Secular 371 கடவுள் செய்த தவறு
ஏவாள் இல்லா ஏதேனிலே
என்னமாய் மிதந்தான் காற்றினிலே
தனிமை ஏக்கம் இருக்கவில்லை
தனிமை என்பதும் இருந்ததில்லை
தன்னந்தனியே இருந்தவரை
சஞ்சலம் இல்லை மனதினிலே
இன்னொரு உயிரை சேர்ந்தபின்னே
தொல்லைக்கு என்றும் பஞ்சமில்லை
சும்மா இருந்தான் ஆதா(மு)மே
கூப்பிட்டுக் கொடுத்தான் இறைவனுமே
அப்புறம் ஆபத்து வந்தாச்சு
அதை நான் சொன்னால் வம்பாச்சு
ஏவாள் குத்தம் ஏதுமில்லை
இறைவன் செய்தது தப்பாச்சு
தவரை அவனும் செய்துவிட்டு
தண்டித்தான் பின்னால் மனிதனையே
இதனைக் கேட்க யாருமில்லை
ஏனென்றால் அதற்கு நேரமில்லை
சண்டைக்கே நேரம் போதவில்லை
சாமியைக் கேட்டும் பயனில்லை
இதற்கு மனிதன் பழிவாங்க
இறைவனைப் படைத்தான் மனிதனாக
அவனுக்கு துணையை ஏற்படுத்தி
அழ வைத்துப் பார்த்தான் தன்போல
மனிதனைப் போலவே கடவுளையும்
மனைவி, மக்கள், பிள்ளையுடன்
வலம் வரச் செய்தான் உலகினிலே
வகையாய் மாட்டினான் இறைவனுமே
இதன்பின் புரிந்தான் இறைவனுமே
எவ்விதத் தவறு செய்தோமென
ஆயினும் அதனால் பயனில்லை
அவதிப் படுபவன் மனிதன் தானே
திருப்பூந்துருத்தி, 11-9-2017 காலை, 7.00
Secular Song 371 The mistake God has done
How Adam was floating with joy
In the Eden Garden without Eve
He never felt loneliness
And he never had that experience
When he was alone
There is no chanchal (frustration) in his heart
Once another life was joined him
There was no shortage for problems
Adam was quiet happy and rejoicing in it
But God called and gave him Eve
Then alone the trouble came
When I say this I am blamed
But there is no mistake on the part of Eve
What God has done alone become a mistake
Committing that mistake
Later he punished the human for that
None is there to question it
Because there is no time for that
When there is not enough time to fight among themselves
There is no use in asking God about it
In order to take revenge on God
Man created God as a human [image]
Creating companionship (consort) for him
He made God to weep like him
Like human, he made God
To have wife, children and others
And made him to roam in this world
God also well trapped in it
Then alone God realized
What kind of mistake he has done
But there is no use in it
As human alone is suffering
Thirupponthuruthi, 11-9-2017, 7.00 am.
I got up very early in the morning as the peacocks in this place by creeching a lot in the middle of the midnight never allowed me to sleep properly. So I went for my early morning walk. Though the peacocks creach a lot and never allow me to sleep, when they came before me I enjoyed their beauty. As I was walking among the coconut trees without anyone to disturb in this ashram which is situated next to a river at the end of the village, I was imagining the life of the first man in Eden. Then a smile came on my lips and while walking I began to write the first few lines in my mind and began to repeat them again and again. So when I returned back to my room, recalling that joyful time alone with the nature just for the sake of fun I wrote this song to glorify the life of a Single person and dragging even God to tease him for creating a partner for the first man.
Secular Song 372 மனிதனின் தவறு
உடலின் உணர்ச்சியை நம்பாதே
உள்ளத்தின் உணர்வை நம்பாதே
இரண்டும் சேர்ந்து ஏமாற்றும்
நம்மை வீழ்த்த சதி தீட்டும்
ஓய்வு எடுப்பது ஒன்றேதான்
உடல் சோர்வுக்கு மருந்தாகும்
பிறருடன் பகிர்ந்து கொள்வதுதான்
மனதின் சோர்வுக்கு மாற்றாகும்
இதனை ஏற்றுக் கொள்ளாமல்
பிறருடன் பகிர்ந்து கொள்ளாமல்
தன்னந்தனியே இருக்காதே
தனக்குள் பேசி சோராதே
கூடிக் குலவிப் பேசத்தான்
கூட்டமாய் வாழ்ந்து பழகத்தான்
குடும்பம் துணையை அமைத்து வைத்தான்
கும்பலாய் வாழப் பழக்கிவைத்தான்
தனிமை வாழ்க்கை வாழ்வதற்கே
துணிவு வேண்டும் மனதினிலே
அதற்கும் உதவ பலர் வேண்டும்
அத்துடன் உடலில் பெலன் வேண்டும்
மனிதன் தேவையை அறிந்ததனால்
இறைவன் அமைத்தான் இல்லறத்தை
இதனைப் புரியா சில பேர்கள்
இறைவன் மீது குறை சொல்வார்
தனித்தே இருக்க முடியாமல்
இறைவனும் மனிதனைப் படைத்து வைத்தான்
அவனுடன் சேர்ந்து வாழ்ந்திடவே
அவனிக்குள் மனிதனாய் வந்துவிட்டான்
இறைவனே துணையைத் தேடும் போது
உனக்கென்ன தனியே கோட்பாடு
(முடிந்தால் துணையை நீ தேடு)
(இந்த வரி எனக்கல்ல)
முடிந்தால் பிறருடன் வாழ்ந்துவிடு
இல்லாவிட்டால் வாய் மூடு
திருப்பூந்துருத்தி, 11-9-2017, மாலை, 6.30
Secular Song 372 The mistake done by man
Don’t trust your emotion
And don’t trust the feeling of your heart
Both will join together and cheat us
And easily make us to fall
Taking rest alone
Is the only remedy both for body and mind?
Only sharing with others
Is this the remedy for depression?
Not accepting this
And not sharing with others
Don’t remain alone
And don’t talk within you and get depressed
In order to have fellowship and joy
And only to live with others
Family and companionship (life partner) is created
And we are trained only for that
One needs courage
To live as a single person
For that too others need to help
Added to that one needs physical strength also
Knowing this need of human
God created family
Some not understanding this
Began to blame god for that
As He cannot remain alone
Even God created human beings
In order to have fellowship with them
He took avatara and came to this world
When God himself seek fellowship
Why you have a different ideal
{If possible seek companionship
This line is not for me}
If possible try to live with others
Otherwise shut up your mouth
Thirupponthuruthi, 11-9-2017, 6.30 pm.
When I went for my evening walk, I saw some children playing and others sit and talk. I saw that this is the real life and not the life of a recluse or single, however it might appeal to some. So I recalled the song which I wrote in the morning and after returning to my room I wrote this song opposing my view in the morning.
Secular Song 373 தூரத்துப் பச்சை
தூரத்திலிருந்து பார்த்திடும் போது
தெளிவாகத் தெரியாத பலவித உண்மை
அருகினில் நெருங்கிப் பார்த்திடும் போது
அப்பட்டமாகக் கண்ணுக்குத் தெரியும்
அருகினில் நெருங்கி பார்க்கா வரையில்
அனைவரும் தேவ தூதராய் இருப்பார்
பக்கத்தில் சென்று பார்த்திடும் போது
பயந்து நம்மையும் ஓட வைப்பார்
அவரது கருத்தை மறுக்கா வரையில்
அடடா நம்மை எப்படிப் புகழ்வார்
ஒன்றில் சற்றே மாறிடும் போது
உடனே அடிக்க சாட்டையை எடுப்பார்
அவர் போகும் போக்கில் போகும் போது
அப்புறம் என்ன ஆரத்தி எடுப்பார்
அதைவிட்டு சற்று விலகிட முயன்றால்
அத்துடன் நமது கதையை முடிப்பார்
முகமூடி அணிந்து பலவிதம் நடிக்க
உண்மை முகத்தை எவரும் காணார்
ஆட்டம் முடிந்து வேடம் கலைய
அதன்பின் உண்மை முகத்தை காண்பார்
நாம் மட்டும் இதில் விதிவிலக்கல்ல
நன்றாய் நடிக்க மறப்பதும் இல்லை
ஆயினும் இந்த உண்மையை புரிந்து
வாழ்வது அன்றி மாற்றமும் இல்லை
திருப்பூந்துருத்தி, 12-9-2017, மாலை, 7.00
Secular Song 373 The green in the distance
Many truths which are not clear to us
When we see from a distance
Will be visible very clear
When we watch them closely
Till we go near and see
All will remain an angel from the distance
When we move close to them
They will make us to run away from them with much fear
Till we not disagree with their views
How much they will appreciate us (for agreeing with them)
But when we try to disagree even on one small point
Immediately they will take the whip
When we go along with them
They will even take arati to welcome us
When we try to deviate a bit from that
Then they will try to even finish our life
As all put mask and act
Nobody can see the original face
Once the drama ends and the mask is removed
Then we can see the original face
We are in no way an exemption to this
And we never fail to act skillfully
At the same time there is no other way to live
Other than understanding the truth
Thirupponthuruthi, 12-9-2017, 7.00 pm.
When we hear about some people or read about them or their views we create some image about them. But when we meet in person and begin to talk with them, all that we imagined about them, particularly in an idealistic way about them, soon disappears and the real picture about them comes to some extent more clearly. As I encountered one such experience today I wrote this song.
Secular Song 374 மூட்ட கட்டுறேன்
சிந்தைக்கு சற்று ஓய்வுமே வேண்டும்
சிந்திக்க மறுத்து ஓய்ந்திட வேண்டும்
எதையேனும் எண்ணி மண்டைக் குழம்பாமல்
எனக்கும் சற்று ஓய்வமே வேண்டும்
ஒன்றும் இல்லாததை பெரிதாக்கி
ஒன்றுக்கும் மேலாக விளக்கங்கள் தந்து
அதற்கும் பலவித உவமைகள் சேர்ந்து
அத்தோடு வீணான வாதத்தைக் கூட்டி
மெத்தப் படித்த மேதாவி போல
மேலோட்டமாக பலவற்றை கற்று
உருப்படியாக ஒன்றிலும் தேறாமல்
உதவாக்கரையாக இதுவரை வாழ்ந்து
காலத்தை நேரத்தை வீணாக போக்கி
கவைக்கும் உதவாத வாதத்தை நிறுத்தி
தான் கெட்டது போதாது என்று
பிறர் பிழப்பை வீணாகக் கெடுத்து
பூமிக்கு பாரமாய் வீண் சோற்றுப் பிண்டமாய்
போனதை வந்ததை வீணாக எண்ணி
பிறர் காசை வீணாக்கி தன் வாழ்வை பாழாக்கி
பித்தனாய் பேயனாய் தனித்துப் புலம்பி
எத்தைத் தின்றால் பித்தம் தெளியுமென
எதையேனும் எழுதி அதைப் பிறர்க் கனுப்பி
எவரேனும் படித்து எள்ளி நகையாட
என்னவோ வாழறேன் மனம்போன போக்கில்
இதற்கும் முடிவு இப்போதே கட்டுறேன்
இனிமேலே எழுத்துக்கு மூட்டையும் கட்டுறேன்
ஆயினும் யாரேனும் வீணாகத் தூண்டினால்
அதற்கு பொறுப்பு நானல்ல சொல்லுறேன்
திருப்பூந்துருத்தி, 12-9-2017, இரவு, 10.00
Secular Song 374 I will bring an end
Some kind of rest is needed for the mind
It should refuse to think and took rest
Not getting confused and cracking my mind
I too should take some mental rest
Just exaggerating even small thing
Giving more than one explanation
Adding more illustrations to it
doing unnecessary argument about it
Pretending as if a learned person
Learning so many things superficially
Not mastering even in one discipline properly
So far I lived good for nothing
Killing days and time in vain
And putting forth many arguments which are good for nothing
Not only that I am already get spoiled
Spoiling even other’s time
Remaining as a burden to the earth
Thinking all that are gone and might come
Wasting other’s resource and spoiling my own life
Become a mad person and lamenting by living alone
Writing something and sending it to others
Others mocking about me by reading it (or not reading it)
Somehow, I live as my heart desires
How I could be cured from this sickness
Let me bring an end to this now
I will bring an end to all my writings
But if others unnecessarily provoke me
Then I am not responsible for that
Thirupponthuruthi, 12-9-2017, 10.00 pm.
I struggle constantly with my mind which often thinks too much which is not necessary for my life. The way I imagine about so many things and then develop my own theory, questions and solutions never going to address any issue which is not there or going to ever come. But this problem always exists with me and I become very upset with it. So after resolving so many issues about which I imagined which are not there, I said that I have to bring an end to this kind of thinking and writing. Then as the inspiration came I wrote this song reflecting that mood. When I sent this song to Kannan first without any translation and comments, he teased me, ‘what happened and why you have decided to stop writing’? I said, ‘it is all temporary one as I said in the final stanza that if I further write something I am not responsible for that as others alone provoked me for that’. This song is very difficult for me to translate in English as the force and spirit in Tamil cannot be conveyed in my English.
Secular Song 375 சுட்டால் தெரியும்
தானே பட்டுத் தெரிஞ்சிகிட்டா
தப்பைக் கொஞ்சம் குறைத்துக் கொள்வார்
நாமே சொல்லித் திருந்திக்கிட்டா
நம் மேல் குத்தம் சொல்லிடுவார்
நெருப்பில் விரலை விட்டாலே
நிச்சயம் சுடுமெனத் தெரிந்தாலும்
அவரவர் சுட்டுத் தெரிஞ்சுக்கணும்
அனுபவப்பட்டு புரிஞ்சுக்கணும்
நல்ல விதமாய்ச் சொன்னாலும்
நம் பேச்சு அங்கு எடுபடாது
தானே பட்டுத் தெரிஞ்ச பின்னே
வாயைத் திறக்க முடியாது
ஆயினும் எத்தனை பட்டாலும்
அதையும் சீக்கிரம் மறந்துவிட்டு
மீண்டும் முன்போல் செய்திடுவார்
முன்போல் துயரத்தில் ஆழ்ந்திடுவார்
சிலருக்கு இதுவும் இயல்பாச்சு
சீர்பட முடியா குணமாச்சு
தானும் துன்பப் பட்டிடுவார்
பிறருக்கு தொல்லை தந்திடுவார்
மனித உறவில் இதற்கெல்லாம்
மாற்றம் ஏதும் கிடையாது
இறுதி வரையில் போராட்டம்
எப்போதும் விடுதலை கிடையாது
திருப்பூந்துருத்தி, 14-9-2017, மாலை, 4.10
Secular Song 375 Knowing by experience
If one learns through experience
Then he will minimize the mistakes
But if he correct the mistake because of our advice
Then he will find fault in us
Though one knows that
By keeping the finger in fire will burn it
Yet each one should know about it
Only through his own experience
Even if say in a good manner
Our words hold no value for them
Once he learns it through his mistake
Then he cannot open his mouth
But, however one learns through mistakes
Soon forgetting them all
Again will repeat the same
And will drown in sorrow
For some this becomes habitual
And becomes an unreformable nature
He will suffer
And will give trouble to others
In human relationship
There is no alternative to this
Till the end there will be struggle
And no one will ever get deliverance
Thirupponthuruthi, 14-9-2017, 4.10 pm.
I tried my best to help some people who keep some idealistic view about life and try to live in it at the cost of not accepting real challenges in life and the world. Particularly those who live in a secured compound, kept away from the people, think that this kind of life will be permanent for them. But when they along with their near and dear ones will be forced to face the outside world beyond their compound, will realize the mistake that they have made. But there is no use to help them to understand this reality, as they feel some kind of threat to their present comfort and idealism in life. As I learnt this lesson again by talking with some people here, reflecting about it, I wrote this song.
Leave a Reply