BT Song 301 இது மட்டும் உறுதி
வேண்டாம் இந்த வீண் விளையாட்டு
வேடிக்கை யல்ல நான் சொல்வதைக் கேளு
நாளும் மனதோடு போராடு வோர்க்கே
நன்கு புரியும் நான் படும் பாடு
சிந்தையில் ஆயிரம் தத்துவக் கேள்விகள்
சித்தத்தை மயக்கும் பலப்பல எண்ணம்
விடை தெரியாத வினோத கேள்விகள்
விடை தெரிந்தாலும் ஏற்காத மனது
எவர் கூறும் பதிலும் இறுதியாய் இல்லை
ஏற்பதா மறுப்பதா புரியவும் இல்லை
என்னிடம் அதற்கு விளக்கமும் இல்லை
நீயன்றி எனக்கு விடை வேறு இல்லை
நல்லவேளை நீ கைவிட வில்லை
நான் என்ன செய்தாலும் புறப்பது இல்லை
இறங்கியே என்னை நீயும் மீட்டாய்
இறுதிவரையில் நீயே காப்பாய்
இந்த விடை ஒன்று மட்டுமே அறிவேன்
இதையே கைக்கொண்டு நானும் உய்வேன்
இதை உணர்ந்த பின் நீ தரும் அமைதி
என்னையும் காக்கும் இது மட்டும் உறுதி
30-5-15, குருகுலம், காலை, 6.15
BT Song 301 This is certain
Don’t have this unnecessary play with me
Listen to me and this is not a joke
Only those who struggle everyday with their mind
Alone will understand my struggle
Thousands of philosophical questions are in mind
So many thoughts which confuse mind
Strange questions which have no answer
Even if there is an answer, the heart won’t accept it.
Nobody’s answer ever become the final one
I am not sure whether to accept it or not
I don’t have any explanation for this with me
I don’t have any other answer other than you.
Fortunately, you never forsake me
Whatever I do you never abandon me
Having mercy, you redeemed me
Till the end you alone will protect me
This one answer I know for sure
Accepting this I will be emancipated
Once I realized this, the peace that you give
Will protect me and this one is certain.
30-5-15, Gurukulam 6.15 am.
Reading never helps much. As I was reading too much and often reflecting on those thoughts, so many questions came to my mind. Sometimes I find it difficult to have a clear discerning spirit to understand which one is correct and which one needs to be rejected. But my deep conviction in the Lord alone steers me clearly in spite of my constant reflection and question on various subjects.
BT Song 302 ஓயாத கூச்சல்
உள்ளாக என்னைப் பார்த்து
உன்னுள்ளே என்னைப் பார்த்து
புறம்பான செயல்களை நான்
புறப்பது எப்போதோ?
கண் கண்ட காட்சி பார்த்து
கருத்துக்கள் பலவும் கேட்டு
தேவையற்ற எண்ணம் கொண்டு
தெளிவற்று வாழ்கின்றேன்
ஆரவாரம் அலையாய் மோத
அவற்றுடன் நானும் சேர்ந்து
ஓயாமல் கூச்சல் போட்டு
உலகிடை வாழ்கின்றேன்
தெளிவற்ற சிந்தை கொண்டு
தெரியாத வழியைத் தேடி
தொடர்பற்று உன்னோடு
தொய்ந்துமே போகின்றேன்
என் நிலை அறிந்த பின்னும்
ஏன் இந்த வீண் மௌனம்
தடுத்து ஆட்கொண்ட உன்
தயவுமே இன்னும் காணும்
போதும் போதும் புறக்காதே
புலம்பி நான் தவிக்காது
வழக்கம் போல் நீ வந்து
வாழ்விக்க வேண்டு கின்றேன்
2-6-15, குருகுலம், காலை, 6.05
BT Song 302 unceasing noise
Looking within me
And seeing me in you
When I am going to give up
Outward activities?
Seeing many things with my eyes
Listening so many views
Having unnecessary thoughts
I am living without clarity
Uproar hits like waves
Joining with them
Making too much noise
I too live in this world
Having an unclear mind
Searching for an unknown path
Losing my contact with you
I become weak
After knowing my condition
Why this unnecessary silence
I cannot see your grace
Which redeemed me?
Enough is enough don’t desert me
As usual you come
And help me to live
Not allowing me to lament.
2-6-15, Gurukulam 6.05 am.
As the days are moving very fast and the time for me to move back to Mathigiri is approaching soon, I was more thinking about the life there compared to that I have here at the ashram. Then so many thoughts, noises, voices occupied my mind. Then I wrote this song pleading to God to take charge of my life again.
BT Song 303 அன்றாடம் அளப்பவன்
காலையில் எழுந்து கடவுளை போற்றுவோம்
கருத்தை அவனுள் வைத்து மகிழ்வோம்
காத்திடுவான் நம்மைக் கண்மணிபோல்
கைபிடித்து செல்வான் நம்மையும் அது போல்
ஒவ்வொரு நாளும் உருண்டு ஓடினும்
அதுபோல நம் வாழ்வும் விரைந்தே ஓடினும்
நிலையாக நிற்பான் நம்மையும் காப்பான்
நிலையில்லா வாழ்வில் நங்கூரமாவான்
நேற்று இன்று நாளை என்று
நிமிடமாய் ஓடி வாழ்க்கையும் முடியும்
நிரந்தரமாய் நம்மைத் தம்முடன் சேர்ப்பவன்
நிழலடி தன்னையே நிலையாக வைப்போம்
ஒன்றுக்கும் குறைவில்லை ஒன்றிலும் குறையில்லை
அன்றாடம் அளப்பவன் நம்முடன் உளவரை
அருளினைப் பெறவேண்டி அண்டியே அவனடி
அனுதினம் வைப்போம் சென்னியில் மலரடி
இதனிலும் இனிமை எதனில் உண்டு
இம்மைக்கும் மறுமைக்கும் அவனருள் உண்டு
இந்த உண்மையை மனதினில் கொண்டு
தொழுதிடும் நமக்குப் பேரருள் உண்டு
4-6-15, குருகுலம், காலை 6.05
BT Song 303 One who provides every day.
Let us get up early in the morning and hail His name
And rejoice keeping our thoughts in Him
He will protect us as the apple of the eyes
And will lead us by our hands.
Though each day is going as usual
Like that though our life too runs
The one who stands firmly will protect us
And will become the anchor in this uncertain life.
The life will come to an end in a minute
By passing as ‘yesterday, today and tomorrow’.
And let us keep firmly the feet of the one
Who will take us permanently with Him?
Nothing is lacking and there is no shortage for anything
As long as He is with us who provides everyday
Approaching His feet to receive His grace
Let us keep His flower-like feet on our head.
Which one is sweeter than this?
His grace is there for both this life and next
Keeping this truth in our heart
As we worship Him His grace is for us always.
3-6-15, Gurukulam, 6-05 am.
As I got up very early, I sat to observe the beauty of nature with bird’s voices. It was a pleasant and beautiful morning. Though life is going as usual and also very fast, yet the unchanging grace of God remains the same. Last year I shifted back to Mathigiri. Many things happened in between. But the love and mercy of God remains the same. And thinking about it, I wrote this song.
BT Song 304. உண்மை புரியும்
இத்தனை கிருபை எனக்கு செய்தாய்
இதற்கு மேலாக நீ என்ன செய்வாய்
செத்தவனாகித் திரிந்தேன் உலகினில்
தேடி நீ வந்து என்னையும் மீட்டாய்
உத்தம குணமின்றி உறுதி எனிலின்றி
உடலே நிஜமென உலகில் வாழ்ந்தேன்
நித்தமும் சுகம் பல தேடியே ஓடி
கானல் பின் ஓடிய மான் போலும் ஆனேன்
கண்ட சுகம் எல்லாம் கனவு போல் மறைய
கதறினேன் என்னில் உண்மையை அறிய
ஓடினேன் தேடினேன் அதனையும் அடைய
உருகுலைந்து போனேன் உள்ளமும் உடைய
திசை அறியாது திகைத்து களைத்தேன்
திக்கு தெரியாத காட்டில் தவித்தேன்
தடமே காணாமல் தடுமாறித் திரிந்தேன்
தப்பிக்க வழியின்றி மயங்கி வீழ்ந்தேன்
கண் திறந்தபோது உன் கரத்தில் கிடந்தேன்
களைத்த என்னுடலை உன் மடிமீது கண்டேன்
திகைத்து எழுந்து உன் தோளில் சாய்ந்தேன்
ஏறிட்டுப் பார்க்க உன் திருமுகம் கண்டேன்
“யார் நீ” என்று கேட்கவும் தெரியாது
“எப்படி மீட்டாய்” என்பதும் புரியாது
சட்டென வீழ்ந்து உன் தாளினைப் பிடித்தேன்
அதை விட்டு பிரியாது இதுவரை கிடந்தேன்
மீட்ட உனக்கே காத்திட தெரியும்
காத்திட்ட உனக்கே கரைசேர்க்க தெரியும்
கரைசேர்த்த உனக்கே உடன்வர தெரியும்
உடன் நீ வர எனக்கு உண்மையும் புரியும்
அன்று தொடங்கி இன்று வரையில்
அறியத் தொடங்கினேன் கிருபையை மனதில்
அதற்கு மேலாக ஒன்றும் அறியேன்
ஐயனே உன்னடியன்றி வேறொன்றும் வேண்டேன்.
15-6-15, குருகுலம், மாலை. 7.30
BT Song 304. I realized the truth
You have shown this much grace
What can you do more than this?
I wandered like a dead man on this earth
And you redeemed seeking after me
Without having honesty and a firm mind
I lived taking the body alone as real
I sought so many pleasures
And become like a deer which chased a mirage
As all the pleasures which I sought disappeared like a dream
I cried within me to know the truth
I run everywhere and searched to attain it
And I collapsed with a broken heart
I become tired not knowing the path
I was get trapped in a forest without having any direction
I wandered unable to find the path to come out
Finally fell down fainted as there was no means to escape
When I woke up, I saw me in your hands
And I saw my tired body on your lap
When I got up with tiredness I again fall on your shoulder
And when I lifted up my eyes I saw your holy face
Unable to ask ‘who are you’?
Not knowing how you have redeemed me
Immediately I fell at your feet and held them firmly
And remain there till this day not leaving them
You know to protect me as you have redeemed me
You know to take me to the Further Shore as you are protecting me
You know to accompany me as you took me to the shore
As you come along with me, I realized this truth
From that day till now
I began to realize the grace in my heart
I don’t know anything beyond this
O my Lord, I won’t ask anything other than your feet
15-6-15, குருகுலம், மாலை. 7.30
Again, I got an opportunity to be alone in the ashram. As usual after my evening walk, I sat quietly immersed in the silence around me. Then I began to review my life from my student life. After spending time reviewing my life so far, I wrote this song.
As I say in stanza six ‘unable to ask who you are’; and ‘unable to recognize how you redeemed’ is the climax of my bhakti. As I say in the same stanza, without thinking further, suddenly I fell at His feet and held them. Then my theology began from there. For many starts from their head (brain) but for me it started from the feet of the Lord. When I began to share my bhakti journey through my songs, I gave the title ‘Bhakti Theology’ and I think this concept of ‘bhakti’ would be the richest contribution to the theology as a whole—as there are so many kinds of theology in the world. And all the conflicting theologies can finally take their refuge at the feet of the Lord than reasoned out through our heads (brain).
BT Song 305. ஒளடதமாவான்
அமைதியாய் இருந்து
ஆன்மாவில் நினைந்து
இதயத்தில் நிறுத்தி
ஈசனைத் தேடு
உடலைத் துறந்து
ஊக்கத்தை அடைந்து
என்றுமே அவனை
ஏங்கியே தேடு
ஐயமே வேண்டாம்
ஓடி வருவான்
ஓலம் கேட்டு
ஒளடதமாவான்
மனதில் நிறைந்து.
18-6-15. மத்திகிரி, மதியம் 2.40
BT Song 305. He will become the balm.
By remaining quietly
Thinking Him in atman
Keeping Him in the heart
Seek God.
Giving up the body
With enthusiasm
Seek Him always
With longing.
He will come rushing
Don’t doubt about it
He will become the balm
By filling the heart.
18-6-15 Mathigiri, 2.40 pm.
I returned back to Mathigiri on 17th after staying at the ashram nearly for six weeks. As usual after my afternoon reading, when I spent some time in prayer, one thought that came to my mind was ‘to remain quietly’. Then I couldn’t pray and began to think about it. Then I wrote the first line. But the next few lines came spontaneously in alphabetical order of Tamil letters. There is no reason for this. But then I recalled the very first song that I wrote back in my college days with Tamil alphabetical letters. Mere theology or philosophy won’t be the inspiration to write songs. It will come spontaneously as it is and nobody can predict which shape it will take. This is one such song. Again it is very difficult to translate such songs in another language.
Leave a Reply