Secular Song 465b
Secular Song b 465 திருக்குவளை தீய சக்தி
ஊரை அடித்து
உலையில் போட்டு
உலகம் அறிய
திருடனாய் இருந்தான்
தமிழை மட்டும்
வளர்ப்பதாய்ச் சொல்லி
தன்னை மட்டும்
வளர்த்துக் கொண்டான்
நாத்திகத்தை
நாவால் பேசி
தோளில் மஞ்சள்
துண்டை போட்டான்
மனைவி துணைவி
மக்கள் பிள்ளை
வளர மட்டும்
பாடுமே பட்டான்
ஆட்சியைப் பிடிக்க
மக்களை ஏய்த்தான்
தன்னைக் காக்க
கொள்கையை விட்டான்
அடைந்தால் திராவிடம்
என்று கூறி
அதனைப் பிறகு
புதைத்துப் போட்டான்
ஈவு இரக்கம்
ஏதும் இன்றி
ஈழப் போரை
வேடிக்கை பார்த்தான்
இலங்கைத் தமிழர்
ரத்தம் குடித்து
தீராப் பழியை
ஏற்றுக் கொண்டான்
இவனது பாவம்
அனைத்தையும் சொல்ல
எங்கு தேடினும்
வார்த்தை இல்லை
ஊரை ஏய்க்க
ஓய்வின்றி உழைத்தவன்
இறுதியில் இன்று
ஓய்ந்து போனான்
எஞ்சிய இவனது
தீய சக்திகள்
கொஞ்சம் நம்மிடம்
இன்றும் உள்ளது
அவைகள் செழித்து
நம்மை அழிக்க
இடம் தராமல்
இருப்பதே நல்லது
மத்திகிரி, 10-8-2018, மதியம் 2.00
Leave a Reply