BT Songs 486 to 490

BT Song 486

Though I am not a saint, yet I agree with the saying that every saint needs to learn to walk alone. In such a journey personal conviction and unwavering principles are required to walk alone in that path. Interestingly our bhakti in the Lord never allows us to run the race all alone. Unlike other competitions in which one alone will get the first price, in our bhakti all are expected to get the price. At the same time though we all run the bhakti race collectively, yet we should be careful not to cross our track and run in another person’s track. Then both will stumble and fall down.  So while we need to carry each other’s burden, we too need to carry our burden so that finally we all will reach the goal and celebrate our bhakti together with the Lord.

BT Song 486 ஒரு ஓட்டம்

என்னவோ என் நிலை பரிதாபமாச்சு

எல்லோர்க்கும் என் வாழ்வு வேடிக்கையாய் போச்சு

என்னவோ வாழுறேன் எனக்காக ஒரு வாழ்வு

இது கூடப் புரியாது எல்லோர்க்கும் நகைப்பாச்சு

ஒவ்வொரு நாளாக ஓட்டத்தை ஓடுறேன்

உடன் வந்து ஓடினால் கூட்டியும் போகிறேன்

என் ஓட்டம் புரியாது இடையிலே நின்றபின்

என் ஓட்டம் என்னவோ இன்னும் தொடர்கிறேன்

கூட்டமாய் எல்லோரும் ஓடத் தொடங்கினும்

ஓட்டத்தில் எல்லோரும் ஒருசேர ஓடினால்

ஒருவர் பிறருடன் மோதியே வீழ்வாரே

இறுதியில் ஒருவரும் ஓட்டத்தை முடிக்காரே

தொடங்கிய இடத்தில் தெளிவாக நிற்கணும்

தொடங்கிய பின்னாலே எல்லைக்குள் ஓடணும்

பிறர் ஓடும் ஓட்டத்தை வேடிக்கை பார்க்காமல்

இலக்கு ஒன்றையே கண் முன் நிறுத்தணும்

இந்த ஓட்டம் பந்தயம் ஆகாது

எல்லோரும் வென்றிட தடையேதும் கிடையாது

தனித்து ஓடியே இலக்கை அடைந்தாலும்

அடுத்தவர் சேர்ந்திட ஊக்கமும் அளிக்கணும்

அதைத்தான் நானும் அன்றாடம் செய்கிறேன்

ஆனால் என் பேச்சு பிறருக்கு நகைப்பாச்சு

சரி விடு ஒரு நாளில் புரிந்து கொண்டபின்

என்னுடன் ஓடியே உன்பதம் சேர்வரே

அதுவரை நாம் மட்டும் ஒன்றாக ஓடுவோம்

அதனிடை பிறர் ஓட ஊக்கமும் தருவோம்

இறுதியில் எல்லோரும் ஓட்டத்தை முடித்தபின்

இணைந்து கூடியே கொண்டாடி மகிழ்வோம்

மத்திகிரி, 19-8-16, மதியம், 1.30

BT Song 486 A race

My condition become pitiable one

And my life become a thamasha for all

Somehow, I live a life for my need

And it became a thamasha, as others cannot understand it

Each day I run my race

And if someone joins and I run with him

And if he, not understanding my game, stops in the middle

Somehow I continue my race

Though we all started collectively

Yet if we began to run as a ‘crowd’

Each one will get stumbled with other

And no one will complete the race at the end

We should stand in our ground firmly

And should run within our track

And not watching how others are running

We should keep our goal alone in front of us

But this race is not a competition

And there is no hurdle for all to win

Though individually we reach the goal

Nothing will stop others to reach it

That is what I am doing each day

But my thought become laughable to others

Ok, let it be, once they understood that

They too will join me and will reach your abode

Till that time let us (two) run together

And encourage others to run their race

Once we all complete the race

Let us join together and rejoice.

Mathigiri, 19-8-16, 1.30 pm.

BT Song 487

I don’t know the reason, when I got up this morning, the first thought and word came out in the first line. Then I almost forgot about it.  When I was doing my regular reading, the same line again came back and began to inspire me. After I stopped reading I wrote this song.  The words came so quickly that even before I could write down one line the next line came in my mind. But when I wrote the first four lines in stanza four, when the next line came in my mind, I hesitated, as the metaphor which came was a bit delicate to use. But this is not mine as Tirumular already used it to tell about the nature of mystical or spiritual experience. But considering few people’s concern for me to use such illustrations or words, I tried my best to use some other illustrations or words. But then inspiration refused to flow.  Then thinking that once I complete the poem, I will change it and continue to write and complete the poem.  But when I read the entire poem again, I found that no other illustration can replace the deep mystery in such spiritual experience. So I left it as it is, though few may feel sad that again I am using similar illustrations or words to express my experience in bhakti. But in Indian religious context they were never treated as profane or erotic.

*முகத்தில் கண்கொண்டு பார்க்கின்ற மூடர்காள்

அகத்திற் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்

மகட்குத் தாய்தன்  மணாளனோ டாடிய

சுகத்தைச் சொல்லென்றாற் சொல்லுமா றெங்ஙனே– திருமந்திரம், மூலமும் தெளிவுரையும், அ. மாணிக்கம், சென்னை, வர்தமான் பதிப்பகம், ௨003, ஆறாம்பதிப்பு,  பாடல், 1739, , ப. 2944,

You fool who see with your naked eyes

The joy is only in seeing through your inner eyes

Even if requested how can a mother utter the joy

that she had with her husband to her own daughter—song 1739, p. 2944. My own translation

A.    Manikkam, Tirumandiram, original with commentary, Chennai, Vardaman Pub. 6th impression, 2003, [my own translation]

BT Song 487 எனக்கென்ன?

உனக்காக ஒரு பாடல்

உளமார நான் பாட

உடன் வந்து நீயும்

என்னுடன் உறவாட

இருவரும் மகிழ்ந்திங்கு

பேரின்ப நதியாட

இதையெல்லாம் பிறருக்குச்

சொல்லிட வேண்டுமோ

ஒவ்வொரு நொடி போகும்

உன்னிந்த விளையாட்டில்

ஊனுடல் எனில் உருகும்

நீ தரும் பரவசத்தில்

என்ன உணர்விது

என்பதை நான் சொல்ல

எனக்கே புரியாத

பேரின்ப நிலையது

உணர்வில் உணர்ந்ததை

உள்ளமும் உணராது

உள்ளம் உணர்ந்தாலும்

உடலுக்குப் புரியாது

உடலுக்குப் புரிந்தாலும்

ஊருக்குத் தெரியாது

ஊருக்குத் தெரிந்தாலும்

ஒருவருக்கும் விளங்காது

விளங்காத ஒன்றை

விவரிக்க கூடாது

விவரிக்க எண்ணியே

உளறக் கூடாது

மகற்குத் தாய் கூடச்

சொல்லித் தருவாளோ

தான் கொண்ட இன்பத்தை

சொல்லிலே வடிப்பாளோ

தன்னந் தனியாக

தனித்துப் பெற வேண்டும்

தான் கொண்ட இன்பத்தை

தனித்தே சுவைக்கணும்

பிறருக்குச் சொன்னாலோ

அதன் சுவை போய்விடும்

பிறகு அதையெண்ணி

உன் மனம் வாடிடும்

இது என்ன பக்தியா

எல்லோரும் கொண்டாட

இதுவென்ன முக்தியா

எல்லோரும் ஒருசேர

பக்திக்கும் முக்திக்கும்

மேலான பரவசம்

பாதார விந்தத்தில்

செய்திடும் சமர்ப்பணம்

சரணா கதியென

சான்றோர்கள் சொன்னார்கள்

திருவடி சிரம் மீது

படுகின்ற நிலையென்பார்

ஒருசேர அவனுள்ளே

ஒன்றிய பின்னாலே

எப்படிச் சொன்னாலும்

அதைப்பற்றி எனக்கென்ன?

மத்திகிரி, 19-8-16, மதியம் 2.00

BT Song 487 I don’t mind

As I sing a new song

For you each day whole heartedly

And as you too come to me

To have intimate fellowship

As both of us swim

In the river of bliss

Can we share this?

With others?

Each second will pass

In this your divine play

And my body will melt

In the joy that you give

I don’t know

What kind of bliss is this?

An ananda (bliss)

Which I cannot even understand

What is mingle with my senses

My heart wont’ understand

Even if my heart understands it

The physical body won’t understand it

Even if the body understands it

Others cannot understand

Even if others understood

None can explain it

The one which is beyond understanding

We should not try to explain

And trying to explain it

We should not babble

Can a mother

Share with her daughter

The bliss that she had (with her husband)

To her own daughter*

We should receive it

Individually

And should enjoy it

All alone

If we share it with others

Its taste will be gone

Then your heart will become sad

Thinking about it

Is this bhakti

All join to celebrate?

Is this mukti

For all of us to join together?

This is bliss

Beyond bhakti and mukti

And it is the saranagathi

Which we offer at your feet

The saints said that

This is called ‘saranagathi’

And it is a status

As His feet touch our head

Once I mingled

With Him as one

I don’t mind

Whatever others say about it

Mathigiri, 19-8-16, 2.00 pm.

BT Song 488

As I retired to bed, I simply said to the Lord, it is enough for me to have your grace. Then inspired by that word, I wrote this song on 10th August, which later I completed on 20th by writing the final two stanzas.

BT Song 488 இதுபோதும்

அருளொன்று இருந்தாலே போதும்

அவனியில் வாழ்ந்திடும் காலம் முழுதும்

உறவாகி வந்தாலே போதும்

உள்ளம் முழுதும் நிறைகின்ற வரையும்–அரு…

இதயம் கனிந்தாலே போதும்

இசையுடன் ஒன்றாகி வாழ முடியும்

உள்ளம் மகிழ்ந்தாலே போதும்

உணர்விலே கலந்து ஒன்றிட இயலும்–அரு…

உன்னுடன் வாழ்ந்தாலே போதும்

உவகை ஊற்றாகி பாயும்

ஊக்கம் இருந்தாலே போதும்

உன்னையே பாடிடும் எண்ணம் பெருகும்–அரு…

பக்தி இருந்தாலே போதும்

பாரினில் வாழ்கின்ற காலம் முழுதும்

முக்தியும் உடன் வந்து சேரும்

முக்தேசனே உன் திருவடி ஒன்றே போதும்–அரு…

இப்படி வாழ்ந்தாலே போதும்

என்னுடன் நீயும் இணைந்திட வேண்டும்

பக்தர் குழாமொடு சேர்ந்து

பாடி உன்னைப் பரவிட வேண்டும்–அரு…

மத்திகிரி, 10-8-16, இரவு, 11.45  & 20-8-16, காலை 11.00

BT Song 488 This is enough

If I have grace alone

It is enough for me as long as I live on this earth

It is enough if you come to have fellowship with me

Till my heart is filled with you— If the grace….

It is enough only if my heart moves

Then I can live with music (to sing about you)

It is enough if I rejoice in my heart

Then I can mingle with you in my senses— If the grace….

It is enough I live only with you

Then joy will overflow from me

It is enough if I have enthusiasm

Then thought will overflow to sing about you— If the grace….

It is enough if I have bhakti alone

As long as I live on this earth

Then mukti will come and join automatically

O Lord Muktesa, your holy feet are enough for me— If the grace….

It is enough if I live like this

You should come and join with me

I should join with the bhaktas

And should sing your praise always— If the grace….

Mathigiri, 10-8-16, 11.45  & 20-8-16, காலை 11.00

BT Song 489

Some time in DD Bharati, which most of you do not watch, they will show some beautiful natural scenery when there is a gap of a few minutes in between two programs. The beautiful mountains, streams, flowers, dews, birds will mesmerise one’s mind. As I watched one such beautiful scenery recently, I recalled that. Then I said, ‘is nature beautiful or the one who created is beautiful’.  Then during my regular walk (between 11.00 to 11.30 pm), as I was reflecting on it, I wrote this song.

BT Song 489 அழகு

அடடா எத்தனை அழகு

ஆண்டவன் படைப்பின் மெருகு

சித்தத்தை மயக்கி இழுக்க

நல்ல சங்கீதம் என்னுள்ளே பிறக்க

முத்துக்கள் போல நீர்த்திவலை?

மெல்லிய இலை மீது மிதக்க

சுடர்விடும் சூரியன் கூட

அதன் உள்ளிருந்து நகைக்க

தத்தித் தத்தி நடக்கும் பறவை

சங்கீதம் பாடியே ஒலிக்க

தித்திமி என வண்டினம்

ஜதியை அதற்கு இசைக்க

சில்லென்ற தென்றல் காற்று

சத்தமின்றி மெல்ல வருட

சலசலவென சிறு ஓடை

ஒய்யாரமாய் நடை போட

மெல்ல மலர்ந்திட்ட பூக்கள்

மகரந்தம் அள்ளித் தெளிக்க

மெளனமாய் மனமும் ஆழ்ந்து

முக்தேசனை எண்ணித் துதிக்க

என்னமாய் அழகாய்ப் படைத்தான்

ரசிக்க என்னையும் அழைத்தான்

இயற்கையோடு ஒன்றி துதிக்க

எனக்கும் கருணை அளித்தான்

மத்திகிரி, இரவு, 11.10, 20-8-16

BT Song 489 Beauty

How beautiful is

God’s creation

And as it drags my attention

Beautiful song born within me

As beautiful dews, like pearls

Float on the leaves

The sun which shines

Began to laugh from within them

The birds which walk jumping

Began to create music

The bees began to

Add beat (thala) to it

As the cool breeze

Silently touches the body

The small brook

Began to flow gently

As the flowers blossomed gently

They brought fragrance around

And my heart too

Began to praise thinking Muktesan

How beautifully He has created

And called me to enjoy it

And He bestowed grace

To worship Him mingling with nature

Mathigiri, 11.10 pm. 20-8-16

BT Song 490

After reading an exposition on Rg. V. 10.121* by Adelheid Mette (God-Gods—Transcendence, pp. 43- 86, in  Bsteh (ed.) Hinduism Questioning Christianity: Lectures—Questions—Interventions, Modling St Gabriel Publications,2007, trans. Ingeborg Bogensberger, Vienna, in cooperation with John Mercer and Adrianne Nagy DaPonte, Boston, original in German: A. Bsteh (ed.), Der Hinduismus als Anfrage an christliche Theologie und Philosophie (Studien zur Religionstheologie;3) Modling, 1997, pp. 43-53} I was asking thinking the difference between the Hindu worldview and Muktiveda. As Mette rightly says, ‘The term “creation” is somewhat misleading, since it recalls the idea of a creatio ex nihilo: the Indian texts mostly speak of an emission, emanation (sarga) or of a ‘making, shaping’ (KR-)’—notes, 14, p. 49 it is difficult to fathom the mystery about creation.  The only question that I have to ask God is ‘how you have created’?  Whatever might be the answer, considering the complexity in the entire creation it will be a riddle once we begin to understand. This song reflects this meditation. 

*This poem is entitled by Paul Thieme as “To the Unknown God” ‘alluding to St. Paul’s sermon in Acts’ (p.48) as each of the stanza ends with the ‘refrain-like with a phrase formulated as a question, “To which god should we assign the sacrificial offering (i.e., to whom should we dedicate the offering?” (p.48)

BT Song 490 புரியாத புதிர்

எதற்கு எல்லாம் படைத்தாய்

எமக்கு அதனைக் கொடுத்தாய்

கொடுத்த நீயும் யாரு-அதைக்

கொஞ்சமேனும் எமக்குக் கூறு

எதனைக் கொண்டுமே படைத்தாய்

எப்படி அவற்றைத் தொகுத்தாய்

வெறும் கையால் முழம் போட

இது வேடிக்கையல்லவே சொல்ல

எம்மைச் சுற்றிஉள்ள உலகு

அதில் எத்தனை விந்தைகள் இருக்கு

அவிழ்க்க அவிழ்க்க முடிச்சு

ஆயிரம் அதிலே இருக்கு

சின்னதாய் ஒன்றைச் செய்ய

செய்கிறோம் எத்தனம் பலவும்

சின்னப் பிழைஒன்று போதும்

செய்தவை வீணாகிப் போகும்

இப்படி எம்நிலை இருக்க

உன்னைப் பற்றி என்ன நினைக்க

எப்படிப் படைத்தாய் என்று

எப்படி உன்னையும் கேட்க

ஆர்வமும் அதிகம் பெருகிட

அதையும் உன்னிடம் கூறிட

எமக்கு தெரிந்த ஒன்றுமட்டும்

“எப்படி” என்ற கேள்விமட்டும்

எப்படிக் கேள்வி கேட்டாலும்

எந்த விடையைப் பெற்றாலும்

புதிரும் முற்றிலும் போகாது

முடிச்சு முற்றாய் அவிழாது

மத்திகிரி, 20-8-16, மதியம், 2.30

BT Song 490 A riddle

Why you have created everything

And gave them all to us?

Who you are (the one who created it)

And kindly tell a bit about you

Out of which you have created everything

And how you organized them

This is not a joke as if we can

Measure an empty space with hands

How many wonders are there?

In this world which is around us

As we clear each riddle

Many more are in them

Even to create a small thing

We toil a lot

Even a small mistake

Is enough to spoil it completely?

This being our condition

What can we think about you?

And how can we even ask

How you have created them all?

As our curiosity increased

We know only one thing to say

‘How’ and ‘how’ is the only question?

That we have to ask you

How much we ask the question

And whatever kind of answer that we receive

The riddle won’t go completely

And we cannot solve it finally

Mathigiri, 20-8-16, 2.30 pm.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *