BT Song 581
As I got up very early in the morning around 4.00 am, as usual with a cup of tea I sat for my meditation and sat quietly with the Lord. Then as inspiration flowed I began to write this song. Meanwhile as the milk man came, I got up to get up and it disturbed the flow of thought to write. So after getting the milk and keeping it on the fire, I come back to close the song. Then I said to the Lord, ‘though I want to write more about what all you have done to me, I don’t have time for that.’ Then I closed the poem writing the very same in the final two stanzas.
BT Song 581 வந்து வேலை செய்
எனக்கென ஒரு
வாழ்வைக் கொடுத்தாய்
அதற்கென ஒரு
பாதையை வகுத்தாய்
அதற்குள்ளாக நான்
பயணம் செய்ய
அருமையான பல
வசதிகள் தந்தாய்
தனித்து வாழ
தைரியம் தந்தாய்
துணைக்கெனப் பல
பக்தரை தந்தாய்
துன்பம் அதிகம்
தாக்கா தென்னைக்
கண்ணின் மணியென
காத்து வந்தாய்
தேவை இதுவென
தேடும் முன்னே
நீயே அறிந்து
தந்தும் வந்தாய்
குறை ஏதும்
காணா வண்ணம்
கொடுத்து அதிகம்
நிறைத்தும் வைத்தாய்
கூப்பிட்டு உன்னைக்
கேட்கும் முன்னே
கைகட்டி நின்று
சேவகம் செய்தாய்
உன்னுடன் நானும்
உரிமையாய்ப் பழக
உனக்கும் எனக்கும்
நெருக்கம் தந்தாய்
ஊரறி யாது
நீயும் வந்து
உறவாய் எனக்கு
நீயே ஆனாய்
இதையும் உணர்ந்து
உன்னுடன் வாழும்
அருளைக் கூட
எனக்கும் தந்தாய்
இப்படி நீ
எனக்குச் செய்வதை
எண்ணிப் பார்க்கும்
மனதையும் தந்தாய்
இதையே எனது
துதியாய் மாற்றி
எழுதிப் பாட
வரம் தந்தாய்
எனக்கும் நீயும்
செய்வதை எல்லாம்
எடுத்துச் சொல்ல
விருப்பம் இருந்தும்
அதற்கு எல்லாம்
நேரமில்லாமல்
அடுத்து பல பல
வேலைகள் தந்தாய்
அதனால் நானும்
இத்துடன் முடித்தேன்
அப்புறம் மீதியை
சொல்லிட வருவேன்
அதுவரை நீயும்
வழக்கம் போல
என்னுடன் வந்து
வேலையும் செய்வாய்.
மத்திகிரி, 20-11-16, காலை 5.45
BT Song 581 Come and work along with me
You gave me
A life to live.
You arranged
A path for that.
To travel
In it
You provided
Many meanings.
You gave courage
To live alone.
For company
You gave many bhaktas.
You also
Protect me from many snares
As the apple of
Your eyes.
Before I
Search for my need
Realizing it
You provide it.
Not lacking
Anything other thing
You gave
Abundantly.
Before I call
And ask you
You stood next
To serve me.
In order to have
Close fellowship with you
You gave
Personal relationship.
Not others
Knowing about it
You become
My own.
To realize this
And to live with you
You also gave
Much grace.
Like this
To recall
What you have done to me
You also gave me a heart.
And to make it
As my praise
You gave a boon
To write this song.
Though I have
Much desire
To share
What are you all doing for me?
Without having
Time for that
You alone gave
Next many works.
Therefore I
Close this here
Rest I will
Come and tell later.
Till then
As usual
You too come
And work along with me!!
Mathigiri, 20-11-16, 5.45 am.
BT Song 582
For me there is no substitute for the Word of God. Though I have several issues with it and cannot understand it completely, yet without the Word of God, I cannot continue to enhance my bhakti. Of course I read every day the Word of God and I become familiar with it. But I have become familiar with so many other things in life. I have to live with the same kind of people, same kind of routine etc. But for me the Word of God is like a spring which supplies fresh water so that it will become useful to me and others. Otherwise, my life will become rotten like stagnant water which will become a breeding ground for all kinds of harmful insects.
