BT Song 331 உடனே வருவான்
உருகி அழைத்தால் உடன் வருவான்
உளமாற பணிவோர்க்கு அருள் தருவான்–உருகி…
கன்றின் குரல் அறியாப் பசுவும் உண்டோ
கண்ணீர் விட்டால் தாயின் (அவன்) உள்ளமும் கரையாதோ
“அடைக்கலம்” என்று (நாம்) அவனடி சேர்ந்தால்
“அபயம்” அளித்து நம்மை ஆதரிக்கானோ–உருகி
அவனன்றி நமக்கு கதி வேறு உண்டோ?
நம்மை விட்டால் அவனுக்கு உறவேதும் உண்டோ?
மண்ணுயிர் காக்கவே தன்னுயிர் அளித்தவன்
மெளனமாய் இருப்பானோ நாமுமே அழைக்கயில்–உருகி
இரு விழி நீர் சொரிய கரம் கூப்பி சிரம் தாழ
மேனியும் விதிர்விதிர்த்து நா குழறி பேசிழக்க
ரோமமும் சிலிர்த்தெழ உள்ளமும் கரைந்திட
மொழியின்றி நாமழைக்க மவுனமாய் இருப்பானோ–உருகி
பாடிப் போற்ற வேண்டாம் பல வார்த்தை சொல்ல வேண்டாம்
ஓடி தேட வேண்டாம் உணர்ச்சியில் துள்ள வேண்டாம்
மெளனமாய் அமர்ந்(திருந்)து மனதாரத் தொழும்போது
அருகினில் வந்து (நமக்கு) அமைதி தருபவன்–உருகி
7-9-15, மத்திகிரி, இரவு 11.30
BT Song 331 He will come immediately
with a melted heart if we call Him He will come immediately
and will bestow His grace for those who wholeheartedly bow to Him.
Is there a cow which does not recognize the voice of her calf?
If we shed tears won’t His (mother’s) heart too melt?
If we seek His feet as the only refuge
Won’t He take care of us by giving ‘abhayam’@?– with a melted heart?
Do we have another other abode other than Him?
Does He have any other relatives other than us?
The one who gave His life to save the human beings
Will remain silent when we call upon Him? — With a melted heart
Both the eyes pouring the tears and bowing our heads by folding our hands
The body also with a shivering and the tongue getting twisted by
losing all kinds of talk
The hairs also stand still and the heart also melts.
When we call upon Him without knowing any words, will He remain
silent? — With a melted heart
We don’t need to praise Him by singing songs and we need not utter
many words (in prayer)
We need not run pillar to post seeking Him and we need not jump with emotion.
Sitting silently when we worship Him wholeheartedly
The one who come near to us and give His peace– With a melted heart
7-9-15, Mathigiri, 11.30 pm.
That was a wonderful meditation tonight. Though we cannot despise
emotion in our life, yet we need not and cannot live all the time only
with emotion. Particularly when we sit silently—though our
mind/thought will wander, the communion between Bhagavan and
bhakta (atman with Pramatman) will force us to sit eternally in that
state. No words can explain such sadhana, unless one personally went
through it in her life. This song is the outcome of such sadhana.
The word ‘abhayam’ actually means a + bhayam =no fear. When anyone
seek refuge to one the first thing that she will get is ‘don’t be
afraid’. In Indian religious and bhakti context giving ‘abhayam’ is
considered not only a virtue but also a dharma for any hero and God.
When Vibhishna seek refuge at Rama, though many, including Sugreeva
tell Rama not to give it to Vibhishna, suspecting that he came as a
spy, Rama not listening to them, says that it is his dharma to give
‘abhayam’ even if Vibhishna came with the wrong motive. I am not sure
what the English word is for this.
BT Song 332 குருவை அடைந்தேன்
யாரென்று தெரியவில்லை
எவரென்று புரியவில்லை
இறைவனைத் தேடினோர்
இதுவரை அறியவில்லை
தெரிந்ததைச் சொன்னார்
புரிந்ததைத் தொழுதார்
அறிந்ததை உரைத்தார்
ஆயினும் புரியலை
நானுமே முயன்றேன்
தேடியே அலைந்தேன்
பலவழி சென்றேன்
தோல்வியே அடைந்தேன்
இனியென்ன செய்வது
ஏன் வீணில் முயல்வது
என்று எண்ணியே
விரக்தியும் கொண்டேன்
ஆயினும் ஒரு வழி
எனக்கும் கிடைத்தது
மன இருள் நீக்கும்
குருவை அறிவது
எங்கெங்கோ தேடினேன்
என் வரை முயன்றேன்
நாடிய குருவைத்
தேடியே அடைய
எங்கு தேடினும்
எப்படி முயன்றும்
இறுதி வரையில்
குருவை அடையலை
அருளுடன் இறைவனும்
எனை நாடி வந்து
ஆட்கொண்டு காட்டினான்
தானே குருவென்று.
10-9-15, இரவு, 11.15, மத்திகிரி.
BT Song 332 Found my Guru
Nobody knows who He is?
They cannot even recognize Him
Those who searched for God
Have not yet understood Him
They shared what they know
And worshiped what they understood
And told what they realized
Yet I cannot understand.
I too strived
And searched everywhere
Followed so many paths
But was defeated.
‘What else can I do?
Why should I even strive in vain?’
Thinking like this
I became depressed.
But I received
One way
That is to know the guru
Who will remove the darkness of my heart?
I searched in so many places
And have done my best
In order to find out that guru
Whom I was seeking
Wherever I searched
However I tried
Till the end
I didn’t receive my guru
God having mercy upon me
Seeking after me
Revealed that He is that Guru
By redeeming me.
10-9-15, 11.15, pm. Mathigiri.
Another song when I was meditating on my own search for a guru. Such repeated reflection back to my journey often helps me not only to renew my basic understanding about my search but also to enjoy my relationship with my guru with reverence and love.
BT Song 333 காண வேண்டும்
காண வேண்டுமையா
மனக் கண் திறந்து உன்னையும்–காண…
குருடரின் கண்திறந்து அவரைக் குணமாக்க
உன்னைப் பின்தொடர அவரும் வந்ததுபோல்
உன்னை அறிந்த பின்னும் உண்மை புரிந்த பின்னும்
உள்ளம் குருடாகி இருளில் உழலாமல்–காண…
அனுதினம் உன் வேதம் தவறாது படித்தாலும்
அமைதியாய் உன் பாதம் தியானிக்க அமர்ந்தாலும்
பலவார்த்தை மிகச்சொல்லி ஜெபமே செய்தாலும்
பதற்றம் பலகொண்டும் நிம்மதி இழக்காமல்–காண…
நாளை தேவையெண்ணி நல்ல செயல் செய்து
இன்றே பொருளைச் சேர்த்து வைத்தாலும்
வகுத்தான் வகுத்த வகையே அல்லாமல்
தொகுத்து வைத்துத் துய்க்க என் சித்தம்–காண…
நலமுடன் இந்நாளும் கழிந்தே போனாலும்
நாளைய தினத்தின் பாடெண்ணிக் கலங்காமல்
இன்று போலவே நாளையும் நடத்திடும்
இறைவனின் துணையும் இருப்பதை நானும்–காண…
16-9-15, மத்திகிரி, மதியம் 2.10
BT Song 333 I should see
I should see you
By opening the eyes of my heart—I should see….
As the blind persons followed you
After you have healed them
After knowing you and understood you
Not becoming a blind to wander in the darkness–—I should see….
Though I read your Veda each day
Meditate sitting silently at your feet
Uttered prayer by using so many words
Yet not giving up the peace due to frustration—I should see….
Though I collect things through righteous means
For the need of tomorrow
To know your will to enjoy them
Unless God ordained for that—I should see….
Though this day passed in a peaceful way
Not to be troubled by thinking about the trouble of tomorrow
To see the presence of God
To lead tomorrow like today—I should see….
16-9-15, Mathigiri, 2.10, pm.
After doing my regular Muktivedic reading (Mt. 20:29-34), when I was reflecting about the way the blind persons who responded to the Lord, I too prayed that though I do my regular sadhana of every kind, yet I must always keep His dharshan within me, I wrote this song.
BT Song 334. குறைய என்ன உண்டு?
தொழுது கொள்ள திருவடி யுண்டு
சேர்ந்து கொள்ளத் தொண்டர்கள் உண்டு
அருளை அளிக்க ஐயனும் உண்டு
அடிமைக்கு இனி வேறு குறையென்ன உண்டு?
எத்தனையோ தேவை என்னையும் நெருக்க
எண்ணிலாக் கவலைகள் அனுதினம் கலக்க
இவற்றிடை நானும் அமைதி கொண்டு
என் ஐயனைப் போற்றக் கிருபையும் உண்டு
மாமிச தேகத்தில் பலவிதப் பாடுகள்
மனிதர்கள் இடைய உள்ளது பிணக்குகள்
ஆயினும் அவை அனைத்தையும் பொறுக்க
ஆன்மாவில் ஆனந்தம் உண்டு களிக்க
தீமையே இல்லாத நன்மையும் இல்லை
திருப்பங்கள் இல்லாமல் நிகழ்வுகள் இல்லை
இவற்றின் ஊடே அமைதியும் அளிக்க
இறைவனும் வந்தான் என்னுடன் நடக்க
கவலைகள், கலக்கங்கள், கஷ்டங்கள், நஷ்டங்கள்,
நோயுடன் நெருக்கங்கள் நிதம் நிதம் பிணக்குகள்
இல்லாத வாழ்க்கை எங்குமே இல்லை
ஆயினும் இவைமட்டுமே வாழ்க்கையும் இல்லை
இவை போன்ற பலவற்றை அனுமதித்தாலும்
எவ்விதம் என்னை அவன் சோதித்தாலும்
அவன் மீது நான் கொண்ட அன்பும் மாறாது
அவனையும் என்னையும் ஏதுமே பிரிக்காது
தொழுது கொள்வேன் திருவடி தன்னை
சேர்த்துக் கொள்வேன் தொண்டருடன் என்னை
அருளை அளிப்பான் ஐயமே இல்லை
இதனினும் மேன்மை வேறெதும் இல்லை.
18-9-15, மதியம், 2.00, மத்திகிரி.
BT Song 334. Nothing I lack
The Holy feet are there for me to worship
Other bhaktas are there for me to have fellowship
The Lord is there to bestow grace
What else does this slave lack anymore?
So many needs confronting me
Many troubles disturbing me each day
Amidst this to have peace
I have the grace to glorify the Lord
Many sufferings are there in this mortal body
Many misunderstandings are there with others
Yet to bear all of them
I have the anand (joy) in my atman to rejoice (in Him)
There is no goodness without a mix of evil
There are no events without so many turning points
To provide peace amidst these
God came to walk with me (each day)
There is no life without
Worries, troubles, sufferings, losses
Sickness added with constraints, conflicts each day
Yet all these are not alone life
Thou He allows many more like these in my life
However He tests me (by allowing all these trails)
The Love that I have to Him won’t change
And nothing will separate me from Him.
(Therefore) I will worship the Holy feet
I will join with other bhaktas
There is no doubt that He will bestow grace
And there is no nobleness more than this.
18-9-15, 2.00, pm. Mathigiri.
After my regular reading of Muktiveda and sadhana, I was reflecting upon the grace of God and the fellowship of other bhaktas. Though there are constraints and troubles in life, what sustains me each day is His grace, my love to Him and the fellowship of the bhaktas. When I was meditating upon this, I wrote this song.
BT Song 335. நேரமாச்சு
வாழ்க்கையும் ஓடிப்போச்சு
வாழ்ந்துமே முடிச்சாச்சு
எது எப்படி போனாலும் இனி
எனக்கென்ன கவலையாச்சு
உருண்டு புரண்டுமாச்சு
ஓடியாடிப் பார்த்துமாச்சு
ஒதுங்கி உட்கார்ந்த பின்னே
தெய்வமே துணையுமாச்சு
கஷ்டம் நஷ்டம் பார்த்துமாச்சு
கவலை நிறைய பட்டுமாச்சு
கடைசி இந்தக் காலத்திலே
காலன் வர நேரமாச்சு
நேசம் பாசம் பார்த்துமாச்சு
நிறைவாக வாழ்ந்துமாச்சு
நினைவெல்லாம் போனபின்னே
இடம் காலி பண்ண நேரமாச்சு
18-9-15, மத்திகிரி, இரவு, 11.15
BT Song 335. Time has come
Life has gone
Living came to an end
Why should I worry?
If things go in any way?
I have toiled enough
I have run enough
Once now stand still
God alone became my companion
Loss and pains I have seen
Enough I have worried
Now at this end of life
Time has come for the Yama to come
I have seen enough affection and love
I lived a content life
Once the memory has gone
Time has come to vacate the place.
18-9-15, Mathigiri. 11.15, pm.
Some kind of joy and peace overwhelmed me throughout the day. It was not a mere emotional feeling. This afternoon after my regular Muktivedic reading, when I was thinking about the grace of God which I received abundantly, I wrote one song (see song 334). Then the night after my regular readings, when I sat for a few movements silently the first line in Tamil automatically came in my mind. Then I wrote this song. After writing this song I said to the Lord, ‘yes, I am ready for homecoming, as the time has come to vacate the place on earth’.
Leave a Reply