான வழியில் என்றும்
எவர்தான் செல்ல விரும்பிடுவார்
இராஜபாட்டையில் சென்றிடவே
பலரும் விரும்பி பயணிப்பார்
முக்திக்குப் போகும் பாதை கூட
முட்களால் கற்களால் நிறைந்திருக்கும்
சோதனை கண்டு அஞ்சாதோரே
சேர்ந்திடுவார் அவன் ராஜ்யத்தில்
வெளியே நின்று புலம்பினாலும்
வேதனைப் பட்டுக் கலங்கினாலும்
அழுது புலம்பிக் கண்ணீர்விடினும்
பலர்க்கு வாசல் அடைத்திருக்கும்
“அகன்று போங்கள் என்னை விட்டு
அறியேனே” என்று கூறும்போது
ஆத்திரம் கொண்டு என்ன பயன்
ஆதியில் சொன்னதைச் செய்திடுவான்
முந்தியடித்து சென்றிடுவோம்
முக்திக்கு போகும் பாதையிலே
அழைக்கப் பட்ட பலருள்ளே
அறியப் பட்ட சிலராவோம்
8-4-16, இரவு, 11.30. லூக்கா, 13:22-30
BT Song 406 Way to Mukti
He came and preached on the street
And invited us for the feast
But if we say that we don’t know Him
What would be the end result?
While those who came first waiting outside
Those who came later will eat first
They will come from all the corners of the earth
And will enjoy the fellowship with the Lord
Who would like to travel?
In a narrow path
All would like to travel
In the royal highway
The path to mukti too
Is filled with thorns and stones
Those who didn’t fear about the trails
Alone will enter in that Kingdom
Even if lament standing outside
And troubled with much pain
And lament by shedding tears
The door will be closed for many
“Get lost, I don’t know you”
When He will say this
What is the use of becoming upset?
He will do what He already told
Let us rush to travel
In the path towards Mukti
Let us become the few among
Those who were called to enter in it.
8-4-16, 11.30 pm. Luke, 13:22-30 Mathigiri
This is based on Luke 13:22-30. As I read this portion as part of my regular reading in Muktiveda, as the inspiration came I wrote the first few stanzas in the afternoon and completed it in the night after my meditation time. This my attempt to present the Gospel stories through poems.
BT Song 407 Voyage
In the current of life
How much we are troubled
And become bewildered
Without knowing the reason
Like a boat
Without oars
Our life is too goes
On the river of Time
Without knowing the current
And not knowing the whirlpool
We cannot reach the shore
Using our hands as oars
It is better
To go safely
Not doing anything on my part
That will make the boat to capsize
How much I try
Against the current
Finally reaching the shore
Is God’s responsibility
Once He becomes the boat-man
Travelling without fear
Safely reaching the shore
We can live happily
5-3-16 & 11-4-16, 2-45 pm. Mathigiri
As life goes on, sometimes I wonder whether my life is going like a boat without any oars and using my hands as the oars try to reach the shore? As I was reflecting on this thought I wrote this song.
BT Song 407 பயணம்
காலமென்னும் ஓட்டத்திலே
கலங்கியே தவித்தாலும்
காரணம் புரியாது
மருங்கியே திகைத்தாலும்
காலமெனும் நதியினிலே
துடுப்பில்லா படகதுபோல்
என் வாழ்வும் போகுது
வழியேதும் காணாமல்
நீரோட்டம் புரியாது
சுழலிடமும் அறியாது
கையைதனைத் துடுப்பாக்கி
கரையேற முடியாது
இடையில் என் பங்காய்
ஏதேனும் நான் செய்து
நடுவினில் கவிழ்க்காது
போவதுதான் நல்லது
எத்தனைதான் முயன்றாலும்
எதிர் நீச்சல் போட்டாலும்
இறுதியில் கரை சேர்ப்பது
இறைவனின் பொறுப்பது
படகோட்டி அவனானால்
பயமின்றி பயணித்து
நலமாகக் கரை சேர்ந்து
நாமுமே வாழலாம்
5-3-16 & 11-4-16, மதியம், 2-45
BT Song 408 Let it come
Let it come
And what else can I do
Even if anything comes
He is there to give company
He is with me
In each second
And without taking rest
He protects me
He encourages me
And gives strength
And lifts me up
Not allowing me to become tired
Removing the worries
And troubles
He keeps me
As the apple of the eyes
Though the body is worn out
And strength has gone
He promises
To be my companion
Out of tiredness
Though I get depressed
By proper means
He lifts me up
After receiving
All these blessings
Let anything come
What else can I say?
14-4-16, Mathigiri, 1.15 pm.
Again some kind of tiredness preoccupied my mind. I lost interest in every activity. I prefer to remain ‘inactive’, which is also not possible. Then, pouring down my tiredness I wrote this song.
BT Song 408 வருவது வரட்டும்
வருவது வரட்டும்
நானென்ன செய்யட்டும்
வந்தாலும் துணையாக
அவனே இருக்கானே
ஒவ்வொரு நொடியும்
என்னுடன் இருக்கிறான்
ஓய்வு ஒழிவின்றி
என்னையும் காக்கிறான்
தைரியம் தருகிறான்
தெம்பும் அளிக்கிறான்
தொய்ந்து போகாமல்
தூக்கியே காக்கிறான்
கவலைகள் போக்கியே
கலக்கமும் நீக்கியே
கண்மணி போலென்னை
வைத்துமே காக்கிறான்
தேகமே தளர்ந்தாலும்
தெம்பும் குறைந்தாலும்
“துணையாக இருப்பேன்”
என்றுமே சொல்கிறான்
சோர்வுற்று சில நேரம்
மனமும் தளர்ந்தாலும்
ஏற்றபடி என்னை
மீட்டுமே எடுக்கிறான்
இத்தனை நன்மைகள்
பெற்றதன் பின்னாலே
எதுவானால் என்ன
வேறென்ன சொல்ல
14-4-16, மத்திகிரி, மதியம், 1.15
BT Song 409 வழி பிறந்தது
முடிவில்லா வாழ்விற்கு வழியும் பிறந்தது
முக்திக்கு போகும் வாசல் திறந்தது
முதுமையோ இளமையோ எதுவானால் என்ன
முக்தேசன் அருளுக்கும் ஈடாவ தென்ன
பிறக்குமுன் கருவிலே அழிந்தது கோடியே
பிறந்தபின் பிஞ்சிலே உதிர்ந்தது கோடியே
இளமையில் வாழ்வினை இழந்தவர் கோடியே
முழுமையாய் முதுமையில் சென்றவர் கோடியே
இயற்கையில் இந்த நியதியை வைத்தான்
எல்லோரும் வாழ வழியை தந்தான்
பூவாக, பிஞ்சாக, காயாக, கனியாக
அவரவர்க் கேற்ற நிலையையும் தந்தான்
மண்ணுலகின் இந்நிலையில் மாறுதல் இல்லை
மானுடர் வாழ்ந்திட வேறு வழி இல்லை
ஆயினும் இதனிடை முக்தியும் அடைய
அவன் கூறும் வழிக்கும் மாற்றமும் இல்லை
முக்தியின் முழுமையை அறிந்த பின்னாலே
முதுமையோ இளமையோ எதுவானால் என்ன
முக்தேசன் அருளை அடைந்த பின்னாலே
முடிவில்லா வாழ்வடைய தயக்கமும் என்ன?
விட்டுப் பிரிந்தவர் மீண்டுமே சேர்வார்
விண்ணுலகில் எந்நாளும் ஒன்றாக வாழ்வார்
மண்ணுலகின் நியதிக்கு முற்றிலும் மாறாக
முடிவில்லா வாழ்விலே இணைந்தே மகிழ்வார்.
15-4-16, மதியம் 1.30, மத்திகிரி
BT Song 409 Door is opened
Path is opened for the Eternal life
And the door is opened to Mukti
Either young or old what does it matter
And there is no comparison for the Grace of the Lord.
Millions perished once formed in the womb
Millions died while still as babies
Millions lost their life while in youth
Millions went away after becoming old.
God has kept (or allowed) this as part of nature
And gave way for others to live (by taking us away)
As flower, baby fruit, un-ripped fruit and fruit@
God gave each-one a stage accordingly
There is no alternative to this earthly reality
There is no other way for human to live
Yet to attain mukti amidst this
There is no other path which is proclaimed by Him.
Once understood the totality of Mukti
What if one is young or old
Once received the Grace of the Lord
Why should we hesitate to enter that eternal Life?
