BT Songs 1576 to 1600

BT Song 1576 இதை படிக்காதே

உனது ஆட்சி எல்லையிலே

எதுவும் வீணாய்ப் போவதில்லை

அனுபவம் சொல்லிடும் பாடமது

அதுபோல் ஆசான் வேறில்லை

இறைவன் இருப்பது எங்கென்ற

கேள்விக்கு கவிஞன் விடைதந்து

“அனுபவம் அதனுள் இருக்கின்றான்

அங்கே அறிந்து கொள்ளென்றான்”.

தத்துவம் பேசிப் பயனில்லை

தர்க்கம் செய்தும் கிடைப்பதில்லை

உள்ளம் தன்னை தந்த போது

உவப்பாய் அங்கே வந்திடுவான்

நாமாய்த் தேடிப் போனாலும்

நாளும் தவம் பல செய்தாலும்

நேமம்,  நிட்டை பூஜை எல்லாம்

தட்டிக் கழித்து சென்றிடுவான்

தானே நம்மைத் தேடிவந்து

அன்பால் நம்மை ஆட்கொண்டு

பக்தி மூலம் முக்தி தந்தும்

பலமுறை அங்கும் காட்சி  தரான்

எத்தனை பிறவி எடுத்தாலும்

இதற்கோ விடையும் கிடைப்பதில்லை

எந்தப் புறவியில் கிடைக்குமென

எவரும் வாக்கு தருவதில்லை

மனிதப் பிறவி கிடைத்தபின்னும்

அதனை வீணாய்த் தவறவிட்டு

அடுத்த பிறவியில் பார்த்துகொள்ள

நினைத்தால் அதிலே பயனில்லை

இந்தக் கேள்வி பதிலெல்லாம்

நமக்கு ஒன்றும் புதிதில்லை

இதுவும் ஒருவித தத்துவம் தான்

இதனால் எவ்வித பயனுமில்லை

ஆகவே பலரும் கிறுக்கி வைத்த

இதுபோல் எதையும் படிக்காமல்

அடுத்த வேலையை பாருங்கள்

அதிலே கடவுளை காணுங்கள்

டேராடூன், 19-2-2024, காலை 5.00

1576 Don’t read this

In your Kingdom

Nothing remains meaningless

As experience teaches a lot

There’s no guru other than that

 To the question  “Where’s God “

The poet [kannadasan] said:

He dwells in experience

You REALIZE HIM THERE “

There’s no use in talking philosophy

By arguments we can’t reach HIM

When we give our heart

He will dwells there joyfully

Even if we seek on our own

Though we do many tapasya

Even avoiding all kinds of rituals

He will simply evades us

He himself seeking us in his own

Even overloading us with much love

Bestowing Mukti through bhakti

Still he won’t give his Darshan there also

How many birthdays we might take

We will never get answer for this

No one can assure in which birth

One will attain it

After getting the human birth

By our mistake missing it

If we think to work out in next birth

There is no use in it

All these Q and A is

Not even new to us

This also is a philosophy

There’s no use in this

Therefore not reading

Many scribbles like these

Better you look after your next work

There you will find God 🤣😇

Dheradun,  19-2-2024, 5.00 am

BT Song 1577 தாமதிக்கப்பட்ட நீதி

உனது பொறுப்பாய் நானான பின்னே

எதற்கும் பொறுப்பு நீதான் சொன்னேன்

இதற்கும் வாதம் செய்திட வேண்டாம்

அதற்கும் காரணம் இருப்பதை அறிவேன்

என்னை குறைசொல்லி பயனே இல்லை

என்மேல் தவறு ஏதும் இல்லை

படைத்த நீயே எல்லாம் அறிவாய்

படைப்பைக் கேட்டா நீயும் புரிவாய்

முழுமுதற் காரணம் நீயே என்றார்

முதலும் முடிவும் நீயே என்றாய்

காரண காரியம் உனதாய் இருக்க

பொறுப்பை நானும் எப்படி ஏற்க

உன்னிடம் ஆயிரம் பதிலும் உண்டு

வாதிக்கும் திறமை உனக்கும் உண்டு

அதற்கு அவசியம் எனக்கு இல்லை

இதைநீ மறுக்க வாய்ப்பே இல்லை

இந்த சண்டை பலமுறை போட்டோம்

எனக்கு முன்னே பலரும் போட்டார்

இறுதி வாதம் முடிவு பெறாமல்

இதற்கு தீர்ப்பு வருவதும் இல்லை

வேண்டும் என்றே தாமதம் செய்து

வழக்கை வீணாய் இழுத்து அடித்து

தப்பிக்க எத்தனை நீ முயன்றாலும்

இறுதி நாளில் தீர்ப்பு வந்திடும்

என்னோடிந்த வழக்கை முடித்து

இறதித் தீர்ப்பை எனக்கும் தந்து

உனது நீதியை நீயும் நிறுத்து

அல்லது வாதித்து வென்று காட்டு

தாமதம் செய்யும் நீதியும் கூட

நீதியை தாமதம் செய்வது ஆகும்

சட்டம் தனது கடமையை செய்யும்

என்பது மானுடர் வாதம் ஆகும்

அதையே நீயும் கூற முடியுமா

இதற்கு பதிலும் உன்னிடம் உண்டா

ஆகவே பொறுப்பை நீயும் ஏற்று

தீர்ப்பைத் தந்து

நீதியை நாட்டு

டேராடூன், 19-2-2924, காலை 10.00

BT 1578 எதுவரை ஜெபிக்க

எத்தனை ஜெபிக்க

தெரியவில்லை

எப்படி ஜெபிக்க

புரியவில்லை

ஆயினும் வந்தேன்

உன்னிடம் நானும்

மனதின் பாரம்

இறக்கி வைக்க

தவறி செய்தால்

தவறு என்றும்

தெரிந்து செய்தால்

தப்பு என்றும்

அறிந்து புரிந்த

ஆன்றோர் கூற

இரண்டும் செய்தால்

என்ன செய்ய

பழைய பாரம்

போக வென்று

ஜெபிக்க நானும்

வந்து நிற்க

புதிய பாரம்

ஏற்றி வைத்தால்

சுமக்கத் தெம்பு

எனக்கு இல்லை

ஜெபித்து எந்த

பயனும் இல்லை

என்று எண்ணி

விடவும் இல்லை

அந்த தொடர்பும்

அற்று போகும்

நிலைக்கு நான்

வரவும் இல்லை

எனது வலிமை

வரம்பு அறிந்து

முறிந்து போக

விடவும் மாட்டாய்

எனது பொறுமை

எல்லை அறிய

இன்னும் கூட

ஏற்றி வைப்பாய்

முறியும் போது

தோள் கொடுத்து

நிமிர்ந்து மீண்டும்

நடக்க வைப்பாய்

ஆகவேதான்

மீண்டும் வந்து

இதையும் சொல்லி

புலம்பி வைத்தேன்

உளறினாலும்

புலம்பினாலும்

எல்லாம் எனது

ஜெபமாய் ஏற்று

வழக்கம் போல

வந்து உதவு

என்று நானும்

இறஞ்ஞி நின்றேன்

டேராடூன், 19-2-2024, மாலை, 5.15

BT Song 1579 உரிமையா-கடமையா

தருவதும் மறுப்பதும்

உனக்குள்ள உரிமை

வருவதும் கேட்பதும்

எமக்குள்ள உரிமை

உனது உரிமையை

நானும் மதிக்க

எனது உரிமையை

நீயும் ஏற்கணும்

அதைத்தான் செய்கிறேன்

என்றால் போதாது

எப்படிச் செய்கிறாய்

என்பதைக் காட்டணும்

வருவது கேட்பது

தெரியும் போது

தருவது மறுப்பது

எங்கே புரியுது

ஆகவே உரிமை

மட்டும் உயர்த்தி

உனது வாதத்தை

என்முன் வைக்காதே

எனக்கான உரிமையை

நீதந்த போது

உனக்கான உரிமையை

தந்தது யாரு

உன்னிலும் மேலான

ஒன்றும் உனக்கில்லை

ஆகவே உரிமை

என்பதும் உனக்கில்லை

நீயே உனக்கு

தந்திட முடியாது

அதனை நானும்

எப்படி ஏற்பது

உனக்கான ஒன்றை

உனக்கே தருவது

புதுவித நியாயம்

என்பதை எண்ணு

ஏதேனும் உரிமை

உனக்கு இருந்தாலும்

பக்தராய்ப் பார்த்து

தந்தது வேறில்லை

கடமையை உரிமை

என்று சொல்லி

உனது கையிலே

நாங்களே தந்தோம்

எமது கடமையை

நாங்களும் செய்தபின்

அந்த உரிமையால்

உன்னிடம் கேட்டோம்

எமது கடமை

செயலிலே இருக்க

உனது கடமை

எவ்விதம் இருக்கு

“துணையாக வருவேன்

தோள்தந்து காப்பேன்

கூடவே வருவேன்

கரையும் சேர்ப்பேன்”

போன்ற வார்த்தைகள்

காதில் விழுந்தாலும்

செயலிலே இதுவரை

ஒன்றையும் காணோம்

நாத்திகன் ஆத்திகன்

இருவரின் வாழ்வும்

பலவிதங்களில்

ஒன்றாக உள்ளது

பலவழி எம்மிலும்

அவரது வாழ்வு

சற்று உயர்வாக

உண்மையில் உள்ளது

காலா காலமாய்

மானுடர் கூறும்

தத்துவம் என்று

தட்டிக் கடழிக்காதே

பிறரோடு நாங்களும்

ஒப்பிட வேண்டாம்

எமக்குள் உரிமை

கிடைத்தாலே போதும்

இந்த கடமையை

நீயும் மறந்ததால்

நீதந்த உரிமையால்

உன்னை கேட்கிறேன்

எவ்வித பதிலும்

வார்த்தையில் வேண்டாம்

செயலிலே காட்டு

ஏற்றுக் கொள்கிறேன்

டேராடூன், 21-2-2024, காலை, 5.00

BT Song 1579 Show in action

It is your prerogative

whether to give or not

Coming and asking

is our right

When I respect

Your RIGHT

You also should

accept my Right

It is not enough to say

‘this is what I am doing”

But you should demonstrate

How you are doing it

When you can clearly see

My coming and asking [in action]

Where is the evidence

for your action of listening and giving

Therefore don’t present

any argument before me

Only HIGHLIGHTING

your RIGHT alone

When you gave me

my RIGHT to ask

Tell me who gave you

Your RIGHT to give or deny

There is none

Greater than YOU

Therefore you even

don’t have any RIGHT [given by others]

You can’t bestow

Something to yourself

And if you do it

How it’s acceptable to me

Giving your own

To yourself

Looks entirely

New phenomenon

If at all you have any right

That also was given

by your bhaktas

and nothing else

Changing [your] DUTY

as your RIGHT

it was given by the bhaktas

Nothing else

We gave that DUTY

Only changing the name

as Right

on your hands

When we have

done our duty

with that right

we are asking this to you

When we have done

our duty by action

Where is your

duty in action, tell that

“I will give company

I will give my shoulder

I will walk with you

I will take you to Further shore”

Though all such words

Fell in our ears

We haven’t seen

anything in action

Both the life of

Atheist’s and theist

remains the same

in many ways

In several ways

indeed their life

is much better

than our lives

Don’t reject this

by saying that

this is nothing but

old ‘human’ rhetoric/philosophy

We don’t need to

compare our lives with others

it is enough you if

give our right back

As You forgot this

your DUTY, I ask this

by the RIGHT

that you alone gave

I don’t want

any answer by WORDS

Show that by your action

then I will accept it

Dayanand Bharati

Dehradun, 21-2-2024, 5.00 am

BT 1580 தன் போல் கிடைக்கும்

உனக்காக நானும்

வாழும் போது

எனக்காக எப்படி

வாழ சொல்லு

என்னுள் இருந்து

நீவாழும் போது

உனக்காக எப்படி

வாழ்வது கூறு

இதுவும் புதிரே

யாரே விடுப்பார்

எப்படி விடுப்பது

எவரே அறிவார்

எனக்கும் உனக்கும்

புரியா போது

எவர்தான் இதனை

எப்படி புரிவார்

ஏதோ எண்ணம்

என்னுள் வந்திட

அதையே நானும்

எழுதி வைத்தேன்

விடையை இதற்கு

தேட அவசியம்

இன்றி நானும்

உன்னில் வாழ்ந்தேன்

அலசி ஆய்ந்து

பார்க்க வேண்டாம்

ஆய்வுகள் எதுவும்

செய்ய வேண்டாம்

அனுதின வாழ்வை

உன்னுடன் வாழ

அதிலே பதிலும்

தன்போல் வந்திடும்

இந்த பேறு

உனக்கும் கிடைக்கும்

என்போல் நீயும்

வாழப் புரியும்

எதைச் செய்தாலும்

அவனுக்குச் செய்ய

இந்த வாழ்வு

தன்போல் கிடைக்கும்

டேராடூன், 24-2-2024, 8.00

BT Song 1581 நம்பிக்”கை”

ஊன்றக் கூட

கோலும் இன்றி

முடங்கிக் கிடக்கும்

கிழவன் போல

நிமிர்ந்து நின்று

துணிந்து நடக்க

பக்தி இன்றி

நானும் வாழ

தூக்கி நிறுத்தி

கோலும் தந்து

மீண்டும் நடக்க

பழக்கி என்னை

மீண்டும் நானும்

வீழ்ந்திடாமல்

கண்ணை என்மேல்

வைத்து நீயும்

நானே நடக்க

என்னை விட்டு

மீண்டும் நீயும்

ஒதுங்கிக் கொள்ள

அடியின் மேலே

அடி எடுத்து

அஞ்சி அஞ்சி

நானும் நடக்க

எங்கு நீயும்

உள்ளாய் என்று

சுற்றும் முற்றும்

நானும் பார்க்க

காட்சி ஏதும்

கண்டிடாமல்

மனதும் கூட

உணர்ந்திடாமல்

முடங்கி மீண்டும்

கிடந்திடாமல்

பக்தி என்னும்

கோலை ஊன்றி

நம்பிக்”கை”யின்

கையைப் பற்றி

நடக்கிறேன் நான்

மீண்டும் வாழ்வில்

டேராடூன், 26-2-2024, மாலை, 7.15

“Concepts create IDOLS, only wonder grasps anything “.–Gregory of Nyssa.

BT Song 1582 அவசியம் ஏது

எதற்காக நீயும்

என்னுடன் பேசணும்

எதற்காக நீயும்

காட்சியும் தரணும்

இருக்கிறேன் என்று

எனக்கு உணர்த்த

இன்னும் எத்தனை

எனக்குச் செய்யணும்

பேசாமல் பேச

பலமுறை கேட்டேன்

காணா தரிசனம்

அனுதினம் பார்த்தேன்

உணராமல் உன்னை

உணர்கிற போது

அரு-உரு இரண்டுக்கும்

அவசியம் ஏது

இவையேதும் எனக்குத்

தேவை இல்லை

பிறருக்குச் சொல்லி

பயனும் இல்லை

எவ்வித நலனும்

இல்லாத இவற்றை

உன்னிடம் நானும்

எதிர்பார்க்க வில்லை

கண்முன் தெரியும்

காட்சிகள் கடந்து

கருத்து தோன்றும்

நினைவும் கடந்து

மவுனம் என்ற

நிலையும் தாண்டி

இருக்கும் உன்னை

அறியாமல் அறிந்தேன்

அதையே நானும்

சொல்லாமல் சொல்லி

புரிந்தும் புரியாத

மொழியில் கூறி

விளங்காமல் விளக்க

முயலும் போது

அறிந்தும் அறியாமல்

இருப்பவர் அறிவார்

டேராடூன், 26-2-2025, இரவு, 11.50

BT 1583 ஆயத்தமாகு

ஏதுமே இல்லை

எனக்குக் கூற

ஏனென்றால் எல்லாம்

நீயும் அறிந்ததால்

ஆயிரம் உண்டு

நானுமே கூற

அதற்கான காரணம்

நீயும் அறிந்ததால்

கூற-மறுக்க

எனக்குண்டு உரிமை

கேட்க-மறுக்க

உனக்கில்லை உரிமை

இமையாத கண்ணும்

மூடாத செவியும்

இருக்கும் போது

நீயென்ன செய்வாய்

புகழினும் புலம்பினும்

வையினும் வாழ்த்தினும்

தப்பித்து எங்கு

நீயும் செல்வாய்

பிணங்கினால் சென்று

மூலையில் பதுங்கி

தேடட்டும் என்று

வேடிக்கை பார்ப்பேன்

தெரிந்தும் தெரியாது

போலவே நீயும்

தேடியே நாடி

என்னிடம் வந்து

கரம்நீட்டி என்னை

நீயும் அழைக்க

சுவர்பக்கம் நானும்

திரும்பிக் கொள்வேன்

“வரும் போது  வா”

என்று சொல்லி

நீயும் திரும்ப

முயலும் போது

சட்டென வந்து

காலைச் சுற்றி

தூக்கு என்று

அடமும் பிடிப்பேன்

அத்துடன் நிற்காமல்

முகத்தில் அடித்து

தோளில் விழுந்து

நானும் அழுவேன்

அனுதினம் ஒருமுறை

இந்த நாடகம்

நடத்ததாமல் நாமும்

இருந்தது இல்லை

அதிலுள்ள நெருக்கம்

எதிலும் காணாமல்

இந்த விளையாட்டை

விடுவதும் இல்லை

இதுபோல் நாடகம்

ஆயிரம் இருக்க

கூற எனக்கு

நேரம் இல்லை

அதற்காக உன்னை

விட்டிட முடியாது

ஆயிரம் காரணம்

அதற்கும் உண்டு

எனக்குள்ள உரிமை

உனக்கான கடமை

இரண்டை மட்டும்

நீயும் எண்ணி

சமத்தாய் நானும்

சொல்வதைக் கேளு

அல்லது அடிவாங்க

ஆயத்தம் ஆகு

டேராடூன், 27-2-2024, காலை, 5.30

BT Song 1584 யோசி

வேதம் படிச்சு நாளாச்சு

வேண்டுதல் முற்றிலும் மறந்தாச்சு

ஆனால் புலம்பல் நிற்கவில்லை

அதற்கு என்றும் முடிவில்லை

செய்யும் முன்னே கேட்காமல்

செய்த பின்பு குறைசொல்லி

“எப்படி நீயும் கைவிடலாம்”

என்று கூறி பயனில்லை

கடவுளை சற்றும் நாடாமல்

மனிதர் பேச்சை கேட்காமல்

புத்தியும் நம்மிடம் கூறியதை

எத்தனை முறை ஒதுக்கிவிட்டோம்

மனம் போன போக்கினிலே

நமக்கு சரியென பட்டதையே

செய்து விட்டு மாட்டிக்கொண்டு

தெய்வத்தை கூறி பயனென்ன

செய்யும் போது தடுக்கவில்லை

திருந்தும் போது கேட்கவில்லை

என்ன மாதிரி தெய்வமென

எத்தன முறை குறை சொன்னோம்

நமது பேச்சை கேட்டுக் கொண்டு

நாளும் அதையே செய்து கொண்டு

இருக்கும் தெய்வம் எங்கிருக்கு

என்றுத் தேடி திரிகின்றோம்

எதனைக் கொண்டு செய்தாலும்

எத்தனைக் கோயில் கட்டினாலும்

விருப்பம் போல  ஆடும் தெய்வம்

இதுவரை நம்மிடை இருந்ததில்லை

வேதம் ஏதும் படிக்க வேண்டாம்

வேண்டுதல் கூட செய்ய வேண்டாம்

புலம்பும் புலம்பலை நிறுத்தி விட்டு

யோசித்தாலே விடை கிடைக்கும்

ஹைதராபாத், 1-3-2024, காலை, 10.30

1585 எளிதில் அடைந்தேன்

உன்னை அறிவது

அத்தனை எளிதா

உன்னை அடைவது

அத்தனை எளிதா

தன்னை உணரா

தவிக்கும் மனது

உன்னைப் புரிய

வழியும் உளதா

நானேத் தேடி

அலையும் போதும்

நாளும் மறைகள்

படிக்கும் போதும்

நீயே என்னைத்

தேடி வராமல்

நானே புரிந்தது

எத்தனை சொல்லு

புரிந்தது என்றும்

மனதும் சொல்ல

புத்தி மறுத்து

வாதம் செய்ய

மனதுக்கு புரிவது

புத்தியேன் புரியல

புத்தியின் கேள்விக்கு

விடையேன் இல்ல

இரண்டையும் மீறி

உன்னை அறிய

ஆன்மா இன்னும்

பக்குவப் படல

ஆனால் ஒன்று

புரியுது எனக்கு

அதுஉன் உறவு

தெரியும் எனக்கு

புரிந்த உறவுடன்

வாழ்ந்து கொண்டு

வாழவாழ புரிந்துகொண்டு

அதுபோல் உன்னுடன்

வாழ்வதினாலே

உறவாய் உன்னை

புரிந்து கொண்டேன்

இந்த புரிதல்

வந்த பின்னாலே

மேலும் அறியத்

தேவை என்ன

ஆகவே புத்தி

மனதுடன் ஆன்மா

தமது முயற்சியை

தொடர்ந்து செய்ய

நான்மட்டும் உனது

உறவில் வாழ்ந்து

உன்னை அறிந்து

எளிதில் அடைந்தேன்

குருகுலம், 19-3-2024, இரவு, 11.30 pm

BT Song 1586  தேடாமல் இருப்பது என்ன

என்னென்ன சொல்லி

ஏய்க்கிறேன் உன்னை

எத்தனை எத்தனை

மறைக்கிறேன் உண்மை

ஆயினும் ஒன்றும்

அறியாதவன் போல

நடிக்கிறாய் நீ பார்

அது உன் மேன்மை

கண்டும் காணாமல்

இருக்கிறாய் என்று

நன்கு எனக்கு

தெரிகிற போதும்

காட்டாமல் இருக்க

என்னென்ன செய்கிறேன்

என்பதே இப்போது

எனது நிலைமை

இந்த விளையாட்டை

இருவரும் சேர்ந்தாட

இறுதியில் இருவரும்

வென்றிடும் போது

கண்ணுக்கு மறைவாக

இருப்பது போல

வீணாக எதற்கு

நடிக்கிறாய் நீயும்

மறைந்து நின்றாலும்

நான்காண வேண்டி

சற்று கனைத்து

காட்டுவாய் உன்னை

எங்கு மறைந்து

நான் நின்றபோதும்

தெரிந்தும் வீணாக

தேடுவாய் என்னை

நிறந்தரமாக நாம்

ஒளிந்து கொள்ள

இருவரும் மனதில்

எண்ணாத போது

எதற்காக இந்த

விளையாட்டை நாமும்

அடிக்கடி விளையாடி

பார்த்திட வேண்டும்

ஆயினும் நானும்

அடிக்கடி நீயும்

காணாதவாறு

ஒளிந்து கொள்ள

கண்டும் காணாது

இருப்பது போல

என்னைத் தேடாமல்

இருப்பதும் என்ன

மறந்தால் தேடி

தேடினால் மறைந்து

இந்த ஆட்டம்

எதுவரை ஆட

தேடினால் கிடைத்து

கிடைத்தால் மறைந்து

செய்யும் லீலைக்கு

பெயரும் என்ன

இதுபோல் பலவும்

சொல்லிய போதும்

உன்னை ஏய்க்க

இயலாமல் நானும்

உனக்கு முன்பாக

மறைவாக நிற்க

இன்னும் தேடாமல்

இருப்பது என்ன

குருகுலம், 21-3-24, மாலை 3.00

BT Song 1585  தேடாமல் இருப்பது என்ன

என்னென்ன சொல்லி

ஏய்க்கிறேன் உன்னை

எத்தனை எத்தனை

மறைக்கிறேன் உண்மை

ஆயினும் ஒன்றும்

அறியாதவன் போல

நடிக்கிறாய் நீ பார்

அது உன் மேன்மை

கண்டும் காணாமல்

இருக்கிறாய் என்று

நன்கு எனக்கு

தெரிகிற போதும்

காட்டாமல் இருக்க

என்னென்ன செய்கிறேன்

என்பதே இப்போது

எனது நிலைமை

இந்த விளையாட்டை

இருவரும் சேர்ந்தாட

இறுதியில் இருவரும்

வென்றிடும் போது

கண்ணுக்கு மறைவாக

இருப்பது போல

வீணாக எதற்கு

நடிக்கிறாய் நீயும்

மறைந்து நின்றாலும்

நான்காண வேண்டி

சற்று கனைத்து

காட்டுவாய் உன்னை

எங்கு மறைந்து

நான் நின்றபோதும்

தெரிந்தும் வீணாக

தேடுவாய் என்னை

நிறந்தரமாக நாம்

ஒளிந்து கொள்ள

இருவரும் மனதில்

எண்ணாத போது

எதற்காக இந்த

விளையாட்டை நாமும்

அடிக்கடி விளையாடி

பார்த்திட வேண்டும்

ஆயினும் நானும்

அடிக்கடி நீயும்

காணாதவாறு

ஒளிந்து கொள்ள

கண்டும் காணாது

இருப்பது போல

என்னைத் தேடாமல்

இருப்பதும் என்ன

மறந்தால் தேடி

தேடினால் மறைந்து

இந்த ஆட்டம்

எதுவரை ஆட

தேடினால் கிடைத்து

கிடைத்தால் மறைந்து

செய்யும் லீலைக்கு

பெயரும் என்ன

இதுபோல் பலவும்

சொல்லிய போதும்

உன்னை ஏய்க்க

இயலாமல் நானும்

உனக்கு முன்பாக

மறைவாக நிற்க

இன்னும் தேடாமல்

இருப்பது என்ன

குருகுலம், 21-3-24, மாலை 3.00

1586 தியாகத்தின் மேன்மை

யாகமோ தியாகமோ

ஏதுவான போதும்

மேனியால் செய்தாய்

அதுதான் உண்மை

ஆயிரம் தத்துவம்

அனைவரும் பேசலாம்

அறிவால் அதனை

தர்க்கித்து கூறலாம்

ஆயினும் அதற்கு

விலையும் தந்திட

தன்னைத் தருபவர்

அறிதிலும் அறிது

அரிதாக ஒருசிலர்

தருகிற போதும்

அதற்கான காரணம்

உன்போல் இருக்காது

நல்லோர் வாழ

ஒருசிலர் மரிப்பார்

நாலுபேர் வாழ

தன்னைத் தருவார்

தீயோரை அழிக்க

ஒருசிலர் வருவார்

தன்னைத் தந்து

அவரை முடிப்பார்

பாவியை மீட்க

அதன்பின் காக்க

எவரே வந்து

தன்னைத் தருவார்

அங்குதான் உனது

தியாகத்தின் மேன்மை

முற்றிலும் மாறாக

இருப்பது உண்மை

இதுவெறும் தத்துவம்

என்போர் எண்ணட்டும்

எப்படி ஏற்பது

என்று சொல்லட்டும்

ஆயினும் அதைத்தன்

ஆவியில் உணர்ந்தோர்

அனுதினம் உன்

தியாகத்தை நினைக்கட்டும்

குருகுலம், 29-3-204, காலை 11.00

1587உறவால் புரிந்தேன்

புரியாமல் நானும்

இருந்த போது

புரிய வைக்க

என்னிடம் வந்தும்

உன்னைப் புரிய

நானும் மறுக்க

மேலும் என்மேல்

இரக்கம் வைத்து

புரிவ தென்றால்

என்ன வென்று

முதலில் என்னைப்

புரிய வைத்து

தெளிவு சற்று

வந்த பின்னே

தெரியக் காட்டி

புரிய வைத்தாய்

தெரியத் தெரிய

புரிய வைத்து

மெல்ல மெல்ல

சொல்லித் தந்து

அறிவு புரிய

மனது உணர

ஆன்மா தன்னில்

காட்சி தந்தாய்

அந்தக் காட்சி

விரிய விரிய

உன்னைக் கண்டேன்

உனது படைப்பில்

இயற்கை எங்கும்

விரிந்து கிடக்கும்

உனது ஆட்சி

அதிலே கண்டேன்

அதில் உள்ள

உயிர்கள் யாவும்

உனது மாட்சி

கூறக் கேட்டேன்

அவற்றை ஆள

படைத்த மனிதன்

தன்னை நானும்

பார்த்த பின்னே

தெரிந்த புரிந்த

அனைத்தும் மறைய

எமது நிலையின்

உண்மை உணர்ந்தேன்

ஆகவே தான்

எம்மை நாடி

எம்மைத் தேடி

நீயும் வந்து

மனிதாக

மாறிவந்து

எம்மை மீட்டு

காத்துக் கொண்டாய்

மறந்த உன்னை

மீண்டும் நினைக்க

மறையைத் தந்து

புரிய வைத்தாய்

ஆயினும் அதையும்

அறிவால் நானும்

புரியாமல் மீண்டும்

உன்னிடம் வந்தேன்

இரக்கம் கொண்டு

உறவாக நின்று

உன்னை எனக்கு

புரிய வைத்தாய்

அந்தப் புரிதல்

வந்த பின்னே

உறவில் வாழ்ந்து

உன்னைப் புரிந்தேன்

குருகுலம், 30-3-2024, இரவு, 11.15

1588 வேண்டத் தெரியல

இயலாமல் தானே

வருகிறேன் நானும்

எதையேனும் உன்னிடம்

சொல்ல வேண்டும்

வேண்டத் தெரியா

பேதை நானும்

வேறென்ன செய்ய

இதனிலும் மேலும்

உணர்வும் புரியாது

உணர்ச்சி விளங்காது

உடலில் எவ்வித

மாற்றமும் இல்லாது

கிணற்றில் போட்ட

கல்லைப் போல

மவுனமாய் நின்றேன்

உன்முன் நானே

சொல்ல வருகிறேன்

சொல்ல முடியல

சொற்களைத் தேடியும்

எவையும் காணல

ஆகவே ஏதோ

பித்தனைப் போல

பிதற்றுறேன் நானும்

உன்செவி ஏற

கண்ணோடு காது

வாயோடு மூக்கு

இவற்றுடன் சேர்ந்த

ஐம்புலன் இல்லா

நீயும் எப்படி

கேட்கிறாய் என்று

நிச்சயமாய் எனக்கு

புரியவும் இல்ல

ஆயினும் ஏனோ

சொல்லத் தோணுது

அதற்குக் காரணம்

நிச்சயம் தெரியாது

இதுதான் எனது

இன்றைய நிலைமை

நீயும் அறிவாய்

இந்த உண்மை

இந்த புரிதல்

இருக்கும் வரையில்

இதையே செய்வேன்

மேலும் மேலும்

அதனால் வந்திடும்

அமைதி தந்திடும்

பெலனும் போதும்

வேறென்ன வேண்டும்

குருகுலம், 3-4-2024, மதியம் 2.45

1589 நீயென்ன விருந்தா

அழைத்தால் வந்திட

நீயென்ன விருந்தா

அழியா வந்திடும்

நீயென் உறவா

இதை முதலில்

முடிவு செய்து

அதன்பின் பேசலாம்

மேற்கொண்டு ஏதும்

மூன்றாம் மனிதர்

போல நீயும்

தூரம் விலகி

நிற்பது சரியா

உறவாய் மாறி

வாழும் போது

புரிந்தும் விலகி

நிற்பது முறையா

இதையும் நான்

உனக்கேன் சொல்லணும்

உனக்கும் பொறுப்பில்

பங்கு இல்லையா

அடிக்கடி உறவில்

சிறுசிறு விரிசல்

வருவது என்பது

நிச்சயம் உண்மை

அதற்காய் நாளும்

ஏதோ சொல்லி

இப்படி நீயேன்

சண்டை போடணும்

ஊடல் செய்து

பிறகு கூட

இதுஎன்ன நம்

உறவு புதிதா

பதில் பேசாமல்

இருந்தால் மட்டும்

நீயும் செய்வது

முற்றும் சரியா

வேண்டா வாதம்

எத்தனை செய்கிறாய்

வீண் கேள்விகள்

எத்தனை கேட்கிறாய்

அதற்கெல்லாம் நான்

பதில்தர வேண்டும்

நீமட்டும் இப்படி

மவுனம் காக்கணும்

இதுபோல் நானும்

விட்டேத்தியாய்

ஒருமுறை இருந்தால்

அதன்பின் புரியும்

சரிவிடு இந்த

ஒருமுறை விடுறேன்

மீண்டும் செய்தால்

எண்குணம் காட்டுறேன்

குருகுலம், 3-4-2024,  மதியம் ௩.15

1590 இனி நடக்காது

இன்னும் என்ன

செய்வது என்று

உண்மையில் எனக்கு

ஒன்றும் தெரியல

குறை சொன்னேன்

கேட்க வில்லை

கோபப் பட்டேன்

பயன் இல்லை

ஆத்திரம் கொண்டேன்

அசர வில்லை

அலட்சியம் செய்தேன்

மாற வில்லை

இவற்றால் எவ்வித

பயனும் இல்லை

என்பதை மீண்டும்

உணர்ந்து கொண்டு

வழக்கம் போல

செய்வதை ஒருமுறை

மீண்டும் செய்யலாம்

என்று எண்ணி

குழைந்து குனிந்து

பணிந்து நின்று

கும்பிட்டு போட்டும்

மசிய வில்லை

உனக்கொரு துணை

இருந்திருந்தால்

அவரிடம் சொல்லி

முறையிடலாம்

என்றால் அதற்கும்

வழி இல்லை

எவரிடம் சொல்ல

புரிய வில்லை

உன்னுடன் வாழ்வது

கடினம் என்று

உனக்கும் எனக்கும்

பேச்சு வேண்டாம்

என்று ஒதுக்கி

போகலாம் என்றால்

அதற்கும் வழியை

நீ விடவில்லை

அதன்பின் புரிந்தது

எனக்கு ஒன்று

அததுதான் நமக்குள்ள

பந்தம் என்று

உரசல் விரிசல்

எது வந்தாலும்

ஊடல் கூடல்

தினம் நடந்தாலும்

ஒருவர் இன்றி

ஒருவர் வாழ

இன்றும் என்றும்

இனி நடக்காது

ஆகவே இருவரும்

விட்டுக் கொடுத்து

வாழ்வதே நமக்கு

என்றும் நல்லது

குருகுலம், 3-4-2024, இரவு, 7.15

1591 விரிசல் பாத்திரம்

தகுதி அற்றோர்க்கு

தருவது கிருபை

பெற்றிடத் தகுதி

அருள்வது கிருபை

ஆயினும் அதனை

பெற்றிடும் நானும்

விரிசல் நிறைந்த

பாத்திரம் ஆனதால்

அதிகம் கசிந்து

குறையக் குறைய

அனுதினம் புதிதாய்

நிறைப்பதும் கிருபை

எந்தத் தகுதி

என்னிடம் கண்டு

என்னைத் தேடி

நீயும் வந்தாய்

தகுதி அற்றவன்

என்ற தகுதியை

மட்டும் என்னிடம்

நீயும் கண்டாய்

ஞானிக்கு மறைத்து

பேதைக்கு அருளும்

மேன்மை அங்கு

உன்னிடம் கண்டேன்

தாழ்ந்தோர் உயர

உயர்ந்தோர் தாழ

செய்யும் உனது

லீலையைக் கண்டேன்

ஒன்றுக்கும் உதவா

பாத்திரம் என்று

என்னை நானே

நொந்து கொள்ள

அதிலும் உனது

அருளை ஊற்ற

ததும்பி வழிந்து

ஓடக் கண்டேன்

உனக்கு ஏற்ற

பாத்திரம் ஆகி

உனது அருளை

