BT Song 696
I wrote this song after reading the commentary for Mark 10:46-52. My fallen nature always wants to find excuses not accepting my personal responsibility. In time I also try to blame God for that.
BT Song 696 பார்வை தந்தாய்
திரும்பித்தான் பாரேன் ஒரு முறை நீயும்
தேவை உள்ளதால் அழைக்கிறேன் நானும்
உனக்குள்ள அவசரம் எனக்கென்னத் தெரியும்
அதற்காக என்னை நீ மறுக்கவா முடியும்
கூட்டத்தின் இரைச்சலில் என் குரல் கேட்குதா
தூரமே நிற்கிறேன் என்னையும் தெரியுதா
நிற்கவே உனக்கும் நேரம் இல்லையா
நீயும் மறந்திடக் காரணம் உள்ளதா
ஒருவன்தான் என்று நீ ஒதுக்க முடியுமா
ஒன்றுக்கும் பயனில்லை என்றிட இயலுமா
ஒரு காசு தொலைந்தாலும் ஊர் கூட்டித் தேடுவாய்
ஒரு ஆடு போனாலும் அதன்பின் ஓடுவாய்
உன்னை குறை சொல்லி பயனில்லை அறிவேன்
உண்மையில் திருந்திட மனமில்லை அறிந்தேன்
அதற்கெனக் காரணம் ஆயிரம் தேடுறேன்
அத்தோடு உன் மீது பழியும் போடுறேன்
ஆயினும் நீ நின்று என்னையும் அழைத்தாய்
அதன்பின் என்மன விருப்பத்தைக் கேடாய்
இதைக்கூட சற்றும் எதிர்பாராத நானும்
எதுவும் பேசாமல் திகைத்தேன் நானும்
அதன்பின் நடந்ததை சொல்ல முடியுமா
அருகினில் அழைத்ததை மறக்க இயலுமா
பார்வை தந்ததை மறுக்க முடியுமா
பக்தனாய் மாற்றினாய் மறக்க முடியுமா
–மாற்கு, 10. 46-52.
மத்திகிரி, 31-07-2017, மதியம் 2.30
BT Song 696 You gave me sight
Just turn back one more time
As I am in need calling you
How do I know about your urgency?
For that can you deny me (my need?)
Can you hear me among the noise of the crowd?
Can you see as I am standing further away from you?
Don’t you have time to stop?
Do you have any reason to forget me?
Can you ignore me because I am only a single person?
Can you say that I am good for nothing (to be saved?)
If you lose one coin you will call the entire town to search for it
When one sheep got lost you will run after it
I know that there is no point in blaming you
I really don’t have a heart to repent
I am searching thousands of reasons for that
Added to that I also blame you (for that)
Yet you stand and called me back to you
Then you ask about my heart’s desire
As I didn’t expect this
I stand still not saying anything in response to you
Can I say what happened after that?
Can I forget the way you called me near to you?
Can I deny the way you gave me the vision (sight)
And can I forget as you made me your bhakta?
Mark 10.46-52, Mathigiri, 31-07-2017, 2.30 pm
BT Song 697
Several times I have had a similar experience. I will have warmth in my heart and even my feelings will push me to worship the Lord. I will open my mouth to sing his praises. At the same time my mind will wander everywhere while I continue to sing his praise even if I pray, it will wander. This becomes a routine almost each time of my prayer time. As I faced the same situation today also at the end I said to the Lord, ‘this is what I can do. Whatever I do you accept all my worship and show your mercy upon me’. Then as usual as the inspiration came, I wrote this very thought as a song and sang it as my prayer.
BT Song 697 இதுதான் முடியும்
கரங்களும் குவிந்தன
கண்களும் பனித்தன
கருத்திலே உன்னை
வைக்க முடியல
வார்த்தைகள் வந்தன
வாயும் திறந்தது
வள்ளலே உன்னை
மனதில் நிறுத்தல
எதுகையும் மோனையும்
இணைந்து வந்தன
எண்ணத்தில் உன்னை
எண்ணிட முடியல
உணர்ச்சி உந்தினும்
உள்ளம் உருகினும்
அலையும் மனதில்
உனக்கு இடமில்லை
இந்த நிலையிலே
என்னதான் செய்வது
அதுமட்டும் எனக்கு
நிச்சயம் தெரியல
ஆயினும் இதைமட்டும்
சொல்லத் தெரியுது
அது ஒன்று மட்டுமே
எனக்கு முடியுது
எனவே இதையும்
துதியாக ஏற்று
வழக்கம் போல் என் மீது
கருணை காட்டிட்டு
மத்திகிரி, 31-07-2017, இரவு 11.10
BT Song 697 This alone is possible
My hands are folded
Tears are coming
But I cannot
Keep you in my mind
Words also came
I opened my mouth
But O! charitable one
I never kept you in my heart
Though proper
Words came nicely
I cannot keep you
In my thought
Though my feelings encourage me
My heart too melts
Yet in my wavering mind
There is no place for you
In this my condition
What can I do?
That alone I
Don’t know for sure
But this I can
Share with you
And I am
Able to do that
Considering this
As my praises
As usual
Show your compassion
Mathigiri, 31-07-2017, 11.10
BT Song 698
To so many questions about my bhakti, Veda and struggle in life, I get the answer only through the grace of God. Only those who have the discerning spirit can understand the answers to our questions, solutions to our problem is the grace of God. That alone can give inner peace and can provide strength to run the race to which he has called and can carry the burden which he gave.
BT Song 698 பதில் கிடைத்தது
எனக்குள்ள சந்தேகம்
எவர் வந்து தீர்ப்பது
எவரிடம் நான் போய்
கேள்விகள் கேட்பது
எவ்விதப் பதிலை
எவரிங்கு தந்தாலும்
எனக்குள்ள கேள்விக்கு
பதிலவை ஆகாது
புத்தியால் புரிந்திட
புறப்பட்டேன் நானும்
புத்தகம் பலவற்றை
படித்தேன் நாளும்
தெளிவாய்ப் புரிந்திட
தேடினேன் சொற்களை
புரிந்ததை எழுதிட
முயன்றேன் வார்த்தையில்
இறுதியில் இவற்றை
தொகுத்துப் படித்தேன்
படித்ததை பலமுறை
யோசித்துப் பார்த்தேன்
இறுதி வரையில்
தேடிய விடையை
எங்கும் காணாமல்
குழம்பியே நின்றேன்
அதனால் நானொரு
முடிவுக்கு வந்தேன்
அமைதியாய் உனது
பாதத்தில் அமர்ந்தேன்
நீதரும் பதிலுக்காய்க்
காத்து கிடந்தேன்
நீயே விடையாய்
ஆனாய் புரிந்தேன்
அனுதின வாழ்வில்
உன்னுடன் நடந்து
ஐயனே நீ தரும்
பாரத்தை சுமந்து
ஒவ்வொரு நாளாய்
உன்னிலே வாழ்ந்து
ஓட்டத்தை முடிப்பேன்
உன்னுடன் சேர்ந்து
இதனிடை எனது
தேவையை அறிந்து
எனக்கு நீ தரும்
அருளினை நினைந்து
அதன்மூலம் நீதரும்
பதிலை அடைந்து
அமைதி கொள்வேன்
உன்னடி பணிந்து
2-8-2017, இரவு 10.45
BT Song 698 I got the answer
Who can?
Clear my doubt
To whom shall
I go and ask
Whoever might give?
Any kind of answer
That won’t be the answer
To my question
I tried to
Understand through my buddhi
I read so many books
Each day
In order to understand clearly
I searched for proper words
And I tried to write it down
As much as possible
Finally, I
Compiled them properly
And reflected upon
What I have written
Till the end
Unable to find
The answer which I sought
I become confused
Therefore, I come
To a final conclusion
I sat silently
At your feet
I waited for
Your answer
I understood that
You are that answer
Each day
Walking along with you
And carrying
The burden which you give
Living each day
In you
I will complete the race
Along with you
Mean time
Realizing my need
Thinking about the grace
Which you give
Receiving the answer
Through that
I will get peace
By worshipping at your feet
Mathigiri, 2-8-2017, 10.45 pm.
BT Song 699
When we try to escape from the responsibility that God has given us, then at the end we become a burden unto ourselves. We often comfortably forget that we always remain a burden to others in one form or the other. This began ever since we formed in the womb. At the end we become a burden to God for him to carry us each day. But when we become tired of our responsibility the only thought that comes is how to escape from it—not realizing that if we ever do that, then finally we will become a burden to ourselves.
BT Song 699 நானே எனக்கு பாரம்
புரியுது எனக்கு உனது பாரம்
புரிந்ததால் சுமக்க முயல்கிறேன் நாளும்
இடையிலே சிறிய பெலவீனம் வந்தாலும்
உடனே இறக்கி வைக்கிறேன் நானும்
ஆதியில் கொண்ட அன்பை இழந்தேன்
அதனால் நீ தந்த பொறுப்பை மறந்தேன்
அதன்பின் அதனை முழுமையாய் துறந்தேன்
ஆகையால் என்னுள்ளே வெறுமையை உணர்ந்தேன்
பிறரும் சுமக்காமல் நானும் வளரல
எவருக்கும் பாரமாய் ஆகாமல் இருக்கல
ஆயினும் எனது முறையென வரும்போது
அவற்றையே சற்றும் எண்ணிப் பார்க்கல
கருவினில் பாரமாய் சில காலம் இருந்தேன்
கையினில் பாரமாய் பலகாலம் தவழ்ந்தேன்
உடலின் பாரமாய் உருவாக்கி வளர்ந்தேன்
உள்ளத்தின் பாரமாய் இறுதியில் நின்றேன்
இவற்றுக்கு மேலாக என் பாவம் அழுத்த
எப்போதும் உனக்கு பாரமாய் இருக்கேன்
ஆயினும் என்னைப் பாரமாய் நினைக்காமல்
ஐயனே இதுவரை சுமந்து தான் வருகிறாய்
நானிதை நன்கு புரிந்த போதும்
திருந்தும் எண்ணம் வரவில்லை இன்னும்
எனக்கு நானே பளுவான பின்னே
பிறர்பாரம் நினைக்க நேரமே காணோம்
மத்திகிரி, 3-8-2017, மதியம் 2.10
BT Song 699 I become my own burden
I can understand your burden
As I understood it, I try to carry it each day
But when I feel bit tired
Immediately I try to unload it
I lost the first love
Therefore, I forgot the responsibility that you gave
After that I completely gave up
Therefore, I realized the emptiness within me
I never grew up without others carrying me
I never remained not becoming a burden to anyone
But when it comes to my own turn
I never thought about it completely
I remained a burden in the womb
Crawled on the hands for many
Grew as the burden to their bodies
Finally become a burden to their heart
Added to this as my burden pressed you
I always remained as your burden
But never considering me as your burden
You carry me so far in my life
Though I understood this clearly
I never have the thought of repenting from that
Once I become a burden to myself
There is no time to carry other’s burden
Mathigiri, 3-8-2017, 2.10 pm
BT Song 700
Another time to fight with God. Though he is correct and has much patience in dealing with me, when I repent and ask him to give me one more chance to correct me, if he continues to nag, then I have to fight back with him that don’t do it too much before things go beyond to handle. I like such fights with God.
BT Song 700 உனக்கிது தகாது
உன்பக்கக் கோபம்
ஒருபுறம் இருந்தாலும்
என்பக்க நியாயத்தை
ஏற்கயேன் மறுக்கிறாய்
அறியாத சிறுபிள்ளை
தவறி செய்தாலும்
அடடா உன் கோபம்
மிகவும் அநியாயம்
தெரிந்தா தவறினேன்
புரிந்தா செய்தேன்
எனக்குள்ள குணமிது
வேறென்ன செய்வேன்
அறிந்த உனக்கு
இத்தனை ஆகாது
அடம் பிடிக்காதே
உனக்கிது அடுக்காது
போக்கிடம் வேறு
இல்லை என்றபின்
புரிந்தும் மறுக்காதே
தாங்காது எனக்கு
சரிவிடு போகட்டும்
சரிசெய்ய முயல்கிறேன்
சந்தர்ப்பம் மட்டும்
தருமாறு கேட்கிறேன்
ஏதோ இதுவரை
பொறுமையாய் சொன்னேன்
இதற்குமேல் பொறுமை
இல்லை என்றேன்
காரியம் கைமீறி
போயிடும் முன்னே
கைதந்து மீண்டும்
தூகிடு என்னை
8-8-2017, மத்திகிரி, இரவு 10.30
BT Song 700 This is not good for you
Though your
Anger is correct from your point of view
Why you refuse to accept
My point of view
This little boy
Though have done mistake unknowingly
This your anger
Is too much I say
Did I do it knowingly?
Have I done it deliberately?
This is part of my nature
What else can I do?
But the one who knows
About it
Should not be
Adamant this much
As there is no other
Place for me to go
Don’t refuse me
This is too much for me
Ok leave it now
I will try to correct it
But I only ask you
To give me one more chance
Somehow with some patience
I said this
But I say to you that
I don’t have any more patience
Before it goes
Too much for you to handle
Better you give your hands
To rescue me
8-8-2017, Mathigiri, 10.30 pm
Leave a Reply