BT Song 671
I was in a joyful mood to sing and worship the Lord. So when I sat for my quiet time as the inspiration immediately overflowed I wrote this song praising the Lord.
…In his mortality and weakness the human being stands in antithesis to God (cf. Num. 23:19f.; Isa. 31:3), but in his role of ruler he approximates a heavenly being.— Bruce K. Waltke and James M. Houston, with Erika Moore, The Psalms As Christian Worship: A Historical Commentary, Grand Rapids, Michigan, William B. Eerdmans Publishing Company, 2010. [Psalm 8: I Am Rules Through “Infants”] p. 268
BT Song 671 வாழ்வதன் நோக்கம்
உன்னிடம் நானும் வரவேண்டும்
உன்னிடம் கேட்டுப் பெற வேண்டும்
உன்னடி அண்டித் தொழவேண்டும்
உன்னருள் தன்னை பெற வேண்டும்
வாழ்வதன் நோக்கம் என்னவென்று
வாழும் போதே புரிகின்றது
வள்ளல் உன்னைத் தொழும் போது
வாழ்வும் முழுமை அடைகிறது
ஏதோ பிறந்தோம் என எண்ணி
எப்படியேனும் இங்கு வாழாமல்
இதற்கே பிறந்தோம் என எண்ணி
என்றும் உன்னடி தொழவேண்டும்
நோக்கம் எதுவென தெரியாமல்
ஆக்கம் ஏதும் இல்லாமல்
மாக்கள் போலவே வாழ்ந்துவிட்டால்
மனிதப் பிறவியால் பயனேது
படைப்பில் உயர்வாய் எமை வைத்தாய்
படைத்ததை எல்லாம் எனக்களித்தாய்
படைத்ததின் நோக்கம் புரிந்து கொள்ள
பகுத்து அறியும் மதியளித்தாய்
இயற்கையின் நியதிக்கு உட்பட்டு
எல்லா உயிர்களும் வாழ்ந்தாலும்
எமக்குத் தனியொரு நியதி வைத்து
உன் போல் எம்மை படைத்துவிட்டாய்
அதன் பெருமையை உணர்ந்து கொண்டு
அதன்மூலம் உன்னை அறிந்துகொண்டு
அனுதினம் உன்னையே தொழுது கொண்டு
வாழ்வதில் மட்டுமே பயனும்முண்டு
இதை உணர்ந்து நானும் வந்தேன்
இதற்கென நானும் வாழ்ந்திருக்கேன்
இந்த நிலையில் வாழ்ந்திருக்க
இந்த வரம் கேட்டு வந்தேன்
மத்திகிரி, 20-6-2017, இரவு 11.00
BT Song 671 The purpose of living
I should come unto you
I should receive by asking you
Worshiping your feet
I should receive your grace
I understood the purpose of the life
While I am living
When I worship you, O Charitable one
It becomes complete
Not living here thinking
That somehow we born on this earth
Thinking that we born only for this
We should worship your feet
Not knowing the goal in our lives
Without having any motivation
If we too live like animals
What is the use of this human birth?
You kept us as the crown of creation
You gave all the creation in our hands
You also gave the discerning spirit
To understand the purpose of your creation
Though all other living creatures
Live according to the law of nature
Setting a separate law for us
You created us in your own Image
Realizing its greatness
Knowing you through that greatness
Worshiping you each day
There is purpose for this life
Understanding this I come unto you
I am living only for this
In order to live like this always
I came seeking only this boon
Mathigiri, 20-6-2017, 11.00 pm.
BT Song 672
After writing the previous song (671) I began to pray. Then I said in my prayer the first line as my prayer. Unable to continue, as the inspiration again put pressure, stopping prayer I wrote this song and sung it as my prayer for this night. I know that this is a kind of emotion. At the same time my mind (brain) refuses to put it under the category of mere sensation. It goes beyond mere emotion but my body understands only through the normal experience and expression of emotion.
BT Song 672 உணர்ச்சிக்கு அப்பால்
இதுபோல துதிபாடி
உன்னைத் தொழும் போது
எனக்குள்ளே ஒருவித
பரவசம் தோன்றுது
உனக்கென உலகினில்
வாழ்ந்திடும் போது
உன்னருள் தன்போல்
என்னையும் தாங்குது
உணர்ச்சியின் உந்துதல்
இதுயில்லை என்று
உள்ளான உணர்வு
புரிந்திட வைக்குது
உயிரோடு இரண்டற
நீ கலந்த பின்னாலே
இதை சொல்லக் கூட
மொழியுமே தயங்குது
நாள்தோறும் பாமாலை
நானுமே தொடுக்க
நானும் வருகிறேன்
உன்னடி பணிந்து
நாவினால் உனைப்பாடும்
துதிகளை ஏற்று
நீயுமே மகிழ்கிறாய்
என்னிலே கலந்து
இது என்ன நிலை என்று
நானும் சொல்ல
எனுளம் உரைக்காது
எப்படிக் கூற
உணர்வுக்கு அப்பாலே
உள்ள உறவை
உலகிற்கு எதற்காக
நானும் சொல்ல
நீ வந்து உறவாட
நானுன்னில் கலந்திட
பேரின்ப நதியிலே
நாமே திளைப்போம்
மத்திகிரி, 20-6-2017, இரவு 11.30
BT Song 672 Beyond emotion (sensation?)
When I worship you
Singing your praises
Some kind of
Bliss comes within me
When I live for you
On this earth
Your grace comes and
Automatically upholds me
But my inner sense
Assures me that
This is not because of
Mere emotion
Once you have
Mingled within me
Even language is hesitating
To share this
As I write new
Poem everyday
I come unto your feet
To bow you
You too accepting
My praises
Rejoice
Mingling with me
How can I communicate?
Unless my heart says
What kind of
Status is this?
Why should I
Even share with the world
About the relationship
Which stands even beyond mere emotion?
Once you come
And mingle with me
Let us dwell together
In that blissfulness forever
Mathigiri, 20-6-2017, 11.30
BT Song 673
Again a tragic story of a girl eloping with her boyfriend without the knowledge of her parents. But this is not a new thing. But the real tragedy was that when they saw the alliance for her with another boy, she gave her consent for that and even roamed with that boy for several months. They talked for several hours over the phone. One time the girl even asked the boy to register for marriage as her parents delayed the engagement. But the boy refused to do it. Finally when the D-day came to finalize the engagement, the girl called the boy and said that she does not want to marry him as she has loved another boy for the past five years. Socked by that when he passed the information to the girl’s family, she threatened to commit suicide finally eloped with her old boy friend. This shocked the girl’s family also. Finally unable to share this news with others and at the same time unable to swallow, the boy told his relatives that the girl side is unwilling to give the girl to him. And he was a bit depressed as the previous girl with whom they almost arranged also ditched him, refusing to marry him. Unable to share with others at the same time, unable to keep within him a few days he remains depressed.
Several such incidents happen to so many people. Unable to share at the same time, unable to swallow, many suffer silently. Sometimes those who try to comfort those who are already depressed begin to share their own plights thinking that it will console the suffering person. Thereby both unable to unload their burden, they have to live carrying it.
Though I first typed this song in Secular song, finally as I ended this poem that God alone can give comfort I brought it to Bhakti Theology, though it won’t fit neatly to this genre.
BT Song 673 சுகமான சோகம்
ஒருவித சோகம் உள்ளாக இருக்க
அத்துடன் மொளனம் மனதையும் இறுக்க
வெளியிலே நடித்து உள்ளாகத் துடித்து
வேடம் போடுறார் மானிடர் வாழ்க்கையில்
சொல்லத்தான் வருகிறார் சொல்லவும் முடியாமல்
சோகத்தை மறைக்கிறார் மெல்லவும் இயலாமல்
மனதுள்ளே மருகி மெளனமாய் உருகி
நாளுமே வாழ்கிறார் நடைபிணமாக
சொன்னாலும் வெட்கம் உள் வைத்தால் துக்கம்
சுமக்காமல் சுமக்கிறார் மாபெரும் பாரம்
இறக்கி வைக்கவும் இடமற்றுப் போனதால்
எந்நாளும் சுமக்கிறார் மனதில் பாரம்
ஆறுதல் கூற யாரேனும் வந்தாலும்
அவரும் இறக்குறார் தன் பாரம் அவர்மீது
தெளிவான விடை சொல்லத் தெரியாமல் போவதால்
இருவரும் தவிக்கிறார் வழியே காணாது
இதற்கெல்லாம் பதில் கூற மனிதர்க்கு இயலாது
எவ்வாறு முயன்றாலும் விடை காண முடியாது
காலம் விடை தரும் என மட்டும் நம்பி
காலத்தை ஓட்டுறார் மனதுக்குள் வெம்பி
சோகத்தை ஒருவித சுகமாக எண்ணி
சுருண்டு கிடக்காமல் இறைவனை நம்பி
தன் பக்கத் தவறுக்குப் பரிகாரம் செய்து
வருவதை எதிர் கொண்டு வாழ்வதே நல்லது
மத்திகிரி, 22-6-2017, இரவு 11.00
BT Song 673 A pleasant pain
Some kind of sorrow is within
A kind of silence also press upon it
Putting a mask outside and suffocating within
Many live acting outwardly in life
They try to share but unable to do it
And hide their sorrow unable to digest
Suffering within the heart and silently bearing it
They live like a dead man walking
If it shared then they feel shy; if keep within then it becomes painful
Unable to bear they carry a heavy burden
As they cannot find means to unload it
They always carry this burden within them
Even if someone tries to comfort them
She on her part unloads her burden upon them
As they cannot find a clear answer
They both bewildered without finding an exit.