நிறைப் பெறுவேன்

அந்த கிருபை

அனுதினம் தாங்க

உன்னில் வாழ்ந்து

ஓட்டத்தை முடிப்பேன்

குருகுலம், 4-4-2024, இரவு, 11.30

1592 ஏன் நினைக்கணும்

எப்போதும் நம்மோடு

இருக்கிற அவனை

எதற்காக அடிக்கடி

நினைத்துப் பார்க்கணும்

தப்பாமல் நமக்கு

உதவிடும் அவனிடம்

எப்போதும் எதற்காக

எதையேனும் கேட்கணும்

உற்றார் உறவோடு

வாழ்கிற போது

அடிக்கடி அவரை

நினைத்தா பார்க்கிறோம்

ஒருவீட்டில் உறவோடு

வாழும் போது

எப்போதும் அவரோடு

பேசவா செய்கிறோம்

ஒருவரில் ஒருவர்

உறவால் இணைந்து

உடலால் பிரிந்தாலும்

மனதால் நினைந்து

ஒரு கூரைகீழ்

ஒன்றாக வாழ

பிரிவு இதிலே

வருவது எங்கே

ஆகவே இறைவனை

அடிக்கடி நினைக்கணும்

அதற்காக நேரம்

தனியே ஒதுக்கணும்

என்கிற வாதம்

எப்படிப் பொருந்தும்

எப்போதும் அவன்

நம்மமோடு இருக்க

பழகப் பழக

பாலும் புளிக்கும்

என்பது உறவுக்கு

சொன்ன ஒன்று

எல்லா உறவுக்கும்

பொருந்தும் போது

அவனுக்கு மட்டும்

விதிவிலக்கேது

ஆகவே உறவிலே

நடப்பது போல

இணைந்து பிரிந்து

ஊடிக் கூடி

அவனோடு வாழ்ந்தால்

அதுவே போதும்

அதுதான் மெய்யான

பக்தியும் ஆகும்

குருகுலம், 5-4-2024, மதியம் 2.30

1593 குழந்தையாக மாறணும்

நீயாகப் பார்த்து

தந்திடும் போது

நானாகத் தேடி

எங்கு போகணும்

நீயாகத் தேடி

வருகிற போது

நானாகத் தேடி

ஏன்னிப் போகணும்

என்னென்ன தேவை

எப்போது என்று

அறிந்த குழவி

ஒன்றேனும் உண்டோ

இதுதான் தேவை

என்பதைக் கூட

அறிகிற மனது

அதற்கும் உண்டோ

அதற்கொரு தாயும்

இருக்கும் போது

அந்த உணர்வு

எப்படி வந்திடும்

ஆயினும் பிள்ளை

வளர வளர

அந்த உணர்வு

பல்கிப் பெருகும்

ஆகவே நானும்

உன்னையே சாரும்

குழவியாய் மாறும்

வரமும் வேண்டும்

அதன்பின் மற்ற

தேவைகள் நாடும்

மனதும் என்னுள்

மறைந்து போக

பார்த்து காத்து

நீயே வளர்த்த

உனது குழவியாய்

நானும் மாறி

அன்னை அணைப்பில்

வளரும் பிள்ளையாய்

உனது நிழலில்

நானும் வாழ்ந்து

உனது மடியில்

தவழும் மகவாய்

இறுதி வரையில்

இருக்க வேண்டும்

குருகுலம், 10-4-2024, 11.15 இரவு

Though I am not against keeping separate ‘quiet’ time, I don’t believe that everyone should follow that sadhana.  As Abhirami Bhattar well said, ‘By Standing; walking, sitting and laying down, I always thinking about you’.  Then where is any separation to ‘remember’ God separately and allot separate time.  I read that in some monk orders [Benedictians] they will have break each hour to think about God.  Oh my God?  Are we do the same in our home.  Do we take a break each hour and to think or talk to our family members.  After the invasion of Gadgets, Internet and social media, now all are living as an island in the house.  This being the situation, who will follow this discipline of remembering our relationship with other family members, punctuating each hour to chat for few minutes.  This being the normal life pattern, for me take time to think or to have fellowship with God looks bit artificial sadhana, though many require that discipline till they grew to abide always in the presence of God.  For me I am abiding in His presence and that is all my sadhana, no, very life.

1594 அடையாளம்

யாரென்று தெரியாது

உன்னிடம் வந்தேன்

ஏனென்று புரியாது

உன்னிடம் பேசினேன்

இதுவரை யாரென்று

தெரியவும் இல்லை

அதுபற்றி உன்னிடம்

கேட்கவும் இல்லை

தேடிய குருவை

உன்னிடம் கண்டேன்

தெளிவான வழியை

நீயும் காட்டினாய்

எனக்கொரு அடையாளம்

உன்னிடம் கண்டபின்

உனது அடையாளம்

கேட்க மறந்தேன்

யாருக்கு எந்த

அடையாளம் தேவை

என்பதைக் கூட

யோசித்துப் பார்க்கல

எனக்கொரு அடையாளம்

உன்னிடம் கண்டபின்

உனது அடையாளம்

எதுவென கேட்கல

உனக்கொரு அடையாளம்

உலகம் தந்தது

அதற்கொரு பெயரும்

அதுவும் வைத்தது

அதுபற்றி உன்னிடம்

நான்கேட்ட போது

அமைத்தியாய் நகைக்க

அதன்பின் புரிந்தது

“எவருக்கு என்தெந்த

அடையாளம் தேவையோ

அதன்படி அவரவர்

என்னையும் அழைத்தார்

அதையும் நானும்

புறக்கவும் இல்லை

ஆயினும் அதையும்

ஏற்கவும் இல்லை”

உனக்கென்ன அடையாளம்

என்னிடம் வேண்டும்

என்பதை நீதான்

முடிவு செயாணும்

அடுத்தவர் தந்ததை

ஏற்கவும் வேண்டாம்

உனக்கான தேவையை

மறுக்கவும் வேண்டாம்”

என்றவன் சொன்னபின்

மவுனமாய் நின்றேன்

எனக்குநீ குருவென

பணிந்து கொண்டேன்

11-4-2024, 3.30 pm

Someone well said that God does not have Grandchildren.  All the bhaktas are Her children.  So God will take the very IDENTITY which each individual bhaktas wants to see in Her.  She could be anyone—Father, Mother, Brother, Sister, Friend, Master, Servant, Acharya, Guru etc. etc.  So when anyone asks which God do you worship, I said I don’t worship any God but only my Guru.  If you want to call Him as God neither I, nor He has any objection.  But I am happy that He always remains my Guru.  When one Christian asked me, ‘still are you worshipping the God of the Bible’, I said then, ‘according to you there are several Gods according to each Scriptures or traditions. Then even you don’t worship the God of your Bible.

There is no point of sharing further on this subject.  It is better remine a mystery to each and every bhakta.  Not even silence is the way to understand all about God.

1595 போதும்

விரும்பிய முக்தி

தன்தன் பின்

வேண்டாத உலகில்

வைப்பது என்ன

ஒருகையால் தந்து

மறுகையால் பறித்து

வேடிக்கை நீ

பார்ப்பது என்ன

இருமனம் கொண்டு

குந்தி குந்தி

நடக்கிறோம் என்று

எங்களைச் சொன்னால்

உனது செயலால்

அதை செய்து

எமக்கு முன்னோடி

நீயே ஆனாய்

மீட்க வென்று

படைத்த போதும்

மீட்ட பின்னே

எடுக்க மறுத்து

எது வரையில்

வைத்து வதைக்க

எதற்கு இந்த

உலகில் இருக்க

வந்த வேலை

முடிந்த பின்னே

கிளம்ப வேண்டும்

விருந்து கூட

வந்த இடத்தில்

தங்க நினைத்தால்

பாரம் ஆகும்

வாழ்வு கூட

இருந்த வரை

போதும் என்று

உடலும் மனதும்

சொல்லும் போது

அதைக் கேட்டு

செய்ய மறுத்து

அடம் பிடித்து

வைப்ப தென்ன

வேண்டா வெறுப்பாய்

வாழ்வு ஓட

உனது நெஞ்சும்

மறத்துப் போக

நொந்து வந்து

இதைச் சொல்ல

அன்றி என்னில்

வேறு இல்லை

12-4-24, 11.30

1596 இணைந்து கொண்டான்

இருக்கான் அவனும்

காத்துக் கொள்ள

ஏழை என்னை

பார்த்துக் கொள்ளா

தனித்து வாழும்

மனிதர் கெல்லாம்

துணையாய் இருக்கான்

சேர்த்துக் கொள்ள

தனித்து இருக்க

பிறக்க வில்லை

தனித்து நாமும்

வாழ வில்லை

தனிமை வாழ்வை

நாடும் போதும்

உதவி இன்றி

வாழ்வ தில்லை

தனித்து இருக்க

விரும்பா இறைவன்

மனிதர் தம்மை

படைத்து வைத்தான்

தனித்து வாழும்

மனிதர் நாடி

விருப்ப முடனே

காத்துக் கொண்டான்

ஆகவேதான்

நம்மை நாடி

அவனும் வந்து

சேர்ந்து கொண்டான்

நமது தேவை

அவனில் நிறைய

அவன் தேவை

நம்மில் முடிய

ஒருவர் இன்றி

ஒருவர் வாழ

இனி என்றும்

இயலா தென்று

முக்தி என்ற

நிலையைத் தந்து

அதிலும் நம்மில்

இணைந்து கொண்டு

இகம் பரம்

இரண்டிலேயும்

நாமும் அவனும்

சேர்ந்து இருக்க

எங்கும் இருப்பான்

பார்த்துக் கொள்ள

என்றும் என்னை

காத்துக் கொள்ள

குருகுலம், 14-4-2024, இரவு, 11.30

1597 நடிக்காதே

என்னிடமேவா நடிக்கின்றாய்

உனக்கேன் இந்த வீண்வேலை

இதுவரை எத்தனை பார்த்திருப்பேன்

இனியும் நடித்தால் உன்னை விடேன்

நடிப்பதில் நானொரு கிலாடி

நன்கு அறிவாய் அதை நீயும்

இதுவரை எப்போ தோத்திருக்கேன்

இதையே நீயும் புரிஞ்சிக்கணும்

காத்திருப்பேன் என்று தெரிந்திருந்தும்

காலம் தாழ்த்தி வந்து விட்டு

சாக்கு போக்கு சொல்லிக் கொண்டு

அத்துடன் நடித்து அசத்துகிறாய்

எபோதும் உனக்கிது வழக்கமாச்சு

உன்னிடம் எதற்கு இனி வீண் பேச்சு

வேண்டா காரணம் பல சொல்லி

வீணே கோபத்தை கிளறிடாதே

ஆயிரம் பேர்கள் அழைத்திருப்பார்

அதற்கு பொறுப்பு நானில்லை

உன்னை விட்டால் எனக்கு யாருண்டு

அதுவா உனக்கு தெரியவில்லை

போனது போகட்டும் பொறுத்து கொண்டேன்

பொழுதும் உனக்காய் காத்திருந்தேன்

ஆனால் பொறுமைக்கு அளவுண்டு

அதனை உணர்ந்தால் நலமுண்டு

பக்தி உள்ள சக்தியினை

இன்னுமா நீயும் அறியவில்லை

பக்தியின் வலையுள் சிக்குண்டால்

அதன்பின் புரிவாய் அதன் வலிமை

என்போல் பலரும் வாழ்ந்திருக்க

உன்னை அவருக்கும் பங்கிட்டேன்

ஆனால் இப்படி நீ செய்தால்

அதன்பின் முழுதும் எனதென்பேன்

ஆகவே நடிப்பதை நிறுத்திக் கொண்டு

தாமதம் செய்வதை தவிர்த்துக் கொண்டு

கூபிட்ட குரலுக்கு ஓடிவந்து

கூடவே இருந்து வாழ்ந்துவிடு

குருகுலம், 15-4-24, 2.25 pm.

1598

பசுமரத்தாணி போல்

பதிய வைத்தாய்

பாசத்தை நேசத்தை

புரிய வைத்தாய்

எனக்கவை உன்னிடம்

இருக்குதா என்று

என்மனம் என்னை

கேள்வி கேட்க….–பசு….

எல்லோரைக் காட்டிலும்

என்னிடம் அன்பாய்

இருக்கிறாயா என நீ

என்னிடம் கேட்கல

ஏனெனில் எனக்கு

உன்னை விட்டால்

வேராரும் இல்லை

என்பதால் நீயும்—பசு….

அறிந்தேனா இல்லையா

என்பதை அறியேன்

புரிந்தேனா இல்லையா

என்பதும் தெரியேன்

ஆயினும் உன்னிடம்

அடிக்கடி பேசுறேன்

அதனாலே நீயும்

என்னிடம் வந்து—பசு….

மறந்தேன் உன்னை

என நான் நினைக்க

ஆயினும் அதிலும்

உன்னையே நினைக்க

மறதியில் நினைக்க

நினைக்கவும் மறக்க

மனதை வைத்து

செய்வது நீயென—பசு….

உடன் நீ இருப்பதை

உணர்ந்தேன் சிலமுறை

உடன் நீ மறைந்ததை

உணர்ந்தேன் பலமுறை

உணர்வாய் இருந்து

உள்ளே கலந்து

அதன்பின் மறைவது

நீதான் என்று—பசு….

குருகுலம், ௧௫-௪-௨௦௨௪, இரவு, ௧௧.௦௦

1599 காரணம் என்ன

என்னவோ காரணம்

இருக்கு உன்னிடம்

எதுவெனத் தெரியாது

தவிக்கிறேன் நானும்

நீயாக அதை

கூறிடும் வரையில்

நானாகத் தெரிய

வழியில்லை எனக்கும்

நேராக வந்து

கூற மாட்டாய்

மறைகளில் எழுதி

காட்டவும் மாட்டாய்

செயலில் காட்டி

அதன்மூலம் என்னை

விளங்கிக் கொள்ள

என்னிடம் சொல்வாய்

எந்த செயலில்

அதைக் காண்பது

எதிரும் புதிருமாய்

அவையுள்ள போது

நன்மை தீமை

இரண்டும் உனது

என்ற முடிவுக்கு

வரத் தோணுது

நன்மையில் கூட

தீயதைக் கண்டேன்

தீமையில் நன்மை

விளைவதைப் பார்த்தேன்

இரண்டில் உன்செயல்

எதுவெனச் சொல்ல

இரண்டும் கலந்தே

வாழ்க்கை உள்ளது

ஆகவே செயலால்

விளங்கிட முயன்றால்

இறுதி வரையில்

விடை கிடைக்காது

ஆகவே ஒன்றை

மனதில் வைத்து

சூழ்நிலை தன்னை

அதற்காய் அமைத்து

இறுதியில் இதுதான்

காரணம் என்று

உறுதியாய் நீயே

கூறும் வரையில்

செய்யச் சொல்வதை

செய்வேன் நானும்

காரணம் எதுவாக

இருந்த போதும்

இந்த காரணம்

ஒன்று போதும்

வேறு காரணம்

எதற்கு வேண்டும்

குருகுலம், 15-4-2024, இரவு, 11.50

1600 இரண்டும் தேவை

வீண்மாயை என

எதையும் எண்ணாது

வேண்டா வேலை

என்று தள்ளாது

நீதரும் வாழ்வு

நல்லது என்று

நானும் வாழுறேன்

நலமுடன் இன்று

ஏற்றம் இறக்கம்

இனிப்பு கசப்பு

கலந்து இருக்கும்

உலக வாழ்வு

ஒன்றில்லாமல்

மற்றது இல்லை

இரண்டும் இல்லா

வாழ்வும் வெறுமை

இனிப்பை சுவைத்து

கசப்பை ஏற்று

வாழ வாழ

வாழ்வு புரியும்

ஒன்றை சுவைத்து

மற்றதை மறுக்க

வாழும் வாழ்வும்

வெறுத்துப் போகும்

நாவுக்கு நல்லது

வயித்துக்கு எதிரி

வயித்துக்கு நல்லது

வாய்க்கு எதிரி

நிரந்தரமான

நல்லது வேண்டின்

வந்து போகும்

எதிரியும் தேவை

இதை நன்கு

புரிந்த இறைவன்

இரண்டும் வைத்தான்

நல்லது செய்ய

அதை ஏற்று

இசைந்து கொடுத்து

வாழ்த்து பாரு

அதன்பின் புரியும்

குருகுலம், 16-4-2024, காலை,  6.30 am

This morning I sat with a cup of tea near the bay window stretching my leg.  That time the sun was about to raise. It was slowly coming up with bright orange colour.  That brought joy and smile to me.  Sipping my tea, enjoying the run rise and immersing in the silence around me I experienced the bliss.  But before I could finish tea, as the sun began to change its colour and hot rays started to hit my body, I got up immediately to move away.  Then I realized how two contrasts are part of life and nature.  Did God created only good and never evil?  According to Muktiveda God never created evil but only Good.  According to Hinduism both are part of God’s creation of part of Her Nature.  Anyhow if God didn’t create then He allowed it to enter His Good creation.  Then from where that evil came?  If he were a fallen angel, according to Christian mythology, before that God alone created even that Angel.  Well, further discussion on this topic is like pealing the onion to find out its seed.  Only tears will come—of course cleaning our eyes but we would never get onion seed.

But to have a smooth life we need both of them—good and bad.  Otherwise life won’t move.  Both nature and life demonstrates this very clearly.

$$$

இம்மைக்கும் மறுமைக்கும்

பயந்தென்ன செய்ய                                                      

இரண்டும் நம்

கைகவசம் இல்லை

Incomplete songs

உன்னோடு நான்பெசும்

காலமோ கொஞ்சம்

என்னோடு நீசெய்யும்

வாதமோ அதிகம்

இயல்பாக நீயும்

வாதிக்கும் போது

பேசிட என்னிடம்

வார்த்தையும் ஏது

எதிர்வாதம் செய்யாமல்

இருப்பதன் காரணம்

உனக்கும் நன்றாக

நிச்சயம் தெரியும்

வாதிக்கத் தெரியாமல்

வாய்மூட வில்லை

வார்த்தைக்கு என்னிடம்

பஞ்சமும் இல்லை

தெரியாமல் இருந்தால்

தெளிவாக இருக்கு

தெரிந்தால் வாழ்வு

குழப்பமாய் இருக்கு

இரண்டில் எதுதான்

சரியாக இருக்கும்

என்பது இன்னும்

குழப்பமாய் இருக்கு

புரிந்தபின் வாழ்வது

இயலாத ஒன்று

வாழ்ந்தபின் புரிவதில்

பயனேது உண்டு

இதனிடை வாழ்வை

வாழ்ந்து கொண்டு

செல்வது அன்றி

வழியேது உண்டு

என்னவோ வாழ்வும்

ஓடியே போக

இனிமேல் புரிந்து

நானென்ன செய்ய

தொடரும்….

தாயிடம் நிறப்ப

யாருமே இன்றி

தன்நிலை புரியும்

வழியுமே இன்றி

வாடிடும் மனது

தனிமையில் இருக்க

தேடியே வந்து

உதவி செய்வாயே

நோயிது என்று

ஊர்சொன்ன போதும்

துயரிது என்று

நான்சொன்ன போதும்

பிரிவினைத் தாங்க

வலிமையையும் இல்லை

பிரியாமல் வாழ

வழியும் இல்லை

உயிரும் உடலை

பிரிந்திட வேண்டும்

உலகும் உயிரை

பிரித்துதான் ஆகணும்

ஆயினும் பிரியாத

உறவு இருக்க

தொடரும்…..

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *