BT Songs 556 to 560

BT Song 556

As I got up early in the morning after regular duties, I sat with a cup of tea for meditation and worship.  But so many thoughts again preoccupied my mind and I began to debate within myself about so many issues which are confronting me.  After wasting more than ten minutes on all those issues, I suddenly awoke to understand that I sat for meditation and worship, but what I am doing is against it?  But I got frustrated and began to blame the Lord and said to Him ‘what do you know about my situation. Of course you came once and died once but went and hid in the sky.  Though as a human you (tried) to understand our plight, but you cannot understand our struggle completely as you never faced a similar situation in your life that which I am facing now.  Then that anger against the Lord turned into this poem.

BT Song 556 நேரம் ஒதுக்கு

உனக்கென நேரம் ஒதுக்கி விட்டேன்

உன்னிடம் பேச வந்து விட்டேன்

எனக்கென நேரம் தந்திடுவாய்

என்னுடன் பேசிட வந்திடுவாய்

எனக்குள்ள கவலைகள் உனக்கில்லை

என்போல் பாரம் நீ சுமக்கவில்லை

உன் சித்தம் செய்ய பலருண்டு

அதன்பின் உனக்கென்ன பாரமுண்டு

ஒருமுறை உலகிற்கு வந்திருந்தாய்

ஒருமுறை எமக்காய் உயிர் தந்தாய்

அதன்பின் உயரத்தில் சென்றுவிட்டாய் (ஒளிந்து கொண்டாய்)

அதனால் என் நிலை மறந்து விட்டாய்

உனக்கென குடும்பம் இருந்திருந்தால்

உறவுகள் நெருக்கங்கள் தந்திருந்தால்

அதனையும் நீயும் புரிந்திருப்பாய்

அதன்படி எமக்கும் செய்திருப்பாய்

தப்பித்து வாழ எண்ணம் கொண்டு

“தனிமை” வாழ்வைத் தெரிந்து கொண்டு

“துறவு” வேடமும் போட்டுக்கொண்டு

திரும்ப வந்து மாட்டிக்கொண்டேன்

இதையே நீயும் செய்தாயா

என்போல் பாரம் சுமந்தாயா

அதனால் உனக்குத் தெரியாது

என்நிலை உனக்கும் புரியாது

துதித்துப் போற்ற எண்ணம் கொண்டு

அதற்கென நேரம் ஒதுக்கிக் கொண்டு

உன்னிடம் வந்து நிற்கும் முன்னே

ஆயிரம் வேலைகள் முந்திக்கொள்ள

அவற்றை எல்லாம் முடித்துக் கொண்டு

அதன்பின் உன்னிடம் வருவதற்குள்

அவசரப்பட்டு போகாதே

அதிகம் ஆத்திரம் கொள்ளாதே

பொறுமையாக காத்திருந்து

புலம்பினால் முழுமையாய்க் கேட்டிருந்து

அப்புறம் முடிவுக்கு வந்து விடு

அதற்கு நேரம் ஒதுக்கி விடு

மத்திகிரி, 24-10-16, காலை 5.45

BT Song 556 Set aside time for me

I set aside time for you

I came to talk with you

Give me time for that

And listen to what I want to say

You don’t have the worries which I have

You never carried burdens like me

Many are there to accomplish your will

And then where comes any burden to you

Only one time you came to this world

Only one time you gave your life for us

Then you went up to hide

Therefore, you forgot about our situation

If you had a family

And if the relatives put pressure on you

You would have understood our situation

And will do to us accordingly

In order to escape

I choose the life of a recluse

And took the attire of a sannyasi

But come back and get trapped

Have you ever done this?

Did you ever carry burden like me

Therefore, you don’t know about it

And you cannot understand my condition

In order to sing and praise you

And set aside time for that too

Before I come unto your presence

Thousands of works come before that

After finishing them all

Before I come to your presence

Don’t run away from me

And don’t be get frustrated

Waiting for me patiently

And listening to all my lamentations

Then you come to a decision

And set aside some time for that (now)

Mathigiri, 24-10-16, 5.45 am.

BT Song 557

After doing my regular reading from Muktiveda, as I took my other books to read, I said to myself, how nice it will be to spend more time with the Lord and write new songs each day to worship and praise Him than spending time in reading and writing.  Then when I opened my book to read, as this thought inspired, I wrote this immediately.

BT Song 557 புதுப்பாடல்

புதிய பாடல் ஒன்று

தினம் தர வேண்டும்

தெவிட்டாமல் நானும்

உனைப் பாட வேண்டும்

உனைப்பாடும் போது

உவப்பாக இருக்குது

உன் புகழ் கூற

மகிழ்வாய் இருக்குது

மனதார உன்னை

தினம் பாட வேண்டும்

மௌனமாய் உன்னை

நான் போற்ற வேண்டும்

இதற்கு நீ இரங்கி

வரம் தர வேண்டும்

வேறொன்று கேட்கா

மனம் தர வேண்டும்

பக்தியால் உந்தன்

பதம்பணி வேனே

பாடல் புனைந்து

தினம் தொழுவேன்

அந்த ஆனந்தம்

மேலிட நானும்

ஐயனே உன்னிலே

நிலைத்திருப்பேன்

மத்திகிரி, மதியம்.  2.10, 24-10-16

BT Song 557 New songs

You should give

New song every day

I should sing

About you more and more

I find joy

When I sing about you

When I praise you

I feel very happy

I should sing

Each day to my full satisfaction

And should glorify you

Silently within me

And you should

Give boon for this

And you should give me a heart

Not seeking other things

With bhakti

I will bow at your feet

And writing poems

I will worship you

And overcome

By that joy

Oh my Lord

I will abide in you

Mathigiri, 24-10-16, 2.10

BT Song 558

One thing that I enjoy in my bhakti in the Lord is both my relationship with Him and also my rights with Him.  I need not hesitate to go to His presence and demand anything because of my right as a bhakta.  There is no hesitation in expressing my needs and my mood also.  No doubt in it that for me bhakti is not merely a concept but a relationship which I celebrate all the time with the Lord.

BT Song 558 உரிமையும் இருக்கு

உன்னிடம் வரவே உறவும் இருக்கு

உன்னிடம் கேட்க உரிமையும் இருக்கு

கேட்பதைத் தரவே அருளும் இருக்கு

கேட்க எனக்கென்ன தயக்கமும் இருக்கு

கேட்கவும் சொன்னாய் தயக்கமில்லாமல்

கேட்கிறேன் அதனால் வெட்கமில்லாமல்

உள்ளதைச் சொன்னேன் தயக்கமில்லாமல்

உதவிட சொன்னேன் வெட்கமில்லாமல்

எத்தனை குழப்பங்கள் தேவை இல்லாமல்

எவ்விதம் மீள்வேன் சேதமில்லாமல்

அதையும் சொல்லிட வந்திடும் போது

எவ்வித தயக்கமும் எதற்கு எனக்கு

என்னைப் போலவே வந்ததினாலே

என்நிலை நீயும் அறிந்ததினாலே

உன் தன்மையினால் அதை வென்றதினாலே

உன்னிடம் சொன்னேன் உரிமையினால்

நல்லவேளை இந்த உறவை தந்தாய்

நானுய்ய எனக்கு உரிமை தந்தாய்

அதையும் அறிய பக்தியைத் தந்தாய்

அதற்கும் மேலே உன்னையே தந்தாய்

அந்த உரிமையால் அடியனும் வந்தேன்

அருள்வாய் என்று தினமும் வேண்டினேன்

அதைச் சொல்லும் உறவை நாடினேன்

அந்த உரிமையை தினம் கொண்டாடினேன்

மத்திகிரி, 24-10-16, மதியம் 2.50

BT Song 558 I have the right

I have relationship with you to come to you

I have right to ask you

Grace is there to give what I ask

And where is hesitation not to ask

You told to ask without hesitation

Therefore, I ask without any shyness

I shared this without hesitation

And I asked you to help me without any shyness

How much confusion is there (in life?)

How I will come out without damage

And when I come to share this

What kind of hesitation should I have?

As you came like me

As you know my condition also

As you overcome because of your nature

I shared this with my right

Fortunately, you gave this relationship

You gave this right for me to be redeemed

You gave bhakti to know that also

More than that you gave yourself to me

Therefore, this slave came because of this right

Begging for your mercy each day

And to tell that I sought your relationship

And I am celebrating it each day

Mathigiri, 24-10-16, 2.50 pm.

BT Song 559

As I went for my evening walk, as usual I was thinking about the Lord and my relationship with Him.  That time I said that often I go to Him seeking only blessings in life and if He refuses to give what I demand, then I become upset. Then I wrote this thought as a poem in my mind and when I came back recorded it on paper.

BT Song 559 நீயே மருந்து

நன்மைகள் மட்டும் பெறுவதற்கு

நாளும் நாங்கள் விரும்புகிறோம்

நல்லதை மட்டும் செய்வதற்கு

நாங்கள் உன்னிடம் வேண்டுகிறோம்

குறை கொஞ்சம் உண்டானால்

கூடவே வந்திடும் கோபமது

நிறைவாய் எல்லாம் தந்துவிட்டால்

கொண்டாடும் எமது மனமிது

போதும் இனி வேண்டாமென

ஒருபோதும் மனம் சொல்லிடாது

நெருப்பில் மீண்டும் நெயூற்ற

அணையும் பேச்சே கிடையாது

பாவம் நீயும் என்ன செய்வாய்

பலவிதம் சொல்லிப் பார்க்கின்றாய்

அதன்பின் என்வழி விடுகின்றாய்

அடிபட்டுத் திருந்தச் சொல்கின்றாய்

பலமுறை பட்டேன் திருந்தவில்லை

பழைய குணமும் போகவில்லை

என்ன செய்வேன் தெரியவில்லை

நீயன்றி இதற்கு மருந்தில்லை

மத்திகிரி, 24-10-16, மாலை 5.30

BT Song 559 You are the medicine (remedy)

We always long

Only to receive blessings

And we request you to do

Only good things to us

If something goes wrong

Then we become upset

And when you give in abundance

Then this heart will celebrate

The heart will never say

‘It is enough’

There is no chance to quench the fire

By pouring more ghee on it

Poor one what else can you do

You try to communicate by many means

Then allow us to go as we wish

And repent after get hurt

Many time I get hurt but never repented

My old nature is not yet gone

I don’t know what else I can do for that

There is no remedy other than you for this

Mathigiri, 24-10-16, 5.30 pm.

BT Song 560

Another song based on the following Surdas’ song:

What did I ever not do?

Think of my actions one by one

And tell me how you can advertise yourself

As Purifier of the Fallen.

Ever since I was born into the world

And called a living being,

Aside from the evils and errors I’ve done,

I’ve simply done nothing at all.

Those who are virtuous, obedient, pure—

How can you help but be drawn toward them?

But to shield someone burdened with fear

Proves the lordliness of the Lord indeed.

Of beautiful dark one, louts-eyed,

Who knows us all inside,

What kind of prayer can be made to you by Sur,

Who is cruel, who is crooked, who craves? —Sur’s Ocean, eds. Kenneth E Bryant, trs. By John Stratton Hawley, Massachusetts, Murty Classical Library of India, Harvard University Press, song 397, p. 689

सो कहा जु मैं न कियौ

सोइ सोइ चित धरिहौ

पतित पावन बिरद प्रगट

कौंन भांति करिहौ

जब ते जग जनमु आइ

जीव नाउं पायौ

तब ते अपराध बिना

और न करि आयौ

सुकृती जनु सेवक सुचि

काहि न जिय भावै

प्रभु की प्रभुता इहै जु

भीत सरन पावै

स्याम सुंदर कमल नैन

सकल अंतरजामी

विनित कहा करै सूर

कूर कुटिल कामी–जीत 397, प. 688

BT Song 560 வேறென்ன சொல்ல

எப்படி நீயும் என்னையும் ஏற்றாய்

எதற்காய் நீயும் என்னையும் மீட்டாய்

உலகில் உருவாகி வந்தது முதல்

உழன்று வாழ்ந்தேன் பாவத்தில் நானே

ஆயினும் உனது மேன்மையைக் காட்ட

அத்துடன் பிறருக்கு நம்பிக்கை ஊட்ட

என்னைத் தேடி நீயும் மீட்க

உன்னைத் துதித்து தூயவர் போற்ற

விண்ணும் மண்ணும் வியந்து கொண்டாட

நல்லவர் தூயவர் வந்து பாராட்ட

நாயனைக் கூட உன்னடி சேர்த்த

உன்னைப் போற்றி நானும் உயர்த்த

வந்தேன் இன்று சன்னதி முன்னே

வள்ளலே உந்தன் கருணையே என்னே

ஒடுங்கி ஒளிந்து வாழ்ந்த எனக்கு

வேறோரு புகலிடம் இனியும் எதற்கு

மீட்டவன் நீயே என்பதைக் காட்ட

என்னையும் மீட்ட உன்னைப் போற்ற

வாயும் குழன்று வார்த்தைகள் இன்றி

வந்தேன் வறியவன் வேறென்ன சொல்ல

மத்திகிரி, மதியம் 27-10-16, மதியம், 2.30

BT Song 560 What else can I say?

How did you accept me?

And why you redeemed me

Since I born in this world

I dwell only in sin

Yet to show your nobleness

To give hope to others

You sought and redeemed me

And the angels began to praise you

Both the earth and heaven celebrate this with wonder

Noble and good people come and appreciate this

The way you have received even me, the dog

To uplift you by glorifying you

Today I come unto your presence

O charitable one how great is your compassion

For me, the one who lived in hiding?

Where is the need for any other refuge?

In order to show who has redeemed me

To praise you who saved me

Without proper words as the tongue get twisted

I come unto you this poor one, what else can I say

Mathigiri, 27-10-16, 2.30 pm.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *