BT Song 451
I often do silent prayers, in which several times I won’t say anything. Sometimes I will allow my mind to wander on various issues and submit to the Lord. But I find some solace when I don’t even have anything to say to the Lord. Though language is a blessing, yet I find that it puts so many constraints for me to communicate with God. I long to go beyond a stage in which there is no place for any kind of communication through any language. Even silence won’t be able to understand or communicate it. It is very difficult for me to convey such experience through these words. For me all communication either oral or written, expresses the limitation of language itself.
BT Song 451 முடிந்தமட்டும் கூறினேன்
மொழியற்ற உலகிற்குப் போக வேண்டும்
மெளனமாய் அதனுள்ளே வாழ வேண்டும்
சிந்தை-சொல் தன்னையே கடக்க வேண்டும்
அவன் சேவடி தன்னையே பணிய வேண்டும்
மற்றவர் எவரும் அறிய வேண்டாம்
மனதுக்கும் கூடப் புரிய வேண்டாம்
சிந்தையால் அலசிப் பார்க்க வேண்டாம்
திருவடி ஒன்றையே நாடவேண்டும்
முக்தியின் நிலையைத்தான் கடந்து
மோனத்தின் எல்லையை மீறி கொண்டு
பக்தியால் ஆனந்தம் மேற் கொண்டு
அவன் பாதார விந்தத்தை நாடவேண்டும்
வேண்டிட ஏதும் தேவையில்லை
விருப்பமும் கூட ஒன்றும் இல்லை
பாடி ஆடிடத் தேவை யில்லை
அவன் பாதத்தில் சரண் புக வேண்டும்
என்னுள்ளே அவனும் வந்து விட்டான்
எனக்கு மட்டுமே சொல்லிவிட்டான்
ரகசியம் என்று இதில் ஏதுமில்லை
ஆனால் சொன்னாலும் யாருக்கும் புரிவதில்லை
அந்த நிலையை அடைந்த பின்னே
அதைச் சொல்லிட வார்த்தை ஏதுமில்லை
மெளன மென்ற மொழி கூட
முயன்றும் வெற்றி பெற வில்லை
ஆயினும் ஏதோ எழுதி வைத்தேன்
அந்த அனுபவத்தை தானே சொல்லி வைத்தேன்
மொழியின் எல்லைக்கு சென்று நானும்
முடிந்த மட்டும் கூறி வைத்தேன்
மத்திகிரி, 21-6-16, மதியம் 3.00
BT Song 451 Tried my best to communicate
I should go to the world without any language
And should live in it silently
I should transcend both thought and speech
And should worship His Holy feet
Others need not understand this
Even my mind need not experience it
I need not analyse it with my reason
But I should seek only His Holy feet
Even transcending the concept of ‘mukti
Breaching the condition of the very silence itself
Rejoicing in the bliss of bhakti
I should seek His lotus feet
There is no need for me to ask anything
There is no particular desire
I need not even sing and dance
I should surrender at His Holy feet
He already came within me
And He revealed it only to me
But there is no secret in it
But none will understand even if I try to communicate
Once reached that status
There are no words to communicate it
Even if I use the language of ‘silence’
Yet that too failed to communicate it
Yet I wrote something like this
And only shared that experience alone
And going to the end of language
I tried my best to communicate it
Mathirigi, 21-6-16, 3.00 pm.
BT Song 452
This night when I sat silently, I recalled my life some 25 or 30 years before. Then some kind of chillness went through my spine. Then I wondered how I managed to negotiate all such turmoil and still survive in the Lord. Still, I cannot reconcile with myself that I remain in my bhakti even after so many ups and downs in life, particularly in the early part of my journey. Left alone, I definitely would have gone and completely perished. It is nothing but the grace of God which sustained and brought me up to this day. As I recalled all my past experience with so many turmoils, I wrote this song as Thanks giving to God.
BT Song 452 உன்னருளுக்காக
என்னமாய் என்னை ஏந்திச் சுமந்தாய்
எப்படி நீயும் தாங்கியே வந்தாய்
எண்ணிலா பிழைகள் எத்தனை செய்தும்
எதற்கோ என்னை நீயுமே காத்தாய்
பின்னிட்டு வந்த பாதையைப் பார்த்தால்
பேச்சு-மூச்சு நின்று தான் போகுது
இன்னும் கூட என்னால் நம்ப முடியலை
என்னமோ உன் சித்தம் இதில் உள்ளது
எத்தனைக் கோடி மாந்தர் அழிந்தார்
அவருடன் நானும் ஏன் அழியல
நித்தம் நொந்து வாழ்ந்து முடித்தார்
என்னவோ அவர் போல் நானும் வாழலை
என்னைவிடப் பல நல்லவர் இருந்தார்
ஏனோ அவரை நீ மீட்கவும் இல்லை
எத்தனையோ தேவை கொண்டுமே வாழ்ந்தார்
ஏனோ அவர் மட்டும் ஒன்றும் பெறவில்லை
புத்தியில் சிறந்து, பக்தியில் உயர்ந்து
ஞானத்தில் நிறைந்து, சீலத்தில் உயர்ந்தார்
அத்தனை பேரை ஏனோ ஒதுக்கி
நீசன் என்னை மட்டும் ஏனோ மீட்டாய்
இந்த ரகசியம் இன்னும் விளங்கலை
எப்படிப் பார்க்கினும் சற்றும் புரியலை
பலரிடம் சென்று கேட்டுமே பார்த்தேன்
பாவம் அவருக்கு ஏதும் தெரியலை
உருவானபோது உன் கண் பார்த்ததால்
உரு தோன்றும் போது உன்னருள் காத்தது
உலகினில் வந்து உழன்ற போதும்
அவ்வருள் ஒன்றே என்னையும் மீட்டது
அதனால்தானே ஏந்திச் சுமந்தாய்
அனுதினம் என்னைத் தாங்கியும் வந்தாய்
எண்ணிலாப் பிழைகள் செய்திட்ட போதும்
உன்னருள் நிலைக்க என்னையே காத்தாய்
21-6-16, மத்திகிரி, இரவு, 11.30
BT Song 452 For your Grace
How much you carried me on your shoulders
And how much you upheld me so far
Though I have done many mistakes
For some reason you kindly sustained me
When I turn and look back
I become stunned without words
Still, I cannot believe it
And there is something in it
How many millions of human get perished
Why I too never get perished along with them
Many spent the day with much pain and suffering
Why am I not living like them?
There are many good people better than me
But you never redeemed them
Many lived with many needs
But they never received much in life
They shined in intellect and progressed in bhakti
And become very wise and become great in nobleness
Yet setting them all aside
You saved this mean one for some reason
Till this day I cannot understand this secret
How much I analyse it never becomes clear to me
And I asked many about it
But none of them could understand it
Your eyes were on me when I was formed
Your grace protected me when I grew in the womb
Though I came on this earth to suffer
That Grace alone again redeemed me
That is why you carried me so far
And every day you uphold me
Though I have done many mistakes
In order to uphold me, your grace protected me
21-6-16, Mathirigi, 11.30 pm.
BT Song 453
The tussle between heart and buddhi is constant. One refuses to listen to the other and both are not ready to compromise even on small matters. Sometimes I feel that God too is not interfering in this tussle and just stands by and enjoys my own struggle. So I said that I will do my best to control them both. And whatever might be the outcome, I will come only to Him back.
BT Song 453 மீண்டும் வருவேன்
இனியொரு தருணம் நீ தர வேண்டும்
ஏழைக்கு இரங்கி அருளிட வேண்டும்
எத்தனையோ பிழை இதுவரை பொறுத்தாய்
கிருபைக்கு மேலே கிருபை அளித்தாய்
யாரைக் குற்றம் இதில் சொல்ல
மனதோ, அறிவோ எதைச் சொல்ல
அறிவுக்குப் புரிவதை மனதுமே எதிர்க்குது
மனதின் தேவையை அறிவோ மறுக்குது
இடையில் என்பாடு என்ன ஆகும்
எத்தனையோ சொன்னேன் ஏற்கவும் காணும்
அவற்றின் போக்கிற்கு போகவும் முடியல
அவற்றை என்னாலே வெல்லவும் முடியல
கைகட்டி நீயும் வேடிக்கை பார்க்கிறாய்
என் கண்ணீரை நீயும் காண மறுக்கிறாய்
அடிபட்டு நானும் வந்து நின்றால்
அதைக்கூட நீயும் பார்த்து சிரிக்கிறாய்
இந்தக் கொடுமையை எவரிடம் சொல்வது
என்னவோ செய், நான்னென்ன செய்வது
முடிந்த வரைக்கும் போராடிப் பார்க்கிறேன்
முடிவேது ஆனாலும் மீண்டும் வருகிறேன்
23-6-16, (24-6-16) மத்திகிரி, இரவு, 12.10
BT Song 453 Again I will come
You should give me one more chance again
And you should have compassion on this poor one
How many of my mistakes you forgave so far
And bestowed grace upon grace to me
Who is to be blamed in this?
Whether it is heart or my buddhi/mind
What is clear to my mind the heart opposes?
And my mind refuses to recognize the need of my heart
What will happen to me in between them?
Though I tried to convey, they refuse to accept it
I cannot allow them to go as they like (in their own ways)
At the same time, I cannot overcome them
You too watch this tamasha/drama
And you refuse to see my tears
Once I come unto you with my wounds
And you laugh seeing them too
Where to go and tell this atrocity
Do whatever you like, what else can I say
I will try my best to struggle with them
Whatever might be the result I will come again to you
23-6-16, (24-6-16) Mathigiri, 12.10 am.
BT Song 454
After completing my regular reading, I used to take a few minutes to think about the Lord and pray (as I believe in keeping short accounts with God). And this time I said, ‘your feet are enough and I don’t need anything and have nothing to say. Then I wrote this song.
BT Song 454 இணையில்லை
திருவடி அன்றிப் புகலிடமேது
தெய்வமே அன்றி துணை நமக்கேது
கிருபை இன்றிக் காவலும் ஏது
கருணையன்றி ஆறுதல் ஏது
கண்ணுக்குத் தெரியாது காக்கும் அவன் கரம்
கருத்துக்கும் எட்டாது தாங்கும் அவனறம்
மனதிற்கும் விளங்காது மாறாத அவன் குணம்
அறிவுமே அறியாது அவன் கொண்ட இரக்கம்
அமைதியை நாடி வந்திடும் போது
அகத்திலும் புறத்திலும் அதையே தருவான்
ஆறுதல் தேடி வந்திடுவோர்க்கு
அபயம் அளித்து தேறுதல் அருள்வான்
தனிமையில் அவனை நாடிடும் போது
தனித்தே வந்து நம்முடன் அமர்வான்
ஏதுமே எடுத்துச் சொல்லவும் வேண்டாம்
நம் ஏக்கத்தை உணர்ந்து எல்லாமாவான்
சொல்லவும் தெரியாது தடுமாறும் போது
சொற்களைக் கடந்து நம்மையும் அறிவான்
மெளனமாய் மடிமீது தலை சாய்க்கும் போது
மனதிற்கு இதமாக வருடி கொடுப்பான்
எந்த உறவென்று இதை கூற முடியும்
எல்லா உறவிலும் குறையொன்று இருக்க
அதைக்கூட நாமுமே அறியவும் வேண்டாம்
அவனே எல்லாமாய் ஆன பின்னாலே
செய்திட வேண்டுதல் இனி ஏதுமேயில்லை
துதித்திட எவ்வித வார்த்தையும் இல்லை
தொழுதிட எவ்விதத் துதிகளும் இல்லை
திருவடிக்கினி இங்கு ஈடிணையில்லை
24-6-16, மத்திகிரி, மதியம், 2.55
BT Song 454 Unparallel
Where is the refuge other than the Holy Feet?
And who the companion other than God
Other than Grace where the protection is
Where is comfort other than Grace?
His unseen hands are protecting us
His dharma which is beyond our mind is upholding us
Our mind won’t understand His unchanging character
Our intellect won’t understand His mercy
When we seek peace from Him
He will bestow it both in and out
And those who seek comfort
He will give refuge and encourage them
When we approach Him personally
He will sit along with us
We need not say much to Him
Knowing our longing He will become everything to us
Unable to know how to utter and stumble
He will understand us beyond our words
When we silently keep our head on His lap
He will gently touch our head to sooth our heart
What can we say about this relationship?
While there is a shortcoming in all other relationships?
We need not even know that (relationship)
Once He become everything to us
There is no need to even pray to Him
And there no words to worship Him
There is not enough praises to praise Him
And there is no equal to His Holy Feet
24-6-16, Mathigiri, 2.55 pm.
BT Song 455
I retired to bed by 11.50 pm after my regular reading etc. After I laying down I began to think what all the works that needs to be done tomorrow, particularly about the revision of the article which I am writing on sacrifice, the lemon pickle needs to be checked, what is the ‘tiffen’ that have to be made for amma, and all other works that needs to be addressed. Then I said to me in Tamil, ‘why you are running like this as if someone is chasing you (யார் துரத்துறாங்கன்னு இப்படி ஓடர). This is retirement life. Just relax and rest and do what you can do. Then the words which I said in Tamil inspired me to write this poem. As I often write with a melancholic note, I deliberately wanted to write with some humor and quickly wrote this song in ten minutes. Though I wanted to write a different conclusion, I changed it to go along with a bit of humor in this poem. I am not going to tell who is chasing me as you all know about it. And if you are able to guess, please don’t tell it to others or to me.
BT Song 455 சொல்லமாட்டேன்
யாரோ துரத்திட ஓடுகிறேன்-ஆனால்
எவரென்று எனக்கும் தெரியவில்லை
சட்டென்று திரும்பி நான் பார்க்கும்போது
என்பின்னாக யாரையும் காணவில்லை
ஆனாலும் ஓட்டத்தை நிறுத்திக் கொண்டு
யாரென்று அறிந்திட துணிவும் இல்லை
துணைக்கு ஆட்களைத் தேடினாலும்
என்னுடன் வந்திட எவரும் இல்லை
காலடிச் சத்தமும் கேட்கின்றது-ஆனால்
கண்ணுக்கு மட்டுமே தெரியவில்லை
யாரென்று அதட்டியே கேட்டாலும்
இதுவரை பதிலுமோ வரவும் இல்லை
எதுக்காகத் துரத்துரான் என்பதுமே
இதுவரை எனக்கும் புரியவில்லை
என்னிடம் ஒன்றுமே இல்லாத போது
எதற்காக வருகிறான் தெரியவில்லை
அவன் தேவை எது என்று தெரிந்து கொண்டால்
அதன்பின்னே ஏதேனும் செய்யலாம்
ஆகையால் துணிவைத் தரித்துக்கொண்டு
அவனை எதிர்கொள்ளத் திரும்பி நின்றேன்
நான் நின்றால் அவனுமே நிற்பதாலே
அவனுக்குத் தெரியாமல் தேடிச் சென்றேன்
எங்கெங்கோ தேடியும் இதுவரையில்
எங்குமே அவனைக் காணவில்லை
தப்பித்தோம் என்று எண்ணிக் கொண்டு
சீக்கிரம் போய்விட எத்தனித்தேன்
மீண்டும் காலடிச் சத்தம் கேட்க
மிரண்டுபோய் நானும் நின்றுவிட்டேன்
துரத்திடும் ஆளையும் தெரியவில்லை
துணைக்கு வந்திட யாரும் இல்லை
காப்பாற்றக் கடவுளை வேண்டி நின்றேன்
கணப் போதில் அவனும் அருகில் வந்தான்
என்நிலை நானும் சொன்ன போது
என் மீது அவனும் இரக்கம் கொண்டு
துரத்திடும் ஆளையும் எனக்குக் காட்டத்
திகைத்துப்போய் நானும் தலைகுனிந்தேன்
யாரென்று நான் சொல்லிவிட்டால்
எல்லோரும் ஏளனம் செய்திடுவார்
ஆகையால் அதை மட்டும் கூறமாட்டேன்
ஆனாலும் ஓட்டத்தை நிறுத்த மாட்டேன்
மத்திகிரி, 24-6-16 (25-6-16) இரவு, 12.10
455 I won’t tell (who is it)
I am running chased by someone
But I don’t know who that person is
When I suddenly turn back to look
I cannot find anyone behind me
But I don’t have enough courage stop running
To find out who is that person
And if I search for some companion to run with me
I cannot find anyone to run with me!
I can hear his footsteps clearly
But I cannot see him
If I rebuke and ask ‘who are you?’
Till this day no answer came
Why he is chasing me
I cannot understand till this day
When I don’t have anything with me
I don’t know why his after me?
If I came to know his needs
Then I can do something about it
Therefore, taking courage
I turned back to face him boldly
If I stop and stand, he too stands (not following me)
Therefore, I went secretly searching for him
Though I searched in various places
Till this day I could not find him
Thinking that, ‘fortunately I escaped’
When I try to run away very fast
As I again heard his foot steps
I stood still with much perplexity
I cannot find that person who is chasing me
And there is none to come along with me
Therefore, I asked God to save me from this situation
And within few seconds He appeared before me
When I explained about my situation
Taking pity on me
When He pointed out the person who is chasing me
With much shock I bowed my head and stand still
But if I tell who that person is
All will laugh at me
Therefore, I won’t tell who he is
But won’t I stop running (to escape from him) Mathigiri, 24-6-16 (25-6-16) 12.10 am.
Leave a Reply