BT Song 251 வென்றவர் இல்லை
வென்றவர் யாரோ உலகை இங்கு
வென்றவர் இல்லை அதை நன்று
ஒவ்வொரு வாழ்வும் தோல்வியின் விளிம்பு
சென்று தானே திரும்புது இங்கு
போராடத் துணிந்தவர் பெறுவார் வெற்றி
போராட்டம் ஒன்றே வாழ்க்கையில் உறுதி
இடையில் தோல்வி எண்ணி பயந்தோர்
இறுதிவரை கரை சேரார் உறுதி
இதனை எடுத்து காட்ட எண்ணம் கொண்டு
இறைவனும் வந்தான் நம் வடிவம் கொண்டு
இறுதியில் அடைந்தான் மாபெரும் வெற்றி
இழந்தே பெற்றான் தோல்வியை மாற்றி
தோல்வி என்பதும் இறுதி இல்லை
வெற்றி என்பது நிரந்தரம் இல்லை
மாறி மாறி அவை வந்த போதும்
மனதில் கலக்கம் தேவையும் இல்லை
எவ்விதம் இழப்பு வந்த போதும்
இறுதியில் வெற்றி நமதே ஆகும்
இறைவனில் இழந்து அதனைப் பெறுவோம்
இந்த ரகசியம் நன்கு அறிவோம்
11-9-14, வாரணாசி, 9.45 காலை.
BT Song 251 None become victorious
Who has won this world?
None has won it properly
Each day is going to the edge of
Defeat and returns back
Those who decided to fight will succeed
Struggle is the only reality in life
Those who fear about the defeat in the middle
Will never reach the shore till the end
To demonstrate this
God too came taking our form
Finally He won a great victory
By giving Himself He got it by changing the defeat
Defeat is not the final one
Success is also not permanent
As they came repeatedly again and again
We need not disturbed in our heart
Whatever kind of loss we faced
Finally victory is ours
By losing in the Lord let us get it
And know this secret
11-09-2014 Varanasi. 9.45 am.
When I was thinking about the meeting that we have arranged for the Hindu bhaktas of the Lord at Varanasi, I thought about what should be the one central message that I would like to communicate. Then a small thought suddenly flashed in my mind that ‘the life of every bhaktas is a story of a defeated one. But by losing oneself in the Lord we can gain the victory as the Lord Himself demonstrated it’. Then I wrote this song.
21-10-2014. Gurukulam.
BT Song 252 ஏன் முயல வேண்டும்?
தன்னையே வென்றவர் தரணியில் இல்லை
என்னைப்போல் தோற்றவர் எவருமே இல்லை
உன்னைப் போல் என்னை அறிந்தவர் இல்லை
உறவென்று உன்னைப்போல் ஆனவர் இல்லை
சில நொடியாவது சிந்தையை வென்றேனா
சிந்தையால் உன்னை பணிந்து நின்றேனா
எத்தனை எண்ணங்கள் எத்தனை ஓசைகள்
என்னையே வென்று உன்னிடம் வந்தேனா
கண்களை மூடினேன் காட்சிகள் மறைந்ததா
வாயை மூடினேன் வார்த்தைகள் குறைந்ததா
சிந்தையைத் தந்தேன் சஞ்சலம் போனதா
செயல்களைக் குறைத்தேன் நிம்மதி வந்ததா
என்னிடம் இதற்கு விடையும் இல்லை
ஏதேதோ செய்தேன் பயனும் இல்லை
ஆயினும் ஒன்று மறக்கவும் இல்லை
அது உன்னடியன்றி வேறொன்றும் இல்லை
தோற்றேன் ஆயினும் தோல்வி இல்லை
தோற்பதால் எனக்கு நட்டமும் இல்லை
தோல்வியால் அறிந்தேன் வெற்றியின் ரகசியம்
அதனால் உன்னிடம் தோற்பது அவசியம்
என்னை இனி நான் ஏன் வெல்லவேண்டும்
எதற்கு அதற்கு போராட வேண்டும்
இழந்தே பெறுவது உறுதியான பின்
எதற்கு நான் இனி முயல வேண்டும்
வாரணாசி, 11-9-14, மாலை, 4.00
BT Song 252 Why should I strive?
None is there on this earth who has own over himself
There is no one who was defeated like me
There is no one other than you who understood me (well)
There is no one who become my relative like you
Did I overcome my mind even for a few seconds?
Did I ever worship you with my mind?
How many thoughts and how many noises
Did I ever come unto to you by overcoming me
I closed my eyes but did the imagination come to an end?
I closed my mouth but did the talk come to an end?
I gave my mind but has the ‘chanchal’ (fickleness) ever gone?
I reduced my activities but did the peace ever come?
I don’t have answer to this
Though I have tried many things there is no use
But I didn’t forget one thing
It is your feet and nothing else
Though I was defeated yet it is not a defeat
I am not going to incur loss even if I am defeated
I realized the secret of the victory only through defeat
Therefore getting defeat in you is important
Why should I win over myself?
Why should I struggle for that?
Once I am going to receive through defeat
Why should I strive for it?
Varanasi. 11-09-2014, 4.00 p.m
As I was sitting alone and trying to read or think, I couldn’t concentrate on anything. Though I kept quiet, yet my brain was talking too much. Though I closed my eyes, lots of past life came before me. Once all my efforts failed to concentrate on the Lord or on prayer, then I wrote this song. The secret in the bhakti is that one can gain only by losing and also defeated by the Lord. When parents play with children some game, they deliberately allow themselves to be defeated by the child by playing in the wrong way. The child not realizing this will clap with joy that she has defeated her parents and the parents will also join with the child to celebrate her victory. This is what the Lord is often doing in our life, where actually we who will be defeated if the Lord plays the game as per the rule. So as the Lord is going to allow me to get success then why should I strive beyond my level to get success on my own?
BT Song 253
God rejecting the wisdom of this world becomes very simple to the innocent one. When I was meditating on this topic, I wrote this song.
இறைவன் புவியின் ஞானத்தைப் புறம்பாக்கி எளியோருக்கு எளிவந்தவனாக முகேசன் ஆனதை தியானித்த போது எழுதிய பாடல்
BT Song 253. உண்மை உணர்ந்தேன்
ஞானிக்கு மறைவானாய்
பேதைக்கு தெளிவானாய்
உயர்ந்தோரை தாழ்த்தினாய்
உன்னடியாரை உயர்த்தினாய்
புவியின் ஞானத்தை
புரிந்த பலருண்டு
புவியில் ஞானத்தை
அறிவிதோர் சிலருண்டு
புவியின் ஞானத்தால்
மேன்மை அடைந்தோரும்
உனது தாழ்மையை
உணராது போனார்
தன்னை அறிவதே
ஞானத்தின் தொடக்கம்
தன்னை அளிப்பதே
பக்திக்கு விளக்கம்
தன்நிலை அறிந்தோர்
உன்னிடம் வருவார்
தன்னையே தாழ்த்தி
ஞானத்தைப் பெறுவார்
சிறுமையாய் தோன்றிய
சிலுவையை அறிந்தேன்
தெய்வம் நீயென்ற
உண்மையை உணர்ந்தேன்
மன இருள் போக்கி
மன்னித்து ஏற்றாய்
மறைவான உன்னத
ஞானத்தை அளித்தாய்
17-10-2014, மத்திகிரி, காலை 3.30
BT Song 253. Realized the truth
You remain hidden to the wise
But revealed to the innocent one
You humbled the proud one
And you uplifted your bhaktas.
There are many
Who understood the wisdom of this world?
There are many
Who proclaimed this wisdom on this earth?
Those who became great
Through the wisdom of this world
Not realizing your humility
Failed to understand you
Knowing one-self
Is this the beginning of wisdom?
Surrendering oneself
Is the definition of bhakti?
Those who realized oneself
Will come unto you
Humbling oneself
They will receive the wisdom
I realized the Cross
Which looked very mean (to others)
Understand this Truth
That you are the very God
By removing the darkness of my heart
You accepted me by giving forgiveness
You gave that wisdom
Which remained hidden (so far)
17-10-2014 Mathigiri, 3.30 am.
As I was reading the book: Samnyaasin in the Hindu Tradition: Changing Perspectives, T.S. Rukmani, D.K. New Delhi, D.K. Printworld (p) Ltd. 2011, in which the author was sharing her interview with so many Sannyasis. I was thinking about it deeply. The main thrust of Sannyasi is the search for ‘moksha’ (mukti, salvation) and the requirement of wisdom/knowledge (jnana) for that. If she ever asked those questions to me my answer would be entirely different. Then I wrote this song.
BT Song 254. தவறா கூறு
அமைதியாக இருக்க உதவி செய்வாயா
அலைக் கழித்துதான் ஆட் கொள்வாயோ
அறியாமல் அடிமை புலம்புகின்றேன்
ஆதரிப்பாய் என்று அடி பணிந்தேன்
மாற்றம் ஒன்றே மாறாத ஒன்று
மண்ணுலகில் இது உண்மை என்று
நன்றாகவே நான் அறிந்திருந் தாலும்
மாறாத கருணை இதில் வேண்டும்
ஓடிய நாட்கள் கொஞ்சமா கூறு
ஓடியே வாழ்வும் கழிந்து போனது
எஞ்சிய மீதி வாழ்விலாவது
கொஞ்சம் அமர்வது தவறா கூறு
உன்னிஷ்டம் போல ஓட்டுவித்தாய்
ஒன்றும் சொல்லாது ஓடினேன் இதுவரை
என் கஷ்டம் எண்ணி முறையிட வில்லை
என்றும் உன் சித்தம் மீறியதும் இல்லை
ஆயினும் கேட்க உறவு இல்லையோ
அதுவும் நீ தந்த உரிமை அல்லவோ
அந்த உரிமையால் மீண்டும் கேட்கிறேன்
அதற்கு உன் பதிலை எதிர்பார்க்கிறேன்
என்னவோ செய் உன்சித்தம் போல
என்னிடம் கேட்டா செய்வாய் இனிமேலே
முன்னே எல்லாம் முடிவு நீ செய்தாய்
முரண்டு பிடிப்பதால் பயனேது சொல்வாய்
சரணடைவதே எனக்குள்ள ஒரு வழி
அதை நீ நன்கு உணர்ந்தால் சரி
சரணடைந்தோரை நீ புறப்பதும் இல்லையே
சற்று இதை நினைத்து உதவி செய்வாயே
20-10-2014, காலை, 6.30 குருகுலம்.
BT Song 254 Tell me: is it wrong?
Will you help me to remain quiet?
Or will you redeem me only after tossing
Not knowing this slave is lamenting
And bowed at your feet by requesting to protect me
Change is the only thing remain unchanged
This is the reality on this earth
Though I know this very well
I sought your unchanging grace even in this
Tell me, are the days in which I ran (wandered) are less
The life is gone by wandering constantly
Is it wrong to settle in one place?
At least in the remaining life?
You made me to wander according your desire
I too ran without arguing so far
I am not complaining by telling my difficulties
I never disobeyed your will
Still didn’t I have the relationship to ask?
Is it not a privilege that you gave to me?
With that privilege I am asking again
Expecting the answer for that from you
Do whatever you like according to your will
Are you going to do anything after consulting me?
Already you have decided everything
What is the use of becoming rebellious?
Surrender is the only means left for me
If you understand this it is enough
You never rejected those who surrender unto you
Remembering this, help me a bit.
20-1–2014, 6.30 am. Gurukulam
Again I came with my mother on 19th to the ashram. On the 17th she was not well and her condition became a bit worse on 18th night. So all my plans to go to the ashram for Diwali were affected. Then on 19th morning I took her to the doctor and he said that everything is normal except her constipation problem. Then I requested the doctor in English (he is from Andhra) to tell my mother that she can go to the ashram. But he was not budging easily and asked if I had all the facilities for her. When I assured, he said to my mother that she can go to the ashram. And we arrived on 19th evening. But that very night my mother said that she won’t stay even one hour after the end of the program on 26th. She refused to go with my sister to Chennai, though her ticket was already booked. Not only this she didn’t allow me to sit in the same room behind her when she was watching her T.V program, but I had to sit all the time only in front of her to do my work. She was ready to give up her program rather than allow me to leave her even for half an hour.
Every time I come to the ashram from Mathigiri there will be almost a mini-shifting with so many things to bring and then take back to Mathigiri. Our neighbors always ask, ‘are they shifting back to the ashram after seeing so much luggages which I take every time? So coming to the ashram and going back is not a simple thing for me with all kinds of luggage as I cannot keep two sets for both the places.
Then on 20th morning when I went to get my milk and also for my morning walk, I began to complain to the Lord how long He is going to toss me like this? My plan was to extend my stay at the ashram when my mother goes to Chennai with my sister on 26th (my sister’s family will visit Gurukulam on 23rd). But everything collapsed. Then while still I was walking I wrote this poem in my mind and recorded it later
BT Song 255. உன்குணம் மாறலை
அமைதி தருகிறாய் அதை உணர்ந்தேனா
அருளைத் தருகிறாய் அதை அறிந்தேனா
இரக்கம் காட்டினாய் அதை ஏற்றேனா
என்னை மீட்டாய் நன்றி கொண்டேனா?
பெற்ற ஆயிரம் நன்மைகள் எண்ணி
போற்ற வில்லை உன்னைக் கொண்டாடி
மறுத்த ஒன்றை மட்டும் எண்ணி
முறையிடுகின்றேன் உன்னுடன் வழக்காடி
கொஞ்சத்தில் உண்மை உள்ளவனாக
இருக்க வேண்டும் என நீ கூறினாய்
ஒன்றிலும் உண்மை அற்றவனாக
மாறிவிட்டால் நீ என்ன செய்வாய்
ஆயினும் அதைக்கூட நீயுமே பொறுத்தாய்
அனுதினம் நன்மைகள் பலப்பல அளித்தாய்
என் தகுதி மீறி தயவு காட்டினாய்
தருவதில் உன் தகுதி மட்டும் எண்ணினாய்
இதை நான் அறியாமல் இல்லை
என்ன செய்வேன் என் குணம் மாறலை
எது எப்படி ஆயினும் என்ன?
என்றும் உன் குணம் மாறுவதில்லை
இதை மட்டும் நன்கு உணர்ந்தேன்
இந்த உன் குணம் நன்கு அறிந்தேன்
இரக்கம் இன்னும் வேண்டி ஏங்கினேன்
என்னை மீட்பாய் என்று வேண்டினேன்.
21-10-2014, காலை, 5.00 குருகுலம்.
BT Song 255. your nature didn’t change
You are giving peace, did I realize it?
You are giving grace, I understand it?
You are showing mercy. Did I accept it?
You redeemed me did I ever celebrate it?
I never remained thankful for the
Thousands of blessings that I received (from you)
But I complain and argue with you
For the one thing which you denied to me
You said that, ‘I should remain faithful
Even in small matters;
But if I remain unfaithful even in one thing
What can you do too?
Yet you tolerated that too
And every day bestowed many more blessings
You showed mercy overcoming my nature to receive what I deserved
You only thought about your nature in giving to me
I am not ignorant of this fact
What can I do? My nature is not changing?
Whatever might be it?
Your nature never changes
I realized this well
I understood your nature well
I longed for more mercy from you
And I requested you to redeem me again.
21-10-2014, 5.00 am. Gurukulam.
Again I got up by 3.30 this morning. Then I began to immerse in the silence around me. But it didn’t last for a long time. So many thoughts occupied my mind. Often I have to get up at midnight as my mother calls me for something. Sometimes she will talk loudly while she is sleeping and thinking that she is calling me, I will go and see her. This continued even during the day. So I too became a bit sick without proper sleep and my head began to roll.
After some time, again I tried to go back to my meditation on the silence around me. Then I realized that no place is going to give the ‘peace’ for which I was longing and then I wrote this song. Then I thought how God is continuing to show His mercy though I am unworthy to receive it. This reminded me of the story about Alexander the great.
A widow was desperately in need of the grape juice which grows in his garden to cure her only ailing son. It has medicinal value. So with much difficulty she met the king and requested him to grant one grape to get a few drops of its juice to save her son. The king asked her to return with a promise to send it. Then one full basket of the same grape was sent to her home. After her son recovered again the widow met the king to thank him and she said, ‘I was begging for only one grape from you but why did you send a full basket’. For this the king said, ‘you asked according to your capacity but when I give I should think about my capacity (as a king).’
So though I am unworthy to receive so many blessings from the Lord, yet as per my nature I am not deserved to receive them. But when He gives He has to think only about His NATURE and not mine.
22-10-2014. Gurukulam.
Leave a Reply