BT Song 381 நினைக்க வேண்டும்
அலைமோதும் மனதுக்கு அமைதி வேண்டும்
அடங்காத மதிக்கும் ஓர் எல்லை வேண்டும்
நினைவாலும் மனதாலும் நாடவேண்டும்
நித்தம் உன் பாதமே நான் தொழவேண்டும்
கண்ணுக்குப் புறம்பாக நீ நின்ற போதும்
கருத்துக்கு எட்டாது ஆனபோதும்
உணர்வின் ஊடாக என்னுள் வந்து
ஒன்றாகி என்னையும் நிதம் ஆள வேண்டும்
சொன்னதைச் சொல்லியே வந்தபோதும்
ஒன்றும் சொல்லாமலே நின்றபோதும்
சொல்லாமலே என்னை அறிந்த நீயும்
சொந்தமாக்கி உன்னுடன் வைக்க வேண்டும்
ஆரவாரம் மிகுந்த இவ் வுலகினிலே
அதனிடை வாழ்க்கையின் ஓட்டத்திலே
ஆயிரம் நெருக்கங்கள் சூழ்ந்திருந்தும்
அவற்றிடையே உன்னையும் நினைக்க வேண்டும்
ஆயினும் நானுன்னை மறந்திட்டாலும்
அதற்குக் காரணம் எதுவாயினும்
ஆதியில் நான் கொண்ட அன்பை எண்ணி
ஆட்கொண்டு மீண்டும் அருளவேண்டும்
31-1-16, மதியம் 2.55, மத்திகிரி
BT Song 381 Remember me
Peace is required for the heart which is get tossed
Boundary is need for the buddhi which never remain under control
I should approach you by thought and heart
And should worship your feet every day.
Though you stand beyond my vision
And remain unapproachable to my thought
You should come and over lord me
Through my senses becoming one with me
Though I repeat the same thing again and again
And remain unable to say anything
You who understands me even I telling nothing to you
Should keep me with you, making me your own.
In this world where uproar becomes the norm
And in the life which runs amidst it
Though thousands of constraints surround me
I should think of you amidst them all.
Though I forgot you
And whatever might be the reason for that
Remembering my initial love for you
You should again bestow your grace by over lording me.
31-1-16, 2.55 pm, Mathigiri
When I pray, think, or write, the one thought that often comes to my mind is: is there anything new? I am only repeating the same thing in different words. And in this routine and familiarity I get lost in my sense of bhakti in the Lord. However, as His grace remains new and as He understands me well, like a parrot I can repeat the same thing again and again and He won’t become upset with me.
BT Song 382 இன்பமயம்
எல்லாம் இன்பமயம்
உனைப்பாடித் துகிக்கையிலே
உன் படைப்பை நினைக்கையிலே–எல்லாம்
விண் படைத்து மண்படைத்து
வெவ்வேறு கோள்படைத்து
விதவித உயிர்படைத்து
என்னையும் உடன்படைத்த–தெல்லாம்..
பகலென்றும் இரவென்றும்
பலவித நிலை படைத்து
பாங்குடன் வாழ்வதற்கு
விதி பல சமைத்த-தெல்லாம்
வாழ வழிகாட்ட
வகையாக நெறிதொகுத்து
வாழ்ந்திடும் வாழ்க்கையில்
கடமையும் வகுத்த-தெல்லாம்
உன் வழி வாழ்வோர்க்கு
உன்னத நிலை தந்து
உன் வழி மறந்தவர்க்கு
நல்ல அறம்தந்த–தெல்லாம்
இத்தனை தந்த பின்னும்
எம்மையும் தருவதற்கு
பத்தி என்ற ஒரு நிலையைப்
பரிவுடன் அளித்த-தெல்லாம்
2-2-16, மதியம் 2.50 மத்திகிரி
BT Song 382 Blissful
Everything become blissful
When I sing praising you
And think about your creation—everything becomes…
Creating sky and earth
And various planets
And different kinds of life
Along with them also creating me—everything becomes…
Creating day and night
And various seasons
And establishing many rules
For us to live properly—everything becomes…
Giving code of contacts
To guide us in life
And giving dharma (duty)
In our life too—everything becomes…
Giving noble status
For those who live according to your way
And giving many dharmas
For those who forgot your path—everything becomes…
After providing all these
In order to give ourselves to you
Giving the status of bhakti
With much concern—everything becomes…
2-2-16, 2.50 pm. Mathigiri
I often think that my songs are more pessimistic and melancholic. Rarely do I write songs praising the Lord and singing His glory. As I thought about it, I wrote this song thinking about all the beauty in God’s creation. Though God gives mukti to those who come unto him, he gives dharma for all even to those who do not know him.
BT Song 383. முடிவில்லா முக்தி
முடிந்தது பயணம் புவியோடு
முடிவில்லா முக்தி அடையும் போது
இனி பயம்நமக் கேது மில்லை
எரிநரகம் நாம் என்றும் சேர்வதில்லை
விட்டுச் சில காலம் பிரிந்தாலும்
மீண்டும் சந்தித்து மகிழ்ந்திருப்போம்
புவியின் பாடுக்கு முடிவு கண்டோம்
புதுவாழ்வில் புகுந்து மகிழ்ச்சி கொள்வோம்
நமக்கு முன்னாக சென்றவரை
நாம் கண்டு ஆனந்தம் கொண்டாடுவோம்
நம் பின் வரப்போகும் பக்தருக்காய்
நாமும் ஆவலாய் காத்திருப்போம்
பெற்றோர் உற்றோர் துயருற்றாலும்
நம்பிரிவைத் தாளாமல் கணீர்விட்டாலும்
நம் பக்தி கண்டு அவர்களுமே
நாதனுக் கென்றும் நன்றி சொல்வார்
நம்மையும் மீண்டும் பார்க்க வேண்டி
நாளும் பக்தியில் வாழ்ந்திருப்பார்
தம் ஓட்டம் ஓடி முடிந்த பின்னே
நம்முடன் வந்து சேர்ந்து கொள்வார்
ஆகையால் ஆனந்தம் கொண்டாடுவோம்
ஆரவாரம் செய்து பாடிடுவோம்
இந்த நம்பிக்கை பிறரும் பெற
இறைவனை வேண்டிக் கேட்டிடுவோம்
4-2-2015, காலை, 10.30, மத்திகிரி
BT Song 383. Unending Mukti
The journey came to an end with this earth
When we will receive that eternal Mukti
Therefore we don’t have fear about anything
And we will never go to the burning hell
Though we get separated for some time
Again we will meet and rejoice
We saw an end to the life on this earth
And we will rejoice by entering in that New Life
We will rejoice by seeing those
Who went before there?
And we will wait eagerly
For other bhaktas (believers) to come and join us
Though parents and relatives feel sad
And shed tears unable to tolerate our separation
Seeing our bhakti (faith)
They will give Thanks to the Lord
In order to see us again
They too live with that bhakti (faith)
Once they too complete their race
They will come and join with us
Therefore let us REJOICE in THE LORD
And sing with loud voice and joy
For others too to receive this HOPE
Let us pray to God for them too.
4-2-2016, Mathigiri, 10.30, am.
I received the news about the ailment of one bhakta who was suffering with chronic cancer and getting ready to go and be with the Lord. Though I never met him, I rejoice for his bhakti and courage and hope in the Lord. Then I thought about the ASSURANCE that we have in the Lord. Then I wrote this song dedicated to him and also to encourage his family members and friends. Though my view about heaven and hell is different, yet for the sake of poetic expression I use them. We should be always careful not to form or infer theology in poems. They are more spontaneous esoteric expressions of feeling and emotion through words than means to express clear cut theology.
384 உணர்ந்தும் உணராதவர்
உணர்ந்து கொள்ள வில்லை
உன்னைப் புரிந்து கொள்ளவில்லை
உன்னுடன் வாழ்ந்த போதும்
உனையீன் றெடுத்த போதும்
சொந்தம் அவர்க்காய் ஆனாய்
சொல்லில் செயலில் வாழ்ந்தாய்
எதனைச் செய்த பின்னும்
ஏது ரைத்த போதும்
பழகப் பழகப் புளிக்கும்
பாலும் என்ப துண்மை
பழகி அறிய மறுத்ததால்
பாவம் அவர்தம் நிலமை
ஆனால் உடன் நீ சென்று
அவர்க்கு அடிமை கொண்டு
அவர்தம் தயவில் வாழ்ந்து
அருளில் பெருகி உயர்ந்தாய்
அவரைப் போல ஆனோம்
நீ அறிந்து மீட்ட போதும்
அறியா திருந்தால் நன்மை
அறிந்தும் மறுத்தால் கொடுமை
உணர்ந்தும் உணரா எம்மை
உணர்த்தி காப்பதுன் கடமை
அந்தத் துணிவால் மீண்டும்
அண்டி வந்தோம் அருளும்
8-2-16, மத்திகிரி, காலை 5.45
BT Song 384 Knowing without understanding
They didn’t understand you
They cannot recognize you
Though they lived with you
And begot you
You become their (human) relative
And lived both in words and deeds (with them)
How much you have done to them
And how much you have shared with them
As milk too become tasteless
As we become familiar with it
It is pitiable that they refused to understand you
Though they lived with you.
Yet you went along with them
And become a slave to them
Then living under their roof
You grew in Grace (and wisdom)
We too become like them
Though you redeemed us
If we don’t know, that will be good for us
But pathetic is our condition as we know without understanding.
As we don’t understand even after knowing you
Now it is your duty to protect us
We come again unto you
Taking courage in it.
8-2-16, Mathigiri, 5.45 am.
We cannot and should not expect any kind of ‘thanks’ for what we do to our own family members. This is not part of our culture and tradition. Some may argue what is wrong in it by expressing our thanks and return our gratitude through words. I am not against it, but it looks very ‘artificial’ to me. Though this is a Hindu concept that everyone (particularly a male child that too a Brahmin) born with five debts (to gods, rishish (gurus, acharyas and preceptors), ancestors, fellow human beings and to the non-human world (though this is strictly assigned to animal world, I want to include nature too), I think this view is applicable to everyone.
But all these debts cannot be paid back whatever we do to them. For example, nobody can pay back the debt to one’s own mother.
But the irony in human relationships is that familiarity not only breeds contempt, but several times it refuses to understand others’ ‘limitation’ and ‘needs’—particularly those who serve us. As humans, though we often become upset and ‘react’, yet we see a model in the Lord who has done His ‘dharma’ towards His family members (mother and siblings). Of course we cannot imitate Him, but when we are discouraged we can learn from His life to continue to do what we ought to do.
Several times we are doing the same to the Lord what His family members have done to Him, but blame that our own family members are doing it to us.
BT Song 385 அஞ்சமாட்டேன்
என்னவோ மீட்டெடுத்தாய்
எனக்குமோர் வாழ்வளித்தாய்
அந்த ஒன்றை மட்டும் எண்ணி
ஆனந்தம் கொண்டிடு வேன்
என்னைக் கேட்டு மீட்கவில்லை
என் நீசம் பார்க்க வில்லை
உன் கருணை ஒன்றினாலே
என்னை நீ ஆட்கொண்டாய்
அதற்கு நானும் உடன்பட்டேன்
அறிந்து கொள்ளச் செயல்பட்டேன்
எந்தவரை இணங்கினேனோ
அந்த வரை அறிந்து கொண்டேன்
பொறுமை நீயும் காத்து நின்றாய்
பிழை பல பொறுத்துக் கொண்டாய்
என்னைத் தந்து உன்னில் வாழ
ஏற்ற வழிகாட்டி வந்தாய்
போகும் தூரம் மிக விருந்தும்
போராட்டம் பல இருந்தும்
இலக்கு நீயாய் இருப்பதாலே
எதனைக் கண்டும் அஞ்சமாட்டேன்
மீட்ட நீயே உடனிருந்து
சேர்க்க வேண்டி முன் நடந்து
ஏற்ற வழி காட்டும் போது
என்ன வேண்டும் இனி எனக்கு?
உன்னை முன்னி றுத்தி
உன்னில் எனை நிறுத்தி
அந்த ஒருபெலத்தி னாலே
அன்றாடம் வாழ்கின்றேன்
8-2-16, மத்திகிரி, காலை 6.15
BT Song 385 I won’t afraid
Somehow you redeemed me
And gave a life to me
Thinking only about it
I will rejoice (in you)
You didn’t redeem me asking me before
You never considered my mean status (as a sinner)
Only because of your grace
You over lord me.
I only allowed you to do that
And tried my best to understand it
How much I obeyed
That far I understood
You kept patience
You tolerated many of my mistakes
You showed me the way
To live in you by giving myself
Though the goal is too far away
And many struggles are on the way
As you remained my goal to reach
I won’t be afraid of anything
As you accompany me who redeemed me
And walking before me to take to that goal
What else I required any more
As you are there to show the path
Keeping you in front of me
And keeping you within me
And having only that strength
I live each day.
8-2-16, Mathigiri, 6.15 am.
As I was constantly thinking about that bhakta who was lying down on the bed with serious ailment and facing death hugging his two children (see song 383) I couldn’t sleep properly last night. I cried several times while typing this also. As I was thinking about him, the words of another person with similar ailment about doing tapasya in the hospital room, treating it as the cave for them to do it, this morning I continue to think about the reality of suffering. As Muktived also endorses the REALITY of physical suffering, we cannot explain it psychologically or even spiritually when someone undergoes that painful movement that too each second in their life. We too had a similar experience when we experienced that physical suffering. But once it is gone, though we can recall that experience, it rarely disturbs our mind at present. But for those who are constantly facing it along with seeing the suffering of the near and dear ones is beyond human comprehension. And as I was constantly thinking about that bhakta and his wife and children I wrote this song meditating upon the words of as doing tapasya
Leave a Reply