BT Song746
After some time, I began to enjoy my reclusive life in the ashram. Due to heavy rain I got up very early and sat for my meditation and prayer. One constant thought that came in me was who created whom? Did God actually create humans and also the entire creation? Or was it a human who created a God to understand the world within him and outside? Well this is not a new question and it is the origin of philosophy. So I need not give my answer to it. But reflecting what I already wrote: Why only Muktinath, after recalling it I said that it is enough for me that I know Him and Known by Him. Then as the inspiration came I wrote this song as my prayer.
BT Song 746 பணிவது எதற்கு
அறியாமல் இருந்தாலும்
அறிந்துனைத் தொழுதாலும்
அனைத்து உயிர்களும்
உனக்கே சொந்தம்
அறியாமல் இருந்தேன்
அறிந்து கொண்டேன்
அதனால் ஐயனே
அனுதினம் தொழுகிறேன்
அறியமனம் தந்தாய்
அறிந்திடும் வரம் தந்தாய்
அதனால் உன்னைப்
புரிந்து பணிகிறேன்
அறிய விழைவோருக்கு
அருகினில் இருக்கிறாய்
அழைத்தால் குரல் கேட்டு
ஓடி வருகிறாய்
அறிய மனமின்றி
அறிந்திடும் திறனின்றி
அலைந்திடும் மனிதரை
பொறுத்து அருள்கின்றாய்
அறிந்தாலும் அதன்படி
வாழ இயலோர்க்கு*
(*இயலாதவர்களுக்கு)
அதனினும் அதிகம்
அருளை அளிக்கின்றாய்
அறிந்தும் அறியாத
அறிவிலி எனக்கோ
உன்னையே தந்து
ஐயனே மகிழ்கின்றாய்
அறிவேன் அறியேன்
அதற்காகக் கலங்கேன்
அடிமையை மீட்டாய்
அதைமட்டும் அறிந்தேன்
அது போதும் எனக்கு
அறிந்ததும் எதற்கு
அனுதினம் உன்னடி
பணிவது அதற்கு
குருகுலம், 25-9-2017 காலை 5.15
BT Song 746 Why I worship you?
Whether they do not know you
Or worship you after knowing
All the lives (on the earth)
Belong to you
Once I don’t know you
Then I knew
Therefore Oh my Lord
I am worshiping you each day
You gave the mind to know you
You also gave that boon (to know you)
Therefore I worship you
With clear understanding
You are very near
To those who want to know
When they call
You are come running hearing their voice
You keep much patience
With those who wander
Without any desire to know you
Or without any ability to know you
You give more grace
Than others to those
Who is unable to live?
Even after knowing you.
But you rejoice
By giving yourself to me
To this fool
Who never knew you even after knowing you?
I know you, but I don’t know you
But I won’t be troubled because of that
Because you redeemed this slave
That alone I know well
That is enough for me.
I know you?
Only to bow at your feet
Each day.
Gurukulam, 25-9-2017 5.15 am.
BT Song 747
After writing the previous song (746) and singing it as my prayer, I again sat to enjoy the calmness around me. Though my mind got inspired again and again with an urge to write more poems, I resisted as I wanted to enjoy the calmness around me. But as usual as I failed, I said to myself, ‘writing poems is also a kind of meditation. Then why you resist it and enjoy that inner communication with the Lord by sharing your thoughts through words’. So I wrote this song expressing that thought. In our Indian tradition, not only bhakti but even philosophies and other forms of knowledge survived because they were written in poetic form. For me many hundred pages of written words won’t be equal to one song with few stanzas that expressour bhakti.
BT Song 747 அதனால் பாடுவேன்
பாடினால் பரவசம்
பாடுவேன் அவசியம்
பதம் தந்து மீட்டாய்
அதுவன்றோ அதிசயம்
பாடப் பாட
பக்தியும் பெருகுது
பக்தியும் பெருகிட
பாட்டும் வருது
பாடலின் பொருளானாய்
பாட வரம் தந்தாய்
பாடி தொழும்போது
மகிழ்ந்து வருகின்றாய்
பாட்டென்னும் பாமாலை
பலவிதம் புனைந்துனை
பாடிப் பரவுதல்
பக்திக்கு அழகன்றோ
பலவிதப் பொருள்கொண்டு
பலவிதம் தொழுதாலும்
பாடல் ஒன்றுக்கு
அவையும் இணையாமோ
பலர்கூடி வேண்டினும்
பல சொல்லிப் போற்றினும்
பாடியே துதிக்காமல்
பக்திக்கு நிறைவுண்டோ
பக்தியை விளக்கிட
உரை பல சமைத்தாலும்
பாடலின் எளிமை
அவற்றுக்கும் வருமோ
பாட்டென்னும் மொழியோடு
பக்தியின் துணையோடு
பக்தரின் சபையோடு
பாட உன் அருளுண்டு
குருகுலம், 25-9-2017, காலை. 6.00
BT Song 747 Therefore I sing
When I sing, there is bliss
Therefore I will definitely sing
You redeemed me by giving your abode
That alone is a wonderful thing
Once I sing more and more
My bhakti also increases
Once the bhakti increases
New songs also come
You become the object of my song
You gave the boon to sing about you
When I worship you with songs
You also come with much joy
The beauty of bhakti is
In making garlands
Of new songs
Sing to glorify you.
