BT Song 656
After reading my regular portions of Muktiveda, I took my book to read. But suddenly there came a mood to worship the Lord. Then as usual I wrote this song to worship Him.
BT Song 656 எல்லாம் செய்தாய்
அருளுக்கு அருளாகி
அவனிக்கு வந்தாய்
அன்புக்குப் பொருளாகி
உன்னையே தந்தாய்
இருளுக்கு மருந்தாகி
ஒளியையும் தந்தாய்
என்றைக்கும் நீயாள
முடிசூடிக் கொண்டாய்
கருணைக்கு இலக்கணம்
காட்டிட வந்தாய்
கயவன் கடைத்தேற
மீட்பும் தந்தாய்
அன்புக்குப் பொருள் கூற
தருவினில் மாண்டாய்
அடியவர் கொண்டாட
உயிர்த்து எழுந்தாய்
உலகிற்கு உனைக்கூற
சீடரை அழைத்தாய்
உயர்ந்தோர்கள் துதிபாட
பக்தியைத் தந்தாய்
விண்வாழ்வை புவிகாண
பக்தரை இணைத்தாய்
வேண்டிய வரம் தந்து
எமை வாழ வைத்தாய்
இதையெல்லாம் நான் பாட
என்னையும் அழைத்தாய்
எனக்கிந்த வரம் தந்து
உனைப் பாட வைத்தாய்
உறுதியாய் உனைப்பற்ற
உள்ளமும் தந்தாய்
உன்னிலே நான் வாழ
மகிழ்ச்சியும் கொண்டாய்
துதிபாடி உனைப்போற்ற
மகிழ்ச்சியில் ஆழ்ந்தாய்
துதிபாடும் போதெல்லாம்
நீ வந்து நின்றாய்
இது ஒன்றே பக்திக்கு
இலக்கணம் என்றாய்
இதற்கென உலகத்தில்
எம்மையும் வைத்தாய்
மத்திகிரி, 31-5-2017, மதியம் 2.00
BT Song 656 You have done everything
You came to the world
Becoming grace even to grace
Becoming the meaning for love
You gave yourself for us
Becoming remedy for darkness
You gave light
In order to rule over us
You were crowned (as our King)
You came to define
What compassion is?
You gave redemption
Even for a worst sinner to be redeemed
In order to give meaning to love
You died on the cross
For the bhaktas to worship
You again resurrected
You called your disciples
To proclaim you to the world
You gave bhakti
For the bhaktas to praise you
You united bhaktas
To see a glimpse of heaven
You gave many boons
For us to live
You called me
To sing about all these
Giving this boon
You made me to sing your praise
You gave a heart
To have firm faith in you
You are happy
As I live in you
When we sing and glorify you
You become very joyful
When we sing your praise
You came amidst us
You said that
This is the meaning for bhakti
You kept us in this world
Only for this
Mathigiri, 31-5-2017, 2.00 pm.
BT Song 657
As I was recalling the song which I wrote this afternoon to worship the Lord, as the inspiration continued I wrote another song just to worship the Lord.
BT Song 657 துதிக்கிறோம்
ஓரருள் வார்த்தையால் உலகையும் படைத்த
உனதரும் அருளினால் அனைத்தையும் காத்த
உயர்வான அன்பினால் எம்மையும் மீட்ட
உத்தமா! வித்தகா! வந்தோம் உனை வாழ்த்த
துதிகளின் மத்தியில் வாசம் செய்கிறாய்
துதிக்கு ஏற்ற பாத்திரம் ஆகிறாய்
துதித்துப் பாடிட மகிழ்ச்சியும் கொள்கிறாய்
துதிபாட மேலும் கிருபை அருள்கிறாய்
தூதர்கள் பாட தூயவர் போற்ற
துதிபாடி படைப்புகள் அனைத்தும் பணிய
தூயவா நாங்கள் அவற்றுடன் இணைய
துங்கவா உன் புகழ் மென்மேலும் பெருக
வையம் அறிந்திடும் உனது மேன்மை
வந்தும் பணிந்திடும் உன்னடி உண்மை
நீயும் அன்புடன் ஆளுகை செய்திட
நாங்கள் வாழ்வோம் உன்னுடன் உய்ந்து
மத்திகிரி, 31-5-2017,, இரவு 11.00
BT Song 657 We Worship you
The one who created the entire universe with a single world
The one who protects it through your grace
Who redeemed us by your great love?
We come to worship you, O noble and good one!
You live among the praises
You deserve to be praised
You are happy as we sing your praises
You give more grace for us to praise you
As the angels sing your praises and the saints worship you
Every creature also obey you by singing your praise
O holy one we too join them
So that your fame can grow more and more
The world will know your greatness
And will come and bow at your feet
You too rule us by your love
We too will live with you by redeemed by you
Mathigiri, 31-5-2017, 11.00 pm.
BT Song 658
From the morning the first line of this song was echoing again and again within me. So when I was doing some other work in the computer, as the inspiration continued to flow, stopping the work I wrote the song. As I wrote I recalled the statement made by Ott:
Ott: …grace remains grace, the word of God remains the word of God that is not owed to me….— The Presence of the Wholly-Other: On the Transcendence and Immanence of God. Heinrich Ott. Pp. 9-46, in, Andreas Bsteh (ed.), Christian Faith in Dialogue with Hindu Religious Traditions [Christian Faith in the Encounter with Hinduism 2], Modling 2007, St Gabriel Publications, p. 24
Ott: …grace is what is not due to us….—ibid. p. 40
BT Song 658 புதிய கிருபை
காலை தோறும் புதிய கிருபை
காத்து நிற்கும் அருளைப் பொழிய
கணங்கள் தோறும் நம்மை காக்கும்
கடைசி வரையில் துணையாய் நிற்கும்
நம் தகுதி பார்க்க வில்லை
நாமே கேட்டும் தருவதில்லை
இரங்கி அவனே தருகின்றான்
நம்மை காக்க அருளுகின்றான்
விளக்கம் அதற்கு ஏதும் இல்லை
விளங்கிக் கொள்ள தேவை இல்லை
விரும்பி நாடி வந்தால் போதும்
வேண்டும் அளவு பெறலாம் நாமும்
அதன் மேன்மை யாரே அறிவார்
அடைந்தோர் அன்றி எவரும் புரியார்
புரிந்தவரும் கூற இயலார்
புரிய வைக்க முயற்சி செய்யார்
இந்த உண்மை அறிந்த பின்னே
இதற்கு மேலே எழுதலாமோ
எனவே இங்கு முடித்துக் கொண்டு
எனது பங்கை பெற்றுக் கொண்டேன்
மத்திகிரி, 2-2-17 காலை, 9.30
BT Song 658 New Grace
Each day new grace
Will stand ready to bestow more grace
Each moment it will take care of us
And till the end will remain our companion
He never sees our eligibility (to receive it)
He never gives because we ask
Out of mercy He bestows on us
He provides it to safeguard us
There is no explanation for it
We don’t need to understand it
Only if we come seeking it
We can get it abundantly
Who can understand its greatness?
Other than those who received it, others cannot understand it
Those who received also not know to talk about it
They won’t try to make others to understand it
Once after understanding this truth
Should I write more than this?
Therefore, stopping here
I received my share today
Mathigiri, 2-2-17 9.30 am.
BT Song 659
As I retired to bed very early around 10.30 (my regular time is around 11.30 or 11.45), I got up early around 3.00. Though I tried to catch my sleep, as I failed, I got up and made a cup of coffee and tried to worship the Lord. As all my efforts to concentrate on worship and prayer failed, out of frustration, I said to myself, ‘there is no change in me’. Then I took my cross stitch to do it. As I began to concentrate on the work, my mind calmed down and I began to think of various means to discipline the mind, then as inspiration came I wrote this song. For me every activity that I do I offer as an offering to God, then they all become part of my worship of Him.
BT Song 659 இதுவே என் துதி
இல்லை என்னில் மாற்றம் தானே
ஏது செய்வேன் இன்னும் நானே
சொல்லிச் சொல்லி ஓய்ந்து போனேன்
செவிமடுக்க நீயும் மறுத்தாய்
இறக்கம் உனக்கும் இல்லைதானோ
ஏது காரணம் கொண்டாய் நீயோ
பதிலும் எனக்குத் தெரியும் என்று
மொளனம் நீயும் காக்கின்றாயோ
சில நொடிகள் சிந்தையை வென்று
தெய்வம் உன்னிடம் வந்து நின்று
நன்றி கூற துவங்கும் போது
தனது போக்கில் சிந்தை போகுது
அடக்க முயன்றேன் முடியவில்லை
அதனை வெல்ல வழியும் இல்லை
தோல்வி தன்னை ஏற்றுக் கொள்ள
சிந்தை தந்தது வழியும் ஒன்று:
“எழுத்தில் இதையும் எழுதிக் காட்டு
இதையே உனது துதியாய் மாற்று
உனது நிலையை தெரிந்த அவனும்
தந்தான் இதையே மாற்றாய் உனக்கும்”
என்று எனது சிந்தைக் கூற
நானும் வந்தேன் இதனைக் கூற
இதையே எனது துதிகளாக
ஏற்றுக் கொள்ள வேண்டும் நீயும்
5-6-2017, பெங்களுரு, காலை 3.30
BT Song 659 This is my Praise
There is no change within me
what else can I do now
I become tired by saying this
you refuse to listen to me
Don’t you have mercy on me?
What is the reason for this?
Thinking that I already knew the answer
You keep silent?
Overcoming the mind for few minutes
and coming unto you O my God
When I began to offer my thanks to you
The mind wanders on its own way
I tried to overcome it and failed
I don’t have any means to overcome it
When I accepted my defeat
Then the mind gave a means (to overcome it)
“Write it down this too
change this as your praise
Knowing your nature
He too gave this as an alternative to you”
As my mind said this
I too come unto you say the same
Therefore you should accept this
As my praise for you
5-6-2017, Bangaluru. 3.30 am.
BT Song 660
After writing the previous poem (659), as I calmed down I began to worship the Lord. Then as inspiration flowed, I wrote this song as part of that worship and sung it as my worship this early morning.
BT Song 660 வரம் தந்தாய்
வரமொன்று தந்தாய் நீயும்
வாழ்த்தி உன்னைப் போற்றிட நானும்
இரக்கமும் என் மீது கொண்டு நீயும்
என்னையும் மீட்டுக் காக்கின்றாய் நாளும்—வர….
துதிகளின் மத்தியில் வாசம் செய்கிறாய்
துதிக்க நீயும் பாத்திரம் ஆகிறாய்
தூதர்கள் போற்ற தூயவர்ப் பணிய
துதிகளை ஏற்று என்னையும் ஆள்கிறாய்—வர….
சொல் கொண்டு உன்னைத் துதித்திடும் போதும்
செயல் மூலம் உன்னையே வாழ்த்திடும் போதும்
ஏதும் செய்யாமல் இருந்திடும் போதும்
எல்லாமே உனக்கென அளித்திட மட்டும்—வர….
மேலான பிறவியைத் தந்தாய், இந்த
மேதினியில் உன்னை வணங்கிட வைத்தாய்
நீயாக வந்து மீட்டாய், அதை
நினைந்து தினந்தோறும் பாடிட மட்டும்—வர….
இது ஒன்றே எனக்கு போதும்
இது ஒன்றே என்னை வாழ்வும் வைக்கும்
இதை எண்ணி என்னுள்ளம் மகிழும்
அதை எடுத்துச் சொல்லி பாடியே வைக்க—வர….
5-7-2017, பெங்களுரு, காலை 4.00
BT Song 660 You gave this boon
You gave me a boon
So that I can worship you by singing your praises
Having mercy on me
So far you have protected me—you gave me….
You dwell among the praises
you deserve to be praised
Angels singing your praise and saints worshiping you
You accepting my praises also came to lord over me—you gave me….
Whether I sing you with words
Or bless you through my deeds
Or by remaining inactive
To offer everything only to you—you gave me….
You gave me a noble birth (as human)
you kept me on this earth to worship you
You came voluntarily to redeem me
And to sing every day only remembering that alone—you gave me….
This is enough for me
this alone will keep me alive
my heart will rejoice thinking this
to sing your praise by saying this—you gave me….
5-7-2017, Bengaluru, 4.00 am.
Leave a Reply