Secular Song 446
Another song about my struggle with my unstable mind.
Secular Song 446 நிலையில்லா மனம்
நிலையிலா மனதுடன்
நித்தமும் போராட்டம்
நினையாத நேரத்தில்
அது போடும் பேயாட்டம்
எதற்கெடுத்தாலும்
எதிர் கேள்வி கேட்கும்
எந்நிலை புரியாது
என்னோடு வழக்காடும்
நாள்தோறும் தன் நிலை
பலவாறு மாற்றும்
நியாயங்கள் அதற்குமே
ஆயிரம் முன்வைக்கும்
ஏனென்று நான் கேட்க
ஏளனம் பல செய்யும்
“என்னிடமேவா” என
எகத்தாளம் அது செய்யும்
என்னவோ அத்துடன்
வாழ்ந்துதான் ஆகணும்
எந்நாளும் அதன்சொல்லை
கேட்டுத்தான் தீரணும்
விடுதலை என்பது
அதனிடம் நமக்கில்லை
வீணாகப் போராடி
எவ்விதப் பயனில்லை
இதுவரை அதை வென்ற
மனிதரும் இங்கில்லை
வென்றாலும் சொல்லிடும்
அதிகாரம் அவர்க்கில்லை
ஆகவே அவர் சென்ற
வழியிலே போகிறேன்
மனம் அனுமதி தந்தால்
மீதியை சொல்கிறேன்
மத்திகிரி, 31-5-2018, இரவு 10.20
Secular Song 446 Unstable mind
Everyday there is struggle
With the unstable mind
In unexpected time
It will do mischief
For everything
It will ask counter question
Not knowing my condition
It will contest with me
Each day it will
Change its position
It will give thousands of reasons
For that
If we question ‘why’?
It will mock at us
‘How dare you ask me’?
It will challenge us
Somehow, we have to
Live only with it
We need to listen to it
All the time
There is no freedom
For us from it
There is no point
In struggling with it
There is none
Who has overcome it
Even if they managed to overcome it
They don’t have any right to share it
Therefore, I am also
Going in their way
Rest I will share
If my mind allows me
Mathigiri, 31-5-2018, 10.20 p.m.
Secular Song 447
There is one pseudo-politician in our area. He will give a big talk about society and its welfare, and all the problems that we are facing in our area. Nobody takes his talk seriously. But some will stand and induce him to make more statements which will become a joke later. As usual he was standing in front of my kitchen and began to complain about the lack of sanity and dirtiness in our area. I began to laugh as he is also a part of our problem.
Secular Song 447 சிரிப்பு வருது
சிலரைப் பார்த்தால்
சிரிப்பாய் இருக்குது
அவர் செயலை நினைத்தால்
வியப்பாய் இருக்குது
நாளுக்கு நாள் தன்
நிலையை மாற்றுவார்
நாமதைச் சொன்னால்
நம்மேல் பாய்வார்
நேற்று சொன்னது
காற்றோடு போகும்
நாளைய நிலையும்
மர்மமாய் இருக்கும்
இன்று சொல்வது
தெளிவின்றி இருக்கும்
அடிக்கடி மாறிடும்
அவரது மனது
ஆளுக்குத் தகுந்த
வேடம் போடுவார்
அதற்கு ஏற்ற
கதையும் சொல்லுவார்
நாலு பேர் பார்க்க
நன்றாக நடிப்பார்
நல்லவர் என்ற
பெயரையும் எடுப்பார்
ஆயினும் சாயம்
வெளுத்திடும்போது
அவரது மனது
பிறருக்குப் புரியும்
அதற்கு விளக்கம்
அவருமே தருவார்
எதையோ சொல்லி
பிழைத்துக் கொள்வார்
அவரைப் பார்த்து
நாமுமே சிரிக்க
அதற்கு சற்றும்
அசரவும் மாட்டார்
இவரைப் போன்றோர்
இருக்கும் வரைக்கும்
நமக்கும் சிரிக்கும்
வாய்ப்புகள் கிடைக்கும்
மத்திகிரி, 2-6-2018, காலை 11.00௦௦
Secular Song 447 Only laugh is coming
If we observe some people
Only laugh is coming
When we think about their activities
We need to wonder about it
Each day they will
Change their stand
If we point it to them
They will attack us
What they told yesterday
Will go away in the wind
Their future act will remain
Very secret to us
What they tell today
Will be unclear
Their mind will
Often get changed
They will put mask
According to the person
They will tell stories
According to it
They will act very well
For others to see
They will even earn
Good name from others
When their true colour
Come before us
Others will understand
About their mind
They will give explanation
Even for that
Telling some thing
They will manage to survive
When we laugh at them
Seeing their condition
They won’t bother
Even for that
As long people like them
Are there
We too will get many chances
To laugh
Mathigiri, 2-6-2018, 11.00
Secular Song 448
Though we should avoid unnecessarily controversy and better keep quiet on so many issues, still when time demands we should ask questions to those who try to impose only their view as the gospel truth on others. As they have oratory skill and dominating nature, they will manage to impose their view on others. But in order to live a meaningful life not only we should avoid them but sometimes we need to challenge their view.
Secular Song 448 கேள்வி கேட்கணும்
கேள்விகள் சிலவும்
கேட்கத்தான் வேண்டும்
கேட்கவும் மறுத்தால்
மடமைதான் வளரும்
பார்வையில் தங்களை
ஞானியாய் எண்ணி
பேதைகள் பலரும்
வலம் வரக் கூடும்
கேட்டிட சிலபேர்
இருந்தால் போதும்
கூறுவார் எதையும்
தன்போக்கில் அவரும்
கேப்பையில் நெய்யும்
ஒழுகுது என்பார்
கேட்டிட ஆட்களும்
இருந்திடும் வரையில்
அத்துடன் அவரது
ஆளுமை சேர்ந்திட
அவர் கூறும் எதுவும்
வேதமும் ஆகிடும்
அவரை குறை சொல்லிப்
பயனேதும் இல்லை
கேள்விகள் அவரை
கேட்காத வரையில்
சுயமாய் சிந்திக்க
இடம் தராது
சொந்தக் கருத்தை
பிறர் மீது திணித்து
வலம்வரும் இவரை
அடையாளம் கண்டு
விலகி நிற்கணும்
வாழ்ந்திட நன்று
மத்திகிரி, 4-6-2018, மதியம் 2.50
Secular Song 448 Should be questioned
We should ask
Some questions
Otherwise only
Ignorance will grow
Several fools
Will roam freely
Thinking that
They are very wise
If someone is there
To listen to them
Then they will talk
Anything they want
They will say that
Even one can get butter
Even out of water
Only if someone is ready to listen to it
Once their domination
Added to it
Whatever they say
Will become the Veda
There is no point
In blaming them alone
Unless we are
Ready to ask question
Unable to give space
To others to think independently
Imposing their own views
On others
As these people roam freely
We should mark them
And should avoid them
In order to live properly
Mathigiri, 4-6-2018, 2.50 p.m.
Secular Song 449
No one can live without any kind of emotion. Those who claim that they are very calm and quiet have different kinds of emotion. We often think that those who show their emotion openly by reacting quickly alone are very emotional. According to me those who remain calm or pretend to remain calm are more vulnerable to emotion as they try to suppress their emotion which might outburst like a volcano. So, when we move with them, we never should take their calmness for granted. When they outburst that will be more dangerous than those who are very quick to react. When the cold reaches below zero then we measure it minus 1 onwards. But anything below minus is more dangerous than zero. The same is the cold emotion.
Secular Song 449 சாதுமிரண்டால்
பாக்க சாதுவாய் இருந்தாலும்
தொட்டால் உடனே கடித்துவிடும்
சிலர் நிலையும் இதுவேதான்
தொட்டால் உனக்கு புரிந்துவிடும்
மெதுவாய் அவரும் பேசிடுவார்
மென்மையாக நடந்திடுவார்
சற்று சீண்டிப் பார்த்தாலோ
சட்டென மேலே பாய்ந்திடுவார்
வெளியே வேடமும் போட்டுக்கொண்டு
உள்ளுக்குள்ளே புகைந்து கொண்டு
எரிமலையாக இருந்திடுவார்
வெடித்துச் சிதறி உமிழ்ந்திடுவார்
அப்புறம் புரிந்திடும் உன் நிலைமை
அதன்பின் வருந்திப் பயனில்லை
தூர நின்று தொட்டுவிடு
தொட்டதும் உடனே ஓடிவிடு
பட்டதால் நானும் சொல்கின்றேன்
பார்த்து நீயும் திருந்திக்கொள்ளு
மாட்டேன் என்று நீ சொன்னால்
மாட்டிக்கொண்டு திண்டாடு
மத்திகிரி, 5-6-2018, மாலை, 6.15
Secular Song 449 Hidden volcanos
Though look very calm
It will bite when we touch
Some people’s condition is the same
When you touch them, you will realize this
They will talk very gently
They will behave very politely
When we provoke them a bit
Then they will jump on us
Putting an outside mask
Boiling within
They will remain as a volcano
And will burst to emit fire and smoke
Then you will understand your situation
There is no point in regretting later
Touch them standing from a distance
Then run away after touching them
I say this as I experienced it
Seeing me you better correct your ways
If you refused to do so
Then it is your funeral
Mathigiri, 5-6-2018, 6.15 p.m.
Secular Song 450
In order to say something different, some people always first disagree to other’s views. When confronted to expose their folly, sometimes with half-heartedness they will agree with other’s view, still with some reservation. Of course, there is a place for the opposite view and that is also healthy to have a meaningful dialogue. But opposing just for the sake of opposing and having this temperament in their DNA, they often will be left alone at the end without anyone to listen to them.
Secular Song 450 எதிர்கருத்து
பலரை மறுப்பார்
சிலரை வெறுப்பார்
இறுதியில் எவரும்
இன்றியே நிற்பார்
தனக்கெனத் தனி வழி
வகுத்துமே கொண்டு
தான் மட்டும் அதில்
பயணித்து இருப்பார்
எவ்விதக் கருத்து
எவர் சொன்னாலும்
அதனை மறுத்து
அவரொன்று சொல்வார்
தனிவித கருத்தைச்
சொல்லிட வேண்டும்
தனிவித வாழ்வை
வாழ்ந்திட வேண்டும்
என்றவர் எண்ணி
எதற்கெடுத்தாலும்
எதிர்கரு தொன்றை
எடுத்து வைப்பார்
இவரது சொல்லைக்
கேட்பவர் இன்றி
இவருக்குள் இவரே
பேசியும் கொள்வார்
இறுதியில் உண்மை
புரிந்திடும் போது
உதவிடப் பிறரின்றி
தவித்து போவார்
ஆயினும் அதையும்
உணர்ந்திட மறுத்து
யாருக்கும் பயனின்றி
வாழ்ந்து முடிப்பார்
மத்திகிரி, 5-6-2018, இரவு 11.30
Secular Song 450 Counter views
They will oppose many
And will hate some
Finally, will stand
Alone without anyone around them
Creating a separate
Way for them
They will travel
In it alone
Whoever says anything?
Denying it
They will present
Counter view
They should have a
Different life
They should say
Different view
Thinking like that
For everything
They will present
A counter view
Not having anyone
To listen to them
They will talk
With themselves
When they
Realize the truth
Without any one to help
They will be bewildered
But not
Realizing this
They will end up
Without useful to anyone
Mathigiri, 5-6-2018, 11.30 p.m.
Leave a Reply