BT Song 621
The Dehradun bhaktas arranged my stay for the last four days in a beautiful service guest house with a kitchen and nice Mountain View in Rajpur. As it is between Mussoorie and Dheradun, the climate was very pleasant. I can also see Dheradun from the veranda. There was an open terrace for me to go for my walk. Above all, realizing that I prefer to live alone without anyone around me, they never came to stay here though there was extra bed room, I enjoyed my stay here.
As I got up and heard the voice of birds surrounded by nature and calmness, immediately my spirit also soared so high that as I thought about God’s grace and blessings that I enjoy each day in my life, I wrote this song worshipping Him.
BT Song 621 இது போல வாழ வேண்டும்
காலைப் பொழுதில்
மலரடி தேடி
கனிவுடன் உன்னை
நினைந்து பாடி
வாழும் வாழ்வில்
உன்னருள் நாடி
வள்ளலே வந்தேன்
உன்னை தேடி
சென்ற நாட்களை
திரும்பி பார்த்தேன்
தெய்வமே உந்தன்
கருணையை கண்டேன்
எதிர்காலம் கூட
எப்படி ஆயினும்
இன்றுபோல் என்றும்
தொடர்வாய் அறிந்தேன்
நீதரும் அருளுக்கு
எல்லை இல்லை
நீ கொண்ட கருணைக்கு
விளக்கமும் இல்லை
நான் கொண்ட பக்திக்கு
வடிவம் இல்லை
நாம் கொண்ட உறவுக்கு
முடிவும் இல்லை
இதனைப் புரிவது
எளிதாக இல்லை
விளங்கிட எனக்கு
அறிவும் இல்லை
உணர்வும் கூட
அறியவும் இல்லை
இதையும் கூற
மொழியும் இல்லை
நீயே நாடி
என்னிடம் வந்தாய்
நினைவெல்லாம் நிறைந்து
எனையாள் கின்றாய்
இந்தப் பேறு
ஒன்று போதும்
இதுபோல் உன்னில்
நான் வாழ வேண்டும்
டேராடூன், காலை, 20-3-2017, 6.30
BT Song 621 should live like this
Seeking your lotus feet
early in this morning
singing remembering you
with a melted heart
seeking only you
in the life which I am living (now)
O charitable one
I come unto you
I looked back
All that went in the past days
O my god
I only saw your grace in it
Whatever might be the
Future too
I know for sure that
You will continue to do as before
There is no limit
For your grace
There is no explanation
For your compassion
There is no form
For my bhakti
There is no end
For our relationship
It is not that much easy
For me to comprehend this
I don’t have knowledge
Even to understand this
Even my senses failed to
Experience it
And I don’t have language
To express this
You alone came
Seeking after me
You lorded over me
Filling my thoughts
It is enough for me to
Have this blessed status
And I should live
Like this always in you
20.3.2017, Dehradun. 6.30 am
BT Song 622
So far in my North trip I had a relatively nice climate and comfortable life. But once I arrived in Rajasthan the heat was unbearable for me, that too only at the end of March. So when I got up very early in the morning due to too much sunlight and heat, as I couldn’t do anything, I began to think about the comfortable life that He gives to me compared to others. Then I began to worship the Lord and prayed that I would complete my race on earth by living like this life each day with Him. As the inspiration flowed, I wrote this song.
BT Song 622 ஓட்டத்தை முடிப்பேன்
ஆள வேண்டி நீ ஐயனே வந்தாய்
அன்புடன் என்னுள்ளே நீயும் நிறைந்தாய்
நானு என்னை உனக்கெனத் தந்தேன்
நாயெனை ஏற்றுக் கனிவுடன் ஆண்டாய்
உன்னால் உன்னத வாழ்வை பெற்றேன்
உன்னுடன் வாழும் உறவை அடைந்தேன்
கண்ணின் இமைபோல் நீயுமே காக்க
கலக்கம் அற்ற வாழ்வை அறிந்தேன்
நித்தமும் ஆனந்தம் நினைவெல்லாம் மகிழ்வு
நீ வந்து உறவாட மனதிலே நிறைவு
புத்தியில் தெளிவு பக்தியில் உயர்வு
பாதம் பணிந்து பெற்றேன் வாழ்வு
இதை கொண்டாடப் பாடி மகிழ்வேன்
இதயம் மகிழ்ந்து பணிந்து வாழ்வேன்
இதுபோல் என்றும் உன்னுடன் வாழ்ந்து
உலக ஓட்டத்தை உன்னுள்ளே முடிப்பேன்
23-3-17, கபாசான் (ராஜஸ்தான்), காலை 6.15
BT Song 622 I will complete my race
You came to lord over me Oh my Master
And you dwell within me due to your love
I gave myself to you
And you accepted this dog to lord over me
I received a noble life because of you
I received a relationship to live with you
As you protect me as the apple of the eyes
I received a life without having much trouble
Each day there is joy
As you come to have fellowship there is satisfaction in my heart
There is clarity in my mind and improvement in my bhakti
And I received this life by worshiping at your feet
In order to celebrate I will sing about you
And I will live by worshiping you
Living like this with you each day
I will complete my race on this earth
23-3-17, Kapaau (Rajasthan), 6.15 am.
BT Song 623
As I am in the last phase of my long trip in the North, several times the question was asked to me: Am I ready to go back home. But most of the people don’t know my inner nature. In general, I never miss any particular place in my life, though I like to stay in a few places for a long time. Of course Gurukulam is one of the best places for me to live. But I am not so attached to it either. I can easily and relatively adjust to any new situation but crowded places I prefer to avoid. I like rural areas very much. Near forest or in the mountains are the best options. But definitely Mathigiri@ is not the best for me, longing to return back. Of course, I know that my mother will be happy and counting the days of my return, I always try to live one day at a time without giving much importance to any place. In fact, when I was in Ranikhet even Chittranjan asked whether I would like to go to some places to visit where he can take me in his car. But I said no and stayed the whole week almost only in Ranikhet (that is in severe cold and unusual snowfall in March). So as I was ready to leave Pune this evening I was in a relaxed mood as I don’t have any program today. I was enjoying my time alone in my room, reading and doing cross stitch. Then worshipping the Lord I wrote this song expressing the mood of that time.
@ due to motorcycle racing that sometime happen in the middle of the night in our street and also the dogs chasing the cars and motorcycle, I don’t like Mathigiri very much.
BT Song 623. உன்னுடன் வாழவே
நாளும் கிருபை தாராய்-என்னை
நன்மையால் நிறைத்திட வாராய்
செய்ததை நினைத்து பாராய்-கரை
சேர்ந்திட அருளைத் தாராய்
உன்மீது அன்பெனக் குண்டு-அதை
உணர்த்திட நீயும் (என்னிடம் )உண்டு
என் மீது கருணை கொண்டு-பக்தி
தந்திட நீயும் உண்டு
நமைப் பிரித்திடும் ஏதும்-இந்த
உலகில் இதுவரை காணோம்
என்னை தந்திட்ட பின்னே-இனி
நானென்ற எண்ணத்தைக் காணோம்
உன்னுடன் அனுதினம் வாழ-அந்த
உறவினில் நானும் ஆழ
கண்களும் அருவியாய் மாற-உன்
காலடியில் நானும் தாழ
பண்கொண்டு நான் உன்னை பாடவோ-இல்லை
பாதத்தில் மௌனமாய் வீழவோ
சொல் கொண்டு உன்னை போற்றவோ-இல்லை
சொல்லற்று உன்னுடன் வாழவோ
புனே, 4.4.17, காலை 9.00 மணி
BT Song 623. Shall I live with you?
Give me grace each day and
Come and fill me with goodness
You just think what you have done so far
And give me grace to reach the shore
I have love for you
You are there to remind it to me
Having compassion on me
You are there to give bhakti to me
I don’t see anything
That separates us in this world
Once I gave myself to you
I don’t have the thought of my-ness
As I live each day with you
And as I drown in that relationship
Both the eyes becoming water falls
I fell at your feet
Shall I sing you with songs?
Or shall I fall at your feet silently
Can I praise you with many words?
Or let me remain at your feet without any words
Pune, 4.4.17, 9.00 am.
BT Song 624
After reading Job chapter 16 (as per my regular reading from Pura Veda) the verse 6 (16:6) struck my mind deeply. Then based on it I wrote this song.
624 ஏதாய் இருந்தாலும் சொல்லு
ஏதாய் இருந்தாலும் சொல்லு
எவ்வித தயக்கமும் வேண்டாம் நீ கேளு
நானாகத் தானே வந்துன்னை கேட்கிறேன்
நல்லதை கெட்டதை பார்க்கவா சொல்கிறேன்
ஆஹா இத்தனை கோபம் ஆகாது
அலட்டிக் கொள்ளுதல் லாபமும் கிடையாது
ஏது நீ செய்தாலும் ஏனென்று கேட்டேனா
என்ன நீ செய்தாலும் வம்பேதும் செய்தேனா
பேசா மடந்தை போல் பேசா திருந்தேன்
பேசத் தெரிந்தால் வாய் மூடிக் கொண்டேன்
நீ கூறும் வார்த்தைக்கு ஏங்கி நின்றேன்
நீகொண்ட மவுனத்தை நானினித் தாங்கேன்
ஏதோ தெரியாமல் இதையும் சொன்னேனே
ஏழை நானினி வேறென்ன செய்வேனே
சொன்னாலும் வெட்கம் உள் வைத்தால் துக்கம்
இந்த எந்நிலைக்கு நானென்ன செய்வேனே
இதுவும் எனக்கு வாடிக்கை யானது
என்னதான் புலம்பினும் பதிலேதும் கிடையாது
ஆண்டான் உன்னிஷ்டம் யாரென்ன சொல்வது
ஆயினும் என்னுரிமையை விட்டிட முடியாது
மௌனமாய் இருந்தாலும் நானுன்னை அறிவேன்
பேச நீ மறுத்தாலும் உன்னுள்ளத்தை உணர்ந்தேன்
மெளனமே உனது மொழியான பின்னாலே
உணர்ந்திட எனக்குத் தடையேதும் கிடையாது
மத்திகிரி, மதியம் 2.15, 10-4-17, யோபு 16:6
BT Song 624 Whatever might be, please tell
Whatever it might be, please tell
And don’t have hesitation, listen to me
I alone voluntarily ask you
Am I asking you to see good or bad in it?
No, no. you should not have this much anger
And there is no point in getting frustrated
Did I ever ask you whatever you do to me?
Am I ever contested whichever you do to me?
I remain like a person who does not want to talk
Even though I know to argue, I kept quiet
I was longing for your words
I cannot bear any more this silence from you
By mistake even I am saying this too
What else can this poor one do?
If I tell openly then it becomes a shame and if I keep within me, I get depressed
Now what can I do in such a situation?
This too become a routine for me
How much I lament there won’t be any response from you
You are the Master who can say anything further
But I cannot let my right get lost
Even if you remain silent, I know you
Even if you refuse to talk, I know your mind
Once silence becomes your language
Nothing can stop to communicate your mind to me
Mathigiri, 2.15, p. 10-4-17, Job. 16:6
BT Song 625
Another song reflecting about the joy of living together as bhaktas of the Lord to see the Kingdom of Heaven on this earth in and through the Lord.
BT Song 625 இகத்திலே பரம்
சிந்தை மகிழ நாங்கள் வந்தோம்
சேவிக்க உந்தன் அடி இணைந்து பணிந்தோம்
எந்தையே இறைவா எம்முடன் நீயே
இணை பிரியாது நடந்திடுவாயே—சிந்தை
வையகம் போற்றிட வானம் வாழ்த்திட
வள்ளலே நாங்களும் சேர்ந்து கொண்டாட
பக்தியுடன் நாங்கள் பண்ணிசைத்துப் பாட
பரவசம் மிகுந்து கூத்து ஆட—சிந்தை
இதயமும் உருகுது இணையடி நாட
இன்னிசை பிறக்குது உன் புகழ் பாட
ஆவியில் நிறைந்து ஆனந்தம் எய்த
அருளுமே பெருகுது மனமே உய்ய—சிந்தை
இகத்தில் பரத்தைக் காணவே விழைந்தோம்
இதுபோல் என்றும் வாழவே நினைந்தோம்
பரத்தின் ஆட்சியை உன்னிலே கண்டோம்
பக்தியால் அதன் மேன்மையை உணர்ந்தோம்—சிந்தை
முக்தியின் உன்னத வாழ்வை அடைந்தோம்
மேதினியில் அதன் மாட்சியை அறிந்தோம்
அன்றாட வாழ்வில் அனுபவம் கண்டோம்
அடியவர் சேர வாழ்ந்து மகிழ்ந்தோம்—சிந்தை
மத்திகிரி, 10-4-17, இரவு, 1.05
BT Song 625 Heaven on earth
We came together for the joy of our heart
We worship your Holy feet together
O our Father, our God you too
Walk along with us without leaving us—we came….
As the world hails you and the heaven too sings your glory
O charitable one we too join to celebrate
To sing songs with much devotion
To dance overflowing with joy—we came…
Our heart melts as we seek your Holy feet
New songs are coming to sing your glory
As we rejoice filled in our spirit
Your grace increases to redeem our heart—we came…
We want to see the heaven on this earth
We want to live like this always
We saw the Kingdom of God in you
We realize the nobleness of bhakti in it—we came…
We attained the noble life of Mukti in it
We understand its glory on this earth
We experience it in everyday life
We rejoice as we live together in you—we came Mathigiri, 10-4-17, 11.05
Leave a Reply