BT Songs 366 to 370

BT Song 366 முதுமை வந்தது

என்னால் முடிந்ததை நானுமே செய்கிறேன்

இதற்கு மேலானதை நீ தான் பார்க்கணும்

என்னால் முடியும் என்று நான் எண்ணாமல்

உன்னுடன் இணைந்துதான் எதையும் செய்யணும்

செய்திடும் செயலிலே மனதையும் வைக்கணும்

சிறிதே செய்தாலும் சீராகச் செய்யணும்

முடியாமல் போகும்போது முடிந்ததைச் செய்யணும்

முடியாதென ஒதுங்கினால் முடமாகி தான் போகணும்

பணிபல செய்யவே பாரினில் வந்தோமே

பணியின்றி வாழ்வுமே பாழாகிப் போகுமே

அதிகப் பணிகளும் ஆபத்தாய் போகுமே

ஆயுளுக் கேற்றார் போல் வாழப்பழகணுமே

தோள் பலம் கொண்டு செயல்பட ஒரு காலம்

தோள் கொடுத்து பிறருடன் செய்வதும் ஒரு காலம்

தேகம் தளர்ந்திட பிறர் பெலன் கொண்டுமே

செயலைச் செய்வது முதுமையின் அடையாளம்

முதுமையும் வந்தது முழுமையாய் ஏற்கிறேன்

முடமாக்கி போடாதே உன்னையும் வேண்டுறேன்

என்னால் முடிந்ததை நானுமே செய்திட

என்னை நீ தாங்கிட உன்னையே வேண்டுறேன்

1-1-2016, மத்திகிரி, மதியம் 2.55

BT Song 366 Old age has come

I do which is possible for me

More than this you alone need to take care

Not thinking that I can accomplish (everything)

I should do anything by joining with you.

I need to concentrate whatever I do

Even if I do little, I should do it at my best

When impediment come then I should do whichever is possible by me

If I avoid giving excuses, then I will become useless one.

We came to the world to do many works

Without work life will become barren

Over working also become dangerous

We need to live according to our age

There was a time when accomplished depending upon our strength

There is time when we worked along with others

Once the body become weak, doing things with others help

Is the sign of old age!

Old age has come and I accept it

But don’t make me cripple that is one thing I beg you

In order to do what I can do

I pray unto you to uphold me.

1-1-2016, Mathigiri, 2.55 pm.

Though I accepted that I have reached the retirement age, yet I realized that the spirit of doing something all the time (workaholic?) is not possible any more. So the best way to handle old age is to understand my limitations and do my best, not become a burden to others by over working. Then I wrote this song.

BT Song 367 வாக்கை மறந்தாயோ

வாக்கை மறந்தாயோ வள்ளலே

வழித் துணையாக வாராயோ?

சோதிக்கும் காலமோ இது

சொல்லிடப் போமோ இது

ஏதுக்கிதை நீ அனுமதித்தாய்

சோதனைக்கேன் இடம் கொடுத்தாய்–வாக்கை

ஓடித் திரிந்தேனே தினம்

உன் பணி பல செய்தேனே

நாடிச் சென்றேனே சில

நல்லதை நான் செய்வதற்கு–வாக்கை

அதிகம் உழைத்தால் நானும்

களைத்துப் போவேன் என்றே

ஓய்வு கொடுக்க எண்ணி

இங்கு உட்கார வைத்தாயோ–வாக்கை

தேகமே சற்று ஓய்ந்துபோகுது

தோலும் கூடவே வாடிப்போகுது

ஊனும் சற்றே தளர்ந்து போகுது

உடலும் சற்றே தடுமாறும் போது–வாக்கை

உன் சித்தம் இனி எதுவானாலும்

அதன்படியே எனக்கும் ஆகட்டும்

உன் சித்தம் நாளும் அறிந்திடும்

மனம் மட்டும் தொடரட்டும்–வாக்கை

2-1-2016, மத்திகிரி, காலை 9.15

BT Song 367 Did you forget your promise?

Did you forget your promise O Charitable One?

Won’t you accompany me in my pilgrimage?

Is it time to test?

Can I utter it to you?

Why did you allow this?

And permitted this trial?—did you….

I was busy each day

I have done many of your sevas

And tried to do some

Good things in life too!—did you…

But if I over-work

As I will become tired

Thinking to give some rest

You made me sit like this?—did you…

Body become tired

And skin also began to shrink

The strength also gone

And as the body began to stumble—did you….

Let things accomplished for me

According to your will

And let my mind continue to know

Your will for me each day—did you….

2-1-2016, Mathirigi, 9.15 am.

Again due to severe lower back pain, I cannot do much work and was laying down most of the time. Somehow I managed to cook food for me and my mother and then came and lay down on the cot.  As I cannot do any other work, and at the same time unable to sleep due to severe pain, I began to question the Lord about allowing this in my life. That time I wrote this song, lying down on the cot.

BT Song 368 புரியாத உன் குணம்

கண்ணுக்குத் தெரியாது

            காக்குது உன் கரம்

கருத்துக்கு புரியாது

            தாங்குது உன்னறம்

மனதிற்குப் புரியாது

            இருக்குது உன் குணம்

மனிதர்க்கும் விளங்காது

            மாறாத உன் மனம்

உலகுக்குப் புரியாது

            உன்னத உன்னீகை

உன்னைத்தந்து என்னை மீட்ட

            ஒப்பிலா மீட்பை

எவர்க்கும் புரியாத

            தெய்வீகப் புதிரை

உரைத்திட முயன்றேன்

            என்ன பேதமை

தினந்தோறும் உடன் வந்து

            திருக்கரம் நீட்டி

தொடர்ந்து நடந்து

            என் கரம் பற்றி

தடுமாறும் நேரத்தில்

            தூக்கி அணைத்து

தாங்கிப் பிடிப்பதை

            உணருது பக்தி

நல்ல வேளை இந்த

            பக்தியைத் தந்தாய்

நாளும் பணிய ஒரு

            புத்தியை அளித்தாய்

உன்னையே வணங்கிட

            மனதையும் கொடுத்தாய்

உன் புகழ் பாட

            சொற்களைத் தந்தாய்

கண்களால் எதற்கு

            பார்க்கவும் வேண்டும்

கருத்துக்கு ஏனது

            புரியவும் வேண்டும்

மனதும் முழுதாய்

            உணராத போது

மனிதர்க்கு மட்டுமா

            உன் குணம் விளங்கும்

கபடமே அறியாக்

            குழந்தையைப் போல

களங்கமே இல்லாத

            நீர்நிலை போல

சிந்தை தன்னை

            உன்னறம் கொண்டு

தெளிவாக விளங்கும்

            உன் குணம் எவர்க்கும்

2-1-2016, மத்திகிரி, 1.30 மதியம்

BT Song 368 unfathomable nature

Invisible to human eyes,

Your hands are protecting us

Incomprehensible to human inference

Your dharma upholds

Beyond to human understanding

Is your nature

Humans cannot grasp

Your unchanging heart!

World won’t understand

Your noble sacrifice

The way you redeemed me

By giving yourself

The divine riddle

Which no one can think through?

I tried to utter

What kind of foolishness is this?

Each day accompanying me

By stretching your Holy hands

And walking along with me

By upholding my hands

When I stumble

The way you uplift and hug

Bhakti understands

The way you uphold me

Fortunately you gave

This bhakti to me

And you gave a buddhi

To bow unto you

And you gave a heart

Only to worship you

And you gave words

To praise you

Why should I see you?

With my naked eyes?

Why should I understand?

Through my reason

When even heart cannot

Comprehend it totally

Can human beings understand?

Your nature?

Like the innocent child

Which does not have any cunning?

Like a water body

Which is crystal clear?

When we cleanse

The mind with your dharma

Then all can understand

Your noble nature.

2-1-2016, Mathigiri, 1.30 pm.

Today when I opened Muktiveda for my regular reading, I couldn’t do it. Kept the Muktiveda open on my lap, I began to think about the Lord.  I realized that the invisible hands of the Lord are carrying His bhaktas each day.  Though I cannot see it or experience it, my bhakti helps me to understand it. Then I wrote this song expressing that understanding.

BT Song 369 வேதமே ஆதாரம்

ஆதாரம் அன்றி ஏதுமே நிற்காது

அவன் அருளன்றி வாழ்வும் நிலைக்காது

ஓயாது அலைமோதும் வாழ்வில் கூட

அவன் வார்த்தையின்றி நங்கூரம் கிடையாது

ஓயாது போராடும் உணர்ச்சி யினாலும்

ஒரு நொடி நிலைக்காத சிந்தையாலும்

எதிலுமே நிலைக்காத புத்தியினாலும்

இறைவனை அறிவது ஒருக்காலும் முடியாது

தன்னையே தந்தான்  நாமுய்ய வேண்டி

தன்னாவி தந்தான் நாம் வளர வேண்டி

தன்வேதம் தந்தான் நாம் அறியவேண்டி

தொண்டரைத் தந்தான் நான் தொழ வேண்டி

தன் வரை பக்தியில் திளைதிருந் தாலும்

தனித்து அவனுடன் மகிழ்ந்திருந் தாலும்

பக்தியில் திளைக்க புத்தியில் சிறக்க

அவன் வார்த்தையன்றி வேறேதும் உதவாது

அவன் வேதம் தன்னை ஆதார மாக்கி

அவனாவி தன்னை ஆசானு மாக்கி

பக்தருடன் சேர்ந்து சீடரும் ஆகி

பணிந்தே கற்போம் சற்குருவை நாடி

3-1-2016, மத்திகிரி, இரவு, 11.30

BTR song 369 Veda is the Foundation

Without foundation nothing will withstand

Without His grace our life won’t sustain

In this life of unceasing wave

There is no other anchor other than His Words

We cannot understand God through our

Emotion which constantly fight with us

Or through the mind which never remain constant

And through the buddhi which never remains stable

He gave Himself for us to be redeemed

He gave His Spirit for us to grow

He gave His Veda for us to know Him

He gave other bhaktas for us to worship with them

However we delight in our personal bhakti

And remain happy with Him in our private sadhana

In order to dwell in bhakti and grow in buddhi

Nothing will help other than His Words

Keeping His Veda as the foundation

And making His Spirit as our Acharya

Becoming His shishyas along with other bhaktas

Let us learn from Sat-Guru.

3-1-2016, Mathigiri, 11.30 pm.

As I was sharing the importance of ‘studying’ the Word of God, rather than merely reading it every day as part of sadhana, I wrote this song.  For me the Word of God gives the foundation for our bhakti in the Lord. Though I cannot understand everything in it clearly, yet all that I try to understand through my study and interpretations are like the superstructure which I can change only the foundation of the Word of God.  This is true in most of the sampradaya also in India.  Though Hindus claim that it is not a religion of a book, yet the role of scripture plays an important role in most of the sampradayas. 

BT Song 370 உன்னருள்

எப்படியோ உன் கிருபைதான் தாங்குது

ஏந்தியே நாளும் என்னை சுமக்குது

என்பெலன் தன்னைச் சார்ந்து வாழாமல்

உன்னிலே நிலைக்க என்னையும் வைக்குது

சுமக்க முடியாமல் சுமக்கிறேன் வாழ்வை

சொல்ல முடியாது படுகிறேன் வேதனை

ஆயினும் எதுவுமே எல்லை தாண்டாமல்

அருளினைத் தந்து காப்பதுன் மேன்மை

சொல்லாலும் மொழியாலும் கூறவே முடியாது

சிந்தையாலும் கூடப் புரியவே இயலாது

உள்ளாக இருந்து உணர்வில் அடையும்

உன் கிருபையின் இயல்பைக் கூறவும் முடியாது

அருளுக்கு அருளினை அளித்தவன் அல்லவோ

அன்பர்க்கு எளியனாய் வந்தவன் அல்லவோ

அவனியின் பாவமே சுமந்தவன் அல்லவோ

அந்த உயர்வினை இன்னுமே சொல்லவோ?

சொந்தம் எனக்காகி வந்த உன்னருளினை

சொந்தம் எனையாக்கி ஆண்ட உன் மேன்மையை

சிறுசங் கெடுத்துக் கடல் நீர் இரைத்தாற்போல்

சிலசொல்லல் கூற முயல்வதென் பேதைமை

ஆயினும் பேதைக்கு அருள்வதுன் குணமாச்சு

அதுபோல் ஞானிக்கு மறைப்பதுன் இயல்பாச்சு

அருளினை அறிகின்ற மதி கொண்டு வாழாத

பேதைக்கு அருள்வது உனக்கும் உயர்வாச்சு

6-1-16; 9-1-16, மதியம் 2.55 & 2.45, மத்திகிரி.

BT Song 370 Your Grace

Somehow your grace upholds me

And upholding me it carries me each day

Not living depending upon my strength

It helps me to abide in you

I carry the burden of life unable to carry it

And I suffer a lot, which I cannot utter

But not allowing anything to cross its limit

Protecting me through your grace is your greatness

It is beyond to utter through words and language

It is beyond to understand through the mind

As we can attain it through the inner intuition

It is impossible to tell the nature of your grace in words

You gave grace even to the grace

You become simple to the bhaktas

You carried the sin of the world

Am I needed to utter its greatness anymore?

Your grace which came to make me your own

And the nobleness which over lorded me making me your own

How foolishness is it to utter it with few words

Like (one) trying to dry the ocean with the help of a small shell?

Yet bestowing grace become your character

Similarly hiding it to the wise become your nature

And blessing this fool with your grace become your greatness

As I live with a mind which does not understand that grace

6-1-16; 9-1-16, 2.55 & 2.45 pm. Mathigiri

Without any motivation, life becomes meaningless.  Simply living a life, as we need to live, becomes a burden.  Particularly most of the elderly people realize this.  Though life became a burden, my bhakti always reminds me that the best motive for me to live is to continue to enjoy the bliss of bhakti. As I was thinking in this line, I wrote this song.  Though I wrote the first two stanzas on 6th, I completed it on 9th.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *