BT Song 421 புடமிடு
என்னுள்ளே உன்னறம் நீயுமே வைத்துள்ளாய்
அதன்மீது என்னையும் உரசியும் பார்க்கிறாய்
ஒரு மாற்றுக் கூட தேறாது போனதால்
அடிக்கடி புடமிட்டு மாற்றவும் பார்க்கிறாய்
துறவியின் வேடம் போட்டு நான் வாழினும்
முற்றிலும் துறந்திட முடியாது போனதே
பற்றற்று வாழ்ந்திடப் பலமுறை முயன்றும்
அப்பற்றைப் பற்றிட அடியனால் முடியலை
தனிமையில் வாழ்ந்திட தலைப்பட்டு நானுமே
“தனியனாய்” வாழ்ந்திட தீர்மானம் செய்தேனே
ஆயினும் அவனியில் அடியனும் வாழ்ந்திட
அடிக்கடி பிறருடன் தொடர்பு கொண்டேனே
பக்தனாய் வாழ்ந்திடும் பாக்கியம் பெற்றினும்
பக்தியின் மேன்மையை அறிவதில் தோற்றேனே
பக்தியின் உயர்வினை பலமுறை கூறியும்
பக்தியின் பாங்கினை உண்மையில் அறியேனே
இவற்றிலே முற்றாகத் தோற்றுப் போனதால்
இறுதியில் மனிதனாக வாழ்ந்திட எண்ணியே
என்னால் முயன்றதை செய்து பார்க்கினும்
என்னவோ அதில் கூட தோற்றுமே போனேனே
இதற்குப் பிறகுமா என்னை நீ நம்புறாய்
ஏன் நீயும் வீணாக உரசியும் பார்க்கிறாய்
ஆயினும் அடிமையும் அழிந்துமே போகாமல்
அருளைத் தந்து நீ புடமிட்டு காக்கிறாய்
சரி விடு உனக்காக முயன்று பார்க்கிறேன்
சரியெனப் படுவதை செய்யவும் முயல்கிறேன்
சலித்து நான் போகயில் தாங்கி நீ பிடித்திட
மாசற்ற பொன்னாக மாறிட முயல்கிறேன்
பெங்களூரு, 7-5-16, காலை, 7.30
BT Song 421 Refine me
You kept your dharma within me
And rubbed me on that touch stone
As I am not yet become clean
You continue to refine me to make me pure
Though I accept the life as a sannyasi
I cannot renounce completely
Though I tried to live without having any desire
I cannot give up that which holds on desire
In order to live in solitude
I made a decision to live as Single person
Yet in order to survive on this earth
I often keep in touch with others
Though I received the blessing to live as a bhakta
I failed to understood the nobleness of bhakti
Though many times I glorify the greatness of bhakti
I never knew the nature of bhakti totally
As I completely get defeated in all these areas
Finally making a decision to live at least as a human
I tried to do all that I need to do for that
But in the end I also failed in that too
Do you still believe in me, even after these failures?
Why unnecessarily you try to refine me
But not allowing this slave to get perished
You bestow your grace by again refining me
Ok let me try again one more time
I will try to do what I think is right (according to your will)
When I become frustrated, as you are there to uphold me
I will try again to become pure (by your refinery)
Bengaluru, 7-5-16, 7.30 am.
As I went for my morning walk in a beautiful park just opposite to the house where nobody comes, I thought of the way God tested us on the touchstone of His dharma. And until He makes us pure according to His expectation, He will continue to rub us on His touch stone and will refine it in the furnace to remove all the impure bodies to make us pure. But as I continued to walk I began to think in which areas He rubbed me on His touch stone. Then one by one they came into my mind—I failed as a sannyasi, as a single man, as a bhakta and finally even as a human being. Then I asked God, ‘Do you still TRUST and have any HOPE to cleanse me to make pure’? Then as I returned back from my walk I wrote that meditation as a song.
BT Song 422 முடித்துக் காட்டுறேன்
என்னுள்ளே மும்மலம் இன்னும் இருக்கு
எத்தனை முயன்றாலும் நீங்காத அழுக்கு
நீக்கத்தான் பார்க்கிறாய் நாளுமுன் வார்த்தையால்
நீங்கவும் மறுக்குது வேர் கொண்டு உள்ளதால்
அடிக்கடி கிளைகளைக் கழித்துத்தான் போடுறேன்
அடிவேரைத் தோண்டி எடுக்கவும் பார்க்கிறேன்
ஆயினும் ஆணிவேர் ஆழமாய்ப் போனதால்
அதனாழம் தெரியாமல் நானுமே கலங்குறேன்
நதியோரம் தோன்றிய மரமாக உள்ளதால்
நாள்தோறும் போதிய நீருமே கிடைப்பதால்
கிளைவேரில் புதுமரம் தோன்றி வளர்வதால்
முற்றாக அதை நீக்க முடியாமல் போகிறேன்
அணை போட்டு நதிநீரை மடைமாற்ற முயன்றாலும்
அடிக்கடி மழை பெய்து மதகையும் உடைக்குது
இயற்கையும் என்னோடு சேர்ந்து சதி செய்ய
என்னதான் இதற்கு மாற்று உள்ளது
இதற்குத் தீர்வுமோ என்னிடம் இல்லையே
எவ்வளவு முயன்றாலும் விடை காண வில்லையே
பாவியை மீட்டு நீ தூயவன் ஆக்கினும்
போராட்டம் இல்லாமல் வெற்றியும் இல்லையே
துவங்கிய நீயே முடித்துமே வைப்பாய்
தொய்வின்றி பொறுமையாய் நானோடும் போது
உதிரம் சிந்தி போராட நேரினும்
ஒருபோதும் சோர்வுக்கு இடம் மட்டும் இல்லையே
இலக்கை நோக்கி ஓடத் துவங்கினேன்
இடையிலே இடையூறு வருவதைப் பார்க்கிறேன்
பாரம் அனைத்தையும் நீக்கி நான் போட்டபின்
தொடங்கிய உன்னுள் முடித்துமே காட்டுறேன்
பெங்களூரு, 7-5-16, காலை, 8.00
BT Song 422 I will accomplish
Three kinds of snares are within me
The strain never goes away however I try
You try to remove it through your Words everyday
But it refuses to go as it is deeply rooted (within me)
I often prune the branches
And try to uproot the main root
Yet as the root has gone deep down
Not knowing its depth, I am bewildered
As it is like a tree grown on the river side
As the water is available each day
As new shoots are coming out from the roots
I am unable to remove it completely
Though I try to divert the river water somewhere
The dam get broken due to regular rain
As nature too joins to conspire against me
What is the alternative for this?
I don’t have solution for this with me
How much try, I cannot find the answer
Though you made this sinner as a saint by redeeming me
There is no victory without constant fight
The one who started will also complete it in the end
When I too run along with you not giving up
Even if I have to fight to the extent of shedding the blood
There is no place for disparity
I began to run towards the goal
I see that many things coming as stumbling block
Once I threw away all these (unwanted) burdens
I will accomplish in you which you have already began
Bengaluru, 7-5-16, 8.00 am.
Our constant struggle with the world, flesh and ego (for others it is devil) is a challenge for every bhakta to overcome them. For some it might be in one area and for many in many other areas. But instead of blaming others or circumstance, if we realize that ‘the world, flesh and ego (devil)’ is within us and not outside, then naturally we will constantly fight against them with the grace of God. As I was thinking about this, I wrote this song.
BT Song 423 என்ன சாதிக்கணும்
சாதிக்க என்னிடம் ஏதும் இல்லை
சரித்திரம் படைக்க பிறக்கவும் இல்லை
என்னுள்ளே ஏழையாய் என்றும் வாழ்ந்திட
என் மேன்மை சொல்லிட ஏதுமே இல்லை
அரசன் வீட்டில் பிறக்கவும் இல்லை
ஆடம்பரம் நான் பார்த்ததும் இல்லை
இல்லாத வீட்டில் வளரவும் இல்லை
தேவைக்கு மிஞ்சியும் துய்த்ததும் இல்லை
ஞானிக்கு மகவாகப் பிறக்கவும் இல்லை
முற்றிலும் மூடனாய் வளரவும் இல்லை
எளிய குடும்பமாய் இருந்திட்ட போதும்
என்றைக்கும் அன்புக்குப் பஞ்சமே இல்லை
தன்னந் தனியனாய்ப் பிறக்கவும் இல்லை
தமையன் தங்கைக்கு குறைவும் இல்லை
பொறுப்பான பெற்றோரைப் பெற்றதால் நானும்
பொறுப்பற்று வாழ்வினில் வாழ்ந்ததும் இல்லை
பிறர் போல நானும் பிறந்து வளர்ந்தேன்
பெற்றோர் உற்றோருடன் வாழ்ந்தும் இருந்தேன்
வளமான வாழ்வை காணாத போதும்
வறுமையின் எல்லைக்குப் போகாதிருந்தேன்
ஆனால் ஏதோ ஒன்றை இழந்தேன்
அது என்னவென்று அறியாதிருந்தேன்
நீயாக தேடி மீட்ட பின்னாலே
நல்லவேளை அதை மீண்டும் பெற்றேன்
எத்தனை கருணை என் மீது கொண்டாய்
எளியனை மீட்டிட உன்னையும் தந்தாய்
இந்த உயர்வு ஒன்றே போதுமே
இதற்குமேல் என்ன சாதிக்க வேண்டும்
பெங்களூரு, 7-5-16, மதியம் 12-30
BT Song 423 What is there to achieve
There is nothing to achieve for me
I never born to create any history
Once I live as a poor person within me
There is nothing to brag about my greatness
I never born in a royal family
I never saw luxury in my life
But I never grew up in a house of poverty
I never enjoyed anything beyond my need
I didn’t born to a jnani (wise man)
I never grew up as a fool completely
Thought it was a simple family
There never lacked real love
I never born alone
I never lacked siblings
As I got a responsible parents
I never lived without any responsibility in my life
Like others I too born and grew
I lived along with my parents and relatives
Though I never saw a rich life
I never went to the extreme poverty
Yet I missed one thing in life
And I never realized what it was
Once you came to redeem me seeking after me
Fortunately, I got it back (or I got that too)
How much compassion you had on me
To redeem this simple one you gave up yourself
This nobleness is enough for me
What else there for me to achieve
Bengaluru, 7-5-16, 12-30 pm.
I know that I am not a poet, though often I share my thoughts through some songs. Several times I don’t even write them as songs. But often I feel helpless as the inspiration compels me to write down my thoughts as a song. If I don’t do it, then my mind will begin to echo the words again and again, not allowing me to concentrate on other works, particularly in reading. Then I thought: ‘am I doing this to create any history or leave behind some records about my life and experience? What is there for me to achieve? Considering my humble birth and moderate life, there is nothing in my life to create any history or to achieve anything new.’ That time again the inspiration came to write down this very thought as a poem and the result is this song.
BT Song 424 வேண்டாத பிணக்கு
ஈதென்ன வேண்டாத பிணக்கு
இன்றைக்குப் புதிதாக வழக்கு
இதற்கு முன்பு இல்லாததா
இன்றைக்கு செய்வது புதிதா
இன்றைய மீறுதல் புதிதா
இதற்கு முன்பு செய்யாததா
என்றைக்கு நான் கீழ்ப்படிந்தேன்
இன்றைக்கும் அதையே செய்தேன்
நானென்ன உன்போல் தெய்வமா
நன்மை மட்டும் செய்வேனா
தெரிந்துதானே மீட்டுக் கொண்டாய்
புரிந்து தானே மாட்டிக் கொண்டாய்
இப்போது தப்பிக்க எண்ணினால்
அத்தனை எளிதில் முடியுமா
இறுதி வரையில் சுமக்கணும்
இடையில் எதற்கு சுணங்கணும்
வழக்காடியும் எந்தப் பயனுமில்லை
வாதிட்டுப் பார்க்கினும் முடிவில்லை
நல்லபடியாகச் சொல்வதைக் கேள்
சொல்ல வருவதைப் புரிந்துகொள்
நான் மட்டுமா பாரமானேன்
நன்றாக யோசித்து முடிவு சொல்
சொன்னதை நானும் செய்துவிட்டேன்
உன் பாரமாக மாறிவிட்டேன்
இத்தனை சொல்லிப் பார்த்த பின்னும்
எதற்கு முகத்தை வீணே திருப்புராய்
காலை சுற்றிடும் நாயிது என்பதால்
போக இனிமேல் வழியேது சொல்லு
உனக்கு இது இனிமேல் இயலாது
வெறுத்து ஒதுக்க உன்னாலும் முடியாது
எத்தனை கணக்கு எண்ணி நீ போட்டாலும்
என்னிடம் ஒருபோதும் தப்பிக்க முடியாது
இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்
என்று மட்டும் நான் சொல்ல மாட்டேன்
எத்தனை என்மீது கோபித்தாலும்
உன்னடி விட்டு நான் போகமாட்டேன்
நன்றிக்கு என்னிடம் ஏதேனும் குறைவா
அன்புக்கு என்னிடம் என்றேனும் பஞ்சமா
சின்னச் சின்ன மீறுதலுக்காக
சீறுதல் உனக்கும் இன்னும் நியாயமா
பிணக்கை நீயும் விட்டு விடு
வழக்கை திரும்பப் பெற்று விடு
எத்தனை காலம் பிணங்குவாய்
எத்தனை வழக்கு வீணாய்ப் போடுவாய்
7-8-16, பெங்களூரு, இரவு, 9.00
BT Song 424 Don’t become upset unnecessarily
Why you become upset unnecessarily
Is this a new contention (between you and me?)
Am I doing it again today?
As if I have never done it before?
Is my today’s disobedience is entirely new one
Have I never done it before?
When did I obey in the past
Therefore, doing the same again today
Am I a God like you?
Can I do only good thing (like you)
Knowing this alone you redeemed me
And with clear understanding alone you get trapped
If you try to escape now
Is it possible that much easily?
Till the end you have to carry me
And why hesitate in the middle
There is no point of having any dispute now
And there is no end for any kind of argument
Listen to me in good manner
And try to understand what I say
Am I alone became your burden
And give me the final word after having a clear thought
What you have asked me to do alone I have done
Therefore I become your burden now
Even after telling all these
Why you turn your face again
Where is the way for me to go?
To this dog which rounds your legs alone
It is no more possible for you
And you cannot hate me further
How much you plan diligently
You can never escape from me
But I cannot tell that
I won’t repeat the same again
How much you become upset with me
I will never leave your feet
Am I lacking in thankfulness
Do you find any shortage in my love?
Is it right on your part to become upset?
For small, small shortcomings?
So better give up this your anger
And recall your contentions
How many days you will remain upset
And how many cases can you file against me?
7-8-16, Bengaluru, 9.00 pm.
As I was sitting quietly, I enjoyed the quietness around me. Then I began to imagine what if God, because of my continuous rebellious nature and disobedience, turns His face against me and refuses to listen. Then how I will present my side to Him to reason out for my rebellious nature. Then this song came as the reflection of that thought.
BT Song 425 அதிகமளித்தாய்
கூடத்தான் எனக்கு அளித்தாய், என்
குறைகளைத் தள்ளியே வைத்தாய்
அன்றாட தேவையை அடுத்தவர்க்குத்தந்து
அதற்கு மேலாக எனக்குமளித்து–கூடத்…
ஏனிந்தப் பட்ச பாதம்
மற்றவர் மீதென்ன கோபம்
எல்லாரைக் காட்டிலும் நீசனாய் இருக்க
என் மீது ஏனிந்த இரக்கம் -கூடத்…
தமியன் தனியன் என்பதாலே
தயவு அதிகம் கொண்டாயோ
ஏதுக்கும் உதவா நீசனாய் போனதால்
அதிக அன்பும் தந்தாயோ–கூடத்…
மற்றவர் யென்ன நினைப்பார்
மனதிற்குள் முணு முணுப்பார்
அடுத்தவர் என்ன நினைத்தால் என்ன
அவர்க்கு இல்லை என்றாயா என்ன?-கூடத்…
நோய்வாய்ப் பட்ட மகவு மீது
தாயும் வைப்பாள் அதிக பரிவு
எதற்கும் உதவாது போனதினாலே
என் மீது கொண்டாய் இத்தனை கனிவு-கூடத்…
“நன்றி” என்று சொல்லக்கூட
நானும் அறியாத போதும்
தூக்கி நீ போடும் துணுக்கிற்காக
வாலைக் குழைத்து காத்துக் கிடப்பேன்-கூடத்…
பெங்களூரு, 8-5-16, காலை, 7.00
BT Song 425 You gave bit extra to me
You gave bit extra to me
By keeping aside all my shortcomings
While providing other’s only their daily need
But giving more than to me—you gave bit…
Why this kind of discrimination
And why you become so upset with others
Why you have this much extra mercy on me
While I am the least one among other bhaktas—you gave bit…
As this hopeless person being ‘single’
Do you have extra compassion for me?
As I become good for nothing
Did you show extra love on me—you gave bit…?
What others will think about this
And they might murmur in their heart
But what can I do about it
Did you ever say ‘no’ to them (for their basic needs) —you gave bit…
Mother will have extra concern
Over a sick child
As I become good for nothing
You too had this kind of compassion on me—you gave bit…
Though I don’t know
Even the word ‘thanks’
But like a dog I will stay at your feet
For the leftovers which you will throw from your table for me. —You gave bit…
Bengaluru, 8-5-16, 7.00 am.
As I went for my morning walk in a small but beautiful garden without anyone to disturb me, I said, “why is God always giving `EXTRA’ grace only to me? Though He provides for everyone, I often feel that He gives extra grace in my life with so many blessings. Then I wrote this song. I like the last stanza. Though all the blessings and gifts that God has given in my life is ‘EXTRA’ grace, yet for Him it is nothing but throwing the left over from His table to the dog.
Leave a Reply