BT Songs 401 to 405

BT Song 401 மாற்ற முடியாது

சந்தேகம் கொண்டவர்

சஞ்சலம் கொள்ளுவார்

சட்டெனப் பிறர்மேல்

கோபமும் கொள்ளுவார்

இருமனம் கொண்டவர்

நிலையாக நில்லார்

எல்லோர் மீதும்

எரிச்சலும் கொள்ளுவார்

தான் செய்த தவறை

நியாயப் படுத்திப்

பிறர் செய்யும் எதனிலும்

குறையுமே காண்பார்

தன்னுள் அமைதியைத்

தானும் இழந்து

பிறரையும் அவர் போல்

புலம்ப வைப்பார்

என்ன செய்தாலும்

இவர் குணம் மாறாது

எப்படி உரைக்கினும்

புத்தியும் ஏறாது

இறுதி வரையிலும்

போராட்டம் ஓயாது

என்ன முயன்றும்

மாற்ற முடியாது

முடிந்த வரையில்

பொறுமை காக்கணும்

முடியாது போனால்

தப்பிக்கப் பார்க்கணும்

திருத்த எண்ணித்

தலையை நுழைத்தால்

தினம் தினம் அவசியம்

அடிபட்டுச் சாகணும்

31-3-16, மதியம் 2.45, மத்திகிரி

BT Song 401 Not possible

Those who have doubts

Become chanchal (frustrated)

They become upset

Very quickly

The double minded

Never will remain stable

And will get irritated

About everyone

Justifying

Personal mistake

Will find fault

What others do

Loosing

Their own peace

Will make others too

Lament like them

How much we try

Their nature won’t change

How much we tell

They won’t accept our advice

Struggle won’t end

Till the end

How much we try

Impossible to change them

We should try to keep patience

As much as possible

If it is not possible

We should try to escape

In order to correct them

If we poke our nose

We will be get pounded

Each day

31-3-16, 2.45 pm, Mathigiri

Doubts are inevitable between relationships.  However we are committed and do our best there will always be some doubts on several things in any (close) relationship.  Sometimes we may not be in a position to give all kinds of explanations to remove the doubt.  Other times we might think that it is unnecessary, as explanation will increase the doubt.  But some people are born with that nature and however we try to explain and prove that their doubts are not correct, they are not going to change their nature.  And the best option is do your best and keep quiet allowing the time to take its own course.

BT Song 402 சுயநலம்

நல்லதைச் செய்ய நீயும் சொல்கிறாய்

நானதைச் செய்யவே நாளும் முயல்கிறேன்

ஆயினும் இதனிடை சுயநலம் குறுக்கிட

என்ன செய்தாலும் பயனற்றுப் போகிறேன்

சுயநலம் இல்லாத செயலொன்று காண்கிலேன்

சுயத்தை அழித்தவர் எவரையும் பார்க்கிலேன்

பிறர் நலம் எண்ணிச் செயலைச் செய்திட

தன்னலம் அதனிடை இருப்பதைக் காண்கிறேன்

பிறர்க்கு உழைப்பதில் சுகமொன்றைத் தேடுறேன்

பிறர்க்காக வாழ்வதை தியாகமாய் எண்ணுறேன்

பிறர் நலம் பேணிட விலை ஒன்றைத் தருகிறேன்

பிறகு அதனைக் கணக்கிட்டுக் காட்டுறேன் (பார்க்கிறேன்)

இப்படி என்நிலை இருக்கையில் என்செய்வேன்

என்ன செய்வது புரியாமல் திகைக்கிறேன்

இதற்கு விடை ஒன்று உன்னிடம் கேட்கிறேன்

எதை நீ சொன்னாலும் நானதை ஏற்கிறேன்

ஆயினும் இதுவரை பதிலொன்றும் வரவில்லை

அவனன்றி (நீயன்றி) வேறு தீர்வு எனக்கில்லை

இதுவரை வாழ்ந்ததில் எவ்விதப் பயனில்லை

இதற்கு மேல் சொல்ல என்னிடம் மொழியில்லை.

31-3-16/1-4-16, இரவு, 12.10, மத்திகிரி

BT Song 402 Selfishness

You ask me to do good things in life

And I try to do it each day

Yet as my selfishness come in between

I become a waste, in spite of all that I do

I don’t see any act without having selfishness

I don’t see who has erased the ego

Though we serve others keeping their welfare in mind

I see some kind of selfishness in it.

I seek some kind of pleasure in serving others

I think that I sacrifice in order to live for others

I pay a cost to do good to others

Then I sit and calculate it (or parade the cost)

As this become my condition, what I can do

I do know what to do further

I seek some kind of answer from you

Whatever you tell me, I will accept it.

But there came no response from Him so far

I don’t find any other solution other than Him

I don’t find any meaning in the life which I lived so far

And I don’t have words to say any more.

31-3-16/1-4-16, 12.10  am, Mathigiri

I have become tired of living here at Mathigiri. Coming April 6th I will complete two years moving here from the ashram.  The noise and lack of space to move take its toll on me.  Rarely do I go outside the gate.  Only half an hour in the evening I go to the roof for my evening walk and exercise. Other times I remain confined within my room or the hall. I don’t even go out to get milk and buy other provisions as they come to my door.  Of course I console myself that I am doing this for the sake of my mother. As she suffered a lot in her life from childhood, at least I want to give a (relatively) comfortable life which she likes (and also deserves).  But even in doing this I see a selfishness behind it.  Maybe unknowingly I feel a victim of circumstance. Or I seek some kind of pleasure (satisfaction/joy) in this seva to her?  In the name of explaining my plight I parade ‘what kind of price that I pay to uphold my dharma as a son’ to do my seva to my mother. But in doing it I DISPLAY the cost that I pay.  In all these I see nothing but selfishness and some kind of hidden ego.  And am I playing a ‘victim’ card? Then this night some kind of depression engulfed my mind and I earnestly prayed that the Lord give me some answer. I will abide by it whatever it might be. But there is no response from Him.  Maybe as I already know the answer, just seeking it again from Him is merely an excuse.  That could be the reason for this silence. However, other than Him I have no solution.  When I reflected on what all He has done in His life I couldn’t find any hidden motive, ego or seeking some kind of pleasure/joy or selfishness in His life and seva.  At the same time I know that however I try I cannot never imitate Him in this NATURE.  Then as a prayer I wrote this song.

BT Song 403 ஞானம் பெற வழி

யோசித்துப் பார்ப்பதால்

ஒன்றும் கிடைக்காது

யோசிப்பதை விடுவது

எவர்க்கும் நல்லது

பேசிப் பேசியே

பேதையாய் ஆனார்

பேச்சை விட்டால்

ஞானியும் ஆவார்

யோசிப்பதால் பல

எண்ணங்கள் தோன்றும்

யோசிப்பை விட

உள்ளம் தெளியும்

வாசிப்பு என்னும்

வாஞ்சையும் கொண்டு

வாசிப்பதில் சில

பயனும் உண்டு

ஆயினும் அதைக்கூட

விட்டு விட்டவர்

உத்தம ஞானத்தைப்

பெற்றதும் உண்டு

சும்மா இருக்கின்ற

சாதகம் செய்து

சித்தத்தை அடக்கும்

போதனை கற்று

புத்தியைக் குழப்பும்

பேதமை போனால்

பெறுவோம் அந்த

ஞானம் தன்னால்

3-4-16, மதியம், 2.30

BT Song 403 Means to gain wisdom

Nothing will be gained

By thinking (too) much

It is better to give up

Thinking itself

One become a fool

By talking too much

One can become wise

By giving up talking (altogether)

Thinking creates

Lots of thoughts

Mind will become clear

By giving up thinking

There are some

Benefit in reading

Having desire

To read

Yet those who

Gave up that too

Gained

Noble wisdom

Doing the sadhana of

Remaining quiet

And learning the

Art to control mind

If the foolishness go

Which confuses the mind?

We will gain that

Wisdom automatically

3-4-16, Mathigiri, 2.30 pm.

As I was reading a book, suddenly I began to think about the same subject which I already read in another book. As I began to recollect those points, my mind began to wander and get confused.  However, as I am interested to read, think and discuss to accumulate ‘INFORMATION’ then I thought, ‘what is the use of all this information’?  Are they going to help me to gain any wisdom or knowledge?  Too much thinking itself becomes a snare and talking and discussing them with oneself or others only complicates the confusion more than giving any clarity. Then stopping my reading I wrote this song—but again began to read the book!

BT Song 404 புலம்பாதே

போனதெல்லாம் இனிப் போகட்டும்

புலம்பலும் சற்று ஓயட்டும்

புரிந்து கொண்டவன் துணை இருக்கையில்

புலம்பித் தவிப்பது ஏனோ வீணில்

கைவிட மாட்டேன் என்று சொன்னவன்

காத்திடுவேன் உன்னை கண்மணி போலென்றவன்

கலங்கி தவித்து வீணிலே சுமப்பதேன்

வைத்திடு என் மீது என்றவன் அழைக்கிறான்

வீம்புக்கு சுமப்பதால் பயனேதும் இல்லை

விட்டிட முயன்றாலும் தப்பிக்க வழியில்லை

சுமக்கச் சொன்னதைச் சுமந்து தான் ஆகணும்

சுமை அதிகம் ஆனால் உதவிக்கு அழைக்கணும்

சுகமான சுமையாக சில கூட இருந்திடும்

சுமக்க முடியாத பல கூட வந்திடும்

சுகமோ-சுமையோ எப்படி இருந்தாலும்

சஞ்சலம் கொண்டிட பாரம் பெருகிடும்

வந்திடுவான் அவன் பாரு நீ

வருந்தி ஒரு முறை அழைத்து கேளு

தட்டிட திறந்து, கேட்டிட தந்திடும்

தன்மை கொண்டோனை நீயும் நாடு

மத்திகிரி, காலை, 6.15, 7-4-16

BT Song 404 Dont lament

Let the things that are gone remain past history

Let your lamenting also come to an end

When the one who understands, is there to give company

Why lament unnecessarily?

The one who said that He will never forsake you, and

The one who said that He will protect you as the apple of the eye

And the one who said, ‘why get troubled; come and lay down your burden on me’ is calling you

There is no point of carrying the burden with adamantly

But there is no escape from it either

We need to carry which we are expected to carry

And when the burden becomes unbearable we need to call for help

Some burdens remain pleasant one to carry

And many unbearable burdens will also come

Whether pleasant or unbearable—whichever it might be

Frustration will only increase the burden

Just you see that He will come

Ask Him one more time with much pleading

You seek the one who has the nature to

Open when we knock and to give when we ask

Mathigiri, 6.15, am.  7-4-16

I received one response after reading one poem which I sent to the wife of an ailing husband, who later died due to cancer.  That poem moved her heart and she wrote back agreeing with me. As I was reflecting on our common situation where we both are forced to carry a burden, which is beyond our capacity to carry, then I said to myself, it is time to stop even lamenting about this burden. Because frustration is not going to help us to unload the burden but it is going to increase it. But this is not only limited to the two of us. Many of us lament on various burdens and it looks like the Lord is not even listening to our pleas.  But patiently waiting for God’s time, at least if we stop getting frustrated, our burden will become very light and then we can soberly think to assess our situation. As I was making my morning tea, stopping it I came to my room and wrote this song.

BT Song 405 வந்துதான் பாரு

வந்துதான் நீயும் பாரு–அவன்

வாசலில் நின்று தட்டுறான் கேளு

சொந்தத் தன்மை தானும் துறந்திட்டு

சொந்தமாய் நமக்கு ஆகியே வந்தானை–வந்து…

தேடித்தான் நீயும் போக வேண்டாம்

தேசம் எங்கும் தேட வேண்டாம்

வேதம் ஓதி வேள்விகள் செய்து

வேண்டுதல் பலநீ செய்யவும் வேண்டாம்–வந்து…

மெளனமாய் மனதை நீயும் திறக்க

அந்த மேலவனை உள்ளே அழைக்க

உன்னுள்ளே வந்து ஒன்றிக் கலந்து

தன்னையே தந்து உன்னையும் காப்போனை–வந்து…

இன்னும் ஏன் வீண் தயக்கம்

எதனை எண்ணிக் கொள்கிறாய் வெட்கம்

தட்டிக் கழித்தேன் பலமுறை என்று

தயங்கித் தயங்கி நிற்காமல் நீயும்–வந்து…

புறம் தள்ளிட மாட்டான்–நாம்

புண்பட ஒன்றும் சொல்லிட மாட்டான்

எந்த நிலையிலும் வருந்தி அழைக்க

என்றுமே நம்மைக் கைவிட மாட்டான்–வந்து…

உன்னைப் போல நானும் இருந்தேன்

உண்மை அறிந்துமே தூக்கி எறிந்தேன்

ஆயினும் நீடித்த பொறுமை காத்தான்

அன்புடன் அழைத்து மீண்டுமே சேர்த்தான்–வந்து…

7-4-16, மத்திகிரி, மதியம் 1.15

BT Song 405 Come and see

Come and see

Listen, as He is knocking at the door

Giving up His own nature

The one who came as our own— Come and see….

You need not go anywhere seeking Him

You need not search every place

You need not do yajnas by reading Veda

And you need not take so many vows– Come and see….

As you open the heart silently

And when you call the Noble one inside

He will come in and mingle with you

And will save you by giving Himself for you–Come and see….

Why this hesitation any more

And thinking which you become so shy

As you rejected so many times in the past

Don’t stand now with any hesitation– Come and see….

He won’t reject you any more

And won’t say anything to hurt us

If we call Him in any situation with much pain

He will never forsake us anymore– Come and see….

I too was like you one time

Even after knowing the truth, I threw Him away

Yet He kept eternal patience

And with much love called me back and made me His own– Come and see….

7-4-16, Mathirigi, 1.15 pm.

As I opened Muktiveda to read today’s portion, suddenly the first line came to mind as an inspiration. I don’t know why that line continues to echo without allowing me to read Muktiveda. So I stopped reading, I wrote this song and then continued my regular reading.  There is no reason for such inspiration.  We cannot say when it will come, but once it comes, it will compel us to write it down.  Otherwise the same lines will continue to echo again and again in our mind.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *