BT Songs 606 to 610

BT Song 606

Another philosophical confusion not knowing which one is mind and which one is buddhi.  I strongly believe that the so-called mind does not even exist. All are the function of our brain.  At the same time, I see that there is another faculty within me which does not agree with my own reasoning on various things in which my so-called mind says one thing and my buddhi (intellect) says another.  While my mind goes along with senses, feelings, emotion and reality of the body, my buddhi, using all kinds of philosophical reasoning, tries to refute it. Now is this so-called bhuddhi different from the so-called mind?  Though sometimes I get some clarity when I take these issues to the Lord, sometimes even my bhakti gets defeated in the tussle between my buddhi and mind.  So, till the end I have to live with this tussle and this only I clearly understood–thanks to my buddhi — Oh my God where the solution is.

BT Song 606 புரிஞ்சிருக்கு

மனம் போனபடி போகட்டுமா

இல்லை மதி சொன்னபடி கேட்கட்டுமா

இரண்டு வழியும் வேண்டாமென

இறைவா உன்னிடம் வரட்டுமா

எது உண்மை என எனக்குள்ளே

எத்தனை கேள்விகள் தோன்றுது

எல்லாம் எனது கற்பனை என்று

இறுதியில் உள்ளம் சொல்கிறது

அன்றாட வாழ்வு கற்பனையா

இதில் வாழ்வு சொப்பனமா

கற்பனையான சொப்பன மென்றால்

என்னிந்தப் பாடுகள் பொய்யாகுமா

உடலின் தேவைகள் பொய்யில்லையே

உள்ளத்தின் போராட்டம் பொய்யில்லையே

உடல் உள்ளம் இரண்டுடன் வாழும்

என்னிந்த வாழ்வும் பொய்யில்லையே

இந்த உண்மை புரிந்திருக்கு

உடலும் உள்ளமும் ஏற்றிருக்கு

இடையில் புகுந்த அறிவு மட்டும்

ஏனோ குழப்பம் விளச்சிருக்கு

என்ன செய்வது தெரியவில்லை

எதை ஏற்பது புரியவில்லை

விடை தெரிந்த உன்னிடம் வந்தபின்

குழப்பம் சற்று குறைஞ்சிருக்கு

ஆயினும் அதில் சந்தேகம்

அடிக்கடி ஏனோ வந்திருக்கு

இறுதியாக இதற்கு முடிவு இல்லை

என்பது மட்டும் புரிஞ்சிருக்கு

மத்திகிரி, 13-1-17, இரவு, 8.30

BT Song 606 Understood

Let me go as per the guidance of my mind

Or should I listen to my buddhi (intellect)

Or should I abandon both these ways

Should I come to you Oh my Lord?

How many are the questions that come within me

Thinking which one is correct

But my heart says in the end that

All are my own imagination

Is the everyday life mere imagination

And the life that I live is mere dream

If that is merely imaginary dream

Do all these my troubles are mere lies

The needs of the body is not false

The struggle in my mind is not false

The life that I live with my body and mind

Is also not false

This truth is very clear to me

Both the body and mind have accepted it

But the intellect which interfere in between them

Creates unnecessary confusion

I don’t know what I shall do

Which one should I accept?

But when I come to you who know the truth

The confusion has come down a bit

Still there comes some doubt

Often come in that also the clarity that

Finally, there is no answer for this

That one I clearly understand

Mathigiri, 13-1-17 8.30 pm.

BT Song 607

One Chinese proverb says that fools talk about people but wise talk about events. But no one can talk about any events without talking about people. But if we human beings are not there, there is no event even for us to think or talk.  This is true even in my personal sadhana. When I think and pray about certain events that happen in my life or around me, I cannot avoid thinking about those who are naturally involved in it. How much I try to avoid thinking about them, but only to pray about the event, still my mind naturally goes back to the people without whom that event never happened.  Therefore, I have to constantly train my mind to think more about the Lord, His nature, His loving deeds to worship Him meaningfully. 

One interesting Indian (Hindu) worldview is about the presence of God in everything.  Sometimes karma can take that place according to the event and situation. But as a bhakta having such a background, I cannot keep God away from everything that happens in my life.  And I am thankful for God helping me to be born in such a worldview which enhances my bhakti in the Lord.

BT Song 607 ஒரு வரம் கேட்கிறேன்

எண்ணாமல் எந்நாளும் இருந்திடுவேனோ

என்னுளம் வந்தபின் மறந்திடுவேனோ

உன்னாலே உருவாகி உலகில் வந்தபின்

எந்நாளும் என்னை எண்ணிடுவேனோ

கணந்தோறும் உனையெண்ணி தொழுதிட வேண்டும்

உன் காவலில் நான்னென்னை மறந்திட வேண்டும்

அலைமோதும் எண்ணத்தை ஒருமுகமாக்கி

அத்தா உன்னன்பை நினைத்திட வேண்டும்

நிகழ்வுகள் ஆயிரம் நிகழ்ந்திடும் போது

நினைவும் அவை வழி தொடர்ந்து போகுது

நிகழ்வுடன் மனிதன் தொடர்பையும் எண்ணி

அவர்களைப் பற்றிய எண்ணமும் கூடுது

உலகிடை நானுமே உழல்வதினாலே

உனக்கென நேரமும் அவற்றிடை இல்லை

ஆயினும் என்னுளம் நீ நின்ற பின்னே

உன்னை மறப்பது எனக்கெளிதில்லை

அதனால் மீண்டும் ஒருமுறை வந்தேன்

என்னன்பை உன்னிடம் சொல்லியே நின்றேன்

என் நேரம் உன்னையெண்ணும் எண்ணமே எனக்கு

வரமாக மீண்டும் தந்திட கேட்கிறேன்

மத்திகிரி, 19-1-17, மதியம் 2.20

BT Song 607 I seek a boon

Can I remain not remembering you?

Once you come into my heart can I forget you?

Once I came to this world formed by you

Can I think only about me alone?

I should worship you thinking about you each minute

I should forget myself in your protection

Keeping focused on you away from my wavering thoughts

Oh, my Lord I should always think only about you

When several events are happening (in life)

My thought also (naturally) follows them

And thinking about those who are linked with those events

My thought also increases more about them

As I am caught up in the events of this world

I don’t have time for you amidst them

Yet as you dwell in my heart

It is not easy for me to forget you

Therefore, I come one more time

I uttered my love for you

I sought again this boon

To only think only about you all the time

Mathigiri, 19-1-17, 2.20 pm.

BT Song 608

We don’t have a private bhakti or a private God. We cannot survive or grow without mutual fellowship. At the same time in our call to serve the Lord we have to recognize that we are called individually by the Lord and we are accountable to Him. So here though we have to work together as a team, we cannot carry other’s burden beyond our limit, particularly when others are not co-operating.  Then we have to run our race keeping the goal in front.

BT Song 608 இலக்கைத் தெரிந்து கொண்டேன்

நான் என்ன செய்யட்டும் சொல்லிவிடு

நாளும் பொழுதும் நடத்திவிடு

உன் பேச்சை மீறி நானறியேன்

உன்னடிமை இதைச் சொல்லி வைத்தேன்

ஒவ்வொரு நாளின் ஓட்டத்திலே

உன்னுடன் நானும் ஓடு@

ஒருபோதும் என்னை விட்டுவிட்டு

ஒரு நாளும் நீயும் ஓடவில்லை

தோளோடு தோள் சேர ஓடுகிறாய்

தேவைப்படும்போது தூக்கிக் கொண்டாய்

இளைப்பாறி நானும் இரங்கி வர

இணைத்துக் கொண்டு ஓடுகிறாய்

என்னைப் பற்றியே எண்ணி நின்றால்

எச்சரித்து என்னை ஓட்டுகின்றாய்

பிறரின் செயலை நானும் சொன்னால்

பேசாமல் வாயை மூடச்சொன்னாய்

எனக்கு நீ வைத்த இலக்கை நோக்கி

இறுதி மட்டும் ஓடச்சொன்னாய்

இடையில் வருவோர் போவோரெல்லாம்

என்பாரம் அல்ல என்று சொன்னாய்

இதையும் இப்போது புரிந்து கொண்டேன்

இலக்கை மட்டும் தெரிந்து கொண்டேன்

முழு மனதுடன் ஓடிடுவேன்

முழுதாய் என்பங்கை முடித்திடுவேன்

மத்திகிரி, 20-1-17, இரவு 11.30

BT Song 608 I found my goal

What else can I say to you, tell me?

And lead me each day and every moment

I never went against your commands

This I declare as your slave

In every day race

When I run along with you

You never run leaving me

And you never run on your own

You run shoulder to shoulder

And when need comes you carry me on your shoulder

Once I come down after taking some rest

Then taking me along with you, you run

If I stand and began to think only about me

You warn me and drive me to run

And if I began to complain about others

Then you ask me to shout up my mouth

You ask me to run keeping my goal alone

Till the end

All those who come and join or leave

Is it not my responsibility, you said?

Now I understood this clearly

And Choosing my goal alone

I will run my race wholeheartedly

And I will do my part completely

Mathigiri. 20-1-17, 11.30 pm

BT Song 609

As humans born with relatives some responsibilities come along with it. As we live and move with others, we receive more.  And due to our ideology and principle we voluntarily accept some other responsibilities. But in the end not understanding our limitations when we commit for everything, then we end up not doing one thing properly.  As I realize this, I have only the choice to go and complain about it to the Lord and then do whatever He asks me to do, however I do them with my limitation.

BT Song 609 முறையிடும் உரிமை

சித்தமும் கலங்கிப் பித்தன் நான் தவிக்க

சித்தமும் கொள்ளாயோ தயவு வைக்க

சத்தமிட்டு நான் ஓலம் இட்டால்

சற்றேனும் கொள்ளாயோ இரக்கம் வைக்க

நித்தமும் பூமியில் எத்தனை தவிப்பு

நிலையற்ற வாழ்வில் நித்தம் கசப்பு

எத்தனை இன்பத்தை எவ்விதம் தேடினும்

எல்லாம் மாயைதான் என்பதால் வெறுப்பு

உடலோடு மனதின் தேவைக்காய்ப் போராட்டம்

ஊரோடும் உறவோடும் ஆடுறேன் சதிராட்டம்

இத்துடன் உன் சித்தம் தன்னையே எண்ணிட

என்னதான் செய்திட பதில் நீ சொல்லணும்

வேண்டாம் என்றெண்ணி விட்டோட முடியல

வேண்டாத பாரத்தைச் சுமக்கவும் முடியல

தானாக வந்தது சுமையாகிப் போன பின்

நீ தந்த பாரத்தை நானென்ன செய்வது

சுமக்கத் தந்தை சுமந்துதான் ஆகணும்

மேலும் நீ வைத்தால் ஏற்கத்தான் வேண்டும்

வேண்டாம் என்றாலும் விடப்போவதில்லை

விரும்பியே கேட்டாலும் தரப்போவதில்லை

என்னால் ஆவது முறையீடு செய்வது

அதன்பின்னே மௌனமாய் உன் சித்தம் ஏற்பது

இந்த உரிமைதான் எனக்கு உள்ளது

உணர்ந்து கொள்வது  உனக்கு நல்லது

மத்திகிரி, 21-1-17, மதியம் 2.50

BT Song 609 My right to complain

When this mad man lament with much confusion

Won’t you have compassion to show mercy upon me?

Though I cry loudly and wail

Won’t you consider having some mercy upon me

How many are the struggles in everyday life

There is much bitterness in life

How much I seek any kind of peace and pleasure

I hate them all as mere Maya

There is struggle both for my body and mind

I have to dance along with relatives and friends

Amidst this when I think about your will

What should I do, give me an answer

I cannot run away denying my responsibility

At the same time cannot carry unnecessary burden

The one which came naturally becomes a burden

What can I say about the one which you added further?

I have to carry whichever you ask me to carry

Even if you add further, I have to accept it

Even if I say ‘no’ you are allowing me to go

And if I ask voluntarily, you are not going to give

I know only to come and complain

Then accept your will silently

I have this right with me

It is better you understand this (at least)

Mathigiri, 21-1-17, 2.50 pm

BT Song 610

We are mere instruments in God’s hand. Once we realize this, if we accept each God given opportunity to be ready for His use, and then we can see the needs of others more clearly than in debating about our importance or role in it.

BT Song 610 அவன் கைக் கருவி

நேரம் காலம் நமக்குத் தந்தான்

நிதியும் நலமும் சேர்த்து தந்தான்

நாலு பேருக்கு நன்மை செய்ய

நம்மை மீட்டு வாழ்வும் தந்தான்

பெரிதாக ஏதும் செய்ய வேண்டாம்

பெயரும் புகழும் எடுக்க வேண்டாம்

பிறரும் கூட அதை அறிய வேண்டாம்

முடிந்த சேவை செய்தால் போதும்

பிறரின் தேவை அவன் அறிவான்

பேணிக் காக்க அவன் வருவான்

உவந்து நாமம் இணைந்து கொள்ள

நமது பங்கை ஏற்றுக் கொள்வான்

வீண் வாதம் ஏதும் இன்றி

விருப்பு வெறுப்பு இரண்டும் இன்றி

கிடைக்கும் வாய்ப்பை எற்றுக் கொள்ள

இன்னும் அதிகம் அவனே கொடுப்பான்

பிறரின் தேவை மனதில் எண்ண

பெரியதாகும் நமது உலகம்

சுயநலத்தை குறைத்துக் கொள்ளப்

பிறரின் தேவை கண்ணில் தெரியும்

உள்நோக்கம் ஏதும் இன்றி

உதவும் போதும் அகந்தை இன்றி

இறைவன் கையில் கருவியாகி

இந்த உண்மை புரிந்து வாழ்வோம்

மத்திகிரி, 23-1-17, மதியம் 2.10

BT Song 610 Let us be His instrument

He gave time and strength

And resources further

To do good to few

He redeemed us and gave a life

We don’t need to accomplish great things

And need not earn name and fame

Other’s even need not know about us

It is enough if we do at our best

He knows others’ need

He will to take care of them

If we join Him happily

He will accept our part

Without any constraint and debate

And without having any attraction or repulsion

If we accept the given chance

He will bestow more opportunities

If we think about others’ need

Our world will expand

If we reduced our selfishness

Other’s need become visible to us

Without having any hidden agenda

And doing it without any pride

By becoming an instrument in God’s hand

We will realize this truth and live

Mathigiri, 23-1-17. 2.10 pm

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *