BT Songs 521 to 525

BT Song 521

As I listened to beautiful carnatic music I felt elated in my spirit.  It is very difficult for me to think about my life without (carnatic) music. Sometimes I feel addicted to it as my mother often complains that I am always listening to (carnatic) music rather than watching any other program. These days I even stopped watching much panel discussion on any news but use that time to listen to music. 

BT Song 521 கொண்டாடுவேன்

இசையோடு உனைப் பாடி

இதயத்தில் உனை நாடி

என்னுள்ளே உனைத்தேடி

வந்தேனே திருவடி

கணநேரம் உனையெண்ணி

கண்மூடி அமர்ந்ததால்

களி கொண்டு என்னுள்ளம்

துதிபாடும் தன்னாலே

இசையாலே மெருகூட்டி

அதனோடு பொருள் கூட்டி

சிந்தையால் உனை யேத்தி

வந்தேனே உனை போற்றி

இதுவன்றோ பேரின்பம்

நான் கொண்ட ஆனந்தம்

எப்படிச் சொன்னாலும்

புரியாத பரவசம்

இதைத்தர நீ வர

யாசித்து நான் பெற

எந்நாளும் பாடுவேன்

இதுபோல கொண்டாடி

மத்திகிரி, 17-9-16, மாலை, 7.30

BT Song 521 Will celebrate

With music

Seeking you in my heart

And searching you within me

I come unto your feet

Even if I sit

Only for few seconds

Thinking only about you

My heart will sing automatically with joy

I come unto you by hailing you

By uplifting you in my mind

Composing music

Adding beautiful song to it

This is the pure bliss

The anad which I got

A kind of bliss

Which I cannot understand

Once you come to give it to me

And I come to receive it

I will celebrate you always

Like this every time.

Mathigiri, 17-9-16, 7.30 pm

BT Song 522

There is a Tamil saying that, ‘we have treatment for paralysis but not for adamant and arrogant natures’. # Those who fail to recognize the limitations of their mind/buddhi easily become very arrogant in their intellectual capacity to analyse and arrive at their own conclusion.  The danger for such people is that left alone, they will in the end struggle with their own mind and intellectual capacity. More one becomes, the more humble she should be. There is no point in reasoning with them.  Allowing them to choose their own path, we should continue our journey in the Lord for which He chooses us.

One clear teaching of Muktinath is ‘humility’.  In spite of all doctrinal ambiguity there are many plain teachings in Muktiveda which helps me to keep my bhakti alive in the Lord, like: humility, teachability, simplicity, forgiveness, reconciliation, proper appraisal about oneself etc.  We need not confront those who remain arrogant and adamant in many areas.  Though God too won’t respond to them in their own terms, yet one Muktivedic warning is that ‘God resists those who are arrogant but shows His grace to those who are humble’.  I have seen in my life many who are in the end trapped by their own intellectual arrogant nature.  Their dependence on their own ‘self-sufficiency’ in the end becomes a trap for them, which they cannot recognize because of their arrogant and adamant nature.

#வாதத்திற்கு மருந்துண்டு, திமிர்வாதம், பிடிவாதத்துக்கு மருந்தில்லை

BT Song 522 பயனில்லை

எள்ளி நகையாடி ஏளனம் செய்யலாம்

எடுத்து எறிந்து எகத்தாளம் பேசலாம்

இறைவனை ஆயிரம் கேள்விகள் கேட்கலாம்

இதற்கெல்லாம் இறைவன் பதில் கூற மறுக்கலாம்

நம்போல சிந்திக்க மானுடன் இல்லையே

நம்மோடு வழக்காட தேவையும் இல்லை

புரியாத புதிராக அவனும் இல்லையே

புரிந்தபின் மறுப்போர்க்கு பதில் தேவை இல்லையே

தன் எல்லை அறியா தற்குறியாகி

தான் கொண்ட அறிவு தலைக்கு ஏறி

எல்லாம் இயலும் என்று எண்ணி

என்னவோ பேசுறார் எகத்தாளம் பண்ணி

அறிவாலே மட்டும் ஆராய முடியாது

ஆழ்மனதிற்கு அப்பால் செல்லவும் முடியாது

மனதாலே எல்லாம் புரிந்திட முடியாது

மெளனத்திற்கு அப்பாலே விடையேதும் கிடையாது

அதிகப் பேச்சு ஆபத்தில் முடியும்

அறிவை நம்பிட ஆணவம் பிறக்கும்

எளிமை ஒன்றே ஏற்றத்தை அளிக்கும்

பணிவு மட்டுமே பக்தியைக் கொடுக்கும்

புத்தியின் மேன்மையைப் போற்றிக் கொண்டு

புரிந்து கொண்டேன் என்று எண்ணிக்கொண்டு

அறிவை சார்ந்து வாழ எண்ணி

அழிந்த மாந்தர்கள் கோடியுண்டு

அவருடன் வாதாடிப் பயனும் இல்லை

அவரைத் திருத்த வழியும் இல்லை

அவர் போகும் வழியே போகவிட்டு

நம்பணி நாமுமே தொடர வேண்டும்

மத்திகிரி, 18-9-16, மதியம்  2.50

BT Song 522 No use

They can mock and laugh

And can talk arrogantly

Can ask thousands of questions to God

And God might refuse to give answer to them

He is not human to think like us

There is no need for him to confront us

He never remains a riddle

And someone rejects him even after understood; there is no need for any answer to them

Not knowing his own limitation and become a fool

And become very proud of his own knowledge

‘All are possible for me’ they say

And say many things mocking at God

We cannot analyse God only with our intellect

We cannot go beyond our deep conscience

We cannot understand everything by our mind

And there is no answer beyond silence

Too much talk (debate) will become a snare

And once we depend upon our intellect, it creates pride

Simplicity alone will uplift us

And humility alone will give bhakti

And hailing intellectualism

And thinking that they understood everything

Those who try to live depending upon their intellect alone

Have perished in million

There is no use in arguing with them

There is no means to correct them

Allowing them to go in their own way

We should continue to do our seva

Mathigiri, 18-9-16, 2.50 p.m.

BT Song 523

As I got up very early, after having a cup of tea, I had a relatively calm atmosphere which is a rare event here at Mathigiri as I am often disturbed by too much sounds and noises. But this morning it was relatively calm and I heard the voice of a rooster nearby. Then inspired by that calm atmosphere I wrote this song worshiping the Lord.

BT Song 523 பணிவு வேண்டும்

சேவல் கூவிடும் காலையிலே-உன்

சேவடி பணியும் வேளையிலே

மனம், மொழி கடந்த நிலையினிலே

திருவடி வந்தேன் தனிமையிலே

உளமுடன் உணர்வையும் சேர்த்துக்கொண்டு

உன்னையே மனதில் எண்ணிக்கொண்டு

உன் திருப் புகழினைப் பாடிக்கொண்டு

உன்னை தொழுதேன் பணிவு கொண்டு

அன்பு, பணிவு எளிமையையே

அவனிக்குக் காட்டினாய் உண்மையிலே

அவற்றை நானும் அணிந்துகொள்ள

வந்தேன் உன்னிடம் வேண்டிக்கொள்ள

உனது அடியான் என்பதிலே

உயர்வு உண்டு உண்மையிலே

ஆயினும் அதற்கு தகுதி வேண்டும்

அதையும் நீயே தர வேண்டும்

உனது வேதத்தின் உயர்வினையே

உணர்ந்து கொள்ள உண்மையிலே

அகக்கண் திறந்து அருளிடுவாய்

அதற்கு அறிவைத் தந்திடுவாய்

அறிவுக்கு ஏற்ற பணிவு வேண்டும்

அத்துடன் அடக்கமும் சேர வேண்டும்

உனக்கே அடிமை செய்யவேண்டும்

உனக்காய் நானும் வாழ வேண்டும்

இதற்கு உனது கருணை வேண்டும்

அதனை அடையப் பக்தி வேண்டும்

பக்தியைப் பெறவும் பணிவு வேண்டும்

பணிந்து உன்னிடம் பெற வேண்டும்

மத்திகிரி, 18-9-16, காலை, 6.00

BT Song 523 need humility

In morning when rooster makes noise

and when I bow at your feet

transcending heart and language

I came unto your feet all alone

Joining heart with senses

thinking only you in my heart

and singing your glory

I worship you humbly

You truly showed

humility and love to the world

I too came to ask you

to put them on me

Truly there is nobleness

to be as your bhakta

but I need to be qualified for this

and you alone should bestow it to me

In order to understand

the greatness of your Veda

kindly open my inner eyes

and give mind (buddhi) for that too

I need humbleness as per the knowledge

Along with it I need simplicity

I should do only your seva

and should live only for you

For this I need your grace

I need bhakti to receive it

To receive bhakti I need humility

and I should receive it only from you

Mathigiri, 18-9-16, 6.00 am.

BT Song 524

I strongly believe in charity. Of course I too agree that, ‘throwing a bone to the dog is not charity but sharing in the same bone when we are as hungry as the dog’, but instead of proclaiming such ideology, even if we could throw some bone to a dog in its need is more essential than having a philosophical talk about it.

BT Song 524 மனித நேயம்

இரங்கிடும் மனதையும் இறைவனே தருகிறான்

இரக்கம் என்பது அவனது கொடையாம்

எளியோர்க்கு இரங்கி உதவுதல் என்பது

இறைவனே நமக்கு தந்த வரமாம்

இரக்கம் இன்றி வாழ்தல் என்பது

இதயம் உள்ளோர்க்கு இயலா ஒன்றாம்

இரக்கம் பெற்ற நமக்கும் அதுவும்

இயல்பாய் அமைவது இன்னும் சிறப்பாம்

இரக்கத்தினாலே நம்மையும் மீட்டான்

என்பதை எண்ணிப் பார்த்திடும் போது

இரக்கம் இன்றி வாழ்தல் என்பது

எண்ணிட முடியாப் பாதகச் செயலாம்

எளியோர்க் கிரங்கி உதவுதல் என்பது

ஈகை அல்ல என்பதை உணர்வோம்

உதவிட நமக்கும் உதவிடும் அவரே

நன்மை நமக்குச் செய்கிறார் என்போம்

எத்தனை பேருக்கு கடனும் பட்டோம்

என்பதை எண்ணிப் பார்க்கும் போது

இரங்கிச் செய்யும் எவ்விதச் செயலும்

பட்ட கடனையும் தீர்த்துவிடாது

இதனை எண்ணிப் பார்த்து விட்டால்

இறங்குரோம் என்ற எண்ணம் வராது

இறுதி வரையில் “மனிதனாய்” வாழ

இரக்கம் போல வேறொன்றும் உதவாது

மத்திகிரி, 19-9-16, மதியம் 2.40

BT Song 524 Charity

God gives the spirit of mercy

it is a gift from God alone

and to help the needy one

it a boon given by God to us?

living without having mercy

is impossible for anyone who has a heart

and as we receive it from God

it only adds more value in our life

when we think that

He redeemed us because of mercy

living without mercy

is indeed a crime for us?

Helping the poor with mercy

is not charity, let us understand this

only they alone actually

helping us to do that, let us realize this

when we think that

we are indebted to so many people

all that we do for others

never will repay that debt

once we remember this

we will never have the spirit that we are helping others

to live as a human till the end

nothing will help us like the spirit of mercy

Mathigiri, 19-9-16, 2.40 pm

BT Song 525

Sometimes the few minutes which I spent silently in between my work gives some kind of peace to my mind and spirit.  Particularly after my regular reading, I deliberately will spend a few minutes silently trying to recollect myself and try to come out from that world in which I spent time reading.  Those few minutes I really enjoy as I experience the peace of God within me.  More than real prayer time, the few minutes which help me to remain quietly in between work is the most blessed and blissful time in my life.

BT Song 525 உன்னமைதி

உன்னிடம் வரும்போது

ஒருவித அமைதி

உருவாகி நிறைக்குது

எனக்குள் அமைதி

சில நொடிகள்

சிந்தையை ஆளுது

சிதறிடும் எண்ணத்தை

உன்னிடம் திருப்புது

எத்தனை முயன்றாலும்

என்னால் ஆகாது

நீயன்றி நான் பெற

வழியும் கிடையாது

நீ ஆள வரும்போது

உவகை பெருகுது

உன்னிந்த அதிகாரம்

பணிவைத் தருகுது

இதுவன்றி வேறேதும்

என் மனம் நாடாது

உனையன்றி வேறொன்றில்

நிறைவும் கிடைக்காது

அடிக்கடி அதனால்

உன்னிடம் வருகிறேன்

நீதரும் அமைதியை

நாடியே பெறுகிறேன்

மத்திகிரி, 19-9-16, மதியம் 2.55

BT Song 525 Your peace

When I come unto you

some kind of peace

creating on its own

fills from within

It controls

my mind even for few seconds

and it turns

my wavering thoughts unto you

however I try

I cannot accomplish on my own

and there is no other means

for me to receive other than from you

I rejoice when you come

to lord over me

and this your authority

gives humility in me

my heart won’t seek

any other thing

I cannot find completeness

other than in you

therefore I come

unto you often

and receive the peace

which you bestow on me

Mathirigi, 19-9-16, 2.55 pm.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *