171. மீண்டும் அருள்வதேனோ
மீண்டும் மீண்டும் அருள்வதேனோ
மீளா துயரத்தில் கிடந்த எனக்கு
ஆண்டு கொண்டு அருள் தந்தாய்
வேண்டிக்கொண்டேன் இரக்கத்தைத் தந்தாய்
மாண்டு கிடந்தேன் மீட்பினைத் தந்தாய்
நாடியே என்னைத் தேடியே வந்து–மீண்டும்…
எடுத்த தீர்மானம் எத்தனை எண்ணுவேன்
கொடுத்த வாக்கினை எவ்விதம் சொல்வேன்
நடித்த நாடகம் கொஞ்சமோ கூறுவேன்
தடுத்தே வந்து தாங்கியே இங்கு–மீண்டும்…
சிந்தையில் இல்லை நிலையான உறுதி
செயலிலே இல்லை நிறைவான இறுதி
மனதிலே இல்லை கனிவான பக்தி
ஆயினும் நீயே நாடியே வந்து–மீண்டும்…
துன்பம் என்பது இறுதி இல்லை
துக்கம் என்பது நிலைப்பதும் இல்லை
மரணம் என்னை வெல்வதும் இல்லை
இறுதி வரையில் நீயே வந்து–மீண்டும்…
13-07-2013 காலை, 8.40. குருகுலம்
171. Why give again and again?
Why you give grace again and again
To me who was drowned deeply in sorrow?
Lord overing me you give your grace
I asked and you showed mercy
I was dead and you redeemed me
You came seeking after me—why you give….
How much can I count the decision that I took
How will I tell the promise that I gave
Is the way I act has any limit?
Yet interfering and upholding me—why you give….
There is no stability in my mind
There is no clear result in my acts
There is no loving bhakti in my heart
Yet coming seeking after me—why you give….
Trouble is not the end in itself
Sorrow never remains permanent
Death will never overcome me
Till the end you alone will come—why you give….
13-07-2013 8.40 am. Gurukulam.
Though our Lord when it comes to forgiveness said to do it 70×7 viz., infinitely. But in our lives, we never do that several times. We try our best and after a few attempts give up. But God is not like that. Till the work that He began in us will complete He gives grace again and again. When I thought about it, I wrote this song.
12-8-2014
172 துணை யாரும் இல்லை
தனித்து உன்னுடன் இருந்திடுவேன்
தாய் உன் மடியினில் தவழ்ந்திடுவேன்
இதயம் நிறைந்து வாழ்த்திடுவேன்
இன்றுபோல் உன்னோடு வாழ்ந்திடுவேன்
தனிமை என்பது என்னிடம் இல்லை
தமியன் எனக்குப் புகலிடம் இல்லை
என்னுடன் நீயும் கலந்த பின்னாலே
பிரிவென்ற ஒன்று நம்மிடை இல்லை
என்னால் எல்லாம் செய்திட முடியும்
என்னுடன் நீ மட்டும் இருந்து விட்டால்
என் பெலன் கொண்டு வெல்வதும் இல்லை
என்னால் வெற்றி என்பதும் இல்லை
நாம் கொண்ட உறவே உண்மையாகும்
நாம் வாழும் வாழ்க்கை இனிமையாகும்
நாம் கொண்ட நட்பே உறுதியாகும்
நாம் கொண்ட அன்பே இறுதியாகும்
ஆயினும் உன்னிடம் குறையும் உண்டு
அதை நான் கூற உரிமையும் உண்டு
என்குறை நன்கு அறிந்த நீயும்
ஏனோ மறுத்தாய் அதனை நீக்க
காரணம் என்ன நீ மட்டும் அறிவாய்
வேறென்ன எண்ணம் நீயே சொல்வாய்
என்நிலை புரியவே அதனை வைத்தாய்
எதுவரை என்னைப் போராட வைப்பாய்
வேண்டாம் இந்த வேடிக்கை எல்லாம்
வேண்டாத இந்த விளையாட்டு எல்லாம்
போராட வேண்டுமோ உன்னிடம் நானும்
புரிந்து கொண்டால் அது மட்டும் போதும்
ஆனால் அதுவே உன் சித்தமென்றால்
அடிமை அதற்கு சம்மதம் சொல்வேன்
ஏனென்றால் நீயே மீட்டிடுவாயே
என்னுடன் போராடி வென்றிடுவாயே
இந்த ரகசியம் நான் மட்டும் அறிவேன்
அதை நீ உணர்ந்தாய் என்பதைப் புரிந்தேன்
ஆதலால் எனக்கு தோல்வியும் இல்லை
உன்னைப்போல் எனக்குத் துணை யாரும் இல்லை
16-07-2013. காலை, 8.30
172 No other companion
I will be with you ‘alone’
I will dwell on your lap Oh my mother
I will praise you with full heart
I will live like this with you always.
I have no loneliness
I have no other refuge
Once you mingled with me
There is no separation between us
I can accomplish everything
Once you are with me
I will never overcome with my strength
No success is achieved only by me
This relationship that we have is true
The life that we live is sweet one
The friendship that we have is firm one
The love that we have is final one
Yet there is some short coming in you
I have every right to point it to you
Once you know my shortcomings
For some reason your refuse to remove it
You alone know the reason for that
What else is your thought/plan you tell it
Did you allow it for me to know about myself
How long will you allow me to struggle?
Don’t have such a tamasha any more
And all these unnecessary play
Do I need to wrestle with you?
If you understand this, it is enough for me
Yet if that is your will
This slave will give the consent for that too
Because you alone will redeem me
You will win by wrestling with me.
I alone know this secret
I know that you understood that
Therefore, there is no defeat for me
There is no other companion like you.
16-07-2013. 8.30 a.m. Gurukulam.
The secret inner joy amidst my entire struggle is that the Lord knows that I know that He knows all about me. And all my struggles are not mine but He too has to wrestle along with me, as He cannot escape from me. So, there is no more defeat in any area though there will be temporary setbacks. I am happy to have the Lord as my companion in every area of my life.
12-8-14
173. பக்தனாக நான் வாழ வேண்டும்
எத்தனை மேன்மை உனது கிருபை
எத்தனை உயர்வு உனது அன்பு
எத்தனை பொறுமை உனது இரக்கம்
எவ்விதம் உரைப்பேன் வார்த்தையாலே
கொஞ்சமோ எனது மீறுதல் யாவும்
எண்ணவும் தகுமோ எனது பாவம்
சொல்லவும் கூசுமே செயல்கள் யாவும்
சொல்லிவிட்டேன் யாவும் உன்னிடம் நானும்
அறியத் தகுமோ நமது உறவு
அளக்க முடியுமா உனது அன்பு
பகிர முடியுமோ எனது பக்தி
பெற்றேன் அதனால் நானும் முக்தி
எழுதத் துணிந்தேன் எழுத்தாலே
எண்ணத் துணிந்தேன் சிந்தையாலே
ஆயினும் அனைத்திலும் தோற்றதாலே
சரணடைந்தேன் உன் பாதமதிலே
இதற்கு மேல் என்ன வேண்டும்
இந்த உயர்வே எனக்கும் போதும்
பக்தனாக நான் வாழ மட்டும்
இறுதிவரை உன் கிருபை வேண்டும்
17-07-2013, காலை 8.45
173. I should live as your bhakta
How noble/great is your grace?
How high is your love
How patient is your mercy
How can I utter through my words?
Are my transgressions only few
Can I think about my sins
It will be a shame to speak about my acts
But I told everything to you.
Can our relationship be understandable?
Can your love could be measured
Can I utter about my bhakti
I received mukti because of that
I dare to write about it through words
I dare to think it through my mind
Yet as I am defeated by all these
I took refuge at your feet
What else is my requirement?
This higher status is enough for me
To live as your bhakta
Your grace is needed till the end.
17-07-2013, 8.45 a.m. Gurukulam.
Once we become bhakta of the Lord automatically our status becomes high too because of the Lord. Though humility should be there in our life, yet the status is great and we can feel proud about it. To maintain it we need to remain in our bhakti.
12-8-14
174. பாராமுகம் ஏனோ
பாராமுகம் ஏனோ ஐயா
பக்தனுக்கிரங்கி நித்தமும் அருளாமல்–பாரா
சித்தமும் கலங்குதே நித்தமும் கலக்கமே
புத்தியின் போக்கையும் சொல்லவும் போகுமோ?
அத்தனே உன்னடி அண்டிய பின்னாலும்
ஆயிரம் காரியம் அலைக்குதே வாழ்க்கையை–பாரா
எத்தனை எதிர்பார்ப்பு என்னிடம் பிறருக்கு
நித்தமும் புது வழக்கு நிலையில்லா மனிதருக்கு
சற்றேனும் என்நிலை எண்ணியே பாராமல்
கூறிடும் வார்த்தையால் கொன்றிடும் போதிலே–பாரா
என்னதான் செய்வேன் நான் ஏது வழி இங்குதான்
போக்கிடம் தெரியாமல் புலம்புறேன் உன்னிடம் நான்
ஒரு வழி மூடினால் பலவழி உண்டுதான்
என்றுதான் சொன்ன நீ கை விட்ட பின்பு தான்–பாரா
ஆயினும் அறிந்தேனே மீளவும் ஒரு வழி
அடைந்தேனே மெய்வழி பக்தியின் பெருநெறி
திருவடி அண்டுவேன் தினம் உன்னைச் சாறுவேன்
புறமே நீ தள்ளினாலும் ’போ’ என்று சொன்னாலும்-பாரா
18-07-2013 காலை 8.30
174. Why this indifference?
Why you have this much indifference
Not giving your grace taking pity on this bhakta?
There is disturbance every day and there is confusion in mind
Do I need to tell the nature of my intellect too?
Oh my Lord even after reaching your feet
Thousands of things give trouble in life
How much expectation others have from me
The unstable people have new contention every day
Not thinking my situation even for a moment
They kill me through their hurtful words
What can I do and what is the way out from this
I lament not knowing the way to escape
‘If one door is closed there are plenty’
You promised this but forsake me?
Yet I know one way to come out from it
I reached the true path that is the great bhakti marga
I will approach your divine feet and I will depend upon you everyday
Even if you reject me and say ‘get lost’.
18-07-2013. 8.30 a.m. Gurukulam.
This song has some auto biographical context. I love my mother and she too loves me. Among all her children I am her favorite one. She always prefers to stay with me than with others. Back in 1983 with many tears she wrote one letter asking me to take her with me wherever I go or live (after I became a bhakta of the Lord). But familiarity breeds contempt. Though I do my best yet she will always fight with me and argue on every small matter. Particularly, when we stay at the ashram, as there is no one else for her to talk to, she will use any and every opportunity to talk or raise an issue. Irritated by that when I rebuke her, she will say, ‘you have your computer and books. But what I have. When your shiyas come, they say to me “hai-hui” and disappear without talking with me. To whom shall I talk? To the wall or tree?’
In fact others [those who know Tamil] spend enough time listening to her. But she needs someone to nag every day. So on this day, after having her extra-quota of nagging, I went to dhyana mandapam for prayer and meditation. That time as I was much disturbed by my mother’s attitude, I first got irritated with the Lord. Then my irritation turned into a lamentation and I wrote this song. The second stanza I wrote keeping my mother in mind:
How much expectation others have from me
The unstable people have new contention every day
Not thinking my situation even for a moment
They kill me through their hurtful words
The music that I composed also reflects my melancholic mood.
NB. As my mother does not want to stay further in the ashram, considering her requirements (both body and mind) I moved back to her house in Mathigiri (Hosur) in April 2014. But here too she does the same and only needs some excuse to nag me on some point—particularly managing the household works. Kitchen is not clean, clothes are not washed properly, the bathroom bathroom remains dirty, you are over spending and wasting too much in cooking etc. etc. Now I learnt to laugh when she nags me as I know her nature—like me she needs someone to always dominate. No wonder we have the same temperament as we share the same DNA!!!
12-8-14
175. வீணாகப் புலம்பாதே
வாராத தொல்லையை எண்ணி எண்ணியே
நிகழ்கால நிம்மதியைத் தொலைப்பதும் ஏனோ?
வந்தாலும் காக்க நானும் இருக்க
வீணாகக் கலங்கிப் புலம்புதல் ஏனோ?
உன் தலை முடியில் ஒன்றேனும் வீணாய்
வீழாது கலங்காதே நீயும் காணாய்
உடன் வந்து வழிகாட்ட நான் இருக்க
துணிந்து தான் செல்வாய் மகனே நலமாய்
என்றேதான் உரைத்தார் ஐயனும் எனக்கு
இனி நான் கொள்வேனோ மனதினில் பிணக்கு
யார் வந்து போயினும் என் வாழ்வில் எனக்கு
என்றுமே மாறாது அவன் போட்ட கணக்கு
சிலநாள் பாடுகள் உண்டு நான் அறிவேன்
சில நேரம் தொல்லைகள் வருவதை அறிவேன்
ஆயினும் கலங்கேன் அவற்றை எண்ணியே
அவனே காப்பான் என் நலன் நன்னியே
24-07-2013, குருகுலம், காலை 6.30
175. don’t lament unnecessarily
‘By thinking about the trouble which may not come
Why you lose your present peace of mind
Even if it comes when I am there to save you
Why do you lament unnecessarily?
Not a single hair on your head
Will fall unnecessarily and don’t be troubled
As I am there to accompany you to show the way
Take courage and go ahead safely O my son’.
The Lord said this to me
Can I have trouble in my heart anymore?
Who will come or go in my life
Never will change what He has decided for my life
Trouble will come on some days
Disturbance will be there at few times
Yet I won’t be troubled by them
He will protect me by coming unto me.
24-07-2013, Gurukulam, 6.30 am.
Our anxiety never solves the future problem which may not even come, but will rob the present peace of mind. This I have experienced several times in life. I know many have anxiety about so many things. Taking courage by the assurance by the Lord I wrote this song.
12-8-14
Leave a Reply