It is impossible for human to give answer to this
However they try they cannot find the answer
Hoping that one day time will resolve the crises
They somehow live suffering within
Taking even this kind of pain a kind of pleasure
not get standard but believing in God
repenting and mending one’s own mistake
It is better to live accepting what has come
Mathigiri, 22-6-2017, 11.00 pm.
BT Song 674
After reading the chapter ‘Ramayana Exegesis in Tenkalai Srivaisnavism, by Patricia Y. Mumme, in Paula Richman , ed. Many Ramayanas: The Diversity of a Narrative Tradition in South Asia, UNIVERSITY OF CALIFORNIA PRESS, Berkeley · Los Angeles · Oxford, 1991, pp. 202-216, p. 207-08, I Wrote this song, first not agreeing that unless we cooperate even God cannot save but finally understanding the exegesis based on the parables explained by Mumme in this chapter, I wrote this song. For a better understanding read the entire chapter:
…The story has it that Ravana’s demon army of raksasas used the Brahmastra, a divine weapon which binds its enemies and thus renders them helpless, against the monkey Hanuman, who was acting as Rama’s emissary. But the Brahmastra only works if the user has complete faith in it. When the raksasas decided to bring in a jute cord to further secure the bound Hanuman, just to be on the safe side, the Brahmastra slipped off. Manavalamamuni (p.207) explains: “The Brahmastra that had tied him slipped off by itself at the moment another cord was tied on. In the same way, if one who has resorted to this upaya [the Lord himself] engages in another upaya , [the first] will leave him” (JS 28). For the Tenkalai acaryas , the analogy between the Brahmastra and prapatti (surrender) is instructive: one might think that means such as devotion and ritual action will enhance the efficacy of one’s surrender to the Lord, but in fact these will cause one to lose the Lord. The path of surrender demands complete cessation of one’s own efforts and faith in the capacity of the Lord alone to bring about salvation.—pp. 207-08
Js: Jnanasara of Arulala Perumal Emperumanar with Manavalamamuni’s commentary. In Jnanasaram Prameyasaram , ed. Vidvan Venkatacharya and Tiruvenkatacharya. Kanchi: Srivaisnava Mudrapaka Sabha, 1916.
BT Song 674 அறியாத சிறுபிள்ளை
பக்தியும் பண்ண வேண்டாமோ
உன் பாதத்தில் வீழ வேண்டாமோ
சித்தத்தை உன் வசமாக்க வேண்டாமோ
உன் சேவடி பணிய வேண்டாமோ
புத்தியின் மூலம் புரியாது அறிந்தேன்
போதகம் செய்தாலும் தெரியாது உணர்ந்தேன்
கருமங்கள், தருமங்கள் செய்தாலும் அறியேன்
கடைத்தேற நீயன்றி வழியில்லை உணர்ந்தேன்
ஆயினும் நீ வந்து அருளைத் தரும் போது
ஐயனே நான் வந்து பெறவும் வேண்டாமோ
ஒரு கை தட்ட ஓசையும் எழும்பாது
நான் வந்து வேண்டாமல் நீ தர முடியாது
பசியின்றி புசித்தால் பயனேதும் கிடையாது
பரனே நான் மறுக்க நீ தர முடியாது
உய்விக்க வரும்போது உன்னடி வரவேண்டும்
உடன்பட்டு என்னை நானும் தர வேண்டும்
ஆயினும் அது கூட இயலாது நின்றால்
ஐயனே நீ வந்து அருளிட வேண்டும்
கேட்கவும் அறியாத சிறுபிள்ளை எனக்கு
கேட்காமல் உணர்ந்து நீ தர வேண்டும்
பசிக்கும்போது அழ மட்டுமே தெரிந்த
பச்சிளம் குழந்தை போலவே நானும்
எதுவென சொல்லத் தெரியாது வரும்போது
என் தேவையை உணர்ந்து நீ தர வேண்டும்
மத்திகிரி, 25-6-2017, மதியம் 2.50
BT Song 674 an ignorant boy
Am I not supposed to do bhakti unto you
And fall at your holy feet
Am I not to surrender my mind unto you?
And not worship your feet?
I know that I cannot understand by my buddhi
Even someone try to teach still I cannot realize
Even if I do all kinds of karma and charity I won’t know
And there is none other than you to help me to reach the Further Shore
Yet when you come and give your grace
O my Lord should I not receive it
By clapping one hand we cannot make noise
Unless I come and ask you too cannot give
There is no use eating without feeling hungry
O my God, when I refuse you cannot give
When you come to save I should reach your feet
And give myself surrendering to you
But if I stand still unable to do even that
O my Lord, you should come (voluntarily) to give your grace
To this little boy who is unable even to ask
You should give even without being asked
Like a tinny baby which knows only to cry
When it feels hunger, I too
Unable to ask what should be sought
Realizing my need, you should bestow
Mathigiri, 25-6-2017, 2.50 pm.
BT Song 675
Another beautiful early morning. As I sat to worship the Lord, looking around me as I am confined with the walls of a small room without having some open space with nice scenery surrounded by nature, I said to the Lord whatever might be the circumstance or situation as your grace is there surrounding me to protect, I will enjoy that blissfulness because of my bhakti. Then as the inspiration came I wrote this song to worship him through these words.
BT Song 675 எந்தச் சூழ்நிலையிலும்
சூழ்நிலை எதுவாக இருந்தாலும், எந்தச்
சூழ்நிலையில் என்னை வைத்தாலும்
நாளும் என்னைச் சூழ்ந்திருக்கும், உன்
நல்லருள் என்னைக் காத்திருக்கும்
கணந்தோறும் உன்னை எண்ணிக் கரம் குவித்து
கண்கள் குளமாகி உளம் நெகிழ்ந்து
பக்தியால் பரவச நிலை உணர்ந்து
பாதத்தில் பணிந்தேன் சிரம் கவிழ்ந்து
இயற்கையின் ஒவ்வொரு இயக்கங்களும்
இறைவன் நீயென உனைப் புகழ
எந்நாளும் துதிப்பாடி உனைப் பணிய
என் இதயமும் இணைந்தது உனை நினைந்து
இதுபோன்ற தருணங்கள் தினம் வாய்க்க
இதற்கென நானேங்கி காத்திருக்க
இதை எதிர்பார்த்து நீ வந்திருக்க
என்னையே தந்தேன் நீ ஏற்க
உனக்கெனப் படைத்தாய் உனையறிய
உனை நீ தந்தாய் நான் உய்ய
உனக்கென வாழ்வேன் உலகறிய
உன்னையே பாடுவேன் மனம் நிறைய
இதுபோன்ற சூழ்நிலை எனக்கிருக்க
இதைத் தந்த உன்னையே நான் துதிக்க
சூழ்நிலை எதுவாக இருந்தாலும் என்ன
சூழ்ந்திடும் உன்னருள் காத்திடும் போது
மத்திகிரி, 29-6-2017, காலை 5.30
BT Song 675 In all circumstances
Whatever might be the circumstance?
In whichever situation you keep me
Your wonderful grace will
Remain surrounding me to protect
Thinking each movement by folding my hands
As the tears flow, my heart melts
Experiencing that blissful state because of bhakti
I bow my head at your holy feet
Each part of nature singing your praise
By proclaiming that you are God
Bowing at you always singing your glory
My heart also join them thinking about you
Each day as I get this kind of moments
Waiting upon you longing only for this
As you too come towards me expecting only this
I offered myself to you for you to accept me
You created me so that I can know you
You gave yourself for me so that I can be saved
I will live on this earth for others to know about it
And will sing your praise to the content of my heart
As I have this kind of situation for me
As I praise you who bestowed it to me
Let it be any kind of circumstance
While your grace surrounds me to protect
Mathigiri, 29-6-2017, 5.30 am.
Leave a Reply