Those who are left behind will join us
And live together in that heavenly life
Contrary to the nature of this earthly life
They will remain happy joining together in that Eternal Life.
15-4-16, 1.30 pm. Mathigiri.
As I received the message from the family of one ailing young man that his end is nearing, I said, ‘it is better for him to go’. Above all in every faith, except materialists (atheist) death is considered only a ‘gate’ ‘door’ for another life. That could be different according to each faith. But all those who believe in God/philosophy, ‘death’ is not an end itself. Of course the death of every unborn baby, children and youth is a tragedy. But this is part of nature or God’s order in creation or the consequence of our fall. But those who die in the Lord leave hope for others—particularly to the family members that ‘death’ is not the final goodbye. And to encourage his wife, her daughters, and other relatives I wrote this song.
Though I used the traditional words of ‘going to heaven’ I don’t mean it literally. As we will inherit Eternal life on this New Earth, I mean that eternal life.
@ The Tamil words which I used are difficult to translate. Flower, baby fruit, un-ripened fruit and fruit are the four stages that I used here in Tamil.
BT Song 410 எது உண்மை
தத்துவம் பேசலாம்
தர்க்கமும் செய்யலாம்
தன்னுள்ளே உண்மையை
அறியா வரையில்
“உண்மை” எதுவென
உணர்ந்தவர் எவருண்டு
உண்மையில் “உண்மை”
எதுவென உணராமல்
வார்த்தை ஜாலத்தால்
வாதத் திறமையால்
சாதித்துக் காட்டலாம்
போதிக்க முயலலாம்
உண்மையில் “உண்மையை”
உண்மையாய் உணர்ந்தாலும்
உரைத்திட மொழியில்லை
என்பதே உண்மை
உண்மையின் தன்மையை
உண்மையில் உணர்ந்தவர்
ஒன்றும் உரைக்காமல்
மெளனமே காப்பர்
உரைத்தாலும் புரியாது
உணர்த்தவும் முடியாது
உண்மையின் ரகசியம்
எவருக்கும் தெரியாது
தான் கண்ட உண்மையில்
தெளிவாக இருந்தாலும்
ஊருக்குப் பொதுவாக
அதுவுமே ஆகுமோ?
தனித்தே முயன்று
தன்னுள்ளே உணர்ந்து
தன் நிலை அறிந்து
தாழ்மையும் காப்பார்
தத்துவம் பேசாமல்
தர்க்கமும் செய்யாமல்
தான் கண்ட உண்மையில்
வாழ்ந்தும் இருப்பார்
வாழ்க்கையில் இல்லாது
வாழ்ந்தும் காட்டாது
“உண்மை” இதுவென
உணர்த்த முடியாது.
15-4-16. மத்திகிரி, இரவு, 11.45
BT Song 410 What is truth?
One can talk philosophically
And argue a lot
As long she does not
Understand Truth within
Who is the one?
Who actually understood Truth?
Not knowing what
Actually it is?
Through laudatory words
And able debate
One can try to prove
And come forward to teach
In truth though
One understood Truth
The truth in it is
That there are no words to express it
Those who truly
Understood the nature of Truth
Will remain quiet
Not saying (anything about it)
It is impossible to
Communicate the Truth
And nobody knows
The secret about the Truth
Though one is clear
In the Truth that she knows
Could it be?
Common to all?
Striving alone
And realizing within
Understanding about oneself
They will remain humble
Not philosophising it
And not arguing about it
They will live
In the Truth they found
Not showing through life
And not in one’s life
It is impossible to communicate
What actually Truth is
15-4-16. Mathigiri, 11.45 pm.
This night I was reflecting ‘what is TRUTH’, as this topic came in some of my reading. For me certain concepts in life cannot be communicated through words, but only through life. Gandhiji talked a lot about ‘Truth’, ‘Satyagraha’ and ‘Swadeshi’. But more than his writings and talk, his life clearly demonstrated all these concepts for others to understand. One will become tired by reading all these kinds of topic not only in his writings, but anywhere. But one can admire when these concepts are demonstrated through life, though he/she will always remain an ISOLATED MINORITY in any society. And as I came to that conclusion I wrote this song. Gandhiji well said that: My life is my message.
Leave a Reply