BT Song 582 இறைவனின் வார்த்தை
இறைத்து நிதமும் பாய்க்காவிட்டால்
நிலையான நீரும் நாறிவிடும்
நித்தமும் உன் வார்த்தை கேட்காவிட்டால்
நெஞ்சமும் கல்லாய்த்தான் மாறிவிடும்
தேங்கிய நீர் வற்றிவிடும்
நீரின் வரவு இல்லையென்றால்
மனமும் நிச்சயம் சோர்ந்துவிடும்
இறைவன் அருளும் இல்லையென்றால்
ஜீவ நீரிடம் வந்திடுவீர்
தாகம் நீங்கிடப் பருகிடுவீர்
ஜீவனோடு தினம் வாழவேண்டின்
இறைவனின் திருவடி பற்றிடுவீர்
சொந்த புத்தியை சார்ந்திருந்து
சில பல வாதங்கள் செய்திருந்து
அறிவின் மேன்மையை வெளிக்காட்ட
ஆயிரம் தர்க்கங்கள் செய்திடலாம்
ஆயினும் உள்ளம் தெளிவடைய
அதனுள் அன்பு பெருகியோட
அடுத்தவர் நலமெண்ணி வாழ்ந்திருக்க
அண்டுவீர் அவனடி மனம் சிறக்க
மத்திகிரி, 21-11-16 2.10 pm.
BT Song 582 God’s word
Unless we remove water everyday
Stagnant water will become foul
If I don’t listen to your words each day
My heart too will become like a stone
Without the fresh flow of water
Collected water will also become dry
Without receiving God’s grace
Our heart too will become discouraged
Come unto the living water
And drink to quench the thirst
If you want to live alive everyday
Cling to God’s feet
Depending upon one’s own intellect
And doing many arguments
In order to parade your intellect
You can do thousands of debates
Yet to have clarity in mind
And for the love to over flow in it
To live for others’ welfare
Reach his feet to have a proper heart
Mathigiri, 21-11-16, 2.10 pm.
BT Song 583
Both the noises in and out often disturb me. Though I get agitated by them, yet I take it to the Lord and pour down to Him. This is one such incident.
BT Song 583 உன்புகழ் பாட
நீ வந்து பேசும் போது
நெஞ்சமும் மகிழ்ச்சியில் நிறையுது
நான் அதைக் கேட்டிடும் போது
நினைவெலாம் அருளாலே நிறையுது
உந்தன் வார்த்தையைக் கேட்க
உள்ளம் உவகை கொள்ளும்
உள்ளாக நீவந்து பேச
உணர்ச்சியால் மனமும் துள்ளும்
இரைச்சல்கள் ஆயிரம் வந்து
எரிச்சலை மனதிலே தந்து
உன்னிடம் வருவதைத் தடுத்து
மனதைப் பலவிதம் மயக்குது
ஆயினும் அவற்றின் ஊடே
அமைதியாக நீ வந்து பேச
சோர்வுற்ற ஆன்மாவும் துளிர்க்க
சிந்தையும் மீண்டும் உயிர்க்க
வறண்ட நிலத்தின் மீது
விழுந்திடும் மழையைப் போல
ஆவலாய் நான் அள்ளிப்பருக
அதனால் தாகம் தணிய
மீண்டும் உன்னையும் துதிக்க
மேனியும் அத்துடன் சிலிர்க்க
ஆனந்தம் மேலிட போற்ற
வந்தேனே உன் புகழ் பாட
மத்திகிரி, 24-11-16, மதியம் 2.10
BT Song 583 To sing your glory
When I come and told about your fame
My heart fills with joy
When I listen to it
My thought is filled with grace
To listen your words
My heart feels joy
When you come and talk within me
My heart rejoices with emotion
But so many noises
Giving irritation in heart
Stopping coming to you
Disturb my mind in many ways
Yet amidst it
When you come and talk silently
The depressed heart is revived
And mind is also become alive
Like the rain
Which falls on dry land?
As I drink it eagerly
My thirst get quenched
Again, as I praise you
My body is also become alive
As my joy overflows
I come unto you sing your praise
Mathigiri, 24-11-16, 2.10 pm.
BT Song 584
As I got up very early around 4.00 am and unable to sleep I got up and made my tea and spent most of my time quietly not even praying but thinking about the Lord and so many things about him. Then I sang this song very slowly in Bhubala raga and worshipped the Lord by singing this song.
BT Song 584 அவனை வாழ்த்து
இனிய காலையில் இறைவனைத் தேடு
இதயம் நிறைய மகிழ்ந்து பாடு
உலகோர் உய்ய உருகி வேண்டு
உன்னையும் மீட்டான் நினைந்து கொண்டாடு
நேற்று வரையில் கூட இருந்தான்
நாளை பொழுதும் துணையாய் இருப்பான்
இன்றும் கூட இணைந்து நடப்பான்
இதை எண்ணி அவனைப் பாடு
உனது தேவை அவனே அறிவான்
உனக்குத் தந்து உவந்து புரப்பான்
அதற்கு மேலும் நீயும் நாட
அதையும் தந்து உன்னில் மகிழ்வான்
இந்தப் பேறு நீயும் பெற்றாய்
இதை எண்ணிப் பணிந்து நடப்பாய்
படைத்துக் காத்து அழிக்கும் அவனே
பக்தனுக்காக எளியவன் ஆனான்
இதை உணர இதயம் இளகும்
இருவிழியும் அருவி ஆகும்
நாடி நரம்பு ஒடுங்கி அடங்கும்
நாவும் கூடப் பேச மறுக்கும்
மெளனமாக மனதில் துதித்து
மேன்மை எண்ணிக் கரம் குவித்து
சிரசை அவன் தாளில் வைத்து
சிந்தை நிறைய அவனை வாழ்த்து
மத்திகிரி, 2-12-16, காலை, 5.45
BT Song 584 Sing His praise
In the sweet early morning, search God
With joyful heart sing about Him
Pray for the world to be redeemed
He redeemed you also, and thinks and celebrates it
Till yesterday He was with you
He will accompany you tomorrow also
He will come along with you this day also
Thinking about this you sing about Him
He knows all your needs
He will provide and take care of you
When you sought more than that
By bestowing that too He will rejoice in you
You received this blessing
Remembering this you walk humbly
The one, who created, sustain and will destroy
Become humble one for the bhaktas
When you understand this your heart will melt
Both your eyes will become waterfalls
All your bones and nerves will shrink
Even your tongue will refuse to speak
Silently praising Him in your heart
Folding your hands think about His greatness
Keeping your head at His feet
Praise Him with a whole of heart
Mathigiri, 2-12-16, 5.45
BT Song 585
I never regretted my life as a single person. And I enjoy each movement. Particularly as I can spend more time with the Lord—in my own terms, in my own way and in my own nature, I enjoy it minute by minute. As I got up early and began to reflect about this kind of life, thanking God for such a special life He gave me I wrote this song thanking Him.
BT Song 585 அணுவணுவாக ரசிப்பேன்
இப்படி எனக்கொரு வாழ்வைத் தந்தாய்
என்னுடன் நீயே வாழ்ந்தும் இருக்காய்
எனக்கென தனித்தொரு சித்தம் வைத்தாய்
இதை உணர புத்தியும் தந்தாய்
என்ன மேன்மை எண்ணில் கண்டாய்
என்னை அறிந்தும் எப்படி மீட்டாய்
அத்துடன் பல பல வரங்கள் தந்து
அவற்றின் மூலம் என்னை ஆண்டாய்
பிறரைப் போல வாழ விடாமல்
உன் பின் என்னை ஏகிட வைத்தாய்
பிறர்க்குத் தந்த பலவற்றை மறுத்து
தனித்து எனக்கெனப் பாதை வகுத்தாய்
தயங்கி நானும் நின்ற போதும்
தைரியம் தந்து துணையாக வந்தாய்
இடையிடை பலமுறை இடறிய போதும்
எத்தனையோ முறை தூக்கியே காத்தாய்
என்னவோ இதுவரை ஓடிவிட்டேன்
மீதியை ஓடி நிச்சயம் முடிப்பேன்
எத்தனை எதிர்ப்பு இதனிடை வந்தும்
எப்படியேனும் ஓடியே பார்ப்பேன்
அதுவரை இந்த வாழ்வை கூட
அணுவணுவாக ரசித்து வாழ்வேன்
இதுவும் கூட நீயே அளித்தது
என்பதை எண்ணி உன்னுடன் வாழ்வேன்
மத்திகிரி, 2-12-16, காலை 6.30
BT Song 585 I will enjoy minute by minute
You gave this kind of life to me
You too live along with me
You kept a special purpose for me
You gave a mind to understand this
What kind of quality that you found in me
How you even redeemed me knowing me well
Adding many more talents to it
You are lord overing me through them
Not allowing me to live like others
You made me to follow you
Refusing many things which you gave to others
You set a separate path for me
When I stopped with much hesitation
Encouraging me you came along with me
Though I stumbled many times on the way
You uplifted me and saved many times
Somehow, I have run so far
Somehow, I will complete my race
How much opposition might come?
Definitely I will run the race
Till that time, I will live
Enjoying each part of it
Remembering that this life also you gave
I will live along with you
Mathigiri, 2-12-16, 6.30 am
Leave a Reply