BT Songs 736 to 780

BT Song 736

In the evening as I began to reflect on the song which I wrote in the morning about my fault for finding nature, then I marveled at the way God kept our own conscience as our judge, not allowing escaping from it.  After returning from my walk I wrote this song as my prayer to thank God for this.

BT Song 736 வாய்ப்பே இல்லை

இறைவனும் பாவம்
இனியென்ன செய்வான்
இதைவிட எப்படி
புரிய வைப்பான்

பிறர் குறை நாம் காண
முயன்றிடும் போது
நம் குறை நமக்கு
காட்டிக் கொடுப்பான்

எத்தனை எத்தனை
குறைகள் காண்கிறோம்
எத்தனை விளக்கங்கள்
அவற்றுக்கும் தருகிறோம்

நம் குறை ஒன்றை

காட்டும் போது
என்னமாய் அதனை
நியாயப் படுத்தறோம்

பிறர் வந்து சொல்லிட
தேவையே இல்லை
பிறர் தரும் விளக்கங்கள்
தேவையும் இல்லை

தன்நெஞ்சே தன்னைச்

சுட்டிடும் போது
தடுத்திட நமக்கு
வாய்ப்பு இல்லை

இதுதான் இறைவன்
நமக்கென வைத்தான்
தப்பிக்க இயலாது
நமக்குள்ளே தைத்தான்

தன் நிழல் தன்னோடு

வந்திடும் வண்ணம்
நம் நெஞ்சை நமக்கே
நீதியாய் வைத்தான்

ஆயினும் அதையும்
அலட்சியம் செய்து
அதைக்கூட அடக்கி
வைக்க முயல்வோம்

எத்தனை முயன்றும்

வென்றிட இயலாது
இறுதியில் இறைவனை
திட்டியும் தீர்ப்போம்

பாவம் அவனும்
பொறுமையாய்க் கேட்டு
பிறகு நாமும்
புரிந்திட வைப்பான்

அதன்பின் முடிவை

நம்மிடம் விடுவான்

அதன்படி நம்மை
வாழ்ந்திடச் சொல்வான்

இதைவிட அவனுக்கு

வழியேதும் இல்லை
நம்மை திருத்த
மார்க்கமும் இல்லை

தீர்ப்பை நம் கையில்

தந்த பின்பு
தப்பிக்க நமக்கு
வாய்ப்பு இல்லை

திருப்பூந்துருத்தி, 12-9-2017, மாலை, 6.30

BT Song 736 No chance

Poor god

What else can he do?

How he can

Make us understand thand?

When we try to find

Other’s fault

He will show our faults

How many faults

We find (in others)

How many explanations

We give to them

When one of our

Mistakes is pointed out

How we try to

Justify it!

Others need not

Tell me about it.

We don’t need

Others explanation.

When our own heart

Accuses us

There is no hope

To stop it

This is

What has put in us?

Unable to escape

He established it within us

As our own shadow

Follows us

He put our own conscience

As our judge.

Yet

Despising it

We will try to

Control it

However we try

As we cannot overcome it

Finally we will

Blame god for that

Poor one

Listening to us patiently

He will try to

Help us to understand

Then he will

Leave us to decide

And will ask us

To live accordingly

For him there is

No alternative to this.

There is no means

To correct us

Once he gave

The verdict in our hand

There is no chance

For us to escape!

Thirupponthuruthi, 12-9-2017, 6.30 pm.

BT Song 737

As I got up very early in the morning I sat for my meditation and tried to remain as silent as possible. As usual the peacocks screeched, but this time it was not disturbing me as I turned my heart and mind to be one with nature.  Then the spirit of joy came and I wrote this song to celebrate that joyful event.

BT Song 737 ஒரு ஆனந்தம்

மவுனம் என்ற யாழினை மீட்டி
மோனம் என்ற ராகத்தைக் கூட்டி
தாழ்ந்து பணிந்து தாளத்தை போட்டு
ஆனந்த நடனம் ஆடுவேன் நானும்

சிந்தை முழுதும் உன்னிலே வைத்தது
ஸ்ருதிகள் ஐதிகள் அத்துடன் சேர்த்து
அடவு அசைவு அழகாய் அமைத்து
ஆனந்த தாண்டவம் ஆடுவேன் நான்

இராகத்திற் கேற்ப்ப தாளம் பிறக்கும்
தாளத்திற் கேற்ப்ப ஆடல் இருக்கும்
ஆடலுக் கேற்ற பாடல் பிறக்கும்
பாடலும் பாட பக்தியும் சிறக்கும்

பக்தியால் உன்னை பணிகின்ற போது
முக்தியின் அனுபவம் தன்போல் கிடைக்கும்
பக்தியால் முக்தி கிடைத்த பின்னர்
பரவசம் ஒன்றே என்னுளே நிலைக்கும்

பாரினில் வாழ்வது இதனைப் பெறவே
பக்தனாய் வாழ்வது பாதம் தொழவே
பக்தியும் செய்வது முக்தியை பெறவே
முக்தியும் அடைவது பேரருள் பெறவே

அனுதினம் இதுஎன் அனுபவமாச்சு
அதனை அருள்வதுன் கடமையு மாச்சு
அதனைப் பெறுவதென் உரிமையுமாச்சு
அதையும் பாடுதல் என் வழக்கம் ஆச்சு

திருப்பூந்துருத்தி, 13-9-2017, காலை, 4.00

BT Song 737 A Joy

Tuning the harp of silence

Composing with meditation

Adding rhythm by worship

I will dance with joy

Keeping my mind only in you

Adding music and beats to it

Choreographing with proper steps

I will dance with much joy

As per the raga (tune), thala (rhythm) will come

As per the rhythm, the dance will be there

According to the dance, song will come

As I sing songs, bhakti will come

When I worship you with bhakti

The experience of mukti will automatically come

Once I received mukti through bhakti

Only joy will abide within me

Only for this I live on this earth

Only to worship your feet I live as your bhakta

I do bhakti only to attain mukti

Attaining mukti is only to receive your grace

Each day this becomes my experience

It becomes your responsibility to give (this) grace

Receiving it becomes my (birth) right

Singing about it become my habit

Thirupponthuruthi. 13-9-2017, 4.00 am.

BT Song 738

I am not happy that my mother is not comfortable at the old age home.  But I am not in a position to help her as my brother too wants to serve her.  This created some concern and I was a bit disturbed.  I am ready to walk in the path that Lord has shown but so many hurdles that come often challenge me to press forward.  There is no use in sitting and analyzing those hurdles but need to find a means to overcome them.  Then as I become upset, again with the Lord I wrote this song seeking his help.

BT Song 738 ஆராய்ச்சி வேண்டாம்

நீயாக வந்து மீட்பைத் தரும்வரை
நானாக மீண்டிட நம்பிக்கை கிடையாது
தானாக வந்துதான் மாட்டிக் கொண்டேன்
ஆனாலும் தாமதம் நீ செய்யக் கூடாது

நீ சொன்ன பாதையில் நான் போன போதும்
இடையினில் எத்தனை இடையூறு வந்தன
எதனாலே வந்தது எவறாலே வந்தது
என்பதெல்லாம் எனக்கு நிச்சயம் தெரியாது

உன்துண கொண்டு அவைத்தாண்டி வந்தாலும்
பின்னாக பலவும் தொடர்ந்து வருது
அத்துடன் எதிரே ஆயிரம் நிற்குது
அவற்றைத் தாண்டி எவ்விதம் செல்வது

ஒரு நேரம் ஓய்வில்லை, ஓய்வுக்கு வழியில்லை
போராட்டம் ஆகிப் போனதே வாழ்க்கை
இதற்கொரு முடிவு வருவது எப்போது
என்பது எனக்குள்ள கேள்வியும் இப்போது

இது என்ன வாழ்க்கை என புரியாது
அனுதினம் சோர்ந்து தவிக்குது மனது
இதற்காகத்தானா நீயெமைப் படைத்தாய்
எனத் தெரியாமல் கலங்குது மனது

என்னவோ போகட்டும், என்னவோ ஆகட்டும்
இப்போ தப்பிக்க வழி மட்டும் தேவை
கேள்விக்கு பதிலெல்லாம் பிறகு தரலாம்
ஆகிற வழியை இப்போது பார்க்கலாம்

தத்துவம் பேச நேரம் கிடையாது
தர்க்கங்கள் செய்ய தெம்பும் கிடையாது
பிழப்பத்துப் போய் இதையெல்லாம் பாட்டாக
எழுதிட எனக்கு விருப்பம் கிடையாது

நெருப்பிலே நின்று தவித்திடும் போது
வீணான ஆராய்ச்சி வேண்டாம் இப்போது
தப்பிக்க வழியொன்று தந்தால் அது போதும்
பிறகு செய்யலாம் மேற்கொண்டு ஆராய்ச்சி

திருப்பூந்துருத்தி, 13-9-2017, மாலை, 5.10

BT Song 738 Need no research

Until you come and give deliverance

There is no hope for me to get it

I voluntarily get trapped in it

But you should not further delay

Though I walked in the path which you showed

How many hurdles came in it?

Why they came, from whom they came

I don’t know for sure

Though I overcame them with your help

Many hurdles are still following

Added to them many are standing before me

How to go ahead overcoming them?

There is no chance to take rest and I am always busy

Struggle becomes part of life

When an end will come to this

That is my question now

I cannot understand—what kind of life is this

My mind becomes tired and suffers each day

Did you create me only for this?

Not knowing this my heart is troubled

Let the life go as it likes

But I only need a means to escape

You can give answer to the questions later

Now let us see what is that means to escape

There is no time to talk philosophy

I don’t have energy to argue with you

Even I don’t have any desire to

Write this as a poem by wasting the time

When I stand on the fire

No need for unnecessary research

If you give a way to escape that is enough now

Later let us do the research for all of them.

Thirupponthuruthi, 13-9-2017, 5.10 pm.

BT Song 739  

This poem I wrote to tease me as I often worry about so many things which are not even there.  Then I said to the Lord, ‘don’t worry about me, I cannot say all of them to you’. Then to tease me I wrote this song.

BT Song 739 ஒரே கவலை மயம்

ஆயிரம் கவலைகள்
இருக்கு எனக்கு
எவை எவை அவை என்று
சொல்ல உனக்கு

பிறந்து முதலே
உடலோடு கவலை
வளர்ந்த பின்னாலே
மனதில் கவலை

வளரும் போது
உறவுக்குக் கவலை
வாழும் போது
பிறருக்குக் கவலை

இத்துடன் எனக்கு
என்னுடன் கவலை
அத்துடன் என் மீது
நீ கொண்ட பரிவை

எண்ணிட எனக்கு
உன் மீதும் கவலை
அதையெண்ணி உனக்கு
என் மீது கவலை

இதையெல்லாம் எப்படி
எழுத்தாக மாற்றி
பாட்டாக மாற்ற
என்கிற கவலை

அப்புறம் அதையும்
மற்றவர் எப்படி
புரிந்தது கொள்வார்
என்கின்ற கவலை

இத்தனைக் கவலைகள்

இருக்கும் போது

எதற்காக எழுதனும் 

என்கிற  கவலை

திருப்பூந்துருத்தி, 13-9-2017, மாலை, 7.00

739 So many worries

I have

Thousands of worries

But how can I say

Which is which

Since I born

It is about my body

When grew

It was about my mind

When I lived with others

It was about relationship

When I live alone

I become a worry to others

More than that

I am worried about me

Along with I

When I think about 

Your concern for me

I am more

Worried 

About you

How I am

Going to

Convey it

As a poem is the present worry

Then how

Others are

Going to

Understand in the next worry

When this much

Worries are there

Why I should I write

This becomes also a worry

Thirupponthhuruthi, 13-9-2017, 7.00 pm. 

BT Song 740

Sharing our burdens with others and seeking some kind of counsel or answer is the best way to understand our problem and situation.  But at the end unless we seek it through prayer from God, all other means won’t give the inner peace which we seek when so much pressure presses us all around.  As I experienced it this morning I wrote this song about it.

BT Song 740 உள்ளான அமைதி

உள்ளான அமைதி
உள்ளத்தில் இல்லாமல்
புறம்பான அமைதியால்
பயனேதும் உண்டோ

தெளிவான சிந்தை
இல்லாத போது
தெய்வத்தை நாடி
பயனுமே உண்டோ

பலவித நெருக்கடி
பலவிதம் நெருக்கையில்
புத்தியால் மட்டும்
மீட்பு உண்டோ

கலக்கமும் குழப்பமும்
கலந்து வருகையில்
கவலைப் படுவதால்
விடுதலை உண்டோ

விடைதர ஒருவன்
இருப்பதை மறந்து
வேறெங்கோ அலைவதால்
கிடைப்பதும் உண்டோ

அவனிடம் வந்து
அதை அடையாமல்
தனித்துப் புலம்பினால்
பயனும் உண்டோ

அவன் தரும்போது
ஏற்கவும் மறுத்து
குறைகூறி நின்றால்
பெறுவதும் உண்டோ

இதனை உணர்ந்து
திருவடி அடைந்து
பேரருள் கிடைத்து
உய்ந்திட வேண்டும்

திருப்பூந்துருத்தி, 14-9-2017, காலை, 10.30

740 Inner peace

Without having

Inner peace

Is there any use

In the peace which is around us?

Without have

Clarity in mind

Is there any use

Seeking God

When so many pressures

Are pressing us

Is there any way to escape?

Only through our mind

When confusion

Comes along with trouble

Is there any liberation

Only in worrying about it

When there is one

To give answer

Will it available

By searching everywhere

Not receiving it

By approaching him

Is there any use

Lamenting alone

If we refuse to receive

When he gives

Can we receive it?

By blaming him

Realizing this

Seeking his holy feet

Through his grace

We should be delivered

Thirupponthuruthi, 14-9-2017, காலை, 10.30

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *