Secular Song 421
My one longing in life is to live a life of recluse like Emily Dickenson of America. Though I have tried various times to live such a life, due to various reasons I cannot have it. But now my old age gave me this golden opportunity to live a life which I want to have. There is no point of regretting what I missed so far in life. Now I need to organize my present life so that I can compensate for those losses. As I was thinking about it, I wrote this song.
Secular Song 421 வீணாய் வாழமாட்டேன்
என்னவோ இளமையும் போயாச்சு
இப்போ முதுமையும் வந்தாச்சு
இதுவரை வாழ்ந்ததை நினைத்து விட்டால்
எனக்கே சிரிப்பு வந்தாச்சு
ஏனோ இருவர் பெற்றுவிட்டார்
எப்படியோ எனை வளர்த்து விட்டார்
இவருடன் சேர்ந்து உலகோர்
என்னை வாழவும் செய்துவிட்டார்
வாழ்ந்தேன் வாழத் தெரியாமல்
வளர்ந்தேன் மனதில் வளராமல்
என்னவோ நாட்களை கடத்தி விட்டேன்
இப்போ வந்து விழித்துக் கொண்டேன்
காலம் கடந்து ஞானம் வந்தும்
போன நாட்கள் வரவில்லை
அதனை எண்ணி இப்போது
அழுவதால் எவ்விதப் பயனுமில்லை
மிஞ்சிய இந்த முதுமையிலே
முழுதாய் வாழ முடிவு செய்தேன்
இதையும் வீணாய் வாழ்ந்துவிட்டு
வருந்திப் பயனில்லை நானுணர்ந்தேன்
எனவே எனக்கு பிடித்த வண்ணம்
எஞ்சிய வாழ்வில் வாழ்ந்திருப்பேன்
எமனும் வந்து அழைக்கும் வரை
என்னுள் தனித்து வாழ்ந்திருப்பேன்
வீணே வெளியே போகாது
வேண்டா செயல்கள் செய்யாது
வெட்டித் தனமாய் பேசாது
கெட்டிக் காரனாய் வாழ்ந்திடுவேன்
மத்திகிரி, 19-2-18, மதியம் 2.45
Secular Song 421 I won’t live in vain
Somehow the youth hood has gone
Now old age has come
When I think the life that lived so far
Only I have to laugh (at me)
For some reason two people begot me
And somehow brought me up
Joining with them others too
Made me to live on this earth
I lived not knowing about life
I grew not growing in mind
Somehow, I managed to move the days
Now I have woken up
Though wisdom came very late
The days which are gone never going to come
There is no point of
Lamenting about it now
Therefore, I have decided to
Live a full life in this old age
There is no point of regretting after missing this too
Now I realize this.
Therefore, I will live the rest of the life
As I desired
Till Yama comes to call me
I will live alone within me
Not going outside unnecessarily
And not doing unnecessary works
Not talking vain talks
I will live wisely.
Mathigiri, 19-2-18, 2.45 pm.
Secular Song 412
Another song of my favorite topic is trying to live a life of recluse. Those who do not have this kind of orientation in life will long to have people around them to talk and share. But a recluse should accept the reality that she cannot share her inner thoughts as it is beyond communication. And the only way to enjoy the life of recluse is to find that inner peace turning within than going out. I know such songs might irritate some and they can even think that these kinds of songs are in one way express my longing to have communication with others. But as I often insist, I write only for me and not for others and if others read any kind of (biographical) information I am not responsible for that.
Secular Song 422 யாருமே இல்லை
இடையினிலே வந்து
இடையினிலே போகும்
அநேகர் நம்
வாழ்விலே உண்டு
இறுதி மட்டும்
நிலைத்து நிற்பவர்
எவரென்று என்னிடம்
நீயே சொல்லு
உறவென்று சொல்லிட
பலரிங்கு இருந்தும்
உறவு கொண்டாடி
நண்பர்கள் வந்தும்
அவரவர் பாதையில்
பயணித்து போனபின்
நான் மட்டும் தனியே
இருக்கவே நேரிடும்
உடலோடு சிலபேர்
கூடவே இருந்தாலும்
மனதில் ஒருவித
தனிமையும் வந்திடும்
பேசிப் பழக
பலர்சூழ நின்றும்
எண்ணத்தை எவரிடம்
பகிர்ந்திட கூடும்
இந்த உண்மையை
புரிந்து கொண்டபின்
எதிர்பார்ப்பு இங்கே
மறைந்திட கூடும்
இதை உணர்ந்த பின்
மனதினில் ஏற்று
அமைதியாய் தனிமையில்
வாழ்ந்திட வேண்டும்
மத்திகிரி, 22-2-18, இரவு 10.45
Secular Song 422 None is there
Many are there
Who will come and go
In between
In Our lives
Tell me
Who will remain?
With you
Till the end
Though many are
There as our relatives
Though friends
Might come to have fellowship
As each one has
Gone in their own way
We might be
Left alone at the end
Though many
Will be present physically with us
Some kind of loneliness
Will come in our mind
Though many
Will be there to talk
With whom we
Shall share our thoughts?
Once we
Realized this truth
Our expectation
Will also disappear
Once we realized this
Accepting this truth
We should try to live
Peacefully all alone.
Mathigiri, 22-2-18, 10.45 pm.
Secular Song 423
Another song about the modern gadgets and the trap of the Internet in which most of us get trapped. Particularly all the forwarded messages and fake news blow up our (my) mind not knowing which one is true or false. Now added fuel to the fire now AI created Deep Fakes. So to have real peace, better keep away from all these is my advice to me.
Secular Song 423 வீண் கேடு
யாருக்கோ சொல்கிறோம்
என்று எண்ணி
எல்லோரும் காதை
மூடிக் கொண்டால்
எதற்கு சொல்லணும்
என்று எண்ணி
நாமுமே வாயினை
மூடிக் கொள்வோம்
கேட்டாலும் சொல்லிட
நேரம் இல்லை
சொன்னால் கேட்டிட
ஆளும் இல்லை
அவசர கதியில்
வாழ்க்கையும் ஓட
அதற்கெல்லாம் நமக்கு
நேரமே இல்லை
கைக்குள் கைபேசி
வந்ததின் பின்னாலே
கைக்குள் உலகம்
வந்தது தன் போலே
ஆயினும் வலைதளம்
விரித்த வலையாலே
கைபேசி கைக்குள்ளே
விழுந்தோமே வீணாலே
எல்லோரும் ஒருசேர
கருத்துக்கள் பல பேச
யாருக்கு எதைச் சொல்ல
என்பதும் புரியல
அதனாலே எவருக்கும்
சரியான தெளிவில்லே
அதைப்பற்றி கவலையும்
யாருக்கும் இங்கில்ல
அந்தக் கூட்டத்தில்
நாமும் சேர்ந்தாலே
அவரோடு சேர்ந்து
நாமும் போகணும்
எவருக்கும் சொல்லாமல்
எல்லோரும் பேசிட
நாமுமே கும்பலில்
கோவிந்தா போடணும்
அதனால் வாய்மூடி
இருப்பதே நல்லது
அடுத்தவர் கேட்டாலும்
சொல்வதால் பயனேது
சும்மா இருக்கும்
சங்கையும் ஊதினால்
உனக்கும் ஊருக்கு
வீணான கேடு
மத்திகிரி, 28-2-18, மதியம் 1.50௦௦
Secular Song 423 Mere waste
Thinking that
We are saying
To someone else
As all closed their ears
We too should
Keep our mouth shout
Thinking that
Why should we too say (something)
Even if we say
There is no time (to listen)
And there is none
To listen to us
As the life is going
very fast
There is no
Time for that
As the mobile phone
Came in our hand
The world also has
Come within our hand
As the Internet
Spreads its net
We all get trapped
Within the same hand phone
As everybody is
Talking simultaneously
What should be shared and to whom
There is no clarity about this also
Therefore, none has
Clear thought
And no body
Bothers about it
If we too join
That crowd
We too should go
Along with them
Not talking to anyone
But all talking together
We too should shout
Joining with that crowd
Therefore, remaining silent
Is good for us
Even if others ask
What is the use of telling?
If we blow the horn
Which is not required?
Then it creates
Problem for all
Mathigiri, 28-2-18, 1.50௦௦ p.m.
Secular Song 424
Recently I received one Whatsapp message in which one young girl addresses her concerns about environment issues in the UN. This she shared some twenty years before and after twenty years she again lamented in the same forum that nothing has changed and the situation remains the same and even become grime.
Similarly, in Tamilnadu, after Jayalalitha passed, new political parties and social groups are emerging with a slogan to bring a change. In the past also, almost every political party started with the same slogan of bringing change. (Now we have almost more than 7 or 8 CM candidates in Tamilnadu politics. Of course, in a democracy anybody can claim it).
Of course, several changes took place in people’s life and to accept the fact, the living condition of people has increased considerably. But what all the changes that the political parties or social (pressure) groups promised to bring never achieved.
Whenever I read or hear such slogans, the one question that comes in my mind is:
How far are they serious about the change which they imagine that they will bring? While opposing the current governments or systems, what all they project and promote is nothing but mere idealism. Once they come to power, then they realize that their idealism won’t work as they imagined in real life or politics. But when they raise slogans, they never accept this reality. Of course, keeping higher aims and ideals is not wrong. Indeed, they are essential as they will challenge us. But the change that we like to bring in the society will compromise with so many issues which at the end will never bring that expected change.
While the lifestyle of people has improved all over the world, at the same level or even worse than that the morality and ethics of people also came down. Violence of all kinds, particularly against women and children are increasing. And even the so-called developed countries are no exception to this.
So, while we watch the new emerging leaders and groups, better never ask them serious questions about their ideology, because none can understand it. So, the best option is never ask questions but remain mute spectator and act when your opportunity comes to select them through election.
Secular Song 424 கேட்காமல் இருக்கணும்
பலவித நூல்கள்
படித்து பார்த்தேன்
பலரிடம் சென்று
நானும் கேட்டேன்
இதற்கான பதிலை
எவரும் சொல்ல
ஏனென்றால் கேள்வியே
அவருக்குப் புரியல
தத்துவம் எத்தனை
உதிர்த்து விட்டார்
தர்க்கங்கள் பலவும்
முன்பாக வைத்தார்
சமூக அக்கரை
உள்ளது என்கிறார்
சாதித்துக் காட்டவே
புறப்பட்டோம் என்கிறார்
அவர் சொன்ன அனைத்தும்
சரியெனக் கண்டேன்
ஆர்வமாய் அவரும்
செயல்படக் கண்டேன்
கூடவே பலரும்
இணைந்திட கண்டேன்
கோஷங்கள் விண்ணையும்
பிளந்திட கேட்டேன்
இறுதியில் இவையெல்லாம்
எதற்கெனக் கேட்டேன்
எம்முடன் வந்து பார்
புரிந்திடும் என்றார்
இவர்போல இதுவரை
புறப்பட்டார் கதைகள்
எண்ணியே பார்த்தபின்
தயங்கி நின்றேன்
எங்கோ தவறு
இருப்பது தெரிந்தது
இவர் போடும் வேடமும்
நன்கு புரிந்தது
ஆயினும் இதற்கு
விடையுமே உள்ளது
அது மட்டும் எல்லோருக்கும்
புலப்பட மறுக்குது
தயங்கியே நிற்பதும்
சரியில்லை புரியுது
இவர் செய்யும் எதுவும்
புலப்பட மறுக்குது
இதற்கான விடையோ
ஒன்றுதான் உள்ளது
ஏனென்று கேட்காமல்
இருப்பதே நல்லது
மத்திகிரி, 6-3-18, இரவு 11.15
Secular Song 424 We should not ask
I read
So many books
I asked
So many people
But none can give
The answer for this
Because they never
Understood the question
How many philosophies
They have uttered
They presented
So many arguments
They say that they have
Social concern
And proclaim that they
Come forward only to achieve it
I found that
Most of them are correct
And witnessed that
They are active with much zeal
I also saw that
Many have joined them
And their slogans are
Reaching the sky
Finally, I asked
What is the aim at the end (of all these)
They said that
Come and join us to see
But I hesitate to join
As I thought about
The stories of so many others
Who emerged like this in the past?
There is some mistake
Somewhere there
The mask that they put
Is clearly visible
But there is an answer
For this also
And that alone is not
Visible to anyone
(At the same time)
It is not right to stand
With hesitation
At the same time
All their activities are not clear
So, there is only one answer
For all these
It is better
Not ask question to them
Mathigiri, 6-3-18, 11.15 pm.
Secular Song 425
We often hear people saying that they never keep anything in their heart and openly and directly talk or confront others. There are people like this. But in the name of open talk, several times we say certain words which remain irrelevant in that particular context. There is no point of saying that we said it out of emotion. True, when we are carried by emotion rather than reason, we say many words for which we have to pay a heavy price later. That is why Valluvar clearly said:
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு—குரல் 127
Whatev’er they fail to guard, o’ver lips men guard should keep. If not, through fault of tongue, they bitter tears shall weep.
Explanation: Whatever besides leave unguarded, guard your tongue. Otherwise errors of speech and the consequent misery will ensure.—Kural 127
Secular Song 425 பேச்சு
வாய்மூடி மவுனியாய்
வாழ்ந்திட வேண்டும்
வார்த்தைகள் அளவோடு
பேசிட வேண்டும்
வீணாக வார்த்தை
கொட்டிய பின்னே
வேதனை வந்திடும்
தன் போல முன்னே
சொல்லும் முன்னே
யோசிக்க வேண்டும்
வீணாகப் பேசிட
வருந்திட வேண்டும்
கொட்டிய சொற்களை
அள்ளிட முடியாது
கோபத்தில் கொட்டினேன்
எனச்சொல்ல ஆகாது
சொல்லுக்கு விலையேதும்
இல்லாத போதும்
சொன்னபின் விலை ஒன்று
தந்திட வேண்டும்
பின்னாலே வருந்தியே
பயனேதும் இல்லை
பேச்சினை மாற்றிட
வழியேதும் இல்லை
ஒரு முறை பட்டுமே
திருந்தாது போனால்
இடிபட்டுக் கிடக்கணும்
வாழ்விலே வீணாய்
பட்டவர் பலமுறை
சொன்னதை எண்ணி
புத்தியாய் நாமுமே
வாழணும் நன்றாய்
மத்திகிரி, 16-3-18, இரவு 11.30௦
Secular Song 425 Talk
We should live
Keeping in silence
And should talk
With measure
Once we pour down words
Unnecessarily
Suffering will come
Automatically after that
We should think
Before we talk
If we talk unnecessarily
Later we have to regret
We cannot recall
The words which we uttered
There is no point of saying
I said it in anger
Though there is no
Price attached to our words
Once we talked
We need to pay a price for them
There is no point of
Regretting later
There is no hope of changing
Once we talked
Even after learning one time
If we are not repent
Then in the life
We will be pounded again and again
Thinking what others said
Who underwent such experience?
We too should live
Properly in life
Mathigiri, 16-3-18, 11.30௦ pm.
Leave a Reply