BT Song 651
I came to the ashram with my mother with a plan to stay here for a minimum of three weeks. Kannan and Saradha also came with me. But as they have to leave tomorrow my mother began to make so many complaints. Of course I too noticed that she finds it difficult to walk from her room to the living room to the dining hall. She also finds it difficult to get up from the chair as I cannot bring her regular chair from Mathigiri. She also told Saradha that she is not happy here, but she never said anything to me. Then Saradha requested me to change my plan and try to return back at the earliest on 27th or 28th. But not to make my mother’s life more difficult here, I told that I will return on 24th along with Kannan and Saradha and will come back to the ashram on June 4th when my brother will come to stay with my mother for a week. As I was reflecting about such sudden changes in my life, I wrote this song leaving all the future plans and burdens on Him. Carrying tomorrow’s burden is really difficult.
BT Song 651 நாளைய பாரம்
எதுவரை போகுமோ
அதுவரை போகட்டும்
எனக்கான உன் சித்தம்
சரியாக அமையட்டும்
எதிர்காலம் பற்றிய
எல்லா கேள்விக்கும்
இன்றைய வாழ்வு
பதிலாக அமையட்டும்
சென்ற நாட்களை
திரும்பி பார்த்தால்
கண்ணுக்குப் புலனாக
உன் கரம் தெரியுது
எதிர்காலம் அதுபோல்
உன் கரம் ஏந்த
இன்றைய நாள் மட்டும்
என்பொறுப் பானது
நல்லவேளை முன்னதாக
நாளைய வாழ்வை காட்டவில்லை
பல முறை கேட்டாலும்
நீ கொண்ட இரக்கத்தால்
எதிர்காலம் இதுவென
தெளிவாக கூறவில்லை
என் மீது பாரத்தை
முன்பாக ஏற்றவில்லை
உன்னிந்தக் கருணையை
அறியாத நானும்
வீணாகச் சுமக்குறேன்
எதிர்கால பாரம்
புரியாத சிறுவன்
தெரியாது செய்கிறேன்
பொறுப்பான இறைவன்
தடுத்தாட் கொள்வாய்
குருகுலம், 23.5.2017. காலை 4.00
BT Song 651 Tomorrow’s burden
Let it go
As long it will go
Let your will be
Perfect for me always
To all the questions
About tomorrow
Let to-day be
The answer
When I look back
All the past days
I could see your
Invisible hands behind them
Similarly as the
Future too is your responsibility
Today alone became
My responsibility
Because of your grace
How many times even I ask
Fortunately you didn’t
Show all about the future
You never defined
What would be my future?
You never uploaded
That burden on me in advance
This little boy
Not knowing your compassion
Carries the burden of future
Unnecessarily
This little boy
Is doing this without knowing
And as a responsible God
You better interfere and take care of me
Gurukulam, 23.5.2017.4.00 am.
BT Song 652
Sometimes I don’t feel like praying. Even if I try to chant (not sing) some songs to concentrate, my mind will begin to wander. Then giving up all my attempts to pray I will sit vaguely not knowing what to do. Then I will recall my own statements that keeping my own normative standards about so many things in life, when I fail to live up to it, then I feel defeated. The real joy and satisfaction comes like a lighting which remains only a few seconds. The same is true with my time with the Lord. Even those few seconds when I enjoy His presence is more than enough to sustain my bhakti. But stretching it with my own efforts will end up a mere ritual without having any sense of worshiping Him. As I underwent another similar experience today, I wrote this song recalling my own statement.
BT Song 652 அந்த நொடி
அந்த சில நொடி பொழுது
உன்னருகினில் வருகின்ற பொழுது
நெஞ்சமெல்லாம் நீ நிறைய
என் நாவும் பாடுது துதியே
நேரம் இல்லை என்று சொல்லி
தட்டிக் கழிக்கும் போதும்
வார்த்தைகள் ஏதும் இன்றி
உன்னிடம் வந்திட வேண்டும்
தேங்கி தான் போனது வாழ்வு
தெளிவற்று போனது மனது
வரண்டு போனது உணர்வு
இதனிடை உள்ளதுன் பரிவு
என்னிலை என்னவாய் ஆயினும்
சொல்லிட மொழியற்றுப் போயினும்
மாறாத உன்னன்பை எண்ணி
நானென்னை உன்னிடம் தரணும்
வறண்ட பூமியின் மீது
விழுந்திடும் மழைத்துளி போல்
கருணை என் மீது பொழிய
துளிர்விடும் உணர்வு மீண்டும்
போன உயிரும் வந்து
மீண்டு எழுந்திடும் போது
நாவும் உந்துதிப் பாடும்
அந்த நிலையில் பரவசம் கூடும்
மத்திகிரி, 28-5-17, இரவு 11.45
BT Song 652 That few seconds
That few seconds
When I come near to you
You come and occupy my mind
My tongue began to sing your praise
When I give excuses
That I don’t have time
I should come unto you
Without having any words
Life became stagnant
Mind is not clear
Senses become very dry
Your pity is there amidst all these
Whatever might be my situation?
Even if I don’t have words to utter it
Thinking your unchanging love
I should give myself to you
Like few drops of rain
Falling on a parched land
When your grace falls upon me
My senses again get revived
When the life which has gone
As it returns back
My tongue will sing your praise
In that time the bliss will become abundant
Mathigiri, 28-5-17, 11.45 pm.
BT Song 653
When youngsters do not listen to my words and begin to argue with me, then I become upset and will say to myself, ‘there is no use in giving advice to them and he won’t listen or change’. Later when I will reflect about it I will exchange their place and will think that suppose God began to do the same what would be my condition? Of course as per my nature I will plead to God to forgive and forget but also began to give advice to Him what He should do in such a scenario. So the youngsters are many ways better than me, as they never do that often to us, but I do with God.
BT Song 653 மீண்டும் பொறுப்பாய்
எத்தனையோ முறை
என் பிழை பொறுத்தாய்
இன்னும் ஒரு முறை
பொறுக்கக் கூடாதா
என் மீது நீ கொண்ட
இரக்கத்தை மட்டும்
மீண்டும் ஒருமுறை
நினைக்கக் கூடாதா
உத்தமன் என நான்
ஊருக்குக் காட்டினும்
உண்மை அறிந்த நீ
மன்னிக்கக் கூடாதா
கதறிடும் என்குரல்
காதில் விழுந்தும்
கரம் நீட்டி மீண்டும்
அணைக்கக் கூடாதா
சொல்லிடத் தெரியாது
தவித்திடும் பேதையின்
உள்ளத்தின் தேம்பலைக்
கேட்கக் கூடாதா
இது என்ன பிடிவாதம்
எத்தனை எகத்தாளம்
எவர் சொல்லித் தந்தார்
ஏனிந்த ஆத்திரம்
பொறுப்பும் உண்டு உனக்கு
அது உன் கடனென்று
சிறுபிள்ளை நான் சொல்லித்
தரவும் வேண்டுமோ
“சிறியோர் செய்திடும்
சிறு பிழை எல்லாம்
பெரியார் ஆயின்
பொறுப்பது கடனே”
முதுமொழி மறக்காதே
மூடனை வெறுக்காதே
உன்கடன் மறக்காதே
என்னுரிமையை மறுக்காதே
மத்திகிரி, 29-5-17, இரவு, 10-45
BT Song 653 Again bear with me
So many times
You tolerated my mistakes
Can’t you do the same?
One more time
Can’t you remember?
One more time
Only the mercy
That you have for me
Though I pretend
As a good person to others
As you who knows my true nature
Can’t you forgive me one more time?
Though my wailing
Falls on your ears
Can you stretch your hands?
And hug me one more time?
Can’t you listen to it?
The sobs of the fool
Who is unable to?
Utter what I feel
Why this much adamancy
Why this much mockery
Who taught this to you?
Why this much anger against me?
You too have responsibility
That is your dharma
Do me, a little child
Need to teach this to you?
“The noble ones
Should bear
The mistakes of the
Smaller ones”
Don’t forget this proverb
Don’t hate this fool
Don’t forget your dharma
Don’t deny my right
Mathigiri, 29-5-17, 10-45 pm.
BT Song 654
How much we pray to God in His mercy never going to reveal all that He planned for our future. This He is doing because of His grace. As I was reflecting upon this, I wrote this song celebrating this day in the Lord.
BT Song 654 இந்த நாளைக் கொண்டாடு
இதற்கொரு காரணம்
உன்னிடம் உள்ளது
எனக்கு மறைப்பது
உனக்கு நல்லது
புரியாமல் வாழ்வது
ஒருபுறம் சிறந்தது
எல்லாம் புரிந்தால்
குழப்பம் ஓங்குது
அன்றாட வாழ்வை
கொண்டாடி வாழ
அனுதினம் அருள் தந்து
அழைத்தாய் என்னை
நாளைய சிந்தையை
உன் மீது வைத்து
அதைப்பற்றி கவலை
விடச்சொன்னாய் உன்னில்
ஆயினும் சஞ்சலம்
அடிக்கடி வருவதால்
எதிர்கால நிலையெண்ணி
மயங்குறேன் இந்நாளும்
அதை மட்டும் தெளிவாக்க
நீயும் மறுத்து
அன்றாடம் வாழ
அருளினாய் கிருபை
ஒருவேளை எதிர்காலம்
இதுவென தெளிவானால்
இந்நாளின் வாழ்வு
இருளாகிப் போய்விடும்
ஆகையால் என் மீது
இரக்கமும் கொண்டநீ
அதைமட்டும் எனக்கு
மறைவாக வைத்துள்ளாய்
அந்த கிருபையை
அண்டி வாழ்வதால்
இந்நாளின் வாழ்வை
கொண்டாடி வாழ்கிறேன்
மத்திகிரி, 30-5-17, இரவு 11.00
BT Song 654 Celebrate this day
You have a
Reason for this
It is good for you to
Hide it from me
It is better to live
Without knowing everything
Once everything becomes clear
Confusion will increase
You called me
By giving your grace each day
So that I can celebrate each day
And live accordingly
You asked me to
Leave the anxiety about tomorrow
And keep the
Burden on you
Yet as I am
Often get disturbed
I am bewildered today
Thinking about tomorrow
But you clearly
Denying that ( not revealing about the future)
You bestowed the grace
Only to live each day
Suppose if the
Future is clearly visible
Then this day will become
Completely dark
Therefore having
Mercy upon me
You keep that
Hidden from me
As I seek
Only that grace
I live this day
Celebrating it.
Mathigiri, 30-5-17, 11.00 pm.
BT Song 655
When others take me for granted, and then I become very upset. But I do the same with the Lord. But He has no other option but to bear with me. As I already shared in my previous song I (653) not only I take Him for granted by asking so many questions but even began to give Him advice and counsel how he should behave with me.
BT Song 655 எளியனாய் இரு
எத்தனை எளிதாக எடுத்துக் கொண்டேன் நான்
எண்ணிலாக் கேள்விகள் கேட்கிறேன் உன்னைதான்
ஆயினும் நீ கொண்ட அளவிலாப் பொறுமையால்
அனைத்தையும் அமைதியாய் கேட்டுக் கொள்கிறாய்
ஜெபம் என்ற பெயரால் முறையீடு செய்கிறேன்
விடை தேடும் விதமாக புத்தியும் சொல்கிறேன்
அத்துடன் என்னிலை நீ அறிந்து கொள்ள
அடிக்கடி உனக்கு ஆலோசனை தருகிறேன்
மனிதனாய் வந்தாலும் தெய்வமாய் இருப்பதால்
முழுமையாக என்னிலை உனக்கு புரியாது
என்ற எண்ணம் எனக்குள்ளே இருப்பதால்
என்னை நீ புரிந்திட வைக்க முயல்கிறேன்
இது என் பலவீனம் என்று சொல்வதா
உன் மீது எனக்குள்ள உரிமை என்பதா
பக்தியின் வலைக்குள் அகப்பட்டுக் கொண்டதால்
நீ தப்பிக்க வழியில்லை என்று தான் சொல்வதா
எப்படி ஆயினும் இன்னொன்று சொல்கிறேன்
இறுதிவரையிலும் என் குணம் மாறாது
இந்த உண்மையை புரிந்து கொண்டு நீ
எனக்கு எளியனாய் இருப்பதே நல்லது
மத்திகிரி, 30-5-17, இரவு 11.30
BT Song 655 Remain simple one
How I took you very lightly
And ask so many questions to you
But because of the immense patience that you have
You listen to all of them calmly
In the name of prayer, I made several complaints
And giving advice to you as a means of getting answer
Adding more to this for you to understand my situation
I often give counsel to you
I try to help you to understand
Thinking that
Though you came as a human, yet as you still remain a God
You may not understand my condition totally
Should I say that this is my weakness?
Or is it my right that I have with you
Or as you got trapped in the net of bhakti
You have no means to escape from me
Whatever might be it, yet I give one more advice to you
Till the end my nature won’t change
Realizing this my nature
Remain simple one for me till the end Mathigiri, 30-5-17, 11.30 pm
Leave a Reply