Though we worship you
With so many other things
Will they be?
Equal to one song?
Though many gather together
And praise you with many words
Without worship you with songs
Can our bhakti remain complete?
Though many commentaries
Were written to explain about bhakti
Will the simplicity in a song
Would they be there in them?
With the language of songs
With the company of bhakti
With the mandali of bhaktas
We have your grace to sing about you
Gurukulam, 25-9-2017, 6.00 am.
BT Song 748
After settling down in the ashram, today I came to the dhyana mandapam. When I sit in the swing in the Library facing the banyan tree with green scenery before me, without anyone around me or with me, my spirit get lifted with the atmosphere. Then I entered a kind of trance rejoicing in such a time where my whole being mingles with him. After enjoying that moment for several minutes, I wrote this song to worship Him.
BT Song 748 இதுவே நேரம்
திருவடி தேடி வருகின்ற நேரம்
திருமுகம் பார்த்து கிடக்கின்ற நேரம்
வேறு எதற்குமே வேலை இல்லை
மற்றதை சிந்திக்க மனது இல்லை
அமைதியாக நான் உன்னடி அமர்ந்து
அருளை மட்டும் மனதில் நினைந்து
உறவை மட்டும் எண்ணி மகிழ்ந்து
உன்னுடன் பேசி இருந்திடும் நேரம்
அடங்க மறுக்கும் சிந்தையும் கூட
அமைதல் அடையும் உன்னடி நாட
சஞ்சலம் கொண்ட நெஞ்சமும் கூட
சற்று அடங்கும் உன்னடி அமர
இதுபோன்ற தருணம் அடிக்கடி நாடி
என் மனம் ஏங்கும் திருவடி தேடி
அதனை அறிந்து நீ வரும் போது
மனம் ஆனந்தம் கொள்ளும் பாடல் பாடி
இதற்கெனத் தந்தாய் இந்த வாழ்வு
எனக்கெனத் தந்தாய் இந்த மகிழ்வு
அதனால் அடைந்தேன் உன்னில் உயர்வு
அறியேன் அடிமை இனி ஒரு தாழ்வு
துதிகள் பாடி போற்றிக் கொண்டாடி
தெய்வமே உன்னை வாழ்த்தி பாடி
சன்னதி வந்தேன் உன்னடி தேடி
சரணம் அடைந்தேன் உன்னருள் நாடி
குருகுலம், 26-9-2017, காலை, 10.30
BT Song 748 This is the Time
This is the time seeking the Holy feet
A time seeking your face Oh my Lord
There is no time for any other thing
No time to think about other things.
Sitting silently at your feet
Thinking only about your grace in me
Rejoicing only our relationship
This is time to talk with you.
The mind which refuse to be tamed
Will become calm when I seek your feet
Heart which often gets frustrated
Will remain quiet when I sit at your feet
Seeking these kinds of opportunities often
My heart will long for your holy feet
Realizing it when you to come to me
My heart will rejoice sing songs
You gave this life only for this
You gave this joy only for me
Therefore I feel uplifted in you
After this slave will never face any defeat
Singing and glorifying you
O my God singing your praises
I came to your presence seeking your feet
And took refuge at your grace
Gurukulam, 26-9-2017, 10.30
BT Song 749
As I read the famous story of the Lord not punishing the woman caught in adultery, I meditated about it. In the original story every one after dropping the stone goes away. But in my reflection, I realized that as our conscience pricks the stone will fall automatically from our hand as it will lose its grip on the stone. Then it will fall only on our toe and hurt it. By this once we give the punishment for our sin, there is no chance to blame anyone for this punishment’. As I reflected on it, I wrote this song. The general Indian worldview about punishment for sin is: we are not punished for our sin, but by our sin.
BT Song 749 பழிவாங்குதல்
பழிவாங்கத் தேவை
கடவுளுக் கில்லை
பழிவாங்க அவனும்
படைக்கவும் இல்லை
நம் பாவம் நம்மை
தொடர்ந்து பிடிக்கையில்
பழிவாங்க ஒருவன்
தேவையே இல்லை
நாம் செய்யும் தவறுக்கு
நாமன்றோ காரணம்
நமக்கது புரிந்தாலும்
ஏற்கத்தான் காணோம்
நமக்குள்ளே நாம் கொண்ட
பேதங்கள் ஆயிரம்
அதற்காக அவன் மீது
ஏன் குறை சொல்லணும்
தவறுக்குத் தண்டனை
நிச்சயம் உண்டு
யாராதைத் தருவது
எனும் கேள்வி கொண்டு
அதற்கானத் தீர்ப்பையும்
தாங்களே கண்டு
அதனை நிறைவேற்ற
முனைந்திடும் போது
மௌனமாய் மனசாட்சி
நம்மிடம் பேசும்
எவர் தந்த உரிமை
என்று கேட்கும்
குற்றம் அற்றவன்
எரியட்டும் கல்லை
என்று கல்லையும்
நம்மிடம் கொடுக்கும்
கொடுத்த கல்லும்
கைதளர வீழ்ந்தது
நம் காலை முதலிலே
பதம் பார்த்தது
நாமே நம்மை
பழி வாங்கிக் கொண்டபின்
எவரை குறை சொல்ல
எனும் கேவி எழுந்தது
குருகுலம், 26-9-2017, காலை. 11.10
BT Song 749 Taking revenge
There is no need for God
To take revenge on us
He never created us
For that.
When our own sin
Is chasing us
There is no need for one
To take revenge on us
Are we not responsible?
For our own mistakes?
Though we understand this
Yet we are not ready to accept it.
We have thousands of
Contradiction among us
Then why should we
Blame God for that?
Surely there is
Punishment for the mistakes
But the question is:
Who is the one who will give it?
Arriving a verdict
For that by our own methods
When we try
To execute it
Silently our own
Conscience will talk to us
It will even ask,
‘Who gave this right to you’?
It will give the stone
On our hand by saying,
‘Let him he, who
Never done any crime throw it first’
As our conscience pricks
The stone
Losing its grip from our hand
Falls on the toe and hurts it.
Once we took
Revenge on us
Then the question that will come is,
‘Who shall be blamed for this’.
Gurukulam, 26-9-2017, 11.10 am.
BT Song 750
To be honest I don’t know what is that goal that God has set for me? All these years I am running not even knowing what the goal is and where it is? But I know one thing for sure. He called me to live as His bhakta on this very earth enjoying my mukti through my bhakti. As I already attained this goal, now I don’t know what is the goal for me to run for and what is the crown that I should receive. So whenever I think of running the race to reach the goal, then I am confused and even get frustrated as I get deviated even in this goal to live as a bhakta of the Lord in this very life. When I meditated about it, I wrote this song.
BT Song 750 நீ தந்த அழைப்பு
எனக்கொரு அழைப்பு நீ கொடுத்தாய்
அதற்கென வரங்கள் சில அளித்தாய்
அதன்படி அனுதினம் வாழாமல்
அலசடிப் படுகிறேன் பலவற்றில்
இலக்கை என்றும் முன்வைத்து
நானும் ஓட நீயழைத்தாய்
ஆயினும் அடிக்கடி அதைவிடுத்து
அவதிப் படுகிறேன் பல நினைந்து
வலமும் இடமும் விலகாமல்
வகுத்துத் தந்த பாதையிலே
பொறுமையாய் ஓடி முடிசூட
போகும்படிதான் நீ சொன்னாய்
இலக்கை என்றோ துறந்து விட்டேன்
இடமும் வலமும் ஓடிவிட்டேன்
இடையே பல முறை நின்று விட்டேன்
இப்போ பாதையை மறந்து விட்டேன்
இனிமேல் ஓடத் தெம்பில்லை
இலக்கும் சரியாய்த் தெரியவில்லை
இனி என்ன செய்ய புரியவில்லை
உன்னை விட்டால் கதியில்லை
அழைப்பை அடிக்கடி நினைவுறுத்து
அதை விட்டு விலகினால் பயமுறுத்து
அப்பவும் மீறினால் துன்புறுத்து
எப்படி யேனும் கரையேத்து
குருகுலம், 26-9-2017, இரவு 9.30
750 The call which you gave
You gave a call for me
For that you gave some talents
Not living accordingly
I get frustrated with so many things.
You called me to run the race
Keeping the goal before me
But leaving the tract
I am troubled by thinking about so many things.
Not going in the right or left
Keep running the tract which you set for me
You asked me to run the race with much patience
To receive that crown.
But I have lost the goal long before
And ran to the right and left many times
In between stopped running many times
Now I have completely lost that tract.
There is no strength to run any more
And the goal is also not visible clearly
I don’t know what I should do further
There is no other than you.
So, often remind my goal
If I go away, then threaten me
Still if I go astray then punish me
Somehow you help me to reach the goal.
Gurukulam, 26-9-2017, 9.30
Leave a Reply