BT Songs 311 to 315

BT Song 311. தயவுண்டு அறிவேனே

உன்னையே நினைப்போர்க்கு

உன்னடி வருவோர்க்கு

ஒன்றிலும் குறைவில்லை

உணர்ந்து நான் சொன்னேனே

தன்னை மறப்போர்க்கு

தன்நிலை மறுப்போர்க்கு

தன்னையே தருவோருக்கு

தயவுண்டு அறிவேனே

ஆத்திரம் கொண்டோர்க்கு

அவசரம் உடையோர்க்கு

அமைதி அற்றோர்க்கு

அருளில்லை என்பேனே

பொறுமை உடையோர்க்கு

பொறுத்துப் போவோர்க்கு

பொறுப்பை அறிந்தோர்க்கு

பெலனாவாய் அறிவேனே

குறையே காண்போர்க்கு

குறை சொல்லிப் பிழைப்போர்க்கு

குணம் காண மறுப்போர்க்கு

நலமில்லை புரிந்தேனே

இவையாவும் கொண்டேனே

ஆதரவிழந்தேனே

ஆனாலும் தள்ளாதே

என்று வந்தேனே

முறையிது ஆகுமோ

முனிவதும் தகுமோ

முறையிடும் அடியேனை

தள்ளுதல் நியாயமோ?

எங்கு நான் போவேன்

எவரிடம் கூறுவேன்

என்னநீ சொன்னாலும்

உன்னடி விலகேன்

19-7-15, நடு இரவு 12.15, மத்திகிரி

 BT Song 311. I know you have mercy

For those who think only about you

And who come unto your feet

Nothing is lacking

I tell this with experience.

Those who forget themselves

Who deny themselves

And give them for others

I know that you have mercy (for them).

Those who have angry

And too much frustration

Who have no peace within them

There is no mercy, this too I know.

Those who have patience

And who tolerate

Who understood their responsibility

You become their strength. I know this.

Those who find fault

Who live by complaining often

And refuse to see good in others

Will never have comfort, this I understood

I have all these within me

And I lost your support

Yet pleading not to forsake me

I come unto you

Is this correct on your part

Is it right for you to become angry with me?

Is it right for you to reject this slave?

Who comes and pleads unto you?

Where else can I go?

To whom I can tell this?

Whatever you say

I won’t leave your feet.

19-7-15, 12.15, am. Mathigiri

As I cannot sleep, I got up and began to think various things about the Lord and my relationship with Him.  When I think only about myself, I become more self-centred and self-righteous.  Then I get depressed. But when I think about my relationship with the lord; or His relationship with me, then I found a solace there. That time I wrote this song.

BT Song 312 கிளியே

தன்னையே தருவோனை

தாங்கியே அருள்வோனை

தெண்டனிட்டு பணிவேனடி–கிளியே

தினம் தினம் துதிப்பேனடி

உய்விக்க வந்தவனாம்

நாமுய்யத் தந்தவனாம்

உலகையே காப்பவனை–கிளியே

உவந்தே வாழ்த்துவேனடி

அன்றாடம் அளப்பவனாம்

அருள் தந்து காப்பவனாம்

அன்பருக்கு எளியோனை–கிளியே

என்புருகப் பாடுவேனடி

எளியவர்க்கு ஏற்றவனாம்

எளிமை கொண்டு வந்தவனாம்

எல்லோர்க்கும் ஈசனடி–கிளியே

என்று சொல்லிப் போற்றுவோமடி

தருவினில் மாண்டவனாம்

தன்னைத் தந்து மீட்டவனாம்

தரணிக்கே ஒரு மீட்பனடி–கிளியே

தம்பிரானைப் பணிவோமடி

என்ன சொல்லி வாழ்த்தினாலும்

எப்படிப் போற்றினாலும்

என்றுமே மாறானடி–கிளியே

என்னுள்ளே நிலைப்பானடி

21-7-15, மத்திகிரி, 2.40 மதியம்

BT Song 312 Parrot song

The one who gives Himself for us

And who supports us by His grace

I will bow before Him—O Parrot

I will Hail Him every day!

He came to redeem us

He gave Himself for us to be redeemed

The one who protects the world—O parrot

I will Praise Him with joy

The one who provides each day

The one who guards us

The simple one to the bhakta—O Parrot

I will sing with inner love

The one who is acceptable for the simple ones

The one who came with much humility

The One Who is God for all—O Parrot

We will glorify Him (as the Lord for all)

The one who died on the tree

The one who redeemed us by giving Himself

The single redeemer for the entire world—O Parrot

We will bow before the Master

How ever we praise Him

How ever we glorify Him

He will never change—O Parrot

And will remain within me.

21-7-15, Mathigiri 2-40 pm.

Last night I listened to a Carnatic music program.  The one song which is written in ‘Sandam’ music style continued to echo in my mind today also. Even when I was reading a book, the same kind of music was echoing within me.  Then I stopped reading the book and wrote this song in the same music form. This kind of Parrot song or addressing birds, animals, cloud, rain, wind are quite common in Indian music tradition.  I addressed this song to the Parrot. Nothing special in the meaning.  But if you listen to such a song the music will help you to get uplifted in your spirit.  If this song is sung in Sandam mixing with ‘Punnahavarali’ it will be marvellous.  I will post the voice recording soon. 

BT Song 313 வாழ்வேன் அருளாலே

நீ செய்த நன்மைகள் கொஞ்சமோ சொல்ல

நித்தம் அருளும் அந்த மேன்மையை

நெஞ்சாற நினைக்கிறேன் என் ஐயனே

நேசமாய் பணிகின்றேன் நானும் உன்னையே

கொஞ்சமல்ல நான் செய்த குற்றம்

குறைகளை எல்லாம் சொல்லவும் அஞ்சும்

குணம் கொண்டே தினம் வாழ்கின்றேனே

உன்னிடம் அதை முறையிட வந்தேனே

என்னுள்ளே நானும் கூசியே நின்றேன்

என்னையே நானும்  ஏசியே வந்தேன்

ஏதும் செய்ய இயலாமல் உன்னிடம்

ஏக்கம் கொண்டு மீண்டும் வந்தேன்

போனதை எண்ணி புலம்பினாலும்

புழுதியில் அமர்ந்து வருந்தினாலும்

பயனில்லை உணர்ந்தே மீண்டும்

பதம் அடைந்து பணிவேன் என்நாளும்

மன்னித்து நீ மீட்டுக் கொண்டாய்

மனதார என்னை ஏற்றுக் கொண்டாய்

அதனாலே இனிமேலே தினம் தினம்

வாழ்வேன் உன் அருளாலே மீண்டும்

23-7-15, மத்திகிரி, காலை 5.30

BT Song 313 I will live by your grace

Are the blessings that you bestowed are few to count?

I remember whole heartedly O my Lord

That grace which you provide each day

And bow unto you with true love.

Are the mistakes that have done are few to tell

And I live each day with fear

To confess all of them to you

Therefore, I came unto you to confess that.

I shrink with in me

And is rebuking me

Unable to do anything further

I came unto you longing again

There is no more use in

Lamenting about the past

And sit with remorse on the dust

Therefore, I will come unto your feet to bow.

You received me again by forgiving me

And wholeheartedly you accepted me

Therefore, I will live each day

Because of your grace again.

23-7-15, Mathigiri, 5.30 am.

As I got up very early in the morning after having tea, I read Muktiveda and began to pray.  Once again all the blessings that I received from Him alone occupied my mind.  As I began to count them one by one, there was no end.  Then stopping counting and praying, I began to write this song as the first line came as a prayer in my mind.  Then the rest of the song followed naturally and I completed this song as my prayer that day.

The human tendency is that we cannot forget the past that much easily. Though God throws our past sins in the deep water and puts a sign board ‘no more fishing’, yet a penitent heart will always remember the wretchedness of the past.  At least in my case, whenever I think about the grace of God, I remember in which situation I received His mercy. In my life, I was redeemed from such a confusion where I couldn’t find a solution to my inner struggle.  So, when I count the blessings automatically all that I have done in the past before receiving His grace raises their ugly head. Above all, it also helps me not to become ‘self-righteous’ when I see others in similar condition or judge them when I see others fall back. This is a riddle in a bhakta’s life: ‘we are saved sinners but struggling saints’.

11-8-15

BT Song 314 உபசாரம் செய்வேனே

மவுனம் என்ற மொழியாலே பாடி

மனம் என்ற வீணையை மீட்டி

சிந்தனையின் ஓட்டத்தில் தாளமும் போட்டு

தினம் பாடுவேன் உன் மீது பாட்டு

சதிராடும்  உள்ளத்தில் மேடையிட்டு

ததும்பும் உணர்வுடன் ஆட்டம் போட்டு

தந்ததம் தந்ததம் என்று முழக்கமிட்டு

நானும் ஆடுவேன் ஆனந்தக் கூத்து

இசையுடன் இனிய தமிழையும் சேர்த்து

இன்னமுதம் என்ற அன்பில் குழைத்து

பக்தியின் பரவசத்தில் உன்னையும் அழைத்து

பாங்குடன் அளிப்பேன் என்னையும் சேர்த்து

இதனினும் நல்ல உபசாரம் ஒன்று

எங்கு நீ பெறுவாய் சொல்லதை நன்று

ஏற்றுக் கொள்வாய் இதனை நீ என்று

ஏங்கி நான் வந்தேன் ஏழையும் இன்று

ஐயனின் திருப்பாதம் சிரம் மீது கொண்டு

எத்தனை உபசாரம் செய்வேனோ என்று

அரைகட்டி உன் முன்னே பணிவாக வந்து

எதிர்பார்த்துப் பணிவுடன் காத்திருக்கும் போது

வாசலில் நின்று நீ தட்டவும் வேண்டுமோ

“உள்ளேவா” என்று நான் சொல்லவும் வேண்டுமோ

ஆவலுடன் உன் வரவை எதிர்பார்க்கும் அடிமைக்கு

இதனினும் ஆனந்தம் வேறேதும் வேண்டுமோ

23-7-15, மத்திகிரி, 11.45 இரவு

BT Song 314 I will do upacharam

By singing with the language of silence

By tuning the veena (harp?) of heart

Giving thala (beat) with my mind

I will sing songs each day.

Arranging the stage in my heart

Dancing with brimming emotions

With a thala of ‘tandattam’

I will dance the joyful dance.

Adding music with sweet Tamil

Mixing with the nectar of love

Inviting you with the bliss of bhakti

I will offer myself to you with all these (upacharas = services)

Is there any better upacahram other than this?

Tell me where you will receive other than here

You accept this with a pleasing heart

This poor came with inner longing today.

By keeping your feet on my head, thinking,

How many upacharams can I perform?

When I was waiting for you with much humility

By tying the towel in my waist

Do you need to knock on the door by standing outside?

Do I need to say, ‘Please come in’?

Do I need bliss more than this?

As this slave is waiting for your visit with much enthusiasm?

23-7-15, Mathigiri, 11.45 pm.

This is a beautiful experience which is very difficult to translate in English.  The word ‘ubacharam’ is used for all the seva that we need to do to a guest.  Traditionally it is known as ‘sodacha upacharam’ =sixteen@ kinds of ‘upacharam’. 

Of course, this is done to a deity. But the context is that a deity is treated as a ‘guest’ in a house. So, all the sixteen upacharas done to the guest also should be done by the deity.  Though these are written in the context of a Brahmin receiving another Brahmin as a guest, yet many parts of them are done till the recent past and few are still practised—as part of our tradition. 

But tonight when I begin to sit for my regular meditation, I try to do my sadhana of ‘silence’, which I like the most.  Then some inspiration prompted me to write a poem. Then I said, ‘let me remain silent. As even writing a song spoils the sadhana of silence’.  But I cannot continue much as the inner compulsion began to write the song in my mind.  As the line began to flow, I took a paper and wrote this song, telling what kind of ‘upacharam’ that I can do for the Lord.

I know I cannot give the correct and best translation for this song.  But if you want to understand the mood and the spirit in which I wrote this song, you have to read that rough translation. Otherwise, learn Tamil to understand the meaning and the mood of this song.

@…The sixteen types of service are:–invocation (Aavaahana); offering the seat (Aasana); water offering (Arghya); washing of the feet (Paadya); water for rinsing the mouth as a mystical rite (Aacamana); oil bath (Abhyanga snaana); (p.69) offering of cloth (Vastra); Scents (Gandha); flowers (Puspa); incense (Dhuupa) lamps (Dipa); food offering (Nivedana); waving of lights (Niiraajana); betel leves (Tambuula); obeisance (Namaskaara); and mystical discharge and conclusion (Visarjana).—ANCIENT INDIAN TRADITION & MYTHOLOGY; Translated by A board of Scholars, Edited by Prof. J.L.Shastri, Delhi; Mothilal Banarsidass Pub. Pvt. Ltd. (1970), 2002, The Siva Purana Four Volumes, notes Vidyesvarasamhitaa,  pp. 69-70

23-7-15, Mathigiri, 11.45 pm.

BT Song 315 மேன்மை வழி

என் கோபம் பிறரை ஒன்றும் செய்யாது

என் நீதி இறைவனின் நீதியைக் காட்டாது

சுயநீதி கொண்டு நான் குறை காணும் போது

என்கண் உத்திரம் எனக்கும் தெரியாது

அருகினில் நெருங்கினால் நெருப்பும் மிகச்சுடும்

மிகவும் உரசினால் பாத்திரம் ஓசையிடும்

தூரத்துத் தாளமோ காதிற்கு இனிதாகும்

சற்றே விலகினால் உறவும் சுகம் தரும்

விட்டுப் பிடித்தால் தான் உண்மையும் விளங்கும்

இருபுறம் இழுத்தால் நூலும் அறுகும்

விட்டுக் கொடுப்பது எவரென்ற கேள்விக்கு

சட்டென பதிலோ “பிறர்” எனத்தான் வரும்

முதிர்ச்சி அடைந்தோரும் முரண்டு பிடிக்கார்

முதுமை அடைந்தோரும் விட்டே கொடுப்பார்

“துள்ளுகின்ற மாடு பொதி சுமக்கும்” என்பதை

தன் வாழ்வின் மூலம் எவரும் அறிவார்

இளம் கன்றோ என்றும் பயமே அறியாது

இளமைக் காலத்தில் பிறர் சுமை புரியாது

ஆயினும் தேகம் ஒடுங்கிடும்போது

ஆட்டம் போட யாராலும் ஆகாது

பிறர்க்கு வருவது தனக்கும் வருமென்று

புரிந்து கொண்டோரும் குறை காண மாட்டார்

இறுதி வரையில் எதுவும் மாறாது

என்று நினைப்போரும் சடுதியில் விழுவார்

கோபம் கொண்டாலும் பாவம் செய்யாது

குற்றம் இருந்தாலும் குணம் காணப் பழகி

விட்டுப் பிடித்து தட்டிக் கொடுத்து

வாழ்வது அன்றோ மேன்மை வழியாகும்

27-7-15, மத்திகிரி, மதியம் 2.30

BT Song 315 Noble means

My anger won’t have any influence on others

My ‘righteousness’ won’t DEMONSTRATE God’s Righteousness

With ‘self-righteousness’ when I began to find fault in others

The log in my eyes won’t be visible.

If we mover very close, the fire will burn us

If we keep the vessels close (to each other) they will make noise@

The tala (drum beating) from a distance alone will be pleasant to listen#

Only by keeping some distance, the relationship also be good. %

Only by give and take truth will be realized

If the thread is pulled from both sides, it will be broken

But to the question, ‘who should give up (or adjust) first’

The immediate answer will be ‘the other’.

Those who are matured won’t be adamant in this

The old always give up first (as there is no choice for them)

Everyone will learn the lesson that:

‘The cattle which jumps too much alone will carry heavy load’&

The young calf never experience fear$

The ‘youth-hood’ won’t understand others burden

Yet once the body becomes weak

Nobody can ‘play’ too much

Those who realize that things will come to them which happen to others

Won’t find fault in others

Those who think that nothing will change till the end

Will fall suddenly

Not committing sin though become upset with anger

Learning to see good in others though they have shortcomings

By give and take and encouraging

Living alone is the noble means.

@ ‘nasdik ka bartan bahut takarata hi’ –a Hindi proverb

# ‘dooor ka dol suhavan’—a Hindi proverb

% Familiarity breeds contempt

&’Tullura maadu podi sumakkum’—a Tamil proverb

$ A Tamil proverb.

27-7-15, Mathigiri, 2.30 pm.

Another song expressing the ‘generation gap’ between the old generations with the youths. The line that divides between ‘disciplines’ versus ‘moral policing’ is very thin.  When I become upset and rebuke for the irresponsibility on the part of young people, they become more rebel. The loss is not something material, though that is the starting point. Particularly if that loss is not personal but that of others and when the youths don’t take it seriously, it bit disturbs me. But this tension between the ‘old’ and ‘young’ generation is the old rhetoric: the old always complaining and the young always ignoring.  This reminds me one thing that I read about Socrates.  He said, ‘the present young generation has no respect for the old.  They often waste their time and become very lazy.  They love to stand before the mirror and admire their own body and beauty etc.’ (these are not the exact words but something similar).  Now we can replace the word ‘mirror’ to ‘mobile’ that too smart phone or computer.  If this kind of generation gap existed (in record) some 2,500 years before, it will continue to exist in future too.  But who to adjust is a big question. Most of the time the elders give up as there is no choice for them.  Though we all share in some universal problem, each situation (or person) needs separate solution.  And for me that solution is writing this kind of poem or a brain storm in the name of ‘article’ (by an old man which again the youths will continue to ignore.).

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *