BT Songs 771 to 775

BT Song 771

After writing the previous song, as I got in the mood to praise God, I wrote this song to express that joy that I found in singing his praises; I wrote this song to praise him one more time.

BT Song 771 துதித்து வாழ்வேன்

உன்னைத் துதிக்க

உருகுது நெஞ்சம்

உனக்காக வாழத்

துடிக்குது கொஞ்சம்

அதற்கென அடைந்தேன்

உன்னடி தஞ்சம்

அருளுக்கு இனியேது

அடிமைக்கு பஞ்சம்

நினைவெலாம் நிறைந்து

நீயெனை ஆள

நெஞ்சம் நெகிழ்ந்து

நானுனைப் பாட

அறிவோடு மனமும்

இணைந்து துதிக்க

அதையெண்ணி உயிரும்

மகிழ்ந்து களிக்க

படைத்தது இதற்கு

என உணர்ந்தேனே

படைத்ததின் பயனை

நான் அடைந்தேனே

துதிக்கும் துதியில்

நீ மகிழ்வாயே

துதிக்க மேலும்

அருள் தருவாயே

இதனினும் இன்பம்

எதனில் இருக்கும்

எவ்விதம் தேடினும்

வேறெங்கு கிடைக்கும்

பலமுறை சுவைத்தும்

தெவிட்டாத இன்பம்

இதுபோல் உலகில்

வேறெங்கு இருக்கும்

உன்னை மட்டும்

சிந்தையில் வைத்து

உன் புகழ் பாடி

நாளும் துதித்து

உன்னடி போற்றி

வந்து பணிந்து

உலகினில் இருப்பேன்

நானுமே வாழ்ந்து

குருகுலம், 10-10-2017, இரவு 11.30

BT Song 771 I will live praising you.

My heart melts

As I praise you

It is longing to live

Only for you

For that I took

Refuge at your feet (now)

Therefore there won’t be

Any shortcoming of your grace!

As you rule me

By filling my thoughts

As I sing you

My heart loves you

Along with mind, buddhi

Also sing your praise

Thinking that

My atman also rejoices

I realized that

I am created only for this

I received the reward

For which I am created

You too rejoice

As I praise you

You will give

More grace to sing about you.

Where is the bliss

Anywhere else?

How can I get it?

However diligently

I search for it?

How many time I enjoyed

The joy which is not boring

Where else it will be available

In this world?

Keeping you only

In my mind

Praising you everyday

By singing your glory

Coming to your feet

Worshiping you

As I will live

On this earth!

Gurukulam, 10-10-2017, 11.30 p.m.

BT Song 722

See for comments: That my neighbour in my life

BT Song 772 என் அயலான்

அடிபட்டுக் கிடந்தேன்

அரைகுறை உயிருடன்

அவ்வழி சென்ற

பலரும் பார்த்தனர்

இதயம் இருந்தும்

இரக்கம் இருந்து

ஏதோ காரணம்

சொல்லியே சென்றனர்

இருந்தேனா இறந்தேனா

எனவும் பார்க்கலை

அடிபட்டு ஏனங்கு

கிடந்தேன் கேட்கலை

அவரால் உதவி

செய்யவும் முடியல

பிறருக்குத் தகவல்

கொடுக்கவும் வழியிலை

விரும்பா தெய்வம் நீ

விரும்பியே வந்தாய்

அயலான் தான் நீ

ஆயினும் நின்றாய்

உதவிட எவரும்

சொல்லாத போதும்

பணயமாய் உனைவைத்து

பணிவிடை செய்தாய்

விரும்பாத வேண்டாத

உன்னையும் புரிந்தேன்

என் தேவை அறிந்து

உதவிய போது

உன் மேன்மை உணர்ந்து

உன்னடி பணிந்தேன்

வெறுத்த உன் மூலம்

உய்வும் அடைந்தேன்

தேவை உள்ளவர்

அயலார் ஆயினும்

தேவையை உணர்பவர்

தெய்வத்தை காட்ட

தன்னலம் மறுத்துப்

பணி செய்யும் போது

மனித நேயம்

மலர்ந்திட செய்கிறார்

குருகுலம், 12-(13)-10-2017, இரவு 12.10

BT Song 772 My neighbour

I lay down beaten thoroughly

With little life left

Many who crossed

Saw me

Though they had compassion

To help me

They left and went

By giving some other reasons.

They never bother to see

Whether I am alive or dead?

Why I was laying down there

They never asked about it?

They were unable

To help me.

There is no chance for them

To inform others also.

The god who I never liked

You came even though I never asked you!

Of course you were an outsider

But stood next to me

Even though

No one asked you to help me

Taking the risk even of your life

You served me.

Then I recognized you

Whom I neither liked nor wanted.

Recognizing my need

When you helped me

Realizing your greatness

I bowed at your feet.

I was redeemed through you

Who I hated very much.

Those who are in need

Are strangers to us!

When we recognize their need and serve

We show God to them.

Giving up our personal interest

When we serve them

We help humanitarianism

To blossom again.

Gurukulam, 12-(13)-10-2017, 12.10. Am.

BT Song 773

For comments see: Mere projection of brain?

BT Song 773 கற்பனையா

எழுதுவதெல்லாம் அனுபவம் தானா

என்வாழ்வில் இவை நடந்தவை தானா

இதயத்தில் வந்த கற்பனைகளையே

எழுத்தில் வடித்துத் தந்துவிட்டேனா

சிறு பொறியாக வந்த எண்ணத்தை

சிறகுகள் கட்டிப் பறக்க விட்டேனா

சிந்தையில் தோன்றிய கற்பனைகளுக்கு

வண்ணங்கள் பூசி  உலவ விட்டேனா

அன்பு, அடக்கம், பண்பு, பணிவு

ஆத்திரம், கோபம், எரிச்சல், வெறுப்பு

இன்னும் பலவித குணங்கள் எல்லாம்

உண்மையில் உன்னிடம் காட்டிவிட்டேனா

இவைகளை எல்லாம் கற்பனை செய்து

எனக்குள்ளாக நானே பேசி

உன்னுடன் பேசுறேன் என்றுமே எண்ணி

உண்மையில் என்னையே ஏய்த்து கொனண்டேனா

உறுதியாய் எனக்குத் தெரியவும் இல்லை

உண்மை எதுவென புரியவும் இல்லை

பிறருக்கு கூற ஏதுமே இல்லை

பிறர் அதை நம்பத் தேவையில்லை

எனக்கும் உனக்கும் உள்ள உறவை

எவருக்கும் சொல்லத் தேவையில்லை

எழுத்தில் எழுதிக் காட்டுவதெல்லாம்

என்றும் முழுதாய் இருப்பதும் இல்லை

குருகுலம், 14-10-2017, 11.30

BT Song 773 Mere Imaginations?

What all I write (about my sadhana) are real experiences?

Did they all actually happen in my life?

Or did I put in words

All that I merely imagined in my mind?

Did I manage to soar high to fly giving wings?

To the small thought that came as mere imagination?

Did I give various colours to

All those imaginations that came to mind?

Did I really showed

My love, humility, character and obedience

Anger, irritation, hatred and aversion

And many more of my nature to you in truth?

Merely imagining about them all

Then talking only within me

Merely imagining that actually I am talking to you

Did I really deceive myself?

I don’t know for sure

Which one is true, I cannot understand

There is nothing to share with others

There is no need for others to believe them.

The relationship that we have for each other

There is no need to share with anyone

All that I put down in words

Need not be complete in themselves.

(Need not express that completely)

Gurukulam, 14-10-2017, 11.30 pm.

BT Song 774

As I went to the dhyana mandapam this morning, I began to recall my reflection last night about writing poems and my experience in my bhakti.  Again I sat for some time reflecting about it—how far it is true or not.  Then I began to pray.  While I was praying, as the inspiration came, stopping my prayer, I wrote this poem.

774 உள்ளான உணர்வோடு

எனக்குள்ளே ஆழ்ந்து

என்னையும் மறந்து

என் சிந்தை தன்னை

உனக்குள் வைத்து

நீ பேச நான் கேட்க

மனச்செவி திறந்து

நீ பேசும் மொழியினை

நானும் புரிந்து

உள்ளான உணர்வோடு

உவகைப் பெருக்காலே

உன் வேத வாக்காலே

நீ சொல்லக் கேட்டு

உணர்ந்திடும் ஒன்றைக்

கற்பனை என்று

எப்படி ஏற்க

என் மனம் மறுக்குது

மனதுக்கும் மூளைக்கும்

இடமும் உண்டு

உள்ளமும் இதனை

உணர்ந்திடும் நன்று

ஆயினும் அவற்றுக்கு

எல்லையும் உண்டு

அவற்றுக்கு அப்பால்

உறவாடிக் கொண்டு

ஆவியில் அதையும்

புரிந்து கொண்டு

ஆனந்தம் காண்பது

பக்திக்கு உண்டு

குருகுலம், 15-10-2017, காலை 11.10

BT Song 774 With inner feeling

When I drown within me

Forget myself

Keeping my mind

In you,

Opening my ear

To listen to you

And understanding

What you say,

With inner sense

With overflowing joy

Listening  through your

Holy Veda,

My mind refuses to

Accept that

Which one I understand (and say that it is)

Mere imagination!

There is place for

Both heart and mind,

My spirit also

Understand this clearly.

But they too have

Their own limitation

But transcending beyond them,

When I have fellowship with you

It is possible for bhakti

To understand it

Also in my atman

To experience that joy

Gurukulam, 15-10-2017, 11.10 pm.

BT Song 775

After my morning meditation and prayer, I took the books to read. But suddenly I began to think about my nature and said to me that no one needs to come and point out all my shortcomings as they are crystal clear to me.  Then I began to think of some of those shortcomings and stopped reading. I took notes and wrote this song.

BT Song 775  யாரும் சொல்ல வேண்டாம்

பிறர் வந்து கூறத் தேவையில்லை

புதிதாக கூற ஏதும் இல்லை

என் மன ஓட்டத்தை அறிந்த எனக்கு

இனியொன்று கூறத் தேவையில்லை

சஞ்சலம் எனக்குச் சொந்தம் ஆச்சு

சந்தேகப் படுவது பழக்கமாச்சு

நிலையில்லா புத்தி நிலையாகி போச்சு

நொடியிலே மாறுதல் வழக்கமும் ஆச்சு

இளகிய மனசு சற்று இருந்த போதும்

எளிதில் இரங்கி உதவ மாட்டேன்

உதவ உள்ளமும் விரும்பிய போதும்

உதவ மறுக்கக் காரணம் தேடுவேன்

கருமித் தனத்தைக் காட்ட மறுத்து

எளிமை என்ற போர்வைக்குள் மறைவேன்

காசு-பணம் எண்ணும் போது

கருத்தாய் கணக்கு அதிகம் பார்ப்பேன்

மெத்தப் படித்த மேதை என்று

என்னை நானே எண்ணிக் கொண்டு

உளறிக் கொட்டி, கிளறி மூடி

உருப்படாமல் எழுதி வைப்பேன்

போகும் நேரம் நெருங்கும் போது

புத்தி வந்து பயனும் என்ன

ஏதோ இரங்கி நீயும் மீட்டாய்

அதனைப் புரிந்து வாழ்ந்திருக்கேன்

குருகுலம், 16-10-2017, காலை 11.10

BT Song 775 Nobody needs to tell me.

There is no need for one to say about it

There is nothing new to say anything new!

As I understood the nature of my mind

There is no need to add anything further to it.

Chanchal (frustration) becomes mine for ever

Doubting has become my habit.

Having an unstable mind becomes a stable fact

Change within a few seconds becomes routine one.

Though I have a soft heart

But I won’t easily take pity on others to help.

Though heart desires to help

It will also seek reasons not to do that.

Not to disclose my miserliness

I will hide under the blanket of simplicity.

When it comes to money and materials

I will calculate the account very diligently.

Thinking me

As if a learned person

Babbling several things

I will put in writing

What is the use of realizing this?

At the end of the life

Somehow taking pity on me Your redeemed me

Realizing this I am living each day.

Gurukulam,  16-10-2017, 11.10 am.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *