BT Song 516
As I continue to read another topic in the book: Indian Quest for Salvation between Emancipation and Unification’ by Andre Padoux in Andreas Bsthe (ed.), Hinduism questioning Christianity: Christian Faith in the Encounter with Hinduism, vol. 1, Modling, 2007, St Gabriedl Publications, originally first published in German: A. Bsteh (ed.,), Der Hinduismus als Anfrage an christliche Theologie und Philosophie (Studien Zur Religionstheologies; 3). Modling, 1997, Translation by Ingeborg Bogensberge, Vienna, in cooperation with John MMercer and Adrianne Nagy DaPonte, Boston, pp. 219-247, the only thought that came to my mind was, ‘nothing looks simple in life—either in mundane activities or in metaphysics. Even the bhakti which I adopted in my sadhana is more challenging than any other paths. Though God gives convincing answers to all my questions and inner struggle, He refuses to give the language for me to communicate with others. And I find this alone is very simple and I am happy to accept and remain silent not sharing the answers that He gives to me.
BT Song 516 எளியவழி
எளிமையாகத் தோன்றினாலும்
எதுவும் எளிதல்ல
எளிதில் எதையும்
அடையும் வழியை
எவரும் கண்டதில்லை
இறைவனே தேடிவந்து
மீட்டுக் கொண்ட போதிலும்
அதையும்கூட எளிமையாக
ஏற்கவும் முடியவில்லை
இடையிடையே என்னறிவு
கேட்ட கேள்வி எத்தனை
கிடைத்தவிடையை ஏற்க மறுத்து
தர்க்கம் செய்த தெத்தனை
தர்க்கம் செய்து கண்ட முடிவு
ஏதுமற்ற போதிலும்
தர்க்கம் செய்யும் மனது மட்டும்
என்னை விட்டுப் போகல
புத்தியால் தர்க்கம் செய்து
தோற்றபின்னும் நானுமே
எளிமையான பக்தி வழி
ஏற்றுக் கொண்ட போதிலும்
பக்தி கூட எளிதாக
எனக்கு வந்து விடவில்லை
இறுதியாக இதற்கு விடை
என்னவென்று தேடினேன்
அதையும்கூட காட்டும்படி
இறைவனை வேண்டினேன்
என் மீது இரக்கம் கொண்டு
எனக்கு வழி கூறினான்
அதை எடுத்துச் சொல்லும்
மொழியை தர ஏனோ மறுத்தான்
இதுவும் கூட நல்லதாக
எனக்கும் இருந்ததால்
இதையுமே ஏற்றுக்கொண்டு
மௌனமாக இருக்கிறேன்
மத்திகிரி, 14-9-16, மதியம் 2.20
BT Song 516 Simple way
Nothing is so simple
As it looks
None has
Found that
Simple way
To attain it
Even though
God has come
And redeemed us
Still we cannot
Accept that too
As a very simple one.
Meanwhile
Many are the questions
That my mind asked
Refusing to accept it
How much it argued.
Though no proper
Conclusion has arrived
Yet the arguing nature
Has never gone from me.
Though I was defeated
In all my intellectual debates
And accepted
The simple path of bhakti,
Even this bhakti too
Never came easy for me!
Finally I searched the
Answer for that too
And asked God
To show that to me.
Having pity on me
He showed that way
But refused to give
The language to communicate it!
As I found this also
Good one
Accepting it
I keep quiet.
Mathigiri, 14-9-16, 2.20 pm.
BT Song 517
As I am reading again about the Indian worldview of ‘maya’ and the illusory nature of the world, I compared it with the Muktivedic view, which accepts the reality of the world in all its form. Amidst all the suffering and pain, it encourages us to celebrate the material blessing that God has given us and rejoice in Him. Though we have ‘bliss’ as the climax of our spirituality/mukti in Hinduism too, for common people it presents a bleak picture about the world and life. Even the mukti which it promotes is more a means to escape from the karma-samsara and all kinds of dhukkas [sufferings] . A gloomy, pessimistic view of the world, life and mukti is an invisible inner current in our Indian worldview. Though sin is projected as its counterpart in Muktiveda, yet the overall picture that we get is celebration of life, bhakti and mukti. Rejoice always in the Lord; again I say rejoice—says the bhakta amidst all his suffering.
BT Song 517 மாயையல்ல
கனவோ, நினைவோ, கற்பனையோ
காண்கின்ற யாவும் சொப்பனமோ
உடலும் மனதும் உயிருடனே
உணர்ந்திடும் யாவும் பொய்தானோ
வாழ்வும் மாயை என்றாலே
வாழ்வதில் அர்த்தம் ஏதுமுண்டா
வீழ்ந்தவர் கூறிய வாதமிது
வென்றவர் வீழ்த்திய கொள்கையிது
மாயை மாயை என்று சொல்லி
வீணில் முடங்கிக் கிடப்போமோ
துணிவு கொண்டு புறப்படுவீர்
தோள்தட்டி எழுந்து வென்றிடுவீர்
காணும் உலகம் கனவல்ல, அதில்
காணும் ஏதும் மாயையல்ல
வாழும் வாழ்க்கையும் வீணுமல்ல
அர்த்தமற்றது வாழ்க்கையல்ல
வீணாய் நம்மையும் படைக்கவில்லை
வெறுமையாய் நம்மை அனுப்பவில்லை
உற்றம் சுற்றம் உறவுடன்
உலகையே தந்தான் வெகுமதியாய்
பல்கிப் பெருகி பரவச் சொன்னான்
பாரை முழுமையாய் ஆள சொன்னான்
பகிர்ந்து அளித்து வாழ சொன்னான்
பொறுப்பை அதற்கு ஏற்க சொன்னான்
இதை உணர்ந்தார் ஏற்றம் கண்டார்
ஏறுநடை போட்டு வாழ்ந்து சென்றார்
பிறரைத் தம்முடன் இணைத்துக் கொண்டு
படைப்பின் உயர்வைப் புரிய செய்தார்
அவருடன் நாம் இணைந்திடுவோம்
அனைவரும் வாழ உதவிடுவோம்
இறைவன் சித்தம் இதுவென்று
ஏற்று இனிதாய் வாழ்ந்திடுவோம்
மத்திகிரி, 15-9-16, மதியம், 2.55
BT Song 517 Not maya
Is it a dream or true or imagination
And all that we see are mere illusions?
Do the body along with senses
Which experience is false?
Is there any meaning in living
If life is considered as ‘maya’ (illusion)
This a philosophy of the defeated one
And a philosophy which was defeated by the successful one
Will we remain crippled
By saying everything as maya
Come on and stand up
And march forward with much courage
The world which we see is not mere dream
Nothing in it is maya
The life that we live is not mere waste
And life is not without any meaning
We are not created vainly
And never sent with empty hands
He bestowed friends and relatives
Along with this earth as a gift
He asked us to be fruitful and multiply
And asked us to rule over the entire earth
And asked us to live by sharing
And told us to accept responsibility for that
And those who understood this, progressed in life
And lived a magnificent life
And taking others along with them
Helped them to understand the greatness of creation
Let us also join with them
And help everyone to live
And live happily knowing that
This is the will of God
Mathigiri, 15-9-16, 2.55
BT Song 518
The way and reason for God to redeem me and make me His own still remains a mystery to me. Maybe as He does not want to lose what belongs to him, he showed this extra grace in my life to make me His own. So there is a reason for me to go to His presence to celebrate this mystery with Him always.
BT Song 518 அடைந்தேன் சரணாகதி
நிம்மதி தேடி வந்தேன் உன் சன்னிதி
நீசருக்கு நீயன்றி வேறிங்கு யார்கதி
ஏழைக்கு என்றும் நீயாவாய் பெரும் நிதி
எனக்குமே அருளினாய் உன்னிலே உயர்கதி
உன்னாலே வாழ்கிறேன் உளமாற துதிக்கிறேன்
உன்னருள் மழையிலே நாள்தோறும் நனைகிறேன்
உனக்கென எனைத்தந்து உன்னடி பணிகிறேன்
உன் சேவை செய்வதால் உவகையும் அடைகிறேன்
போற்றி துதிப்பதில் எத்தனை பேரின்பம்
உன் புகழ் பாட உருகுது என் மனம்
உன் செயல் நினைத்தாலே குளமாகும் கண்களும்
உன்னுடன் வாழ்வது நான் பெற்ற புண்ணியம்
தனித்து வாழ்ந்திட வரமும் நீ தந்தாய்
உனக்குள்ளே வாழ்ந்திடும் உரிமையும் தந்தாய்
எத்தனை சலுகைகள் எனக்கென தந்தாய்
என்னவோ என் மீது கரிசனம் கொண்டாய்
என் மீது உனக்கும் ஏனிந்தப் பரிவு
என்பதை எண்ணி வியக்குது அறிவு
ஏதோ காரணம் இதற்கு உள்ளது
அதையும் அறியத் தவிக்குது மனது
ஆதியில் நீ கொண்ட அன்பாக இருக்குமோ
அறியாது வாழ்ந்தேன் என்பதால் இரக்கமோ
உருவாகும் முன்னே உனதென்ற உரிமையோ
உனதென்று ஆனபின் நீ கொண்ட கடமையோ
எதுவானபோதும் எனக்கானாய் உறவாய்
அதனால் தருகிறாய் எல்லாம் நிறைவாய்
எத்தனை வேண்டினும் எப்படி மறுப்பாய்
எனவே அருளினாய் நீயும் பொறுப்பாய்
அதனால் வந்தேன் உந்தன் சன்னதி
அடைந்தேன் உன்னிலே அந்த உயர்கதி
பக்தன் என்பது நீ தந்த வெகுமதி
பாதத்தில் அடைந்தேன் நான் சரணாகதி
மத்திகிரி, 16-9-16, இரவு 11.20
BT Song 518 Took saranagati (refuge)
Seeking peace of mind I came in your presence
Who else is there as the abode for lowly ones
You alone become the treasure for the poor one
And you bestowed that noble status even to me
I live because of you and praise you with whole heart
I get wetted each day in the rain of your grace
I bow at your holy feet by offering myself for you
And I rejoice as I do your seva
How much joy is there in praising you
And my heart melts as I sing your praise
When I think about your act my eyes are filled with tears
And living with you always is the merit (punya) that I attained
You gave the boon to live alone
And you gave me the right to live within you
How many concessions that you gave for me
Somehow you have a special concern for me
Why you have this much mercy upon me
And when I think about it I really wonder
There is some reason for this
And I am longing to know about it
Would it be the first love you had for me
Or is it your mercy as I lived without knowing you
Is it your right that I belong to you even before I was formed (in the womb)
Or is it your duty once I become yours
Whatever it might be, you become my own
Therefore you give everything in full measure
How you will say ‘no’ once I ask whatever I want
Therefore you showed your grace with much responsibility
Therefore I came unto your holy presence
And received that noble status in you
Becoming a bhakta is your best gift
And I took refuge at your feet
Mathigiri, 16-9-16, 11.20 pm.
BT Song 519
As I was reading about ‘The Path of Knowledge’ by Gerhard Oberhammer [in Andreas Bsthe (ed.), Hinduism questioning Christianity: Christian Faith in the Encounter with Hinduism, vol. 1, Modling, 2007, St Gabriedl Publications, originally first published in German: A. Bsteh (ed.,), Der Hinduismus als Anfrage an christliche Theologie und Philosophie (Studien Zur Religionstheologies; 3). Modling, 1997, Translation by Ingeborg Bogensberge, Vienna, in cooperation with John MMercer and Adrianne Nagy DaPonte, Boston,] and the following question and answer time in Hinduism Questioning Christianity, I wrote this song.
BT Song 519 எளியவழி
முக்தியின் முடிவும் இதுதான் என்று
முடிவாய் நானும் எதைத்தான் சொல்வது
முக்திக்கு தேவை இதுதான் என்று
முடிவான காரணம் எதுவென்று சொல்வது
மீண்டும் பிறக்கும் பிறப்பை அறுக்கும்
உண்மை அறியும் ஞானம் தானோ
இறைவனுடனே ஒன்றியே கலக்கும்
பேறு என்று அதையும் சொல்வதோ
நானே இறைவன் என்று அறியும்
ஆன்ம ஞானம் அதுதான் என்பதோ
ஏதுமற்ற சூனியம் என்னில் அடைய
என்னை வெறுமை ஆக்கும் பயிற்சியோ
இவை அனைத்தும் தூரமாய் இருக்க
எளிய வழியும் எங்கு இருக்கு
என்று எண்ணித் தவித்த போது
குருவாய் வந்தான் வழியைச் சொல்ல
எனக்குப் புரியும் வழியில் சொன்னான்
என் கை பிடித்து அழைத்துச் சென்று
வழியைக் காட்டி நின்று விடாமல்
கூடவே வந்து கரையும் சேர்த்தான்
எளிய இந்த வழியை ஏற்போர்
என்னைப் போன்ற முக்தி பெற்றார்
தத்துவம் பேசி தர்க்கம் செய்பவர்
இதுவரை அதையும் புரியா திருக்கார்
மத்திகிரி, 17-9-16, மதியம் 2.30
BT Song 519 Simple means
‘This is the final end of mukti’
How can I say which one is that
What is required to attain mukti
And which one can I say definitely
Is it the true wisdom
Which will severe the cycle of rebirths?
Is it the noble status
To become one with God
Or is it that spiritual truth to know that
“I am god”
Or is it a discipline to found that
Emptiness (sunyata, nirvana) within me
Once all these paths remain unreachable
Where is a simple way to attain mukti
When I was get frustrated about it
He came as the guru to tell about it to me
He told in a way that I can understand
And not stopping once showing the way
He took my hands and walked along with me
Till I reached that destiny
Those who will receive this simple path
Will receive mukti like me
And those who argue debating various philosophies
Will remain not receiving it
Mathigiri, 17-9-16, 2.30 p.m
BT Song 520
As I went for my evening walk, some kind of worshipping spirit preoccupied my mind. While walking I began to sing some songs. Then as inspiration came, I wrote this song in my mind and when I came down I wrote this song.
BT Song 520 பாக்கியம் பெற்றவர்
கொண்டாடிப் பாடிட வந்திடுவீரே
குறையென்ன வைத்தான் சொல்லிடுவீர்
அன்றாடம் நம்முடன் வந்தவன் தானே
அளவின்றி அள்ளி தந்தவன் தானே
எண்ணியே பார்த்துச் சொல்லிடுவீரோ
இதுவரை அவன் செய்த நன்மைகளையே
எளிதாக அதனையும் மறுத்திடுவீரோ
இதற்குப் பதில் சொல்லிடுவீரே
கேட்டவை எல்லாம் கொஞ்சம் ஆயினும்
கூடத்தான் தந்தான் சேர்த்து அவனும்
பெற்றதை எண்ணி போற்றிடுவீரே
மேலும் தருவதைப் பெற்றிடுவீரே
அவனுக்கு நிகர் அவனே என்று
அறிந்தே சொன்னேன் நானும் நன்று
புரிந்தபின் இன்னும் தயக்கம் ஏனோ
புனிதனை போற்றிட வெட்கமும் தானோ
ஒன்றாகப் பாடிப் பணிந்திடும் போது
உவகை எத்தனை பெருகி பாயுது
வாயாரப் பாடி மகிழ்ந்திடும் போது
வையம் அவனைப் புரிந்து கொண்டாடுது
இந்தப் பேரினைப் பெற்றவர் யாரு
என்பதை மட்டும் என்னிடம் கேளு
பக்தியால் அவனைப் பணிவோரே
இந்த பாக்கியம் பெற்றவர் என்பேன் நானே
மத்திகிரி, மாலை, 6.00, 17-9-16
BT Song 520 The blessed ones
Come to sing and rejoice in him
tell me what you are lacking in him
He is the one who came with us each day
and the one who bestowed without limitation
Think all the blessings
which He bestowed so far in your life
can you easily forget them
give me the answer for that.
though you asked very few things
He added more and gave you all
and praise him thinking what you have received
and receive more and more whichever he will give further
He is equal only unto him
and I say this knowing very well
once you too understood this, why you hesitate
and do you feel shy to sing the praise of that holy one
as we join together and praise
what kind of joy is over flowing
when we praise and hail him
the world is also celebrates understanding that
‘who is the one who received this ‘
only you ask about it to me
‘only those who worship him with bhakti
alone are the blessed one’, I will say this
Mathigiri, 17-9-16, 6.00 pm
Leave a Reply