BT Songs 721 to 725

721 BT Song

On the point of giving up the earthly needs and mundane concerns to attain Santa rasa (As I was reading about Santa Rasa (about peace, see the previous song 721) in Michelle Voss Roberts, Tastes of the Divine, Fordham University Press, New York, 2014,) I thought that even this longing to have such kind of peace (santa or tranquility) is a kind of Maya as material needs is a reality on this earthly life.  As I was reflecting about it I wrote this song.

BT Song 721 துறக்க முடியாது

மாயையே வாழ்வு என்று எண்ணி

வாழ்க்கையைத் துறந்து ஓடிய போதும்

கூடவே மாயையும் ஓடியே வந்திட

மாயையே ஒருவித வாழ்வாகிப் போகும்

பொருளைத் துறந்து புலன்களை வென்று

இறுதியில் அடையும் நிலையும் கூட

புரிந்திட நானும் முயன்றிடும் போது

பொருளைப் புலனை நாட வேண்டும்

உடலும் மனமும் இருக்கின்ற வரையில்

எதையும் துறக்க முடிவதே இல்லை

மாயை மாயை என்று கூறி

நம்மையே எய்த்திட தேவையும் இல்லை

ஒவ்வொரு நொடியும் வாழ்கின்ற வாழ்வில்

உடலின் தேவையில் மாயையே இல்லை

மாயை என்று மறுத்திட முனைந்தும்

மனது அதனை ஏற்பதே இல்லை

பசியும் தாகமும் ஒருபுறம் இருக்க

மனதின் தேவைகள் பல புறம் நெருக்க

உலகின் தேவையும் நேரடியாக

உடலோடு மனதையும் அடித்து நொறுக்க

எதனை மாயை என்று சொல்ல

எல்லாத் தேவையும் இருந்திடும் போது

தேவையின் வலிமை உணர்ந்த பின்னே

துறக்க இங்கு வாய்ப்பு ஏது

மத்திகிரி, 1-9-2017, இரவு 10.30

BT Song 721 Cannot renounce

Though I try to run away from the life by renouncing it

Thinking that life is nothing but Maya

As Maya too coming along with me

Finally the very Maya itself becomes a kind of life

In order to reach that final stage (of renunciation)

By giving up material needs and controlling the senses

Yet I need to sought the help of

The very sense and material things to attain that

As long as the body and mind is there

It is not possible to renounce much

Proclaiming ‘Maya. Maya’

We need not to cheat ourselves

In the life which we ought to live each second

The need of the body is not Maya

Even if we try to reject it by saying it as a Maya

The mind is not ready to accept it

On the one side hunger and thirst is there

On the other side many needs of the mind is there

Add to them the need of this world

Also come to attack me directly

Which one should I say as Maya?

As long as all the needs are there

Once I realized the force of need

There is no chance to renounce

Mathigiri, 1-9-2017, 10.30 pm.

BT Song 722   I feel that sometimes God, not disclosing all about our future, asks us to run, not even clearly showing what the goal is. Of course the Lord is the final goal, but in this life on earth and in our seva to the Lord, there should be some goal and clarity about the future so that we can run with much confidence. But sometimes God not only changes our track but even asks to run not disclosing the goal and even without clarity. But trusting him is the only option left with us, provided if we want to continue to run.   BT Song 722 வேறென்ன சொல்ல   என்ன நீ சொன்னாலும் என்னுளம் புரியாது வந்து நீ சொல்லாமல் உன்னுளம் விளங்காது   முயற்சியும் செய்கிறேன் முடிந்த வரையில் ஆயினும் புரியாது நீ சொல்லும் வரையில்   படைத்ததின் நோக்கத்தை புரிந்து கொண்டேன் பாவத்தை மன்னித்தாய் அறிந்து கொண்டேன்     உனக்கென அழைத்தாய் வந்து நின்றேன் அதன்பின் நடப்பதை மட்டுமே அறியேன்   கேள்விகள் கேட்பதில் பயனில்லை அறிவேன் கேட்டாலும் பதிலில்லை தெளிவாக அறிந்தேன்     இலக்கையும் காட்டாமல் ஓடவும் சொல்கிறாய் இதை மட்டும் ஏனென்று இதுவரை புரியேன்   ஓடும் போதே பாதையை மாற்றுவாய் இடையில் ஓய்ந்தால் ஓய்வுமே தருவாய்   தயங்கி நின்றால் தட்டியும் கொடுப்பாய் முடியாது என்றால் என்னையே நீக்குவாய்   உன் நோக்கம் மட்டும் ஒருநாளும் நீங்காது அதுபோல் உன் சித்தம் எந்நாளும் மாறாது     உடன்பட்டு நான் வர உடன் சேர்த்துக் கொள்வாய் உடன்பட மறுக்க “உன்பாடு” என்பாய்   இனி நான் சொல்ல ஏதுமே இல்லை என்ன சொன்னாலும் நீகேட்ப தில்லை   இனி உன்பாடு நானென்ன செய்ய அடிமை ஆனபின் வேறென்ன சொல்ல   மத்திகிரி, 1-9-2017, , இரவு 11.10   BT Song 722 What else can I say?   Whatever you want to communicate I cannot understand Unless you come and explain My mind won’t comprehend it   I try my best To understand it Until  you reveal I cannot understand it   I understood the Reason for creating me You forgave my sin That I realized   You called me for you I came accordingly But what happened further That I cannot comprehend   I know for sure that There is no use in questioning you Even if I ask questions There is no answer, I understood it   Not showing the goal clearly You ask me to run But so far I cannot understand The reason for that!   While running You will change the track If I become tired while running You will give rest   If I stand with much hesitation You will encourage me (to run) If I refuse to oblige You will remove me   But your plan will Never go Accordingly there will be No change in your will   If I give my consent and come You will take me with you If I refuse to obey Then you will say, ‘as you wish’.   So there is nothing For me to say further Whatever I say You are not going to listen   Ok it is your game What can I do? Once I become your slave What else can I say?   Mathigiri, 1-9-2017, 11.10 pm.   BT Song 723   Song 723 Human birth is worth   Whenever I think about your mercy
It really surprises me very much
Whenever I think about all your blessings
My heart sings your praise with much thanks   Though I am repeating the same many times
Though you are doing the same many times
The compassion that you have for me
Remains true beyond my imagination   You had grace which can’t be understood
You stunned us unable to understand it
You gave me a heart to think about it
you help me to worship you by new songs each day   This becomes your original nature
this becomes your everyday duty
But for me, who is get tossed everyday
it Remains fresh new in each moment of life   You can’t understand however I share
What can I say further,  that’s your higher status
Though you came as a human-God
You never had our human mind   You can understand this only if you too were redeemed as a sinner like us
Only if you could carry so many burdens that we carry
Though you carried our sin
Poor one, how can you ever understand this?   One way this birth as human is good indeed
It gave us an opportunity to enjoy your grace
You bestowed only that grace to me
Wow, wow what can I say to praise you

  Karunai Anandar Ashram, Thiruppunthuruthi, 7.9.2017, 7.00 pm

  Last night due mosquitoes literarily I couldn’t sleep whole night and spent the time sitting in the chair when I stayed with my mother in her room at Kumbakonam in the old age home where my brother lives with his wife in another room. So after arriving Dr. Ramaswsy’s Karunai Anandar Ashram at Thiruppunthuruthi, In the afternoon, I had a good sleep. 
This Ashram is next to the river Kudamuruti, which is now dry. But there are plenty of coconut trees and peacocks. So when I went for my evening walk surrounded by nature, I was overwhelmed by the extra grace which God always showing in my life. Then as I began to thank God for that, these lines came in my mind. At the same time, as per my habit, as I wanted to tease the Lord,  when I was about to complete the poem I deliberately add last but one stanza which helped me to thank God even the birth as human.   BT Song 723 மனித்தப் பிறவியும் வேண்டுவதே,   என்மீது நீகொண்ட இரக்கத்தை நினைக்க
எனக்கது மிகமிக வியப்பாக இருக்குது
எனக்குமே நீசெய்யும் நன்மையை நினைக்க
என்னுள்ளம் நன்றியால் உன்னையே துதிக்குது   பலமுறை இதையே நான்சொன்ன போதும்
பலமுறை அதையேநீ செய்கின்ற போதும்
கணம்தோறும் என்மீது நீகொண்ட இரக்கம்
கற்பனை மீறிய உண்மையாய் இருக்கும்   விளங்கிட முடியாத பேரருள் கொண்டாய்
விளக்கிட இயலாது திகைத்திடச் செய்தாய்
நானதை நினைக்க மனதையும் தந்தாய்
நாள்தோறும் பாடிப் பணிந்திடச் செய்தாய்   உனக்கிது இயல்பான குணமாக இருக்கு
உனக்கிது அனுதினப் பணியாக இருக்கு
ஆயினும் அலசடிப் படுகின்ற எனக்கு
கணந்தோறும் இதுமட்டும் புதிதாய் இருக்கு   நானிதைச் சொன்னாலும் உனக்கிதுப் புரியாது
நானென்ன செய்யட்டும் உனக்குள்ள உயர்விது
மனித-தெய்வமாய் நீவந்த போதும்
மனிதனின் மனநிலை உனக்கு கிடையாது   பாவியாய் இருந்து மீண்டால்தான் புரியும்
பலவித பாரங்கள் சுமந்தால்தான் தெரியும்
பாவ பாரம் சுமந்திட்ட போதும்
பாவம் உனக்கிது எப்படி புரியும்   ஒருவிதம் மனிதப் பிறவியும் நல்லது
உன்னருள் துய்க்கும் வாய்ப்பும் கிடைத்தது
அதையே எனக்கும் நீயும் தந்தது
அடடா என்ன சொல்லித் துதிப்பது   திருப்பூந்துருத்தி, கருணையானந்தர் ஆஸ்ரமம், ,7-9-2017, மாலை 7.00   BT Song 724.

Unable to sleep much, as the peacocks in the ashram began to make big noise (which is terrible to listen, particularly in a silent night), I got up at 2.00 am. Unable to sleep further, (as they continue to make the noise till the morning with regular gap) I began to read the commentary on Like by Tom Wright. When I read the commentary for Luke. 11.42 to 54, closing the book I began to mediate on it. Then reflecting my life, as the inspiration came I wrote this song. But at the end, as usual throwing the ball in his court I urged the Lord to take quick step to resolve this crises in my life (which is to call me back at the earliest, so that he can be spared from such songs further,).

BT Song 724. சுயத்தைக்கொண்டாட

சுயத்தை கொண்டாடி

சுயத்தையே கொண்டாட
சொல்கிறேன் செய்கிறேன்
சிலபல செயல்கள்

என்தேவை என்னவோ
அதைமட்டும் எண்ணுவேன்
எதையேனும் சொல்லி
அதைப்பெற முயல்வேன்

இதற்காக வேடம்
பலவுமே போடுவேன்
என்மீது இரங்கிட
நாடகம் ஆடுவேன்

இவையெல்லாம் செய்து
என்தேவை அடைந்தபின்
என்னையே மெச்சி
எனக்குள்ளே மகிழ்வேன்

என்தேவை அறிந்துநீ
எனக்கிதைச் செய்கிறாய்
என்றுமே எண்ணிநான்
நன்றியும் கூறுவேன்

அதன்பின் மெதுவாக
ஐயனே நீயுமே
உண்மை எதுவென
உரித்துமே காட்டுவாய்

ஆயினும் அதையுமே
ஏற்காத நானுமே
ஆயிரம் விளக்கம்
அதற்கும் தருவேன்

பண்டிதர் போலவே
பலவிதம் வாதிட்டு
புரிந்தும் புரியாமல்
போதிப்பேன் உனக்கே

வேதத்தைப் போதிக்கும்
போதகர் போல
வேண்டாத விளக்கங்கள்
ஆயிரம் காட்டுவேன்

இறுதியில் என்நிலை 
அறிந்து நீயுமே
சாட்டையை எடுத்துமே
சுழற்றியே காட்டுவாய்

அதன்வலி அறிந்ததால்
ஒருஅடி கொடுக்கும்முன்
விரைந்து நானுமே
திருவடிப் பற்றுவேன்

அதன்பின் நீயுமே
மெதுவாக சிரித்துமே
எனது  சுயமதை 
உரித்துமே காட்டுவாய்

ஆயினும் என்சொல
அடுத்த நொடியிலே
அதையும் மறந்துநான்
வழக்கம்போல் செய்வேன்

இதுஒரு தொடர்கதை
என்றுமே முடியாது
என்மீது இரங்கியே
நீயுமே முடிக்காமல்

ஆகவே என்மீது 
வீண்பழி போடாது
முடிவை சீக்கிரம்
எழுதிடு நீயுமே

திருப்பூந்துருத்தி, 8-9-2017,காலை 3.00, லூக்கா 11.42-54

724. I celebrate my ego

In order to celebrate my ego
and only to celebrate it
I do many things
in life

I will think
only about my need
by saying so many things
will try to get it

I will put
Different masks for this
and I will do play many roles
to win other’s sympathy

Once I achieved
my goal
congratulating me
I will rejoice

I will also
give thanks to you
thinking that
you are doing this considering my needs

After that
Oh my lord
you will
reveal the truth

But not
accepting that
I will give
many explanations

Like a Pandit
having many arguments
knowing, still unknowing
I will even teach you

Like the preacher
who teaches the Law
I will give many
Un-required explanations

Finally knowing
my condition
you will take the whip
and show it to me

As I know its pain
before you whip me once
I will rush and
Catch your feet

After that
smiling gently
you will expose
my selfishness

But what to say further
forgetting it 
within few seconds
I will do as before

This is an
Unending serial
which will never come to an end
unless you take pity on me

Therefore 
not blaming me unnecessarily
you take the final decision
Very quickly

Thiruppunthurithi, 8-9.2017, 3.00 am. Luke, 11.42 to 54

BTSong 725

As I got up very early in the morning, unable to sleep, after doing my reading etc., I went for a long walk in the morning enjoying nature and my time with the Lord.  As I was often thinking of the many blessings that he gives in spite of my shortcomings, I said to him you can never be harsh on me.  Then as the inspiration came I began to write this song in my mind and after I came to the room I wrote this song.  But as I was in a teasing mood of the Lord, the last three stanzas I deliberately wrote to him that unless he understands and tells what is that shortcoming that he has, I am not going to share my answer to him.  Then I laughed to the content of my heart.  I like that very much to be free with the Lord.

BT Song 725 மீதியை சொல்வேன்

என்னதான் சொன்னாலும்
உன் மனம் கேட்காது
நன்மைகள் செய்யாமல்
அதுவுமே ஓயாது

ஏனென்றால் அது உனக்கு
இயலபாகிப் போச்சு
எதையேனும் தருவது
வழக்கமும் ஆச்சு

மழலை சிணுங்கும் முன்
தாய் அறிவாளே
மார்பில் அணைத்து
பால் தருவாளே

குறிப்பை அறிந்து
தந்தையும் தருவான்
குழந்தையின் தேவையை
நிறைவாக்கி மகிழ்வான்

உற்றமும் சுற்றமும் 
இருப்பது எதற்கு
தேவைப் படுகையில்
உதவிட அதற்கு

இந்த குணத்தை
தந்த உனக்கு
அதனினும் அதிகம்
செய்வது வழக்கம்

அறிந்ததால் சொன்னேன்
ஐயனே நானும்
அனுதின வாழ்வில்
பெறுகிறேன் நானும்

ஆயினும் இதிலும்
குறை ஒன்று உள்ளது
அதைத்தான் சொல்ல
வருகிறேன் இப்போது

சொல்லும்முன் புரிந்து
கொள்வது நல்லது
சொன்னபின் மறுக்க
ஆகாது உனக்கு

இதற்கு பதில்
உன்னிடம் உள்ளது
அதை நீ சொன்னபின்
சொல்லுவேன் மீதியை

திருப்பூந்துருத்தி, 8-9-2017, காலை, 7.30

BTSong 725 Rest I will tell

Whatever  might we say

Your heart won’t be harsh

 Without giving blessings

It won’t rest

Because it becomes

Natural for you

Giving something

Becomes your habit

Won’t the mother know?

Even before the baby make some sound

Won’t she hug it and

Give milk to it

Knowing the hint

Father will provide

Fulfilling the needs of his child

He will rejoice in it

For what reason

Relatives and friends are there

When need comes

Only to help

The one who

Gave these tendencies to us

Doing more than that

Is your habit

As I know this

I tell this Oh my Lord

In everyday life

I receive your blessings

But still there is

One shortcoming in this

That is what I am

Going to tell

Before I tell

It is better for you understand

Once I shared

You can’t deny it

I have the

Answer for this also

But I will share it

Once you gave your response to me

Thirupponthuruthi, 8-9-2017, காலை, 7.30

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *