BT Songs 781 to 785

BT Song 781

As I had leisure time not doing my regular kitchen and other work, I took more time to spend in worshiping the Lord this morning.  As I was thinking more and more about his grace I wrote this song as part of my worship.

BT Song 781 இது போதும்

அருளைத் தருகின்றாய்

அது ஒன்றே போதும்

அன்றாடம் பணிகின்ற

வரமொன்று வேண்டும்

உனக்கென வாழ்கின்ற

உயர்வென்று போதும்

உரிமையால் உன்னோடு

உறவாட வேண்டும்

வருகின்ற போது

வரவேற்க வேண்டும்

வந்தபின் உன்னடி

தொழுதிட வேண்டும்

சொல்கின்ற போது

கேட்டிட வேண்டும்

சிந்தையில் அதை வைத்துக்

காத்திட வேண்டும்

அன்றாடம் உன்னோடு

வாழ்கின்ற போதும்

அதை எண்ணி மனதாலே

கொண்டாட வேண்டும்

இந்நாளை எதற்காக

நீ தந்த போதும்

அதிலும் உன் சித்தம்

நான் காண வேண்டும்

இதையெல்லாம் துதியாக

நானும் பாடி

எந்நாளும் உன்னருள்

நாட வேண்டும்

27-10-2017, பெங்களுரு, காலை 7.15

BT Song 781 This is enough

You are giving grace

That is enough for me

I need the boon

To do everyday work (properly)

The nobleness of living for you

Is it enough for me?

I should have relationship with you

Out of the right that I have (with you)

I should welcome you

When you come to me

I should bow at your feet

Once you came near to me

When you talk

I should listen

I should guard it

Keeping in my mind

Though each day

I live with you

I should celebrate it

Thinking about it often in my heart

For whatever reasons

You have bestowed this day to me

I should seek

Only your will in it

Singing all these

As praises

I should seek

Only your grace

27-10-2017, Bangalore, 7.15 am.

BT Song 782

As I go to North India to meet bhaktas in different places, I get more time to spend time with the Lord and remember so many blessings that he bestows on me.  As this morning after my regular work, when I sat down for my meditation and worship, inspired by the spirit of thanks giving I wrote this song.  As usual this song is also very difficult to translate as the final two lines are different from the first four lines in second and third stanzas.

BT Song 782 நன்றி சொல்வேன்

நன்றி சொல்வது அன்றி

நான் சொல்ல வேறொன்று உண்டோ

நாள்தோறும் என்னை நடத்தி

நன்மையால் மட்டுமே நிறைத்து

குற்றம் குறைகளை மன்னித்து

குணம் மட்டும் காண்கின்ற உனக்கு—நன்றி…

உடலோடு மனதையும் நினைந்து

உள்ளான தேவையை அறிந்து

அறிவுடன் ஆன்மாவில் நிறைந்து

அத்துடன் பக்தியில் நனைந்து

சொல்லோடு பொருளைச் சேர்த்து

சேவடி தன்னையே நினைந்து—நன்றி…

விந்தையான இந்த உலகில்

விதவித உயிர்களை படைத்து

அவற்றுடன் வாழ்ந்திட அழைத்து

அற்புதமாய் என்னைப் படைத்து

ஒவ்வொரு நாளும் துதித்து

உன் புகழ் பாடி பரவி—நன்றி…

கொல்கத்தா, 17-11-2017, காலை, 7.00

BT Song 782 I will give thanks

Is there any other thing other than

Saying thanks to you

Leading me each day

Filling only with good things

Forgiving all my shortcomings

Only seeing goodness in me—is there….

Remembering the need of my body

Also understanding the need of my heart

Filling both in my atman and buddhi

Added to that immersing me in bhakti

Adding meaning to the words

Remembering your Holy feet—is there….

In this wonderful world

Creating so many different kinds of creates

Creating me in a special way

Calling me to live along with them

Singing each day your praise

And spreading your fame—is there

Kolkata, 17-11-2017, 7.00 am

BT Song 783

During my visit to Patna one class was arranged for ‘converts’.   Nowadays I almost stopped sharing anything to any converts as there is no point in changing their mind.  Already they have gone away from my view of remaining as a Hindu bhakta of the Lord.  According to me it is a mere waste of time for both of us.  At the same time, I have not yet learnt to say ‘no’ when others request me to share among them.  So when I take classes some kind of cynicism will always be in the background of my mind.  Even when I try to present my view sincerely and honestly, yet there will be a subtle negative thought going side by side in my mind.  If I am sincere and honest I should tell it openly and stop all such classes.  But I cannot say no to some bhaktas particularly during my first visit to them. 

As I was constantly struggling about this, during my evening walk on the open terrace, I literally begged the Lord to do something to stop either the negative thoughts or cynicism in my mind or don’t allow me to waste their (convert’s) time.  As I was meditating and sincerely prayed, I wrote this song this evening.

BT Song 783 உனக்குத் தெரியாதா

என் பெலவீனம் எதுவெனத் தெரியாதா

என் மீது இரக்கமும் நீ கொள்ளக் கூடாதா?

அனுதினம் புறம்பே பலவிதம் நடித்தேன்

அதை நீயும் வென்று உதவக் கூடாதா

ஒரு வித பாரம் உள்ளத்தில் இருக்கு

உணர்ந்தாலும் சொல்ல வழியில்லை எனக்கு

அறிந்தபின் உனக்குத் தயக்கமும் எதற்கு

அது மட்டும் இன்னும் புரியலை எனக்கு

தனித்து நான் தவிப்பதில் உனக்கென்ன லாபம்

தாமதம் செய்தால் உனக்குத்தான் பாரம்

போராடும் போதே நீ வர வேண்டும்

புரிந்து எனக்கு உதவ வேண்டும்

சுய பெலன் சார்ந்து வாழ்ந்ததும் இல்லை

சுயமாகச் சுமக்கத் துணிந்ததும் இல்லை

நானென்னும் எண்ணம் கொண்டதும் இல்லை

நீயன்றித் தனித்து வாழ்வெனக் கில்லை

உன்போல் என்னை உணர்ந்தவர் உண்டோ

உனை விட்டால் மீட்பு வேறெங்கும் உண்டோ

உணர்ந்த உனக்கு நான் சொல்லப் போமோ

வீணான கோபம் நியாயமும் தானோ

உள்ளும் புறமும் ஒன்றாக வேண்டும்

உண்மை ஒன்றே வாழ்வாக வேண்டும்

உன் நீதி ஒன்றையே நாட வேண்டும்

உன்னருள் அதற்கு நிறையவே வேண்டும்

பாட்னா (பீஹார்), 19-11-2017, இரவு 8.00

BT Song 783 Don’t you know?

Don’t you know what my weakness is?

Cannot you have mercy upon me?

In several ways I acted everyday outwardly

Cann’t you help me to overcome it?

Some kind of burden is in my heart

Though I realize it, I don’t have means to overcome it

Once you know that why you hesitate

That alone is not clear to me!

What profit are you going to gain by allowing me to struggle alone?

Delaying will only increase your burden

When I struggle that time itself you should come

And should help me by understanding my situation

I never lived depending upon my own strength

I never dare to carry any burden all alone

I never had “I”-ness in life

Without you I don’t have independent life

Is there anyone other than you who understands me?

Is there any redemption apart from you?

Can I teach you as you know it very well?

Can it be justified by your unnecessary anger?

I should be the same both in and out

Truth alone should be my life

I should only seek your righteousness

I need your grace more and more.

Patna (Bihar), 19-11-2017, 8.00

BT Song 784

After reading my regular Muktiveda in Uttaraveda as the verse 5 in chapter one of 1 Timothy impressed me very much, I began to meditate upon it and then as inspiration came I wrote this song as my reflection, though I often fail in that idealism.

BT Song 784 அன்பு

அன்பிலே வாழ அருள் புரிவாய்—அந்த

அன்பையே நீயும் அருளிடுவாய்

தூய உள்ளத்தில் உதித்திடுமே—உனக்கு

தொண்டுகள் செய்ய விழைந்திடுமே

நல் மன சாட்சியை நாடிவரும்

நன்மையை மட்டுமே தேடிச் செய்யும்

மாய்மால மற்ற நம்பிக்கையில்

நாடியே நன்றாய் விளைந்துவிடும்

அன்புக்கு மாற்றாக ஒன்றுமில்லை

அதை அறிந்தாலே துன்பமில்லை

அன்பினை விஞ்சிய பண்புமில்லை

அதை அடைந் தோர்கள்  தாழ்ந்ததில்லை

அன்பாலே தீமையை வென்றிடலாம்

அதன்மூலம் அவனியை ஆண்டிடலாம்

அவன் சென்ற பாதையில் சென்றிடலாம்

அவன் போல் அன்பாக வாழ்ந்திடலாம்

அன்பினை விளக்க அவனி வந்தான்

அதையே காட்ட தன்னை தந்தான்

அது ஒன்றே தன் கட்டளைஎன்றான்

அதன்படி நம்மையும் வாழச் சொன்னான்

மத்திகிரி, 21-12-2017, மதியம் 2.10. 1.தீமோ. 1.5

BT Song 784 Love

Help us to live with love

Bestow only that love to all of us

It will emerge from a pure heart

And will long to serve you in every way

It will come seeking a pure conscience

And will do only good things by seeking after us.

It will grow more and more

In a faith which is not deceitful one

There is no alternative to love

There is no sorrow once we realize this

There is no greater character other than love

Those who sought it never lowered their status

We can overcome evil through love

Through it we can even rule the world

We can walk in the path in which He walked

We too can live as he lived in love

He came to demonstrate love to the world

He gave himself only to show it

He declared that alone as the commandment

And commanded us to live accordingly

Mathigiri, 21-12-2017, 2.10 pm. I Tim. 1:5

BT Song 785

BT 785. I received immense grace

Only to think him alone

O my mind you were given

And asked you to bow to him

Each day thinking about him

Only to praise him

You were given O my tongue

And he asked you to tell

Each day about his grace

He gave the language

Only to sing about him

And he asked to write songs

To glorify him.

O my heart he gave you

To seek only him

And asked you to seek

Only heaven on this earth

He bestowed bhakti

Only for this to me

And he asked me to sing

Only his glory all the time

He came only for this

On this earth

And he gave himself

Only for the redemption of all

Thinking about this

I came unto his feet

And giving myself

I received his immense grace

Mathigiri, 2-12-2017 6.00 am.

As I got up early in the morning, after my regular morning duties, when I sat with a cup of tea, I entered in a worship mode, though often I spend time thinking about other activities of the day.  Then I told my mind only to mind about this business of thinking about him and worshiping him and not wander in other thoughts.  As I gave this instruction to my mind, then inspired by it, I wrote this song as my worship of the Lord today.

BT Song 785. பேரருள் பெற்றேன்

நினைக்கத்தான் மனமே

உன்னையும் தந்தான்

நாள்தோறும் நினைந்து

பணிந்திட சொன்னான்

துதிக்கத் தான் நாவே

உன்னையும் படைத்தான்

தினந்தோறும் அவனருள்

சொல்லிடச் சொன்னான்

பாடத்தானே இங்கு

மொழியைத் தந்தான்

பாடல்கள் பாடிப்

பரவிடச் சொன்னான்

இதயமே உன்னைத்

தேடத் தந்தான்

இகத்திலே பரத்தையே

நாடச் சொன்னான்

இதற்கென எனக்குப்

பக்தியைத் தந்தான்

எப்போதும் அவன் புகழ்

பாடச் சொன்னான்

இதற்கென அவனும்

பாரினில் வந்தான்

எல்லோரும் உய்ய

தன்னையே தந்தான்

இதையெண்ணி நானும்

அவனடி வந்தேன்

என்னையே தந்து

பேரருள் துய்த்தேன்

மத்திகிரி, 2-12-2017 காலை, 6.00

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *