BT Songs 1501 to 1525

1501

ஏதோ ஏக்கம் 

இருக்குது மனதில்

எப்படிச் சொல்ல 

அதனை எளிதில்

உனது அருளும்

இருக்கும் போதும்

ஏனோ உள்ளது

தவிப்பு மனதில்

நினைத்த  படியே

காரியம் நடந்தும்

நிறைவு ஏனோ

வந்திடக் காணோம்

ஏதோ ஒன்றை

இழந்தது போலே

ஏனோ வந்தது

வெறுமை ஒன்றும்

காரணம் ஏதும்

இருக்கவும் இல்லை

நடக்கும் காரியம்

புரியவும் இல்லை

நீயும் விலகிச்

செல்லவும் இல்லை

நானும் உன்னைப்

பிரிந்திட வில்லை

உடலின்  சோர்வா

மனதின் களைப்பா

பயணத்தின் அலுப்பா

தெரியவும் இல்லை

சரிவிடு போகட்டும்

நடப்பது நடக்கட்டும்

வாழ்வில் இதுவும் 

அங்கம் ஆகும் 

ஆயினும இந்த 

அலுப்பும் சலிப்பும்

ஒருவித நல்லது

 எனக்கும் செய்யும்

ஆர அமர

உன்னுடன் இருந்து

வம்பு பேச

நேரம் கிடைக்கும்

நண்பர் இருவர்

சேர்ந்திடும் போது

வாதம் வம்பு

செய்வது உண்டு

அதிலே ஒருவித

ஆனந்தம் கொண்டு

அவரும் சிரித்து

மகிழ்வது உண்டு

அதன்பின் இந்த 

ஏக்கம் கலக்கம்

தன்போல் நிச்சயம்

மறைவதும் உண்டு

ஆகவே இந்த 

தவிப்பும் கூட

இதுபோல் நல்லது

எனக்கும் செய்ய

இந்த ஏக்கம்

அடிக்கடி வந்து

இதுபோல் நல்லது

எனக்கும் செய்யட்டும்

காசி, இரவு, 10.30, 27-3-2023,

  1502   யாருக்காய் வாழணும் தெரியவே இல்லை எதற்காக வாழணும் புரியவும் இல்லை   எனக்காக வாழ இயலவும் இல்லை உனக்காக வாழ முடியவும் இல்லை   விரக்தியால் வந்த வார்த்தைகள் இல்லை வாழ்ந்திட வாழ்வில் ஒன்றுமே இல்லை   கடமைக்காய் நாளை கடத்திடும் போது இனியும் வாழ்வதில் அர்த்தமே இல்லை   வழக்கமாய் நானும் புலம்பிய போதும் உனது செவியில் ஏறவும் இல்லை   வந்ததின் காரணம் முடிந்த பின்னாலே செல்வதே நல்லது என்பது புரிந்தும்   வைப்பதின் காரணம் சொல்லிட மறுத்து வாழ்ந்திடச் சொல்வது  நியாயமா சொல்லு   ஒன்று பதிலைத் தந்திட வேண்டும் அல்லது அழைத்துக் சென்றிட வேண்டும்   இரண்டும் இல்லாமல் மவுனம் காக்கும் காரணமாவது சொல்லிட வேண்டும்   என்னதான் ஆச்சு உனக்கு இப்போது ஏதேனும் உதவி தேவையா சொல்லு   வந்தால் உதவியாய் இருப்பேன் என்பதால் அழைத்துச் செல்ல  வழிவகை பாரு   கவுஹாத்தி, இரவு 11.00, 3-4-2024   

1503

காரியச் செவிடு

இருக்க எனக்குப்

பிடிக்கவும் இல்லை

எடுக்க உனக்கு

விருப்பமோ இல்லை

இருவரில் யார்தான்

விட்டுக் கொடுப்பது

என்பதா உனக்கு

புரியவும் இல்லை

இருந்து சாதிக்க

என்னதான் உள்ளது

அதையேனும் நீ

தெளிவாகச் சொல்லு

வாலிப வயதா

வாழ்ந்ந்து பார்க்க

குடும்பம் உள்ளதா

பாரம் சுமக்க

பட்ட மரமாக

நின்றிடும் போது

ஒதுங்கக் கூட

நிழலில்லை பாரு

வெட்டி சாய்த்தால்

விறகாக மாறும்

விறகை எரித்தால்

கரியும் கிடைக்கும்

கரியை எரித்தால்

சாம்பலும் ஆகும்

சாம்பல் கூட

எருவாக மாறும்

விற்கும் உதவா

பட்ட மரத்தால்

யாருக்கு பயன்

எண்ணியே பாரு

இத்தனை சொல்லியும்

எடுக்க மறுத்தால்

பாரம் பூமிக்குத்தான்

அதையேனும் கேளு

தாய்க்கு சேவை

செய்திட வேண்டி

என்னையும் வைத்தாய்

அதனை ஏற்றேன்

அத்துடன் கடனும்

முடிந்த பின்னாலே

வேறு காரணம்

எதையும் ஏற்கேன்

எத்தனை முறைதான்

இதையே சொல்வது

என்னவோ உன்செவி

மந்தமே ஆனது

காரியச் செவிடு

என்பதை அறிவேன்

என்னிடம் நடித்தால்

நானா விடுவேன்

சட்டென நல்ல

முடிவுக்கு வருவது

உனக்கும் எனக்கும்

மிகமிக நல்லது

குருகுலம், 16-4-2023, காலை 9.30

1504

என்னென்ன மாற்றம்

என்னில் நீயும்

கொண்டுவந்தாய் என 

எண்ணியே பார்த்தும்

வந்தது மாற்றமா

புரியவ  இல்லை

தந்ததை நீயும்

சொல்லவும் இல்லை 

பிறவிக் குணமெதும் 

போகவே இல்லை

புதிதாய் மாற்றம் 

வந்திட வில்லை 

உன்னிடம் வந்தால் 

பழயன  போகும்

எல்லாம் புதிதாக 

மாறிடும் என்று

சொன்னதின படியே 

நடக்கவும் இல்லை

நீயும் என்னை

மாற்றிட வில்லை 

புதிதாக வருவது 

எதுவாக இருக்கும்

என்றே கேட்டேன் 

பிறரிடம் சென்று 

இப்படிக் கேட்பதே

புதியது என்றார்

அங்கே தொடங்கும்

மாற்றமும் என்றார்

உன்னிடம் கேட்டும்

பதில் வரவில்லை

ஊரார் சொன்னது 

புரியவும் இல்லை 

இந்த புரிதலும்

புதிதாக வந்திட 

புரியாமல் வாழ்வது 

நல்லது என்று

புதிதாக வந்த 

புரிதலின் படியே

பழைய வாழ்வை 

புதிதாக  வாழ்கிறேன்

குருகுலம்,  19-5-2023, இரவு,11.50

1505

மாறிட வேண்டி 

மாற்றத்தைத்  தந்தும் 

முற்றாக மாறிட 

என்மனம் மறுக்குது 

நீயெதிர் பார்க்கும் 

மாற்றம் என்பது

முற்றிலும் வேறாக 

இருந்திடும் போது 

அத்தனை எளிதாக 

என்மனம் ஏற்குமா

அதையே நீயும் 

எண்ணியே பாரு 

ஒரேநாளில் மாறிட 

சொல்லாத போதிலும்

உன்போல் மாறிட 

இயலாத போதிலும்

மாறிடும் எண்ணத்தை 

மனதுமே ஏற்கனும் 

அதன்பின் மாற்றம் 

மெதுவாகத் தொடங்கும் 

புறம்பான மாற்றம் 

உன்னிடம் நடக்காது 

உள்ளான  மாற்றம் 

மனதுமே விரும்பாது 

இழு பறியாக 

வாழ்வும் போகுது

இறுதியில் வெல்வது 

யாரெனச் சொல்வது 

முயன்று பார்த்தேன் 

முடியவே இல்லை 

நீயும் சும்மா 

விடுவதாய் இல்லை 

இந்த  போராட்டம்

முடியா வரையில்

நீதரும் மாற்றம் 

வருவதும்  இல்லை 

போராட்டம் முடிந்தால் 

மாற்றம் வந்திடும்

மாற்றம் வந்தால் 

போராட்டம் முடியும்

இரண்டும் நடக்கப் 

போவதும் இல்லை

இதுவே இங்கு 

உண்மையில் என்நிலை

குருகுலம்,20-5-2024, இரவு, 8.30

1506

இருந்தது  போதும் 

என்றுநீ  அழைத்தால் 

இப்போது உனக்கு 

நன்றியும்  சொல்வேன் 

இன்னும் இருந்திடு 

என்றுமே சொனானால் 

அதுபற்றி உன்னிடம் 

வந்தபின் கேட்பேன்

நன்றி தேவையா 

கேள்விகள் வேண்டுமா

என்பதை நீதான் 

முடிவு செய்யனும் 

எளிது எதுவென 

சிந்தித்து பாரத்து 

அதன்படி முடிவு 

நீயுமே செய்யனும் 

கேள்விகள் எப்படி 

இருக்கும் என்று 

முன்னமே உனக்கு 

நன்கு புரியும்

பதில்வரா கேள்விகள் 

பலவுமே உள்ளன 

என்பதும் உனக்கு 

நன்குமேத் தெரியும் 

அவற்றோடு இதையும் 

சேர்த்து கொள்ளலாம் 

என்று  பதிலை 

தள்ளியே  போடாதே 

இருந்தால் கேள்விகள் 

இன்னும் பெருகிடும் 

என்பதை மட்டும் 

நீ மறவாதே

பதில்சொல்லி சொல்லி 

இளைத்துமே  போவாய் 

என்பதை சற்றேனும் 

எணணியே பார்த்து 

இன்னும் வைக்காமல் 

எடுத்து கொண்டாலோ 

சலுகை சிலவற்றை 

நானுமேத் தருவேன் 

பதில்வரா கேள்விகள் 

அனைத்தையும் விட்டு 

உன்கடன் சுமையை 

நானும்  முடிபாபேன் 

சலுகையும் நன்றியும் 

ஒருசேர வருகின்ற 

வருகின்ற  வாய்ப்பை 

நழுவ விட்டாலோ 

அதன்பின் வந்திடும் 

விளைவுகள் அனைத்திற்கும்

பொறுப்பு நானல்ல 

என்பதை உணர்ந்து

இன்றே பதில்தான

நன்றாக இருக்கும்

இல்லையேல் பாடல்கள்

இன்னும் தொடரும்

குருகுலம், 21-5-2024, காலை, 12.30

1507 தாய்போல் இல்லை

தாய்க்கு மட்டும்தான்

பாரமே இல்லை

தன்சேய் எப்படி

இருந்த போதும்

சுமக்கவே பிறந்தாள்

சுமந்தே வாழ்வாள்

ஆகவே பிள்ளையை

சுமையாக நினையாள்

அவளை இழந்த

பிள்ளைக்குத் தெரியும்

அவள்போல் யாரும்

இல்லை என்று

மற்றவர் எல்லாம்

எட்டவே நின்று

பெயருக்கு மட்டும்

ஆறுதல் சொல்வார்

கிட்டே வந்தால்

ஒட்டிக் கொள்வோம்

என்றே மனதில்

எட்டவே நிற்பார்

விலகிச் செல்ல

எண்ணும் பிள்ளையை

வலியச் சென்று

அனைத்துக் கொள்வாள்

கருவில் மார்பில்

சுமக்கும் போதும்

காலம் எல்லாம்

வளர்க்கும் போதும்

இறுதி மூச்சு

போகும் வரைக்கும்

பிள்ளையை பாரமாய்

என்னவே மாட்டாள்

அந்த பொறுமை

யாருக்கு உண்டு

அவளிடம் நிரப்ப

வேறெவர் உண்டு

அவளை இழந்து

வாடும் போது

அதனை எண்ணி

தவிக்குது மனது

அதன்பின் வந்திடும்

மனதின் பாரம்

இறக்க யாரும்

பிள்ளைக்கு இல்லை

உற்றம் சுற்றம்

பிள்ளைகள் என்று

உறவாய் பலரும்

இருந்த போதும்

தாய்போல் சுமக்க

யாருமே இன்றி

வாழ்வது தவிர

வழிவே றில்லை

குருகுலம், 4-06-2023, 12. 15 காலை.

1508 என்னை ஏற்பேன்

எவரையும் எளிதாக

ஏற்பாரோ மனிதர்

எத்தனை நன்மைகள்

செய்கின்ற போதும்

[காண்கிற போதும்]

எண்ணத்தில் தூய்மை

இல்லா வரையிலும்

தன்குறை அனைத்தையும்

காண்பார் பிறரிடம்

ஆனால் அவர்போல்

நீயுமே இல்லை

ஆகாதவன் என

தள்ளுவ தில்லை

எத்தனை குறைகள்

எம்மிடம் இருந்தும்

அதனால் எம்மை

மறுப்பது இல்லை

உன்போல் என்னால்

வாழ முடியலை

எத்தனை முயன்றும்

உன்குணம் வரலை

வேதம் படித்தும்

வேண்டுதல் செய்தும்

பிறவி குணமது

போகவே இல்லை

பிறரைவிடு அவர்

மனிதர் தானே

என்னை ஏற்க

நான் மறுத்தேனே

இத்தனை வருடங்கள்

வாழ்ந்த பின்னும்

என்னை அறிய

நான் மறந்தேனே

நல்ல வேளை

நீயும் உள்ளாய்

என்னை முற்றாய்

அறிந்தும் வைத்தாய்

உயிருக்கு உடலை

படைத்தது போல

உள்ளம் தன்னை

உயிருக்குத் தந்தாய்

யாருக்கு எதனை

தருவது என்று

முடிவு செய்தது

யாரெனச் சொல்லு

முன்வினைப் பயனால்

வந்தது என்றால்

உனது பங்கு

எதுவெனச் சொல்லு

வினைகளின் பயனோ

உனது செயலோ

விளைவைத் துய்ப்பது

யாரெனப் பாரு

இதற்கு விடையை

நீயும் தந்தால்

என்னை நானே

புரிந்திடுவேனே

அதன்பின் என்னை

முழுதாய் அறிந்து

என்னை ஏற்று

வாழ்ந்திடுவேனே

குருகுலம், 14-06-2023, இரவு,   11.00 pm.

1509 பொறுமை காப்பேன்

வாய்விட்டுச் சொன்னால்

நோய்விட்டுப் போகும்

என்பதே வாழ்வில்

உண்மை ஆகும்

உள்ளே வைத்தால்

பாரம் பெருகும்

மனதை அதுவும்

மெள்ளத் திண்ணும்

சொனால் கேட்க

ஆட்களும் இல்லை

சொல்லியும் சிலரோ

புரிந்திட வில்லை

உன்னிடம் சொன்னால்

ஆறுதல் கிடைக்கும்

என்றே நீயும்

சொன்ன போதும்

எத்தனை முறையோ

நானுமே சொல்லியும்

ஆறுதல் இதுவரை

வந்திடக் காணோம்

பாரம் இன்னும்

போகவும் இல்லை

இன்னும் உதவி

வனத்திட வில்லை

பாரம் எதுவெனத்

தெரிந்தால் தானே

இறக்கும் வழியை

யோசிக்க முடியும்

என்றே மனிதர்

சொல்வது போல

நீயும் சொன்னால்

நானென்ன செய்ய

தெரிந்தால் நானே

இறக்கி வைப்பேன்

உன்னை துணைக்குக்

கூப்பிட மாட்டேன்

புரியா மனிதர்

உதவி செயார்

புரிந்த நீயும்

அதையே செய்கிறாய்

சரிவிடு போகட்டும்

இதற்கென அழைத்தாய்

ஆகவே நானும்

அனுதினம் சுமப்பேன்

என்றோ ஒருநாள்

முடிவுக்கு வந்திடும்

அதுவரை நானும்

பொறுமை காப்பேன்

குருகுலம், 16-6-2023, காலை

1510 எல்லாம் உன்செயல்

எல்லா செயலும்

உனதாய் இருக்க

நான்னெனத் தனியாய்

எதனைச் செய்ய

செயலும் நீயே

செய்வதும் நீயே

செய்திட என்னை

வைப்பதும் நீயே

ஆகவே நானே

தனியாகச் செய்ய

உள்ளது என்று

எதனைச் சொல்ல

சித்தத்தை அடக்கி

சும்மா இருந்து

செயல்பட் உனக்கு

இடமும் தந்து

வந்திடும் முடிவும்

உனதே என்று

வாழ்ந்திட வென்று

என்னைப் பழக்கி

வந்த வாழ்வை

வாழ்ந்திட வேண்டும்

அதற்கு உனது

அருளும் வேண்டும்

ஆயினும் இதனை

முழுதாய் உணர்ந்து

அதற்கு ஏற்ப

என்னைத் தருவது

அத்தனை எளிதாய்

எனக்கு இல்லை

அதற்க்குக் காரணம்

புரியவும் இல்லை

இதுவும் ஒருவிதம்

நலமாய் போச்சு

ஏனெனில் பொறுப்பு

உனதாய் ஆச்சு

செயல்பட என்னை

வைக்கும் உனக்கு

அதுவும் நன்கு

புரிஞ்சு போச்சு

ஆகவே வீணாய்

காரணம் தேடி

அதனைப் புரிந்து

அதன்படி செய்ய

தேவை எனக்கு

இனிமேல் எதற்கு

வேண்டாம் அந்த

பொறுப்பும் எனக்கு

என்று உணர்ந்து

என்னைத் தந்து

அடைந்தே சரணம்

அண்டி வந்து

திருப்பூந்துருத்தி, 18-8-23, இரவு 11.20

I always believe in living one day at a time.  So, though I plan for future (travel) and long for an idealistic life (as a recluse), often I remain content with the life which I live each day.  Of course challenges are there in every way.  Though disturbed by them, still I accept them also part of everyday life, as even this is arranged by God for me to live.  Once everything is arranged by Him, I need not search separate reason for my life each day other than accepting it as it comes.

1511 உன்குரல் கேட்டேன்

எல்லைகள் கடந்து

என்னையும் கடந்து

என்னுள் எப்படி

வந்தாய் நீயும்

உள்ளிருந்த உன்னை

உணராமல் நானும்

தேடினேன் எங்கெங்கோ

அலைந்தே நாளும்

மறைவாக இருந்த

உன்னை அறிய

மறைகளின் உதவியை

நாடினேன் நானும்

அத்துடன் ஆன்றோர்

சான்றோர் கூறும்

அறிவுரைகள நான்

கேட்டேன் மேலும்

இவையும் போதாது

என்றுமே எண்ணி

ஓடினேன் கோவில்கள்

தேடியே பலவிதம்

விரதம் சடங்கு

வேறெத்தைச் சொன்னாலும்

விரும்பியே செய்தேன்

பணிவோடு நானும்

ஆயினும் அவற்றின்

ஒன்றின் முலமும்

அடையாது உன்னை

திகைத்த போது

மெல்லிய சப்தம்

உள்ளிருந்து ஒலித்து

மெளனமாய் என்னை

அழைத்த போது

யார்குரல் இதுவென

புரியாமல் நானும்

புலன்களை புத்தியை

நிறுத்திய போது

அழைப்பது நீயென

ஆன்மாவில் உணர்ந்து

அசையாமல் நின்றேன்

சிலையைப் போல

பொறிகள் புலன்கள்

மனதுள் ஒடுங்க

மனதும் மதியும்

ஆன்மாவை நெருங்க

அங்கே கேட்டேன்

உனது குரலை

அதன்பின் நிறுத்தினேன்

எனது தேடலை

என்னுள்ளே இருந்த

உன்னையும் தேடி

எல்லைகள் கடந்து

ஓடினேன் நானென

உணர்ந்த பின்னாலே

எல்லைகள் மறைய

உன்னையே அடைந்தேன்

என்னையும் கடந்து

திருப்பூந்துருத்தி, 19-8-23, காலை, 9.30

Transcending all the senses when we tune within us, then we can listen the gentle voice of Him, who comes in our life in the way we wants Him to come.  For me as a guru. For this we need to go deep within us, even transcending us after that to be with Him.

1512 ஏன் மாறினாய்

என்ன சொல்லி

என்னிடம் வந்தாய்

இப்போ நீயேன்

இப்படிச் செய்கிறாய்

சொல்வது ஒன்று

செய்வது ஒன்று

என்பது ஆகுமோ

உனக்கு அழகு

என்ன சொன்னாய்

என்பதைச் சொல்லேன்

இப்போ செய்வதை

மட்டுமே அறிவேன்

இதற்குக் காரணம்

நானெனச் சொன்னால்

எப்படி அதனை

நானும் ஏற்பேன்

ஆளுக்குத் தகுந்த

வேடத்தை நீயும்

எனக்காய் ஏனோ

போடு கிறாயோ

அப்படி ஆனால்

அடிக்கடி நீயும்

மாறி மாறியே

போடணும் வேடம்

நிமிடம் தோறும்

மாறிடும் மனதும்

அத்துடன் ஒருபோதும்

நிலையிலா மதியும்

ஒருமித்து சேர்ந்து

அடிக்கடி மாற்ற

என்னிலை எனக்கே

புரியாமல் இருக்கேன்

அதற்கு ஏற்ப

நீயும் மாறினால்

அடியேன் நிலைமை

என்னாகும் சொல்லு

மாறாத நீயும்

மாறியே வந்தால்

மாறிடும் எனக்குப்

போக்கிடம் ஏது

எதுவானாலும்

நடப்பது நடக்கட்டும்

என்றுமே எண்ணி

நானுமே நின்றேன்

எனக்காக மாறி

என்னைமும் மாற்ற

முயற்சிநீ செய்வதை

உணர்ந்து கொண்டேன்

ஆகவே இனிநீ

என்ன செய்தாலும்

ஏனென கேள்வி

கேட்கவே மாட்டேன்

என்றோ ஒருநாள்

சொன்னதைச் செய்வாய்

என்று நம்பி

என்னையும் தந்தேன்

திருப்பூந்துருத்தி, 19-8-23, இரவு 11.00

When I read the following words by Fr. Beed Griffith, stopping reading, I thought about my own situation, which is almost similar that he faced.  Then I wrote this song:

…I am certainly going through very deep psychological experiences and I am often bewildered by them, but one cannot put them on paper.—11-2-1962. Adrian B Rance: Falling in Love with India: From the Letters of Bede Griffiths, Thannipalli, Saccidananda Ashram, year not mentioned. P. 386

1513 ஏன்தேட வேண்டும்

தோன்றியே மறைந்தாய்

தூரமே போனாய்

என்றுதான் நானும்

எண்ணியே இருந்தேன்

தோன்றிடத் தேவை

உனக்குமே ஏது

உள்ளாக முன்பே

இருந்திடும் போது

தூரமே போகும்

வாய்ப்புமே இல்லை

எல்லைகள் உனக்கு

இல்லாத போது

மறையாத ஒன்று

எப்படித் தோன்றும்

இழக்காத ஒன்றை

ஏன்தேட வேண்டும்

ஆயினும் மறைகள்

அதைத்தான் சொல்லின

ஆகவே மாந்தரும்

அதையே நம்பினர்

மறைகளைத் தாண்டி

மதங்களைத் தாண்டி

மனதையும் தாண்டி

நான்சென்ற போது

உன்னிலே என்னையும்

என்னிலே உன்னையும்

பிரியாத நிலையிலே

என்னிலே கண்டேன்

நானின்றி உனக்கு

இருப்பிடம் இல்லை

நீயின்றி எனக்கு

புகலிடம் இல்லை

ஆயினும் அதைக்கூற

வாய்ப்புமே இல்லை

அதற்கான மொழிகூட

தோன்றவே இல்லை

மேனியின் வாழ்க்கையில்

உன்னையும் அறிந்தேன்

மேதினி வாழ்விலே

அதனையும் உணர்ந்தேன்

மேனியும் முடிய

மேதினி மறையும்

அதன்பின் உள்ளது

யாருக்குத் தெரியும்

தெரிந்த வாழ்விலே

உன்னிலே கலந்து

தொடர்ந்து வாழ்க்கையில்

உன்னருள் நினைந்து

தோற்றம் மறைவு

துரம் அருகில்

போன்ற பேதங்கள்

இன்றியே வாழ்வேன்

திருபூந்துருத்தி, 20-8-23, மாலை, 3.50

…Now my mind seems to be expanding and I feel that the repression is being dispelled.  I find that I must do without any images – the image of Christ is a great obstacle.  The only way I can find out is to consider that on the cross Christ died to this world and disappeared. (p. 418)  After the resurrection he no longer belongs to this world.  We have to pass out with him to the Father, to lose ourselves completely.  I can only think of God as Nothing and myself as nothing.  Do you remember that Augustine Baker described the mystical union as the union ‘of the nothing with the nothing’?  This seems to be exactly true. -711-1966. Adrian B Rance: Falling in Love with India: From the Letters of Bede Griffiths, Thannipalli, Saccidananda Ashram, year not mentioned. Pp. 417-18

This is the closing theological remark of Fr. Griffith in his long correspondence with Mrs. Micheline Rance.  After reading this I wrote at the end of this words, ‘Yes.  I agree with this.’

This may come as surprise to many with the question, ‘then do you not believing in God? 

The question about God always remain a mystery for me, even before I become a bhakta of the Lord.  Coming from advaitic tradition, my understanding about God somehow remained close to that tradition, though in my normal life I try to live a normal bhaktas of gods.  However deep in me, when I began to ask questions about my imperfection, I realized that I cannot get the answer not beginning from God but from me, ‘why I need a God; if at all if there is any G O D (English word)?

Then I realized that what I need is a guru and happily found him in Mukti Nath.  Then He become everything in my life—even as a God, though I prefer Him to remain a guru to me all the time.  Because all the concepts of God, something or someone beyond us never appeal to me.  Of course I strongly believe in a supernatural energy that sustains this universe.  We can call it COSMIC ENERGY.  But as human being as a Person, we cannot relate with that Cosmic Energy as mere Shakti outside us or within us, but can relate only as a Person. Then the concept of Personal God could have developed.

But when I found my guru, I am happy to relate to Him not as a God either beyond me or within me, but living along with me.  Not leading me from behind or showing the way going in front or standing in one place like a sign post, showing the way for me to walk, but coming along with me in every form according to my need: as a Mother, Father, brother, friend, companion and even as a servant. 

So though I won’t use the exact words of Fr. Griffith, still I am happy with my guru who helped me to experience while living in this mortal body not worrying much about the life beyond.  As I often insists, for me mukti is not going to some heaven after the death, but experiencing it while living in this very body on this earth.  As I was meditating on this line, I wrote this song expressing my thought in a limited way, paving for so many questions that needs to be addressed in a separate article. 

After this when I further meditated on this I wrote the following words:

If there is any God; let Him be like my guru

If I need any God; let Him decide that too

At present my guru is enough for me

As He walks along with me in my journey.

1514 தருவது நல்லது

வேண்டியே வந்தேன்

விரும்பியே கேட்டேன்

வேறொன்றை நானும்

வேண்டாத வாறு

வேண்டிய தேவைகள்

ஏராளம் உண்டு

வேண்டிடத் தேவையும்

எனக்குமே உண்டு

ஒவோன்றாய் நானும்

எடுத்ததுமே சொல்ல

விடிந்தாலும் சிறுபங்கு

அதில் முடியாது

தேகத்தின் தேவைகள்

என்னவோ கொஞ்சம்தான்

நானாகத் தேடி

நிறைவேற்றிக் கொள்ளலாம்

அனால் மனத்தேவை

என்று வரும்போது

எண்ணிக்கை போதாது

என்பதும் உண்மைதான்

உடல்தேவை போல

மனத்தேவை இல்லை

அதனை நிறைவேற்ற

வேறாரும் இல்லை

எனக்கும் புரியாது

அதற்கான காரணம்

உனக்கு புரியுதா

மனம்கூறும் காரணம்

அதனை எனக்கு

நீசொல்ல வேண்டாம்

ஏனெனில் எனக்கு

அது விளங்காது

ஆயினும் என்மனம்

என்னிடம் இருப்பதால்

அத்தனை எளிதாக

தப்பிக்க இயலாது

அதற்காக அனைத்தையும்

நிறைவேற்ற முடியாது

ஆகவே அதனோடு

போராட்டம் தொடருது

இருதலைக் கொள்ளி

எறும்பாக தவிக்க

எனக்கு விடுதலை

உனைவிடால் கிடையாது

ஏதேனும் செய்து

அதைமேற் கொண்டு

நான்நாடும் விடுதலை

நீதர வேண்டும்

நெஞ்சம் முழுதும்

நீயே நிறைந்து

தஞ்சம் எனக்கு

நீமட்டும் தந்தால்

வேறெதும் வேண்டிடத்

தேவையே இன்றி

வேண்டிடும் தேவை

இனி இருக்காது

இதைத்தான் வேண்டி

இப்போது வந்தேன்

வேறேது ஒன்றும்

விரும்பி கேட்கேன்

தருவது நல்லது

தயவாய் உதவிடு

மறுத்தால் நானினி

வேறெங்கு போவது

திருப்பூந்துருத்தி, 20-8-23, இரவு,11.15 pm.

After closing all the reading and other activities, I sat quietly not knowing what to do or think.  Then I began to talk to the Lord that I need one thing for Him to do for me.  Other than that at present I don’t need any other things. Meet all the needs of my heart/mind as I struggle a lot with it unable to fulfil its need.  As I continue to talk with Him, then I wrote this song as my prayer.

1515 யாவரும் கேளிர்

எங்கு சென்றாலும்

இதுஎன தில்லை

என்கிற எண்ணமே

என்னிலே ஓங்குது

இடம் ஆனாலும்

உற வானாலும்

எனதில்லை என்ற

எண்ணமே வருகுது

எதையோத் தேடி

அலைகிறேன் நாளும்

என்ன அதுவென்று

சொல்லவும் தெரியாமல்

கும்பலில் தொலைந்த

குழந்தையைப் போல

தேம்புறேன் நான்

தனிமையில் நின்று

நான் தொலைந்தேனா

பிறர் தொலைத்தாரா

என்பது புரியாது

திகைத்த போது

சிலர்வந்து என்னை

தனதென்று சொன்னார்

அருகினில் சென்றபின்

எனதில்லை என்றார்

தொலைக்க வேண்டியே

யாரோ ஒருவர்

கும்பலில் விட்டு

சென்று விட்டாரா

கூட்ட நெரிசலில்

கையுமே நழுவ

நானே பிரிந்து

வந்து விட்டேனா

அதுவும் கூட

புரியவே இல்லை

அறியாக் குழந்தையாய்

இருப தினாலே

இனத்தோடு சேரும்

நால்வரும் வரையில்

என்வரை நானும்

தனித்தே இருப்பேன்

எனினம் எதுவென

எனக்கும் தெரியாது

எவ்விதம் அறிவது

என்பதும் புரியாது

தேடவும் இயலாமல்

பிறர்நாடி வாராமல்

என்னையும் தொலைத்தேன்

என்னிட மிருந்து

என்னை நானே

தொலைத்த பின்னாலே

எல்லா உயிரும்

என்னினம் அறிந்தேன்

எங்கு எப்படி

எவருடன் வாழினும்

எல்லா இடமும்

எனதென உணர்ந்தேன்

21-8-23, திருப்பூந்துருத்தி, 5.30, மாலை,

…We did not belong anywhere.  That was part of our misery, whether we liked it or not, we were uprooted like the rest of the world, and wherever we went we could not escape ourselves.—Bede Griffiths, The Golden String, Thannirpalli, Saccidananda Ashram, (1976),

When I read this first I wrote, True and wrote this song echoing the same sentiment.  But I was not happy what I wrote.  So when I went for my evening walk, as I continue to meditate on this subject, I realized that I live as per my principle: One day at time. So wherever I go, though initially I struggle a bit, easily integrate to the environment and with people easily without much hesitation.  So I never felt that I never belong anywhere. Of course, several times the sense came that I am not happy with the life on this earth.  At the same time I accept it as a gift in my life and try my best to enjoy it each movement of life.  Then the last two stanzas came as inspiration and when I returned back to my room, I wrote them with much satisfaction echoing the lines of ancient Tamil Sangam poem: Puranaanuru (192) Yadum Vure; yaavarum kelir (Every city is your city. Everyone is your kin.).

I heard that even this line was engraved in front of United Nations building.

1516 நீயே ஆகணும்

பிடி தளராமல்

கரம்பற்றி நடந்ததாய்

நடை மாறாமல்

உடன்நீ வந்தாய்

அனுதின வாழ்வில்

என்னுடன் உள்ளாய்

இதுமட்டும் போதும்

வேறென்ன வேண்டும்

குருவாக வந்தாய்

தேடியே என்னை

அதன்மூலம் காட்டினாய்

இறைவனை உன்னில்

இறைவன் என்று

ஒருவன் இருந்தால்

உன்போல் அவனும்

இருந்தால் போதும்

இறைவனும் எனக்கு

தேவை என்றால்

அதைகூட நீயே

முடிவு செய்யணும்

சேயின் தேவை

தெரியும் தாய்க்கு

செய்வாள் நன்மை

மட்டும் அதற்கு

தாயின் சேயாய்

உன்னிலே இருந்து

குருவின் சீடனாய்

உன்னடி பணிந்து

பக்தியின் மேன்மையால்

உன்னையே புகழ்ந்து

அனுதினம் வாழணும்

உன்னிலே கலந்து

எனது தனித்துவம்

உன்னிலே மறைய

உனது மகத்துவம்

என்னிலே நிறைய

இனி நானல்ல

என்னில் நீயே

வாழ்வதை உணர்ந்து

செய்யணும் தொண்டு

உடல் தருமாறும்

முதுமை வந்தது

சொல் தடுமாற

பேச்சும் குழைந்தது

ஆனால் மனம்மட்டும்

உன்னில் வளர

ஏனோ மீண்டும்

குழந்தாய் மாறுது

இந்த எளிமை

என்றும் தொடர

உந்தன் அருளும்

அனுதினம் வேண்டும்

திருப்புந்துருத்தி, 25-8-23, காலை, 9.15.

1517 யாரின் பாரம்

படைப்பிலே மனிதன்

பரனோடு இருந்தும்

பாவம் நுழைய

பரமனைப் பிரிந்தான்

அதன்பின் துரும்பும்

பாரமாய் மாற

தூக்கமும் தொலைந்து

துரும்பென இளைத்தான்

அருமை துணையும்

அருகினில் இருந்தும்

அந்த அன்பும்

வெறுமையையாய் மாற

அவனது நிலைகண்டு

பரமனும் இரங்கி

தனது படைப்பென்ற

எண்ணமும் கொண்டு

மீண்டும் வந்தான்

மனிதனை மீட்டக்

மாண்டும் காட்டினான்

மரத்தின் மீது

அதன்பின் அவனும்

அன்பொடு அழைத்து

நம்பாரம் அவன்மீது

வைக்கவும் சொன்னான்

ஆனால் அனைத்தும்

தனதென்று எண்ணம்

கொண்டு வாழ்வதால்

மனிதனும் மீண்டும்

‘என்பாவம் என்பாரம்

உனக்கென்ன வென்று’

இறைவனைப் பார்த்து

கேள்வியும் கேட்டு

இன்னும் சுமக்கிறான்

தன்பாவ பாரம்

இறைவனும் விழிக்கிறான்

என்செய்ய வென்று

படைத்தவன் மீது

குறையும் சொல்வதா

பாரம் சுமக்கும்

மனிதனை இகழ்வதா

இதற்கு விடையோ

என்னிடம் இல்லை

அவரவர் சுமக்கட்டும்

தனபாரம் தன்னை

திருப்புந்துருத்தி, 15-8-23, மதியம் 1.15.

My friend Kannan from Erode sent one response to my previous song that I posted about the burden of peacock to him.  Recently he started to try his hand in writing poems and he is really good in conveying the message through the medium of poem.  Till recent past, friends and others, most of the time sent the message in poetic form.  Even those who sought some help from another person sent it by writing poems.  But I suggested him to try to keep two or four words in each line and try to connect both beginning and end of the words in each line known as ‘edugai’ and ‘monai’ in Tamil.  But he said that he cannot do it and only a person who has some experience in writing poem can do. Then I sent one small example taking from his own poem from the first line.  Then as inspiration continued I quickly wrote this song, borrowing his own theme.  So the theme of this song belongs to Kannan and only words belongs to me.  In the past there lived two poets known as ‘Iratti pulavar’.  One is blind and another is lam.  So lam will sit on the shoulder of the blind and will guide him. One will write first two lines of a song and next will complete by writing the last two stanzas.  There are so many poems written by them.

படைப்பில் பரமனோடுவாழ்ந்தவனிடம்

பாவமும் நுழைந்திட

பரமனும் விலகிட

துரும்பும் பாரமாய் மாற

தூக்கமும் துக்கமாய்

மாற

புத்தியும் பிறல

பக்தியும் அறியாமல் பாடும்பட பரபனிடமே செல்ல வழியும் அறியாமல்

வாழ்ந்த நிலை கண்ட

பரமனும் மனமும் நொந்து

வந்தான் பாமரனிடமாய்

பாரத்தையும் பாவத்தையும் தூக்கி சுமந்தான் சிலுவையில்.

விடுதலை கிட்டிய பின்னும்

விடமாட்டேன்

 என் பாரத்தை என்றும் என்னிடமே தா என்று பரமனிடமிருந்து மீண்டும்

 பறித்துக் கொண்ட நிலை கண்டு

பதறினான்,குமறினான் பரமனும்

வழி கண்டும் விழி பிதுங்கும் பாமரனுக்கு

எவ்வழி காட்டுவேன் என்ற

பாரம்

 பரமனையே பாரப்படுத்த வைத்த அறியாமை கண்டு

நானும் சிந்தி தேன்

யார் பாரம் பெரிதென்று.

வாழ்வதற்கு வழி காட்ட

 வந்த பரமனுக்கே

வழி தெரியாமல் மிரள வைத்தான் பாமரனும்.

என்ன சொல்ல.

(வான் கோழி போல ஒரு முயற்சி)

Kannan from Erode.

1518 தனித்த உறவு

பிறப்பும் இறப்பும்

இயற்கை நியதி

பிறந்தவர் இறப்பது

நிச்சயம் உறுதி

ஆனால் உறவு

அதுபோல் இல்லை

உடலுடன் உறவு

மறைவது இல்லை

தாய்போல் தனித்த

உறவுவென ஒன்று

இதுவரை உலகில்

அமைந்தது இல்லை

அதுபோல் சேய்க்கு

வேறெந்த உறவும்

அத்தனை நெருக்கமாய்

இருப்பதும் இல்லை

உடல், உயிர், ஆன்மா

அனைத்தும் அவளன்றி

ஒருவரும் பங்கிட்டுக்

கொடுப்பதும் இல்லை

மிஞ்சிய கொஞ்சம்

ஏதும் இருந்தால்

அதையும் அளிக்க

மறுப்பதும் இல்லை

உயிரினம் அனைத்திலும்

தாயினும் மேலாய்

உறவென்று எவரும்

கண்டதும் இல்லை

ஆகவே உயிரினம்

இன்னும் இருப்பது

அவளது கொடையின்றி

வேறேதும் இல்லை

அவளிடம் பிறந்து

அவளால் தொடரும்

உறவுக்கு முடிவு

வருவதே இல்லை

போகும் உடலும்

போனால் போகட்டும்

வாழும் உறவு

அவளில் தொடரும்

அந்த உறவை

நெஞ்சில் சுமந்து

வாழும் வாழ்வே

உயர்வின் எல்லை

திருப்புந்துருத்தி, 17-8-23, மதியம் 1.15.

1518 Unique Relationship

Birth and death

Is part of nature

All who born

Will surely die

But relationship

Is not like this

Along with the body

Relationship never disappears

There is no other Relationship

Like that of a mother

Available for us

On this earth

No other relationship

Remains that much close

Like that of a mother

To a child

No one shares the

Body, soul and spirit

Like that of a

Mother in life

If there is anything

Still left with her

She won’t hesitate

To share that also

None has seen

In the entire creation

More noble one

Like that of a mother

Still the existence

Of living beings is

Nothing but her

Generous gift

No end will come

To the relationship

That begins from her

And still continue in her

Let the perishable

Body go

But the living relationship

Will continue in her

Carrying that relationship

In one’s heart and

Continue to living is

The glory for this life.

Thirupoonthuruthi. 17-8-23, மதியம் 1.15.

In the morning, suddenly my mother’s face began to appear in my mind often.  Of course I remember at least one time in a day.  But I don’t know the reason for this sudden appearance of my mother in my mind.  After lunch, when I try to lay down to take a rest. Then I began to recall our life together in our ashram this time last year.  Then, unable to control my tears, I try to console myself by saying that death is inevitable but the relationship, particularly that of a mother, never dies.  As inspiration came I wrote this song and lay down unable to sleep further only thinking about her.

1518 अनोखा रिश्ता

जन्म और मृत्यु

प्रकृति का हिस्सा है

वे सभी जिन्होंने जन्म लिया

अवश्य मरेंगे

लेकिन रिश्ता

ऐसा नहीं है

शरीर के साथ-साथ

रिश्ता कभी ख़त्म नहीं होता

कोई दूसरा रिश्ता नहीं है

एक माँ की तरह

हमारे लिए उपलब्ध है

इस धरती पर

कोई और रिश्ता नहीं

उतना ही करीब रहता है

एक माँ की तरह

एक बच्चे को

कोई भी साझा नहीं करता

शरीर, आत्मा और आत्मा

एक की माँ तरह

जीवन में

अगर कुछ बचा है

फिर भी उसका त्यागने का

एक माँ कभी भी

संकोच नहीं करेगी

किसी ने नहीं देखा

सम्पूर्ण सृष्टि में

अधिक महान

एक माँ की तरह

अभी भी अस्तित्व है

जीवित प्राणियों का है

माके अलावा कुछ नहीं

उदार उपहार

कोई अंत नहीं आएगा

रिश्ते को

वह उससे शुरू होता है

और अभी भी उसमें जारी है

नाशवान शरीर  को

नाश होने दोहोने दो

लेकिन जीवित रिश्ता

उसमें जारी रहेगा

उस रिश्ते को निभाना

किसी के दिल में और

जीना जारी रखें

इस जीवन की महिमा.

तिरुपून्थुरुथी. 17-8-23, अध्याय 1.15.

सुबह अचानक मेरे मन में बार-बार माँ का चेहरा उभरने लगा। निःसंदेह मुझे दिन में कम से कम एक बार तो याद आता है। लेकिन मुझे नहीं पता कि मेरे मन में अचानक मेरी माँ का ऐसा आगमन क्यों हुआ। दोपहर के भोजन के बाद जब मैं आराम करने के लिए लेटा, मुझे पिछले साल इसी समय हमारे आश्रम में एक साथ बिताया गया जीवन याद आने लगा। फिर, अपने आंसुओं को नियंत्रित करने में असमर्थ, मैं यह कहकर खुद को सांत्वना देने की कोशिश करता हूं कि मृत्यु अवश्यंभावी है लेकिन रिश्ता, खासकर एक मां का रिश्ता कभी नहीं मरता। जैसे ही प्रेरणा मिली, मैंने यह गीत लिखा और केवल उसके बारे में सोचते हुए आगे सो नहीं सका।

My mother and Ganpati Festival

And this morning (18-9-2023) when I went for my walk, I heard some songs on Ganpati from the local temple.  Then I remembered that today might be the Ganpati Festival.  As I live in my own world with books and writing I forget the outside world.  Then I remembered all the arrangements that I made for my mother to celebrate her most favourite festival: Ganesh Chaturti.  Last year I too was not well and recovering post-operation of pacemaker.  So my mother didn’t pressure me to do anything.  But knowing her heart, without informing her I arranged a wonderful decoration in her personal shrine where she keeps her favourite images of Ganpathi and Nataraja.  Then I also prepared the traditional prasad for Ganpati: Appam, Aval.   And when she came to take a bath and saw the arrangements was not surprised but said, ‘I am not sure whether I will be celebrating it next year.’  With the help of her caretaker she celebrated her last Ganpathi festival. 

So I thought about how I can remember her on her favourite festival. Then I decided to do what I would have done if she was still living and living with me.  Of course I didn’t arrange any special pooja for Ganpathi, but prepared the same traditional prasad.  There is a man Siva Kumar admitted in the Siddha hospital in the same ashram compound. He met with an accident and remained bedridden for the past more than six months.  His aged father, who is now 74, is staying with him to take care of him.  His father (Balasbramanyam) almost broke down and was worn out.  Often I go and sit and talk with them.  I also prepare some of Siva Kumar’s favourite food (Sambar rice) and give it once in a week. This morning I have decided to give those traditional items that I prepared to Siva Kumar.  But I also made popcorn thinking that Ganpathi baba also would like it.And calling his father I gave them thanking him for taking care of his son even at this age.  It is one thing for children taking care of bedridden parents.  But here one old father is taking care of his bedridden son for more than six months. 

I suggested that he get discharged and go to his second’s home in Chennai. As they are financially struggling, he is without any pension and the only proper earning member in the family Siva Kumar now bedridden then I promised to take them with me to Chennai during the first week of October.

I also made my mother’s favourite tiffen: Rava Dosa.  But I made it in my own way making it more crispy.  I have my own recipe for that.  Instead of using instant Rava dosa mix, I use wheat flour and mix the previous night and soak in water for one hour. Then I will keep it in the fridge all night and in the morning take out to prepare.  Try this way and I assure you that you will make the best one as I make. 

So in this way I remembered my mother this day and celebrated every Mother in her.

Thirupoonthuruti, 18-9-2023

मेरी मां और गणपति महोत्सव

और आज सुबह (18-9-2023) जब मैं टहलने निकला तो मैंने स्थानीय मंदिर से गणपति पर कुछ गाने सुने। तभी मुझे याद आया कि आज शायद गणपति महोत्सव है. चूँकि मैं किताबों और लेखन के साथ अपनी ही दुनिया में रहता हूँ इसलिए मैं बाहरी दुनिया को भूल जाता हूँ। तब मुझे वे सारी व्यवस्थाएँ याद आईं जो मैंने अपनी माँ के लिए उनके सबसे पसंदीदा त्योहार: गणेश चतुर्थी को मनाने के लिए की थीं। पिछले साल मैं भी ठीक नहीं था और पेसमेकर के ऑपरेशन के बाद ठीक हो रहा था। इसलिए मेरी मां ने मुझ पर कुछ भी करने के लिए दबाव नहीं डाला। लेकिन उसके दिल को जानते हुए, उसे बताए बिना मैंने उसके निजी मंदिर में एक अद्भुत सजावट की व्यवस्था की, जहां वह गणपति और नटराज की अपनी पसंदीदा मूर्तियो को रखती है। फिर मैंने गणपति के लिए पारंपरिक प्रसाद: अप्पम, अवल भी तैयार किया। और जब वह स्नान करने आई और व्यवस्था देखी तो आश्चर्यचकित नहीं हुई, लेकिन कहा, ‘मुझे यकीन नहीं है कि मैं इसे अगले साल मनाऊंगी या नहीं।’ अपने कार्यवाहक की मदद से उसने अपना आखिरी गणपति उत्सव मनाया।

इसलिए मैंने सोचा कि मैं उसे उसके पसंदीदा त्योहार पर कैसे याद कर सकता हूं। फिर मैंने वही करने का फैसला किया जो मैं करता अगर वह अभी भी जीवित होती और मेरे साथ रहती। बेशक मैंने गणपति के लिए किसी विशेष पूजा की व्यवस्था नहीं की, लेकिन वही पारंपरिक प्रसाद तैयार किया। इसी आश्रम परिसर में सिद्ध अस्पताल में एक व्यक्ति शिव कुमार भर्ती है। वह एक दुर्घटना का शिकार हो गए और पिछले छह महीने से अधिक समय तक बिस्तर पर रहे। उनके वृद्ध पिता, जो अब 74 वर्ष के हैं, उनकी देखभाल के लिए उनके साथ रह रहे हैं। उनके पिता (बालासब्रमण्यम) लगभग टूट चुके थे और थक चुके थे। मैं अक्सर उनके पास जाकर बैठता हूं और बातें करता हूं।’ मैं शिव कुमार का कुछ पसंदीदा भोजन (सांबर चावल) भी बनाता हूं और सप्ताह में एक बार देता हूं। आज सुबह मैंने उन पारंपरिक वस्तुओं को देने का फैसला किया है जो मैंने शिव कुमार को तैयार की थीं। लेकिन मैंने यह सोचकर पॉपकॉर्न भी बनाया कि गणपति बाबा को भी यह पसंद आएगा। और उनके पिता को बुलाकर मैंने उन्हें इस उम्र में भी अपने बेटे की देखभाल करने के लिए धन्यवाद देते हुए दिया। बच्चों के लिए बिस्तर पर पड़े माता-पिता की देखभाल करना एक बात है। लेकिन यहां एक बूढ़ा पिता छह महीने से ज्यादा समय से बिस्तर पर पड़े अपने बेटे की देखभाल कर रहा है.

मैंने सुझाव दिया कि वह छुट्टी ले लें और चेन्नई में अपने घर चले जाएं। चूँकि वे आर्थिक रूप से संघर्ष कर रहे हैं, उनके पास कोई पेंशन नहीं है और परिवार में एकमात्र कमाने वाले सदस्य शिव कुमार अब बिस्तर पर हैं, तब मैंने उन्हें अक्टूबर के पहले सप्ताह के दौरान अपने साथ चेन्नई ले जाने का वादा किया।

मैंने अपनी माँ का पसंदीदा टिफ़न भी बनाया: रवा डोसा। लेकिन मैंने इसे अपने तरीके से बनाया और इसे और भी क्रिस्पी बनाया. उसके लिए मेरे पास अपना नुस्खा है। तत्काल रवा डोसा मिश्रण का उपयोग करने के बजाय, मैं गेहूं के आटे का उपयोग करता हूं और पिछली रात मिश्रण करता हूं और एक घंटे के लिए पानी में भिगो देता हूं। फिर इसे पूरी रात फ्रिज में रखूंगा और सुबह तैयार करने के लिए निकालूंगा. इस तरह से प्रयास करें और मैं आपको विश्वास दिलाता हूं कि आप सबसे अच्छा बनाएंगे जैसा मैं बनाता हूं।

तो इस तरह मैंने इस दिन अपनी मां को याद किया और उनके अंदर की हर मां को सेलिब्रेट किया।

My mother and Ganpati Festival

And this morning (18-9-2023) when I went for my walk, I heard some songs on Ganpati from the local temple.  Then I remembered that today might be the Ganpati Festival.  As I live in my own world with books and writing I forget the outside world.  Then I remembered all the arrangements that I made for my mother to celebrate her most favourite festival: Ganesh Chaturti.  Last year I too was not well and recovering post-operation of pacemaker.  So my mother didn’t pressure me to do anything.  But knowing her heart, without informing her I arranged a wonderful decoration in her personal shrine where she keeps her favourite images of Ganpathi and Nataraja.  Then I also prepared the traditional prasad for Ganpati: Appam, Aval.   And when she came to take a bath and saw the arrangements was not surprised but said, ‘I am not sure whether I will be celebrating it next year.’  With the help of her caretaker she celebrated her last Ganpathi festival. 

So I thought about how I can remember her on her favourite festival. Then I decided to do what I would have done if she was still living and living with me.  Of course I didn’t arrange any special pooja for Ganpathi, but prepared the same traditional prasad.  There is a man Siva Kumar admitted in the Siddha hospital in the same ashram compound. He met with an accident and remained bedridden for the past more than six months.  His aged father, who is now 74, is staying with him to take care of him.  His father (Balasbramanyam) almost broke down and was worn out.  Often I go and sit and talk with them.  I also prepare some of Siva Kumar’s favourite food (Sambar rice) and give it once in a week. This morning I have decided to give those traditional items that I prepared to Siva Kumar.  But I also made popcorn thinking that Ganpathi baba also would like it.And calling his father I gave them thanking him for taking care of his son even at this age.  It is one thing for children taking care of bedridden parents.  But here one old father is taking care of his bedridden son for more than six months. 

I suggested that he get discharged and go to his second’s home in Chennai. As they are financially struggling, he is without any pension and the only proper earning member in the family Siva Kumar now bedridden then I promised to take them with me to Chennai during the first week of October.

I also made my mother’s favourite tiffen: Rava Dosa.  But I made it in my own way making it more crispy.  I have my own recipe for that.  Instead of using instant Rava dosa mix, I use wheat flour and mix the previous night and soak in water for one hour. Then I will keep it in the fridge all night and in the morning take out to

So in this way I remembered my mother this day and celebrated every Mother in her.

Thirupoonthuruti, 18-9-2023

1519 எது சரி

தெரியாது அறியாது

புரியாது இருந்தாலும்

தெரிந்திட புரிந்திட

உலகத்தில் வந்தாய்

வந்தபின் உனது

தன்மையை உணராது

மாந்தரும் பலவித

வழிகளை வகுத்தார்

அந்தந்த வழிகளில்

சென்ற பலரும்

சிலபேர் மட்டும்

சிந்தனை செய்தார்

சென்ற வழியில்

கொண்ட அனுபவம்

சிலவற்றை மட்டும்

சொல்லித் தந்தார்

அந்தந்த வழிகளில்

அதன்பின் வந்தவர்

அவரது சிந்தையை

தமதாக்கிக் கொண்டார்

எவரின் அனுபவம்

சரிஎன்ற வாதம்

புதிதாக ஆங்கே

கேள்வியாய் மாற

அதற்கு விடையாக

அவரும் பலவித

நூல்களை வடித்து

நம்மிடம் தந்தார்

இவற்றில் உண்டான

பலவித கோட்பாடு

இன்றும் நமது

சிந்தையை ஆள

எவ்விதம் உன்னை

தெரிவது அறிவது

புரிவது என்று

குழம்பியே போனார்

இவற்றின் ஊடாக

மட்டுமே உன்னை

உணர இயலாது

என்பதை உணர்ந்தவர்

தெரிவது அறிவது

புரிவது உணர்வது

என்ற அனுபவ

நிலைகளைத் தாண்டி

தெளிவாக உள்ளே

தெரிகின்ற உன்னை

புரிந்து அறிந்து

உணர்ந்து வாழ்ந்தார்

அவரில் ஒருவனாய்

என்னையும் மாற்றிட

ஐயனே அண்டினேன்

திருவடி இன்று

அடிமையை ஏற்று

அருளிய உனது

அருளை உணர்ந்து

வாழ்கின்றேன் நன்று

குருகுலம், 11-10-2023,  மாலை 7.00

As I returned back to the ashram after three months (I left on June 24th and returned  back today), evening I sat quietly immersing myself in the calm atmosphere around me, which I missed much all these months.  All the readings that I have done, talks I have and writings that I have done, never changed me much.  The only way to experience God is to go beyond all human endeavours and to have Her darshan within our atman—transcending everything.  This firm conviction never changes irrespective of various views about God.

1520

ஒருவரும் ஒன்றும்

செய்திட முடியாது

உன்னாலும் கூட

மாற்ற இயலாது

ஒவ்வொரு நொடியும்

மாறிடும் மனதுடன்

என்னாலே போராட

இனியும் முடியாது

எத்தனை முறையோ

இதனையும் சொன்னேன்

எழுத்திலும் பாட்டிலும்

கூறியும் வைத்தேன்

முடிந்த நீயும்

உதவிட மறுக்க

எப்படி நானும்

போராட்டம் தவிர்க்க

ஒருவேளை உனக்கிது

விளையாட்டு ஆகலாம்

பொழுது போகாமல்

வேடிக்கை காட்டலாம்

உன்னுடன் சேர்ந்து

பார்ப்பவர் நகைக்க

நடிக்கின்ற நான்மட்டும்

ஏமாந்து போகலாம்

கூலி கிடைத்தால்

நடித்து காட்டலாம்

நானே செலவிட்டு

எப்படி நடிக்கலாம்

இருந்த முதலும்

காலியாய்ப் போக

இனிமேல் பிழைப்புக்கு

நானென்ன செய்ய

ஏதேனும் வழியை

நீதான் காட்டனும்

இதற்கு மேலாக

நானேன் சொல்லணும்

மாறிடும் மனதிலே

மாறாத நீதான்

நீங்காது என்றும்

குடிகொள்ள வேண்டும்

குருகுலம்

1521

மறைகள் வந்திட

மதங்கள் வந்தன

அவைதந்த பிரிவினை

எத்தனை எத்தனை

பிரிவினை இன்றி

இயல்பாக எம்மோடு

இரண்டறக் கலந்து

இருக்கின்ற உன்னை

பிரிவினை மூலமே

உன்னையும் தேட

பிரிந்தே வாழ்கிறார்

என்றும் உன்னை

என்றுதான் இதற்கு

முடிவு வந்திடும்

என்றே என்மனம்

உள்ளாக ஏங்கிட

அதன்பின் உணர்ந்தேன்

அந்த ஏக்கமும்

ஐயனே உண்மையில்

உனதென நானும்

பலவழி நாடி

சிலவழி ஒடி

உன்னை அறிந்திட

ஒருவழி இல்லை

எதற்காக ஓட

எப்படி நாட

என்கிற உண்மை

புரியாத வரையில்

உன்னைப் பிரிந்து

நானும் வாட

என்னைப் பிரிந்து

நீயும் ஏங்க

இருவரும் தேடினோம்

ஒருவரை ஒருவர்

இறுதியில் கண்டோம்

ஒருவரில் ஒருவர்

இதனை அறிய

மதங்கள் எதற்கு

எடுத்துச் சொல்ல

மறையும் எதற்கு

பிரிக்கும் செயலை

நானும் தவிர்த்தால்

பிரிவினைக் கினிமேல்

இடமும் எதற்கு

குருகுலம், 11-10-23

1522 நடப்பது நடக்கட்டும்

நல்லதோ தீயதோ

எது நடந்தாலும்

நான்செய்ய இதிலே

ஒன்றுமே இல்லை

நல்லது நடந்தால்

நன்மை என்றும்

அல்லது வந்தால்

தீமை என்றும்

என்னுள்ளே இருக்கும்

எண்ணமாய் இருக்க

இதனை மாற்ற

வழியும் இல்லை

நல்லது தீயது

என்று எதுவும்

தனித் தனியாக

நடப்பதும் இல்லை

நடத்திடும் நீயும்

இதிலே எந்த

பேதமும் பார்த்து

நடத்துவ தில்லை

எதனை எப்படி

எடுப்பது என்று

முடிவு என்னிடம்

இருக்கின்ற வரையில்

அதற்கு மேலே

அதனை மாற்றும்

எண்ணமும் உன்னிடம்

இனியும் இல்லை

இந்த நிலைக்கு

என்னையும் வைத்து

ஏனிந்த வேடிக்கை

நீயும் காட்டுறாய்

என்குணம் அறிந்தும்

அதனை மாற்ற

ஏன்நீ இன்னும்

தாமதம் செய்கிறாய்

இதுவும் ஒருவிதம்

நல்லது என்று

நானும் அதனை

எடுத்துக் கொள்வதா

அல்லது மீண்டும்

வழக்கம் போல

இதிலும் தீயதை

மட்டுமே காண்பதா

எது நடந்தாலும்

நடப்பது நடக்கட்டும்

இனிமேல் சொல்ல

ஒன்றுமே இல்லை

எது நடந்தாலும்

நல்லதே என்ற

எண்ணம் சிறந்தது

மாற்றமே இல்லை

அந்த எண்ணம்

தந்தால் போதும்

அந்த நல்லதை

நீயுமே செய்யணும்

Ranchi, 27-10.23, 5.10 am.

The line that divides between fatalism and will of God is very subtle one.  Though every religious traditions used various terms and way to explain it, still a bhakta while facing certain events in her life has to resign to the Will of God more than accepting fatalism.  And bhakti will bestow that blessing seeking that kind of attitude alone from God.

1523 நடப்பது நல்லதே

நல்லதோ தீயதோ

எது நடந்தாலும்

நான்செய்ய இதிலே

ஒன்றும் இல்லை

நல்லது நடந்தால்

நன்மை என்பதும்

அல்லது வந்தால்

தீமை என்பதும்

என்னுள்ளே இருக்கும்

எண்ணமாய் இருக்க

இதனை மாற்ற

வழி எனக்கில்லை

நல்லது தீயது

என்று எதுவும்

தனித் தனியாக

நடப்பதும் இல்லை

நடத்திடும் நீயும்

இதிலே எந்த

பேதமும் பார்த்து

நடத்துவ தில்லை

எதனை எப்படி

எடுப்பது என்கிற

முடிவு என்னிடம்

இருக்கிற வரையில்

அதற்கு மேலே

அதனை மாற்றும்

எண்ணமும் உன்னிடம்

இனியும் இல்லை

இந்த நிலைக்கு

என்னையும் வைத்து

ஏனிந்த வேடிக்கை

நீயும் காடுறாய்

என்குணம் அறிந்தும்

அதனை மாற்ற

ஏன்னின்னும் நீயும்

இப்படி மறுக்கிறாய்

இதுவும் ஒருவிதம்

நல்லது என்று

நானும் அதனை

எடுத்துக் கொள்வதா

அல்லது மீண்டும்

வழக்கம் போல

இதிலும் தீயதை

மட்டுமே காண்பதா

எது நடந்தாலும்

நடப்பது நடக்கட்டும்

இனியு சொல்ல

ஒன்றும் இல்லை

எது நடந்தாலும்

நல்லதே என்ற

எண்ணமே சிறந்தது

மறுப்பதற் கில்லை

ராஞ்சி, 27-10-2023, 5.00 காலை.

1524 மவுன விளக்கம் [Posted in the New blog and Face Book]

என்னை  உருவாக்கி

உனதெனச் சொல்லி

விலை தந்து அதனை

நீயே வாங்கி

ஒரு நொடி கூட

பயன்படுத்தாது

உடனே உடைத்ததின்

காரணம் சொல்லு

உருவாக்கும் உனக்கு

உரிமையும் உள்ளது

விலையொன்று தந்தது

ஏனனெச் சொல்லு

அதற்கும் மேலாக

இப்படி நொறுக்கி

உடைத்து போட்டதின்

காரணம் யாது

விடையேதும் வாராது

எனக்கும் தெரியும்

வீண்வாதம் செய்கிறேன்

அதுவும் புரியும்

ஆயினும் உன் மௌனம்

தருகின்ற விளக்கத்தை

அறிந்தது ஆன்மா

அது மட்டும் போதும்

ரீவா,  11-11-23, மதியம் 1.00

1524 Silent Explanation

Creating me and

Calling me as your own

Also buying it

By paying a price

What is the reason

For breaking it

Not even using it

For a single second

As You have the right

To create me

Why you paid

A cost for that [to buy]

Added more to that

What is the reason

For crushing it

Like this

I know for sure that

No answer would come

I also know that

I am unnecessarily arguing

But the explanation

That your SILENCE gives

My atman understood

That is enough for me now

Rewa, 11-11-2023, Afternoon 1.00.

I went to Varanasi on November 1st and was busy with local programs till 5th.  But I became sick due to food poisoning.  With vomit and diarrhea I was down for two more days.  As I slightly improved, not wanting to miss the opportunity that we already planned, I went to Buddha Gaya [8th Nov.], Rajgiri and Nalanda, returned back dead tired with joint pains.  On 8th night I couldn’t even sleep for two hours due to severe pain on the right leg just above the toe.  I even thought of not getting down from the car, allowing only Subhashan [who came to visit Varanasi and other places] to see Nalanda and Rajgiri.  Somehow as a student of history, not wanting to miss the opportunity, with Subhshan’s help I walked slowly with much pain and visited important historical places.

As the Chikungunya virus was spreading widely in Varanasi, severe people became sick.  I also returned back to Rewa with much joint pains [three days sickness, three days continuous travel in this old age that too with Pacemaker….too much].  But I was lovingly taken care by Shashi’s family and managed to have good rest on 10th night, but pain continued

So this morning, ‘sick or no sick’ as I cannot spend a day without reading books, I took the book: Coleman Barks, The Essential Rumi, New York, HarperCollins, 2004 [1995]. Before reading I listened to one Gazal of Rumi in You tube and one line impressed me: He bought the clay pot that he created; broke it and went away’.  Impressed by the thought I wrote this poem.

1524 मौन व्याख्या

मुझे बनाना और

मुझे अपना कह कर

इसे खरीद भी रहे हैं

कीमत चुका कर

कारण क्या है

इसे तोड़ने के लिए

इसका उपयोग भी नहीं कर रहे हैं

एक सेकंड के लिए

जैसा कि आपको अधिकार है

मुझे बनाने के लिए

आपने भुगतान क्यों किया?

उसके लिए एक लागत [खरीदने के लिए]

उसमें और भी जोड़ा गया

कारण क्या है

इसे कुचलने के लिए

इस कदर

मैं यह निश्चित रूप से जानता हूं

कोई जवाब नहीं आएगा

यह तो मैं भी जानता हूं

मैं बेवजह बहस कर रहा हूं

लेकिन स्पष्टीकरण

वह आपकी चुप्पी देती है

मेरी आत्मा समझ गयी

अब मेरे लिए इतना ही काफी है

रीवा, 11-11-2023, दोपहर 1.00 बजे।

मैं 1 नवंबर को वाराणसी गया था और 5 तारीख तक स्थानीय कार्यक्रमों में व्यस्त था. लेकिन फूड प्वाइजनिंग के कारण मैं बीमार हो गया. उल्टी और दस्त के कारण मैं अगले दो दिनों तक बीमार रहा। जैसे ही मैं थोड़ा बेहतर हुआ, उस अवसर को चूकना नहीं चाहता था जिसकी हमने पहले से योजना बनाई थी, मैं बुद्ध गया [8 नवंबर], राजगिरि और नालंदा गया, जोड़ों के दर्द से थका हुआ मृत अवस्था में वापस लौटा। 8वीं रात को दाहिने पैर में अंगूठे के ठीक ऊपर तेज दर्द के कारण मैं दो घंटे तक सो भी नहीं सका। मैंने यहां तक सोचा कि कार से नीचे न उतरकर केवल सुभाषन [जो वाराणसी और अन्य स्थानों की यात्रा पर आए थे] को नालंदा और राजगिरि देखने की अनुमति दे दी जाए। किसी तरह इतिहास के छात्र के रूप में, अवसर चूकना न चाहते हुए, सुभाषन की मदद से मैं बहुत दर्द के साथ धीरे-धीरे चला और महत्वपूर्ण ऐतिहासिक स्थानों का दौरा किया।

चूंकि चिकनगुनिया वायरस वाराणसी में व्यापक रूप से फैल रहा था, इसलिए गंभीर लोग बीमार हो गए। मैं भी जोड़ों के बहुत दर्द के साथ रीवा वापस लौटा [तीन दिन की बीमारी, इस बुढ़ापे में तीन दिन की लगातार यात्रा, वह भी पेसमेकर के साथ…बहुत ज्यादा]। लेकिन शशि के परिवार ने प्यार से मेरी देखभाल की और 10वीं रात को मुझे अच्छा आराम मिला, लेकिन दर्द जारी रहा

तो आज सुबह, ‘बीमार हो या न हो’ क्योंकि मैं किताबें पढ़े बिना एक दिन भी नहीं बिता सकता, मैंने किताब ली: द एसेंशियल रूमी, कोलमैन बार्क्स द्वारा, न्यूयॉर्क, हार्पर कॉलिन्स, 2004 [1995]। पढ़ने से पहले मैंने यू-ट्यूब पर रूमी की एक ग़ज़ल सुनी और एक पंक्ति ने मुझे प्रभावित किया: उसने मिट्टी का बर्तन खरीदा जो उसने बनाया था; इसे तोड़ कर चले गए’. इसी विचार से प्रभावित होकर मैंने यह कविता लिखी।

1525 குரல் கொடு

எங்கிருந்தாலும்

ஒருகுரல் கொடுப்பாய்

இலாது போனால்

அதையேனும் சொல்வாய்

எவ்வித தொடர்பும்

இல்லாது போனால்

என்நிலை என்னாகும்

அதையேனும் காண்பாய்

ஈன்று தந்தபின்

கடன் முடியாது

என்பதை எண்ணி

என்னையும் வளர்த்தாய்

இறுதி வரையிலும்

மனதிலே சுமந்து

எனக்கென நீயும்

என்னுடன் வாழ்ந்தாய்

உயிருடன் உடலும்

போன பின்னாலும்

தொடரும் உறவை

நீயேன் மறந்தாய்

மறைந்தவர் தெய்வமாய்

மாறிடுவார் என்று

முன்னோர் பலரும்

சொன்னது பொய்யா

அவருடன் நீயும்

இணைந்த பின்னாலே

என்னை மறந்தாய்

என்பதே மெய்யா

தெய்வமாய் மட்டும்

மாறி விடாதே

அவன்போல் தொலைவில்

இருந்து விடாதே

எவ்வித மேனும்

தொடர்புநீ கொள்ளு

இருக்கிறேன் என்ற

சேதியை சொல்லு

அல்லது தெய்வமாய்

மாறி இருந்தால்

அவனுடன் சேர்ந்து

ஒளிந்து கொள்ளு

நேரிலே தெய்வத்தை

பார்த்தது இல்லை

பார்த்திடத் தேவை

எனக்கும் இல்லை

ஆனால் அவன்போல்

நீயேன் ஒளிந்தாய்

அதைத்தான் ஏற்க

முடியவே இல்லை

ஆகவே மீண்டும்

ஒருகுரல் கொடுப்பாய்

அருமை மகனே

என்று அழைப்பாய்

Gurukulam, 20-11-23, 11.00 pm.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *