BT Song 186. நீ மறவாதே
நெஞ்சமே நீ மறவாதே
நிதம் அவன் தாள் பணியாது–நெஞ்
கொஞ்சமோ உலகத்தின் பாடு-அதைக்
கூறிட முடியுமோ கூறு
அஞ்சிட்ட நாட்களை எண்ணி
ஆறுதல் தேடி மீண்டும் செல்ல–நெஞ்
தஞ்சம் வேறெங்கு உண்டு –உனக்குத்
தருவது வேறெவர் உண்டு-அதைத்
தேடியே இளைத்த நாட்களை எண்ணி
தேறுதல் பெற மீண்டும் செல்ல–நெஞ்
வஞ்சகமே உலகில் வாழ்வு-அதை
வென்றவர் யார் உண்டு கூறு-அதில்
வீழ்ந்தே புலம்பிய நாளை எண்ணியே
விடுதலை பெற்று மீண்டும் வெல்ல-நெஞ்
அஞ்சிடாதே அவனே காப்பான்-நம்மை
ஆதரித்து மீண்டும் சேர்ப்பான்-அதை
அறியாமலே அலைந்த நாட்களை எண்ணி
அடைக்கலம் பெற மீண்டும் செல்ல–நெஞ்
186a
நெஞ்சமே மறவாதே
நிதம் அவன் தாள் பணிய–நெஞ்
கொஞ்சமோ உலகில் பாடு
அதைக் கூறிட முடியுமோ கூறு
அஞ்சிட்ட நாளை எண்ணி
ஆறுதல் தேடிச் செல்ல–நெஞ்
தஞ்சம் வேறெங்கு உண்டு
தருவது வேறெவர் உண்டு
அதைத் தேடிய நாளை எண்ணி
தேறுதல் மீண்டும் பெற –நெஞ்
வஞ்சகமே உலகில் வாழ்வு-
அதை வென்றவர் யார் உண்டு கூறு-
அதில் வீழ்ந்த நாளை எண்ணி
விடுதலை மீண்டும் பெற -நெஞ்
அஞ்சிடாதே அவனே காப்பான்
ஆதரித்து மீண்டும் சேர்ப்பான்-
அதை அறியாத நாளை எண்ணி
அடைக்கலம் மீண்டும் பெற –நெஞ்
23-08-2013, காலை 8.45
186. Don’t forget
O my heart don’t forget
Every day not to bow at His feet — O my heart…
Is there very little trouble in this world?
Can we talk about them?
Remembering the days in which you feared
To seek comfort again from Him– O my heart…
Where else is any other refuge?
Who else can give it
Thinking about the days in which you were discouraged by seeking it
To seek comfort again– O my heart…
Deceitfulness is the life on this earth
Who is the one who overcame it?
Thinking the days in which you lamented by falling many times
To get freedom again to overcome it– O my heart…
Don’t be afraid and He will protect us
He will take us back with Him by taking care of us
Thinking about the days in which you wandered without knowing
And to go to receive the refuge again– O my heart…
23-08-2013, 8.45 a.m. Gurukulam.
Though God forgave our sins and put the sign board: no more fishing, yet I cannot forget the way I lost myself in life through various means. Often remembering those days, I seek His feet again and again to experience the comfort that He gave me. I need not lament about the past sins, but I cannot forget the strife and struggle that I went through in my spirit in the past.
BT Song 187
187. நீ வேறு நான் வேறோ?
எல்லாம் நீ ஆனபின்பு
எனதென்று ஏதுமுண்டா
ஏது கொண்டு நான் வருவேன்
என்னை நான் தருவதன்றி
நான் எனக்குச் சொந்தமல்ல
நீ வந்து மீட்ட பின்பு
ஏது உனக்கு நான் தருவேன்
ஏழை என்னில் ஒன்றுமில்லை
நான் உனக்குச் சொந்தமானேன்
நீ வந்து ஆண்ட பின்னே
ஆதலால் எல்லாம் பெற்றேன்
உன்னில் நான் நிறைவுற்றேன்
நீயும் நானும் ஒன்றான பின்
நீ வேறு நான் வேறாமோ
இனி இந்தப் பேதமையும்
என்னில் இன்று நீங்கியதே
ஆதலால் நாம் இருவரும்
வாழ்ந்திடுவோம் ஒன்றாய்க்கூடி
ஊழி ஊழி காலமெல்லாம்
ஒருபோதும் பிரிவின்றி.
25-08-2013, காலை, 8.45
187. Are you and I different?
Once you become everything
Is there anything of my own?
What can I bring to you
Other than giving myself to you?
I am not my own
After you have redeemed me
What can I offer to you
The poor one has nothing (to give)
I belong to you
Once you lord over me
Therefore I received everything
I become complete in you
Once you and I become one
Are you and I different?
This ignorance has gone
Today from me.
Therefore we two
Live joining together
For an eternal time
Without knowing any separation
25-08-2013, 8.45. Gurukulam
As the Lord became the first fruit and we became the co-hires along with Him to become one with Him. As our personality is not lost yet merged with Him, and to have a new kind of life is beyond our comprehension from this side of the Further Shore. If the experience of a glimpse in our bhakti when we become one with Him here on earth is real, then becoming One with Him is the blessed Hope. Though that blessed hope does not diminish our struggle on this side of the Further Shore, yet it helps us to press forward as we see its tangible results in our lives with the Lord while living in this mortal body.
12-8-14
BT Song 188 உன்பாடு இனி
ஏதுமற்ற ஏழை நானே
ஏதுவழி காண்பேனே
தேடி வந்தேன் உன்னடியே
ஓர் வழி கூறு நீயே
ஓடிய நாட்களும்
ஓய்ந்தது தேகமே
ஆயினும் ஆசைகளோ
அடங்கலை என்னில் தானே
எத்தனை எண்ணங்கள்
எத்தனை தேவைகள்
எத்தனை கலக்கங்கள்
எவ்விதம் சொல்லிடுவேன்
சொன்னாலே வெட்கம் தானே
உள் வைத்தால் தூக்கம் தானே
சொல்லிட்டேன் ஆயினும்
உன்னிடம் நானும் வந்தே
நன்றோ கூறு இது
நீ கொண்ட மெளனமே
வேறெங்கு போவேன் இனி
கூறிடு நீயும் வழி
’உன்போல பாடுகளும்
பட்டதால் நானும் வந்து
அறிவேன் உன்துன்பம்’ என்று
சொன்னவன் நீயும் தானே
ஆதலால் நானும் வந்தேன்
அடம்பிடித்து இங்கு நின்றேன்
தப்பித்துப் போகும் எண்ணம்
இம்மியும் உன்னில் வேண்டாம்
போராடினால் என்னுடனே
என்ன பயன் கூறு நீயே
ஆதலால் முன்போல
ஐயனே காத்திடுவாய்
என்னுள்ளே கோயில் கொண்டாய்
என்னுடனே வாழுகின்றாய்
ஆதலால் உன்பாடு இனி
அடிமைக்கு நீயே கதி
26-08-2013. காலை. 6.45
188. It is your problem
I am the poor one, not having anything
What is the means that I could find?
I came seeking at your feet
Tell me one means for this?
The days are fleeing
The body also became tired
Yet the desires
Never come to an end in me!
How many thoughts?
How many needs
How many troubles
How can I tell them?
It is a shy to tell them
But if I keep within me then it gives pain
Anyhow I told them
By coming unto you
Is it good for you?
The silence that you keep
Where else can I go?
You show one means for this!
You are the one who said that:
‘As I came like you
I know your pains
As I also went through them’.
Therefore I came
I stood adamantly
Don’t ever think
To escape from me even for a moment
What is the use?
By wrestling with me?
Therefore as before
O Lord save me
You are dwelling in me
You are living with me
Therefore it is your problem
You are the refuge for this slave.
26-08-2013. 6.45 am. Gurukulam.
As I am advancing in age, I know that I cannot do many things as I have done before. Knowing my limitations, once I give responsibilities to others I tell them ‘it is your burden and problem. I can guide and give moral support but you have to carry out responsibility. Of course I step in where things go wrong and to the extent that I can help’. But beyond that I throw up my hand and never worry beyond my limitations. When it comes to the Lord, it is not my age or limitation but the realization that I totally surrendered to Him and there is no point for Him to struggle with me but only go along with me, even carrying me. He has no hope or chance to escape from me.
12-8-14
BT Song 189
189. இயற்கையோடு இணைந்திருப்பேன்.
எங்கும் இறைவன் அரசாட்சி
அகத்திலும் புறத்திலும் அவனாட்சி
இயற்கை அறிவிக்கும் அவன் மாட்சி
எதிலும் விளங்கும் அவன் காட்சி
சின்னஞ்சிறிய மலர்களுமே
சில்லென்று வீசும் தென்றலுமே
தவழ்ந்து செல்லும் மேகமுமே
சொல்லும் இறைவன் மேன்மையுமே
ஆர்ப்பரிக்கும் அருவிகளும்
அமைதியான ஓடைகளும்
நிறைந்து நிற்கும் நீர்நிலையும்
நிதமும் கூறும் அவன் புகழும்
எங்கும் அவனின் நிறை விருக்கும்
எதிலும் அவனின் உயர் விருக்கும்
என்றும் அவனின் புகழிருக்கும்
எல்லாம் அவனைப் பணிந்திருக்கும்
என்ன பேரு நானும் பெற்றேன்
என்னை அவனே மீட்க உற்றேன்
அவனைத் தொழுதிட அருளும் பெற்றேன்
அவனுடன் ஆளும் உரிமை பெற்றேன்
இந்தப் பேருக்கு ஏற்றபடி
என் பணி செய்வேன் உள்ளபடி
என்பங்கை நான் அளித்திருப்பேன்
இயற்கையோடு இணைந்திருப்பேன்.
27-08-2013 காலை. 9.00
189. I will go along with nature.
Everywhere is God’s Kingdom
In and out is His rule
Nature proclaims His glory
His presence dwells everywhere
Little flowers
The cool breeze
Gently going clouds
Proclaim God’s glory
The roaring waterfalls
The silent brooks
Ponds with full of water
Declare Hid fame everyday
His presence dwells everywhere
His glory will be in every thing
His fame will remain forever
Everything will bow to Him
What kind of blessing that I received
As He redeemed; I am emancipated
I received grace to worship Him
I got the right to rule with Him
As per this new status
I will do my service
I will give my share
And remain one with nature.
27-08-2013 9.00 a.m. Gurukulam.
When I went to dhyana mandapam for prayer and meditation I just stood outside the veranda and saw a small lake next to the ashram filled to its capacity. Then the creepers were blossoming with beautiful flowers. The silence around me and solitude that I enjoyed gave again the impression to write this song. There I realized that I am ruling nature along with the Lord and I have my responsibility towards it. Though I cannot contribute much to preserve nature as it is, yet by remaining one with it worship God along with it.
As I already discussed God’s presence everywhere and Pantheism in songs 9 & 10 I have nothing to add here.
12-8-2014
BT Song 190
190. ஒரு கலக்கம்
ஏதோ என்னில் ஒரு கலக்கம்
ஏதும் புரியாது ஒரு குழப்பம்
நாளும் செல்லும் வாழ்வை எண்ணி
நானே காணா ஒரு தயக்கம்
சென்ற நாட்களை நான் எண்ணி
சோர்ந்த நேரம் இங்கு அதிகம்
வரும் காலங்களை எண்ணித் தினம்
வழி காணா ஒரு மயக்கம்
ஆயினும் ஒன்று மட்டும் அறிந்தேன்
அவனே காப்பான் நன்கு அறிந்தேன்
இதை நன்றாக நான் உணர்ந்தும்
இன்னும் நீங்கலை மனச்சலனம்
கலக்கம் குழப்பமொடு தயக்கம்
மயக்கம் சலனமொடு சேர்ந்து
நாளும் என்னை தாக்கும்போது
சார்ந்து கொள்வேன் அவனைச் சேர்ந்து
இந்த உண்மை நான் அறிந்தேன்
அவனே காப்பான் நான் அறிந்தேன்
ஆயிரம் கேள்வி வந்தபோதும்
அவனே பதிலானால் அது போதும்
Gurukulam, 4-9-2013, காலை, 8.15
190. A trouble
Some kind of trouble within me
Some kind of confusion which I cannot understand within me
A hesitation which I cannot see
About the life which moves everyday
Thinking about the past life
I discouraged often
Thinking about the future
There is a bewilderment everyday
Yet I know one thing
He will protect me that I know for sure
Though I realized very well
Yet the trouble has not gone from my heart
When trouble, confusion and hesitation
Bewilderment, instability joining together
And come and attack me
I will lean on Him
This truth I realized
He will save that I know
Though thousands of questions come
If He becomes the answer that is enough for me.
4-9-2013, 8.15 am. Gurukulam.
For me God does not have an answer but He is the answer. That is enough for me to face all kinds of confusion and trouble.
12-8-14
Leave a Reply