Question without answer

பதில் இல்லா கேள்வி

ஒரு சாமியாரிடம் அவரது சீடர், தனது நண்பனின் குழப்பகங்களுக்கும் கேள்விகளுக்கும் விடை அறிய அழைந்து வந்தார். அப்போது அவர்களிடையே நடைபெற்ற [கற்பனை] உரையாடல் இது.

சீடரின் நண்பரின் கேள்வி: நான் யார்?

சாமியார்: அது உனக்குத் தான் தெரியும்.

இல்ல நான்கிறது உடலா, உயிரா அல்லது ஆன்மாவா?

எனக்குத் தெரியாது. உனக்குத் தெரிந்தா சொல்லு.

எனக்கு பதில் வேண்டித்தான் நான் கேள்வி கேட்டேன். பதில் தராம என்னிடமே கேள்விகேட்டா எப்படி ஜி?

உன்கேள்விக்கான பதில் உன் கேள்வியிலேயே இருக்கு.  உன் கேள்வி என்ன? ‘நான் யார் என்பது’? ‘யார்’ என்பது கேள்வி, ‘நான்’ என்பது பதில்.

ரொம்ப குழப்பறீங்க ஜீ

நிச்சயமா இல்ல. நீ ரொம்பத் தெளிவா இருக்க.

பழயபடி குழப்பறீங்க பாத்தீங்ககளா!

இல்ல.  ரொம்ப குழப்பமா இருக்குனு உனக்குத் தெளிவா புரிஞ்சதா இல்லையா?

ஆமாம்

அப்புறம் என்ன? நீதான் தெளிவா இருக்கயே. அப்புறம் இதில என்ன குழப்பம்.

ஐயோ! நான் கேள்வி கேட்டா இப்படி இடக்கு முடாக்கா பதில் தரீங்களே ஜீ

இல்ல. நீ ரொம்பத் தெளிவா இருக்க. உனது கேள்விக்கான பதிலும் உனக்கு தெளிவா தெரிஞ்சிருக்கு. ஆனா புரியாத மாதிரி கேள்வி கேட்டு என்னதான் குழப்ப பார்க்கிற.

முடிவா ஏதாவது ஒரு தெளிவான பதில தாங்க ஜீ

முடிவா எந்த பதிலும் தரமுடியாது

ஏன்?

பதில் எதுவா இருந்தாலும் அதுவே வாழ்க்கையிலே மீண்டும் கேள்வியா வரும். எனவே பதில் தேடாம இருந்தா கேள்வியே வராது. கேள்வியே வரலேன்னா பதிலுக்குகானத் தேவையும் இருக்காது..

ஒரு உதாரணம் தந்து விளக்கினீங்கனா தெளிவா புரியும்ஜீ

சரி. நான் யார்?

நீங்க சாமியார்

என்னப்பா இது.  நான் உன்ன கேள்வி கேட்டா, பதிலுக்கு நீ என்னயே கேள்வி கேட்கிற.

இல்ல ஜி.  நான் பதில்தான் தந்தேன்

என்ன பதில்

நீங்க சாமியார்

இல்லப்பா நீ என்கிட்ட கேட்டது கேள்விதான். ‘நீங்க’ ‘சாமி’ ‘யார்’? அதாவது ‘சாமி நீங்க யாரு’ என்கிறதுதான் உன் கேள்வி.

வந்த சீடரின் நண்பன் என்ன சொல்வது எனத் தெரியாமால் சற்று நேரம் மவுனமாய் இருக்க, சாமியார் தொடர்ந்தார்

முதல்ல ‘நான் யாருன்னு கேட்ட’. இப்போ என்ன பார்த்து நான் [அதாவது சாமி] யாருன்னு கேள்வி கேட்கிற. இப்போ புரியுதா.  ஒரு கேள்வி கேட்டா வர பதிலே மறுபடியும் கேள்வியா மாறுமுன்னு

இப்பத்தான் எனக்குத் தெளிவா புரியுது ஜீ

நிச்சயமா இல்ல. இப்பதான் நீ குழம்ப ஆரம்பிச்சிருக்க. எதுவுமே சரியா புரியலங்கறதுதான் வாழ்க்கை.  அப்படித்தான் வாழணும், வாழ முடியும். நமக்கு முன்னாடி வாழ்ந்தவங்க எல்லாம் அப்படித்தான் வாழ்ந்தாங்க. ஆனால் இப்போ உனக்கு சரியா புருஞ்சிடிச்சுன்னு நினைக்கிறபாத்தியா அங்கதான் குழப்பமே ஆரம்பிச்சிருக்கு

ஆள விடுங்க சாமி என்று சீடரின் நண்பர் ஓட்டம் பிடிக்க, குழப்பம் உள்ள வாழ்க்கையைத் தெளிவாக புரிந்து கொண்டு குழப்பம் இல்லாமல் தெளிவாக வாழும் தயானந்த பாரதி

              விடையே இலாத

              கேள்விதான் வாழ்க்கை

              வேடிக்கை இதிலே

              என்ன வென்றால்

              கேள்வியே பதிலாகக்

              கொண்டதே வாழ்வானால்

              விடையென்ற ஒன்று     

              வேண்டாத ஒன்றே

சாமியாரின் சீடரின் நண்பன் ஓட்டம் பிடிக்க, சீடன் ‘என்ன சாமிஜி நீங்க அவன் கேள்விக்கு தெளிவான பதில்தந்து அவன் குழப்பத்த போக்குவீங்கன்னு நினச்சா இப்படி அவன குழப்பி ஒட்டவிட்டுடீங்களே

சாமியார்: வாழ்க்கையிலே எந்த பிரச்சனை வந்தாலும் ஒன்று ‘சாமி’ கிட்ட போய் கேட்கணும் அல்லது ‘[சக]ஆசாமி’ கிட்ட கேட்கணும். அவங்க தர முடியாத பதில எந்த சாமியாரும் தர முடியாது.  உன் பெற்றோர், உறவு, சொந்தம், பந்தம் கிட்ட தெரிஞ்சிக்காத ஒன்ன சாமியார்கிட்ட தெரிஞ்சிக்க முடியாது. அவங்க எல்லோ கேள்விக்கும் பதில் தெரிஞ்சிக்கிட்டா வாழறாங்க.  வரவாழ்வ அப்படியே ஏத்துக்கிட்டு அனுசரிந்து [adjust] வாழல. 

இப்படித் தேவை இல்லாமல் கேள்வி கேட்கிறவந்தான் சாமியாரா போய் ‘நான் யாருன்னு கேள்வி கேட்டு பதில் தெரியாம அலையறான். அவன கேள்விகேட்டு, அவன் தர குண்டக்கா மண்டக்கா பதில அப்படியே தெய்வ வாக்கா நம்பி, அவன இழுத்துகிட்டுவந்து ஆஸ்ரம் கட்டி, பணத்த குடுத்து மாட்டி விடறீங்க.  ஆனா அதுல தொடர்ந்து இருக்கவும் முடியாம, தப்பிச்சுப் போகவும் முடியாம பல சாமியாருங்க திண்டாடுறாங்க.  அவன்தான் ‘கோவணமும் பாரம் குடித்தனமும் பாவம்முன்னு’ சமுதாயத்த விட்டு ஓடிட்டானே.  அப்புறம் அவன துரத்திக்கிட்டு ஏன் ஒடறீங்க.  உங்க வாழ்க்கையில வர எந்த பிரச்சனைக்கும், கேள்விக்கும் சாமியார் கிட்ட பதில் இல்ல.  உண்மையிலேயே ‘நான் யார்ங்கிற’ கேள்விக்கு பதில் வேணுமுன்னா நீயே தனியா முதல்ல தேடு.  உன் தேடல் சரியா இருந்தா குரு தானா உன்ன தேடி வருவார். அத விட்டு எதற்கெடுத்தாலும் சாமியார் கிட்ட போகாதீங்க. ‘சாமி’கிட்டயும் ஆசாமிக்கிட்டேயும் போய் கேட்டு கிடைச்க வாழ்வ அவங்க வாழ்ந்தபடி, சொல்லறபடி கேட்டு கோடிக்கணக்கான பேர் நிம்மதியா வாழும்போது இப்படி சாமியார் கிட்டவந்து பதிலே இல்லாத, பதிலும் கிடைக்காத கேள்வி கேட்கிறதவிட்டுடு.  குழப்பமான கேள்விக்கு பதிலே கிடையாதுங்கிறத தெளிவா புரிஞ்சுகிட்டு குழப்பம் இல்லாம வாழ்ப்பாரு.

முதலிலேயே வாழ்க்கையை புரிஞ்சிக்கிட்டா அத குழப்பம் இல்லாம வாழ முடியாது. புரியாத வாழ்க்கையைத்தான் குழப்பம் இல்லாம வாழமுடியும். முதலிலேயே புரிஞ்சா அதில இருக்கிற ஸ்வாரசியமே போயிடும். வாழ வாழ்த்தான் வாழ்க்கை புரியும். ‘விரும்பின வாழ்வு கிடைக்கலேனா கிடச்ச வாழ்வ விரும்புன்னு’ எத்தன தரம் கேட்டிருப்ப. இப்ப புரியுதா.

புரிஞ்சுது ஸ்வாமிஜி.

என்ன புரிஞ்சது.

எந்த காரணம் கொண்டும் வாழ்க்கைய பத்தி [வாழாத] சாமியார்ங்ககிட்ட போய் கேள்வி கேட்கக்கூடாது.

அப்பாடி. இனி நீ சீட்டனா இருக்கத்தேவையில.  குருவா மாறிட்ட.  இத மத்தவங்ககிட்ட சொல்லி உங்க இனத்த காப்பாத்தரதோட என் இனத்தையும் காப்பாத்துங்க குருவே.

14-12-2021

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *