Secular Song 456 to 460

Secular Song 456

Several times I feel that writing poems is not a conscious effort. When the inspiration compels from within and the words continue to flow, however I resist I cannot stop writing poems.  I wish I could overcome it one day with the help of my buddhi.  I am not sure whether the following words by N. T. Wright is relevant to my situation, still his words one way helps me to understand this kind of situation in my life:

….The problem of evil which it [postmodernity] highlights so remorselessly goes deeper than simply suggesting that all human claims are flawed; it deconstructs humans themselves.   There is no longer an “I”: just a swirling mass of emotions, of signifiers, of impulses, meaning that “I” am in a constant state of flux. The moral imperative left over from low-grade existentialism (that one should be true to one’s deepest self) collides with the postmodern claim that one’s deepest self is a fluid, unstable thing; Jazz bassist Charles Mingus says of himself in his autobiography, “I am three….There’s all kinds of emotion to play in music, but the one I’m trying to play is very difficult.  It’s the truth of what I am. It’s not difficult to play the mechanics of it, but it’s difficult because I’m changing all the time.”—N. T, Wright, Evil and the Justice of God, Illinois, USA, 2006, –p. 31 {No reference is given for Mingus’ autobiography —db}

Secular Song 456 உளறுவேன்

என்னவோ எழுதறேன்

எனக்காக வேண்டி

எதையேனும் உளறுவேன்

பிறர் கேட்க வேண்டி

படித்தாலும் மறுத்தாலும்

எனக்கில்லை கவலை

பிறறென்ன நினைத்தாலும்

மாற்றேன் என் நிலையை

உள்ளான உணர்வு

உந்தி தள்ளுது

வார்த்தையும் உணர்வுக்கு

வடிவமும் கொடுக்குது

தன்போல் வார்த்தைகள்

சிந்தையில் தோன்றுது

தானாக முன்வந்து

கையுமே எழுதுது

என் மீது குறை சொல்லி

பயனேதும் இல்லை

ஏனென்றால் என்னை நான்

உணரவே இல்லை

அறிவின் துணை கொண்டு

ஆழமாக ஆராய்ந்தும்

ஆழ்மனதின் எண்ணத்தை

அறியவும் இல்லை

அறியாத ஒன்றையும்

அறிந்ததாய் எண்ணி

அதைக் கூற பலவித

யோசனைகள் பண்ணி

இறுதியில் அதையும்

எழுத்தாகி  வைத்து

இதுபோல் உளறுவேன்

கவியாக்கி வைத்து

15-7-2018, 11.30, இரவு, மத்திகிரி,

Secular Song 456 I am babbling

I am writing

Something for me

I will babble something

For others to read

Whether they do it  or refuse

I am not worried much about it

Whatever others might think

I won’t change my decision

The inner inspiration

Forces me

The words also

Give shape to the thought

Words come and stand

Automatically before the mind

The hand also

Writes automatically

There is no point

In blaming me

Because I never

Understood me properly

Though I analyze

With the help of buddhi

I never understood

The nature of my inner mind

Imagining that

I understood which is not clear

Thinking many times

To share about it

Finally converting them

In words

I will babble like this

In the form of poems

15-7-2018, 11.30

Secular Song 457

In order to make the positive things more valuable and enjoyable there should be negative things opposite to every positive value in life.  Without one, life will become monotonous.  Once we have a heart to accept them both with tranquillity then life will become joyful. Two opposites are not antithesis but two sides of the same coin.  One cannot exist without the other as they complete each other by complementing.

Secular Song 457 இரண்டும் தேவை

இன்பமும் துன்பமும்

இணைந்ததுதான் இருக்கும்

ஏற்றமும் தாழ்வும்

சேர்ந்துதான் இருக்கும்

போற்றலும் தூற்றலும்

பிரியாது இருக்கும்

புரிதலும் குழப்பமும்

ஒன்றாக இருக்கும்

எதிரெதிர் காரியம்

இணைந்ததே வாழ்க்கை

இவையின்றி வாழ்வது

உண்மையில் செயற்கை

குளிரும் நெருப்பும்

கூடிடும் போது

கிடைக்கும் இன்பம்

அதற்கிணை ஏது

சோர்வுக்கு பின்னே

கிடைத்திடும் ஓய்வு

அதுபோல் உண்மை

சுகமொன்று ஏது

உழைப்பில் கிடைக்கும்

ஊதியம் போன்ற

உண்மையில் நிறைவு

வேறெங்கு ஏது

உணவுக்கு சுவை தரும்

உப்பையும் போல

எதிரெதிர் காரியம்

வாழ்க்கையில் தேவை

இரண்டையும் ஏற்கும்

மனமே இருக்க

இரண்டுமே சுவைக்கும்

மகிழ்வாக இருக்க

மத்திகிரி, 19-7-2018, இரவு, 10.30

Secular Song 457 Both are essential

Joy and sorrow

Will remain mingled in life

Progress and fall

Will remain together in life

Praising and despising

Will never get separated

Clarity and confusion

Always stand together

Life is a mixture of

Two opposites

Living without them

Is artificial indeed

When cold and heat

Join together

How can we compare

The pleasure they it give

Where is the true

Pleasure like rest

That we receive

After much toil

Where one can find

The real satisfaction

Like the remuneration

That we receive for our hard labour

Like the salt

Which add taste to food?

Life too needs

Two opposites

When we have

A heart to accept them both

Both will become joy full

To give happiness to life

Mathigiri, 19-7-2018, 10.30 p.m.

Secular Song 458

When we live with old people to take care of them, they will often lament about so many things in life.  There is no point in getting irritated by it.  Unless they lament the burden in their heart won’t go.  So instead of rebuking not to lament but ask to see only the positive things in even such old age won’t help them to get rid of their burden.  At least they have the strength to lament and we should allow them to do it. When they sit and lament with us, we need to listen to them rather than confronting them.

Secular Song 458 புலம்பித் தீர்ப்போம்

எதுவரை இது போகும்

என்பதும் தெரியாது

எதற்காக வாழணும்

என்பதும் புரியாது

அழைப்பு வரும் வரை

இருந்துதான் ஆகணும்

அதற்கு மாற்றில்லை

என்பது நம் நிலை

நோக்கம் ஏதுமே

இல்லாத வாழ்விலே

ஊக்கம் என்பது

இல்லாது போய்விடும்

சீக்கிரம் போகணும்

என்று விரும்பிணும்

தாமதம் ஆக

சோர்வு வந்திடும்

ஒருநாள் போவது

யுகமாக மாறுது

ஒவ்வொரு வேளையும்

பாரமாய் போகுது

ஆயினும் வழியில்லை

என்பதும் புரியுது

ஆகவே நம் நிலை

பாவமாய் ஆனது

இதையேனும் சொல்ல

உரிமையும் உள்ளது

இதுபோன்ற புலம்பல்

நம்மிடம் உள்ளது

அதையேனும் சொல்லி

புலம்பியே தீர்ப்போம்

அதன்பின் மீண்டும்

படுக்கவும் போவோம்

மத்திகிரி,  25-7-2018, இரவு 10.30

Secular Song 458 Let us lament

How long it will go

We don’t know

Why should we live?

We don’t know

Till the call comes

We need to live

There is no alternative to it

This is our condition

When there is no

Purpose in life (to life further)

Enthusiasm also

Will be gone

Though we long

To go away early

When it is delayed

Depression will come

Each day looks

Like a Yuga

Each hour

Becomes a burden

But there is

No alternative to this

Therefore, our condition

Becomes very pathetic

At least we

Have the right to say this

Only this kind of lamentation

Is with us

Let us lament

By saying this

Then let us

Go to bed

Mathigiri, 25-7-2018, 10.30 p.m.

Secular Song 459

One should have a vision. Then dreaming about that vision is also good. But trying to live based on mere imagination won’t help anyone to achieve the goal.  I am the one who often imagines based on mere assumptions on certain events or news.  I know that most of the imaginations that I build around them will fall flat.  But I cannot avoid this imagination in life and I won’t get the crown in that race which I try to run on a track which is not even there before an absentee audience.  As I was thinking about it, I wrote this song teasing me.

Secular Song 459 கிடைக்காது மகுடம்

கேட்காத கேள்விக்கு

எத்தனை பதில்கள்

கேளாத பேருக்கு

எத்தனை விளக்கம்

கூறாத கருத்துக்கு

ஆயிரம் உரைகள்

இல்லாத கொள்கைக்கு

எத்தனை சித்தாந்தம்

வீணான கற்பனை

தேரில் ஏறி

விரைவான எண்ணத்தை

குதிரையைப் பூட்டி

இல்லாத வீதியில்

விரைவாக ஓட்டி

காணாத பேருக்கு

நடத்தினாய் போட்டி

நடக்காத போட்டிக்கு

ஆயிரம் அழைப்பு

வாராத நபருக்கு

வைத்தாயே விருந்து

இறுதியில் இலக்கை

அடைகின்ற போது

கிடைக்காது உனக்கு

இல்லாத மகுடம்

மத்திகிரி, 30-7-2018, மதியம்

Secular Song 459 Won’t get the crown

How many answers we have

To the question which never was asked

How many explanations we give

To those who are not listening

Thousands of commentaries

For the unarticulated opinion

How many doctrines

For the philosophy which is not there

Mounting on a

Imagined chariot

Joining imagination

As the horses

Running the race

In a track which is not existing

You arranged a competition

For the absentee audience

Thousands of invitations were sent

For that unperformed competition

And you arranged a feast

For those who never turned for it

Finally, when you

Reach the goal

You won’t get the crown

Which is not even there?

Mathigiri, 30-7-2018, 2.50 p.m.

Secular Song 460

See ‘Interference’ in my blog for the comments.

Secular Song 460 குறுக்கீடு

கோடு போட்டு

ஓடும் போது

குறுக்கிட பிறருக்கு

இடமதில் ஏது

வட்டம் போட்டு

ஆடிடும் போது

சட்டத்தை மாற்ற

வழியும் ஏது

அவரவர் பாதையில்

அவரவர் ஓடணும்

என்பது பொதுவான

நியதியாய் உள்ளது

ஆயினும் இதில்

ஒன்றை மறந்தோம்

அதுதான் வாழ்க்கை

என்பதை உணர்வோம்

கோடு போட்டு

ஓடிட இங்கு

வாழ்க்கை ஒன்றும்

பந்தயம் இல்லை

குறிக்கிட பிறரின்றி

வாழ்வது என்றால்

மனிதனாய் வாழ்ந்து

பயனும் இல்லை

குறுக்கும் நெடுக்கும்

ஓடும் போது

இடறிக் கொள்வது

இயல்பில் உண்டு

ஒருவர் வீழ

ஒருவர் தாங்க

இருவரும் சேர்ந்து

ஓடுதல் நன்று

இது போல பலரும்

இதுவரை ஓடி

கோலைக் கொடுத்தார்

நமது கையில்

அதை வாங்கி

பொறுப்பாய் ஓடி

கோலைக் கொடுப்போம்

அடுத்தவர் கையில்

அதை விடுத்து

ஓட  மறுத்தால்

அடுத்தவர் ஓட

ஆட்டம் முடியும்

நாம் மட்டும் தனியே

கோலுடன் நிற்க

நம்மைப் பார்த்து

உலகம் சிரிக்கும்

மத்திகிரி, 31-7-2018, மதியம், 2.50

Secular Song 460 Interference

When we run

In our track

Where is the place

For others to step in

When we play

The game

Where is chance

To change the rules

Each one should

Run in her own track

This becomes

The common rule for all

But we forget

One thing in this

That is called life

Let us remember this

Life is

Not like a game

To live

Following rules and regulations

There is no use

Living as human beings

Try to live

Without out interference

It is quite natural

When we cross each other

That we will

Stumble upon each other

When one falls

Other should uphold

Like this

We all should run in life

All ran in the past

Like this and

Handed over

The batter to us

Receiving it

With much responsibility

Let us also run

And handover it to others

Refusing to do this

And if we stand still

The game will come to an end

As others will run to complete the race

And when we will

Stand alone with the batter

The world will

Laugh at us

Mathigiri, 31-7-2018, 2.50 p.m.

Oh hi there 👋 It’s nice to meet you.

Sign up to receive my new posts by email.

We don’t spam!

Oh hi there 👋
It’s nice to meet you.

Sign up to receive my new blog posts by email.

We don’t spam!


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *