BT Song 551
Personal ego hurts one more than hurting others. Particularly when I began to justify my acts in the name of serving others or not serving others, I searched for so many reasons for it. But after debating over them in my mind, when I become tired and keep quiet, then silently the righteousness of God judges me without saying or rebuking me. This egoism and selfishness is a constant struggle with which I fight every day.
BT Song 551 இன்னொருவரம்
இன்னொரு வரமொன்று நீ தர வேண்டும்
இருப்பது போதாது இரங்கிட வேண்டும்
உன்போல் இரக்கம் நான் கொள்ள வேண்டும்
என்னுள் சுயநலம் நீங்க வேண்டும்
எதைநான் செய்தாலும் அதன்பின் சுயநலம்
எத்தனை இருக்கு இதையென்ன செய்வேன்
பிறருக்கு உழைப்பதாய் வேடமே போடுறேன்
இடையூறு இடை வர உடனே நிறுத்துறேன்
அதற்கு ஆயிரம் காரணம் சொல்கிறேன்
அதைக்கூட பிறறேற்க எத்தனை பேசுறேன்
இடையில் மனசாட்சி எடுத்து சொன்னாலும்
அதைக்கூட அலட்சியம் எளிதாகச் செய்கிறேன்
உன் நீதி என்நெஞ்சை உறுத்திடும் போது
எத்தனை நியாயங்கள் எடுத்து உரைக்கிறேன்
அதன்பின் நீயும் அமைதி காக்க
அதைத் தாங்க இயலாது உன்னடி விழுகிறேன்
ஏனிந்தப் போராட்டம் என்னுள் நீ வைத்தாய்
என் தோலை உரித்து எனக்குக் காட்டினாய்
ஏதும் கூறாது எப்படித் தண்டித்தாய்
இதைத் தாங்க முடியாது, மீண்டும் மன்னிப்பாய்
சுயநலம் போக்கிட வரமொன்று அளிப்பாய்
சுயத்தை நீக்கிடும் கிருபையும் அளிப்பாய்
இதுவரை தந்த வரத்துக்கு மேலாக
இதை ஒன்று சேர்த்து நீயும் அருள்வாய்
மத்திகிரி 13-10-16, மதியம் 2.10
BT Song 551 Another boon
You should give another boon
It is not enough what I have already
I should have compassion like you
And should remove selfishness within me
How much selfishness is behind whatever I do?
What can I do about it?
I pretend that I am serving others
But stop when some hurdle comes
I give thousands of reasons for that
And how much I argue for others to accept it
Though my own heart witness against it
I easily despise it
When your righteousness troubles me
How many reasons I give for that
And then when you keep quiet
Unable to bear it further I fall at your feet
Why you kept this struggle within me
You stripped me naked to show who I am
Not accusing me how much you have punished me
I cannot bear it any more, please forgive me
You give another boon to get rid of this selfishness
And bestow the grace to remove it
Adding more to all the boons which you already gave
Give this one additionally
Mathigiri, 13-10-16, 2.10 pm.
BT Song 552
Another song thanking God what He has done to me in the Lord.
BT Song 552 வாழ்வளித்தாய்
அன்புடன் என்னை அரவணைத்தாய்
அத்துடன் எனக்கு வாழ்வளித்தாய்
இன்புற உனக்குள் வாழ வைத்தாய்
இதைச் சொல்லி பாட வரமளித்தாய்
துன்பங்கள் பலவுற்று உழன்று வந்தேன்
துயரக் கடலிலே மூழ்கி நின்றேன்
தூக்கி எடுத்துக் கரைசேர்த்தாய்
துன்பங்கள் போக்கி மகிழ்வளித்தாய்
உனை மேலும் அறிய உவகை கொண்டேன்
உன் மேன்மை அறிய எண்ணம் கொண்டேன்
எளிய வழிகாட்ட இரக்கம் கொண்டு
என் சாயல் ஏற்றுக் குருவாய் வந்தாய்
ஆயிரம் கேள்விகள் அலையலையாய்
அலையென மோதி ஆர்ப்பரிக்க
அவற்றின் ஓசை அமர்த்தி நீயும்
உன்னை அறியும் வழி வகுத்தாய்
அறிந்தேன் என்ற அகந்தை நீக்கி
அடக்கம் என்ற பண்பளித்தாய்
ஞானிக்கு மறைத்துப் பேதைக்கு அளிக்கும்
உன் குணம் தன்னை புரிய வைத்தாய்
மத்திகிரி, 17-10-16, இரவு 11.15
BT Song 552 Gave new life
You received me with love
And more than that you gave new life to me
You allowed me to live happily in you
And you gave boon to sing about it
I suffered due to many things
I was drowned in the ocean of sorrow
By uplifting me you took me to the shore
And removing all the sorrows you gave joy
I was eager to know more about you
I wanted to know about your nobleness
In order to show the simple means
You become a guru accepting my own (human) nature
As thousands of questions rose to toss me
Like the roaring waves
Silencing them
You arranged the means to know about you
Removing the pride that I knew you
You gave the nature of humility
And you helped me to understand your true nature
By hiding to the wise and giving to this unlettered one
Mathigiri, 17-10-16, 11.15 pm.
BT Song 553
When I read the following Surdas poem, I was struck with the similarity of the story of the prodigal son in Muktiveda. Then, inspired by Surdas poem, I wrote this immediately. It is interesting to note that similar thoughts are a common experience of a true bhakta. ###
Master, my mind is drained of thought,
It’s left your lotus feet, treasury of all delight,
And taken to toiling like a dog,
Endlessly wandering, licking pots
In barren houses and on burning pyres.
Can one ever satiate such greed?
No, the soul never slakes its thirst.
Wherever it goes, it’s in constant fear
Of stones and sticks and shoes.
How many insults has it suffered, poor dumb fool?
How many slurs for a mouthful here and there?
Hari, most merciful, you guard the whole world;
You yourself take charge of every heart.
Only a grand fool, says Sur, a fool like me,
Would leave that home to scavenge with the lost. —Sur’s Ocean, eds. Kenneth E Bryant, trs. By John Stratton Hawley, Massachusetts, Murty Classical Library of India, Harvard University Press, song 390, p. 675
मन मतिहीन गुसाई, मेरौ…
सव सुष निधि पद कमल विसरि श्रम
करत स्वान की नाई, मेरौ…
फिरत ब्रथा भंजन अवलेहन
सूनै सदन समसान, मेरौ..
तिहि लालच कबहू कैसी बिधि
त्रिपति न पावत प्रान, मेरौ…
जहं जहं जात तहां तहं त्रासत
असम लकुटि पद त्रान, मेरौ…
कवल कवल कारन कुबुद्धि सठ
सहत इतै अपमान, मेरौ…
परम दयाल विस्वि पालक हरि
अषिल ह्रिदै निज नाथ, मेरौ…
ताहि छाडि यह सूर महा सठ
भ्रमत भ्रमनि कै साथ, मेरौ….
BT Song 553 மீண்டும் ஏற்றுக்கொண்டாய்
என் போன்ற மூடன் மட்டும்
உன்னை விட்டே ஓடிடுவான்
இராஜ போக வாழ்வை விட்டு
நாயைப் போல அலைந்திடுவான்
சொந்த வீட்டில் சுதந்திரமாய்
சுகமாய் நானும் வாழ்ந்து வந்தேன்
பன்றி போலச் சாக்கடையில்
புரண்டு பார்க்க ஆசைகொண்டேன்
வீட்டுக்கு வீடு பிச்சைக்கேட்டு
வெறும் கையோடு திரும்பிவந்தேன்
எச்சில் சோற்றுக்கு ஏக்கம் கொண்டு
எத்தனை இலைகள் புரட்டிப் பார்த்தேன்
கல்லாலும் கம்பாலும் அடிபட்டேன்
கண்டவர் பலரும் திட்டக் கேட்டேன்
ஒரு கைபிடி சோற்றுக்காக
ஊரெங்கும் நானும் சுற்றி வந்தேன்
வெள்ளித் தட்டில் வகைவகையாய்
விரும்பி உண்டதை எண்ணிக்கொண்டேன்
தங்கக் கிண்ணத்தில் பால் குடித்த
சமயங்களை எண்ணிப் பார்த்தேன்
என்னை நானே நொந்து கொண்டு
திரும்பி உந்தன் வாசல்வந்தேன்
ஓடி வந்து ஏற்றுக் கொண்டு
வீட்டிற்குள் மீண்டும் சேர்த்துக் கொண்டாய்
மத்திகிரி, 19-10-16, மதியம் 1.45
BT Song 553 Received me again
Only a fool like me
Alone runs away from you
Forsaking the life of a king
Will roam like a dog
I lived freely
In my own home
But like a pig
I wanted to roll in a ditch
Begging at every house
I returned back with empty hand
Longing for the leftover food
How many leaves I turned
I was beaten by stick and stone
And many scolded me
For a handful of food
I wandered all around the town
Then I remembered
All that I ate in the silver plate
And thought about those time
When I drank milk in golden cups
Taking pity on me
I returned back at your door
And running towards me eagerly
You took me back in the home
Mathigiri, 19-10-16, 1.45 pm.
BT Song 554
One constant theme in Hindu worldview is about the ‘lila’ or divine play by God. Sometime I too feel that God is doing His own play in which we are called to act to the script which He wrote, but never disclosed to us. And as a joke I said to Him, ‘like a mega serial you too wrote central theme. But as the serial director, in order to run it for several episodes (even for more than four to five years) stretch the scene. This sometime will make them to struggle how to end the serial. So you too though wrote the central them, now stretch it beyond its limit and unable to complete it.’ Interestingly, in the entire creation of God, we alone are available for Him to enact His drama.
BT Song 554 உனது நாடகம்
நடத்திடு நீ உன் நாடகத்தை
நாங்களும் போடுறோம் வேடமதை
வேடிக்கைப் பொருளாய்ப் போனபின்னே
மேடையில் ஆடிடத் தயக்கமென்ன
உலகமோ உனது மேடையாச்சு
நடிக்கவே எம்மையும் படைச்சாச்சு
எந்த வேடம் தந்தால் என்ன
எல்லா உரிமையும் உனதாச்சு
நடிக்க நேரம் வரும்போது
அழைப்பு உடனே வந்துவிடும்
அதுவரை கூட்டத்தில் அமர்ந்திருந்து
மற்றவர் நடிப்பதைப் பார்க்கவேண்டும்
நாங்களே நடித்து நாங்கள்பார்க்கும்
வேடிக்கை வேறெங்கும் கிடையாது
எங்களை விட்டால் நீ நடத்த
படைப்பில் எதுவும் கிடையாது
என்னவோ நீயும் தொடங்கிவிட்டாய்
எப்போ முடிப்பாய் தெரியவில்லை
எப்படி முடிப்பது என்பதுமே
உனக்கும் கூடப் புரியவில்லை
இறுதிவரையில் இருந்து பார்க்க
எதுவரை நீயும் படைத்திடுவாய்
இதுவரை இருந்து பார்த்தவர்க்கு
என்ன பதிலும் சொல்லிடுவாய்
எப்படிக் கதையை முடிப்பதென
என்பது உனக்கும் தெரியலையா
எதற்காய் எழுதினோம் என்பதுவும்
இதுவரை உனக்கும் புரியலையா
எழுதும் முன்னே யோசிக்கணும்
எப்படிக் கதையை முடிப்பதென்று
இல்லாவிட்டால் நெடுந்தொடராய்
இந்தக் கதையும் இருந்துவிடும்
மத்திகிரி, 19-10-16 (20-16-16), இரவு 12.15
BT Song 554 Your drama
Enact your drama
And we will accept our part
Once we become the object of tamash (show)
Why should we hesitate to act on the stage?
The world become your stage
You created us to act on it
Whichever role you give
Finally, it becomes your prerogative
When our time comes to act
The call will come
Till that time sitting with the crowd
We should watch when others act
No where one can see this
Where we have to act and we alone have to watch (the drama)
And leaving us (human beings) in the entire creation
Nothing is available for you to do this
Somehow you begin it
But when you will finish, we don’t know
And how to close it
Even you too don’t know
How long you will continue to create us
So that there will be an audience to watch (your drama)
And what kind of answer you will give
For those who watched so far (and now gone)
Didn’t you know?
How to end this story
And did you never understand
Why you have written even this (drama)
Before writing this story
You should have thought about it properly
Otherwise, this story will become
An unending mega serial
Mathigiri, 19-10-16 (20-10-16), 12.15 am.
BT Song 555
Another fight with God complaining that He does not understand my plight. He has his own power and authority to do anything as He likes. The common complaint about God is that neither He consult nor He inform us well in advance and do things suddenly when we are not prepared for that. The common saying is correct that ‘we are sent to the world without being asked and will be taken away without being consulted’. I have written several such songs in which I fight with the Lord in full fledge without any hesitation.
BT Song 555 விடுவாயா
ஆயிரம் முறைகள் கூறிவிட்டேன்
அத்துடன் இம்முறை சொல்லிவிட்டேன்
வேண்டாக் கேள்விகள் கேட்காதே
வேதனைத் தீயினில் தள்ளாதே
உன்னைக் கேட்க ஆட்களுண்டோ
என்போல் கவலைகள் உனக்குண்டோ
இதனை முதலில் புரிந்துகொண்டு
அதன்பின் கேள்விகள் கேட்டுவிடு
அதிகாரம் அனைத்தையும் வைத்துக்கொண்டு
அத்துடன் ஆளுகை செய்துகொண்டு
உன்விருப்பம் போல் நடத்திக்கொண்டு
இருப்பதால் உனக்கிது புரியாது
அதிலே கொஞ்சம் தரவேண்டாம்
ஆட்சியில் பங்கும் இனிவேண்டாம்
உன்விருப்பம்போல் நடத்திக்கொள்ளு
அத்துடன் சொல்வதைக் கேட்டுக்கொள்ளு
செய்யும் முன்னே சொல்லிவிட்டுச்
செய்தால் என்ன குறைந்திடுவாய்
செய்யும் முன்னே என்னிடமும்
கலந்தால் எதிலே தவறிடுவாய்
வேண்டாம் என்று சொல்வேனா
விட்டால் ஓடிப்போவேனா
இதுவரை அப்படிச் செய்தேனா
இனிச் செய்தாலும் நீதான் விடுவாயா
மத்திகிரி, 23-10-2016, இரவு 11-05
BT Song 555 Will you allow?
Thousands of times I have told you
And now one more time I am telling
Don’t ask unnecessary questions
And don’t push me in the fire of suffering
Is there any one to question you?
Do you have worries like me?
First understand this
And then ask questions
Keeping all the authority with you
And more than that ruling over us
And enacting as per your wish
You don’t understand this
You need not share even a small part of it with us
And we don’t need even a share in your rule
Do whatever you like
But listen this also along with it
What will you lack?
If you share before you decide
What will you miss?
If you just consult me a bit
Will I say no to you?
Or will run away from you
Did I ever have done like that before
And even if do, will you let me to do that
Mathigiri, 23-10-16, 11.05 pm.
Leave a Reply